Friday 27 May 2016

27th may Current Affairs in Tamil

உலகம் :
ஹிரோஷிமா-நினைவிடத்திற்குச்-சென்ற-முதல்-அமெரிக்க-அதிபாரானார்-ஒபாமா
ஜப்பானின் ஷிமா நகரில் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் அங்கிருந்து ஹிரோஷிமா சென்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

ஹிரோஷிமா நினைவிடத்துக்கு இதற்கு முன்னர் எந்த ஒரு அமெரிக்க அதிபரும் சென்றதில்லை ஒபாமாவே அங்கு சென்றுள்ள முதல் அமெரிக்க அதிபராவார்.
அமெரிக்க தேசிய புவியியல் போட்டி: முதல் 3 இடங்களில் இந்திய மாணவர்கள்
அமெரிக்காவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான தேசிய புவியியல் போட்டியில், முதல் 3 இடங்களைப் பிடித்து இந்திய வம்சாவளி மாணவர்கள் சாதனை படைத்துள் ளனர். இதில் ரிஷி நாயர் (12) முதலிடத்தைப் பிடித்தார்.
28-வது வருடாந்திர தேசிய புவியியல் போட்டிக்கான முதல் சுற்று சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் மாநில அளவில் ஏற்கெனவே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற 54 மாணவர்கள் கலந்து கொண்டனர் .
இதில் 7 இந்தியர்கள் உட்பட 10 பேர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
வாஷிங்டனில் இறுதிச் சுற்று நடைபெற்றது. இதில் புளோரிடா மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர் ரிஷி நாயர் முதலிடம் பிடித்தார்.
நாயருக்கு ரூ.33.6 லட்சம் மதிப்பிலான கல்லூரி கல்வி உதவித் தொகையும் தேசிய புவியியல் சங்கத்தில் ஆயுள் உறுப் பினர் அந்தஸ்தும் வழங்கப்பட்டது. இவரது பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
இதுபோல மசாசூசட்ஸ் மாகாணத்தில் வசிக்கும் 8-ம் வகுப்பு மாணவர் சாகேத் ஜொன்னலகட்டா (14) 2-ம் இடத்தைப் பிடித்தார். இவருக்கு ரூ.16.7 லட்சம் மதிப் பிலான கல்லூரி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. அலபமா மாகாணத்தைச் சேர்ந்த கபில் நாதனுக்கு (12) 3-ம் பரிசாக ரூ.6.7 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
இறுதிச் சுற்றில் பங்கேற்ற மற்ற 7 பேருக்கும் தலா ரூ.34 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.
இந்தியா :
பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
பிரமோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை இந்திய விமானப்படை வெற்றிகரமாக சோதித்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று பகல் 12 மணிக்கு நிலத்தில் உள்ள இலக்கை நோக்கிச் செலுத்தப்பட்ட பிரமோஸ், வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்தது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பரிசோதனை தொடர்பாக பிரமோஸ் ஏரோஸ்பேஸ் சிஇஓ சுதிர் மிஸ்ரா கூறும்போது, “உலகின் மிகச்சிறந்த சூப்பர்சானிக் ஏவுகணை என்பதை பிரமோஸ் மீண்டும் நிரூபித்துள்ளதுஎன்றார். இத்திட்டத்தில் பங்கேற்ற அனைத்து தரப்பினருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்த சோதனையில் பங்கேற்ற விமானப்படை அதிகாரிகள், பிரமோஸ் குழு, டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் எஸ். கிறிஸ்டோபர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் மேற்கு பகுதியில் கடந்த மாதிம் நடத்திய களப்பரிசோதனைகளில் மலைப்பாங்கான பகுதிகளில் இதன் துல்லியத்தன்மை மீண்டும் வெளிப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தில் உள்ள இலக்கை தாக்குதல மற்றும் கப்பல் எதிர்ப்பு திறன் கொண்ட பிரமோஸ் ஏவுகணை ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க மாநில முதல்வராக மம்தா பானர்ஜி இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
கொல்கத்தாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிவப்பு சாலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், 211 தொகுதிகளில் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
இதனையடுத்து ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து, தன்னுடன் சேர்த்து 42 அமைச்சர்களின் பட்டியலை வழங்கினார் மம்தா. அதன்படி இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் 2023-ல் புல்லட் ரயில் ஓடும்: மத்திய அமைச்சர் உறுதி
இந்தியாவில் வரும் 2023-ம் ஆண்டில் முதல் புல்லட் ரயில் ஓடும். இந்திய துணைக்கண்டத்தில் இது ரயில்வே துறையில் புதிய சகாப்தமாக இருக்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
வரும் 2023-ம் ஆண்டு இந்தியாவில் முதல் புல்லட் ரயில் ஓடும். இத்திட்டத்தின் பல்வேறு படிநிலைகள் குறித்து நாங்கள் ஏற்கெனவே விவாதித்து விட்டோம். மும்பை-ஆமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவை 2 மணி நேரங்களில் இது கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கி.மீ. எனினும், மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். திட்டமிட்டபடி பணிகள் நடந்து வருகின்றன. இதர பெருநகரங்களை இத்திட்டத்தில் இணைப்பது தொடர்பான ஆய்வு நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகம் :
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 2 நாள் மழை வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களில் ஓரிரு இடங்களில் கோடைமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று சென்னையில் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:
''தமிழகத்தில் 3 நாட்களுக்கு இயல்பைக் காட்டிலும் 3 டிகிரி வெப்பம் அதிகமாக காணப்படும். தமிழகம், புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கோடைமழை பெய்ய வாய்ப்புள்ளது
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழை பெய்யும்.
வெப்பச் சலனம் காரணமாக சாத்தூரில் 5 செ.மீ மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மதுரை, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது'' என்று பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
ஜூன் 20-ல் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தொடங்குகிறது
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது. ஒரே நாளில் 6,123 பேர் விண்ணப் பங்களை பெற்றுச் சென்றனர். மருத்துவ படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி தொடங்குகிறது.
2016-2017 கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நேற்று காலை 10 மணிக்கு தொடங் கியது. குறிப்பாக சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத் துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத் துவ கல்லூரி, அரசினர் தோட்டத் தில் உள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு பல் மருத் துவ கல்லூரி ஆகிய 5 இடங்களி லும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. மாணவ, மாணவி கள் பெற்றோருடன் ஆர்வமாக வந்து நேரில் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப் பிக்க வரும் ஜூன் 7-ம் தேதி கடைசியாகும்.
விளையாட்டு :
ராண்ட் ஸ்லாம் போட்டிகளில் நடாலுக்கு 200-வது வெற்றி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவு 3-வது சுற்றில் ஸ்பெயினின் ரபேல் நடால் வெற்றி பெற்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இது அவருக்கு 200-வது வெற்றியாக அமைந்தது.
பாரிஸில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபேல் நடால் 6-3, 6-0, 6-3 என்ற நேர் செட்டில் அர்ஜென்டினாவின் பாக்னிஸை தோற்கடித்தார்.
நடாலுக்கு இது கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 200-வது வெற்றியாக அமைந்தது.
வணிகம் :
ஹெச் -1 பி விசா விண்ணப்பத்துக்கு கூடுதலாக 4000 டாலர்கள்: இந்திய ஐடி நிறுவனங்ளுக்கு நெருக்கடி
அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் ஹெச் 1பி விசா விண்ணப்பத்துக்கு வழக்கமான கட்டணத்தை விட தற்போது 4,000 டாலர்கள் கூடுதலாக இந்திய ஐடி நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பெடரல் ஏஜென்சி இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. புதிதாக திருத்தப்பட்டுள்ள விசா விதிமுறைகள்படி கடந்த டிசம்பர் மாதம் முதல் இது அமலுக்கு வந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளது.
இது தவிர எல்-1 விசாவுக்கான விண்ணப்பக் கட்டணமாக 4500 டாலர்களாக புதிய விதிமுறைகள்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அமெரிக்க நிறுவனங்களுக்கும் இந்த புதிய சட்டம் பொருந்தும். 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்த சட்டம் செயல்பாட்டில் இருக்கும்.
ஜப்பான் நிறுவன முதலீட்டில் சென்னையில் உருவாகும் உலகத் தரம் வாய்ந்த குடியிருப்புகள்
சென்னையை அடுத்த பூந்தமல்லி யில் உலகத் தரம் வாய்ந்த குடியிருப்புகளை டெவலப்பர் குழுமம் உருவாக்கத் திட்டமிட் டுள்ளது. ரூ. 400 கோடி மதிப்பி லான `வெஸ்ட்வின்ட்என்ற பெயரி லான இக்குடியிருப்புத் திட்டத் தில் ஜப்பானைச் சேர்ந்த டாமா ஹோம் மற்றும் நொகாரா ஆகிய நிறுவனங்கள் ரூ.60 கோடி வரை முதலீடு செய்கின்றன.
ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய முதலீடுகள் 100 சதவீத அளவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜப்பானிய நிறுவ னங்கள் நேரடியாக முதலீடு செய்யும் முதலாவது குடியிருப்புத் திட்டம் இதுவாகும்.


No comments: