Monday 30 May 2016

30th May Current Affairs in Tamil Language

உலகம் :
ஈரானில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு
ஈரானில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் சனிக்கிழமை பதவியேற்றனர்.

290 உறுப்பினர்கள் கொண்ட அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு அண்மையில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. புதிய எம்.பி.க்கள் ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி முன்னிலையில் பதவியேற்றனர்.
நாடாளுமன்ற அவையில் புதிய உறுப்பினர்களிடையே ஈரான் மதகுரு அயதுல்லா அலி கமேனியின் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.
இந்தியா :
அடுத்த ஆண்டு முதல் மாநில வாரியாக வானிலை அறிவிப்பு
அடுத்த ஆண்டு முதல் மாநில வாரியாக பருவமழை குறித்த முன்னறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெளியிட உள்ளது.
நாட்டில் பருவமழை, புயல், வெயில் போன்ற நிலவரங்களை தினமும் முன்கூட்டியே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. வடமேற்கு, மத்திய இந்தியா, தென்னக தீபகற்பம், கிழக்கு, வடகிழக்கு பிராந்தியங்களின் அடிப்படையில் அந்த வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பூமி அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வரும் 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியாக பருவநிலை குறித்த வானிலை முன்னறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும்’’ என்றார்.
அவர் மேலும் கூறும்போது, ‘‘தேசிய பருவமழை மிஷன்’ திட்டத் துக்கு ஏற்கெனவே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது ரூ.400 கோடியில் செயல்படுத்தப்படு கிறது. இதற்காக பெரிய கம்ப்யூட் டர்கள் நிறுவப்பட்டுவிட்டன’’ என்றார்.
ஜூன் 4-ம் தேதி முதல் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்: பிரதமர் நரேந்திர மோடி திட்டம்
ஆப்கானிஸ்தான், கத்தார், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு, ஜூன் 4-ம் தேதி முதல் பிரதமர் நரேந்திரமோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஐந்து நாடுகள் சுற்றுப் பயணத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து தொடங்கும் மோடி, அங்கு, இந்திய நிதியுதவியுடன் ரூ.1,400 கோடியில் கட்டப்பட்ட அணையை திறந்து வைக்கிறார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து கத்தாருக்குச் சென்று, மன்னர் ஷேக் தமின் பின் ஹமாத் அல்-தானியுடன் பொருளாதார உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார்.
2 நாட்கள் கத்தாரில் தங்கியிருந்துவிட்டு, ஸ்விட்சர்லாந்துக்கு செல்லும் நரேந்திரமோடி, இந்தியர்களின் கறுப்புப் பண கணக்கு விவரங்களை, வெளிக் கொண்டுவர உதவுமாறு, அதிபர் ஜோஹன் ஷ்னீடர் அம்மானுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
இந்தியா, ஸ்விட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கு இடையே, வரி உள்ளிட்ட விவரங்களை, தானியங்கி முறையில் பரிமாறிக்கொள்ளும் திட்டத்தை இறுதிசெய்யும் பணியில் இரு நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதிபர் ஜோஹனை சந்தித்த பின் இதுதொடர்பான அறிவிப்பை நரேந்திரமோடி வெளியிடுவார் எனத் தெரிகிறது.
ஸ்விட்சர்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூன் 7-ம் தேதி மோடி அமெரிக்கா செல் கிறார். ராணுவம், பாதுகாப்பு, எரிசக்தி சம்பந்தப்பட்ட துறை களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து அதிபர் ஒபாமாவுடன் பேசுவார். அமெரிக்க நாடாளு மன்றத்தின் கூட்டு கூட்டத்திலும் நரேந்திரமோடி பேச உள்ளார்.
பின்னர், மெக்சிகோ சென்று, அந்நாட்டு அதிபர் என்ரிக் பினா நீடோவை சந்தித்து பேசுவார். அப்போது, வர்த்தக உறவு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
தமிழகம் :
அரசு-பாலிடெக்னிக்-கல்லூரியில்-சேர-மாணவர்கள்-விண்ணப்பிக்கலாம்
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலகங்கள் உள்ளன. இவற்றில் பொறியியல் பாடப்பிரிவுகளில் 3 ஆண்டு கால டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு புதிதாக 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.
2016-17-ம் கல்வி ஆண்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.150. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை விண்ணப்பம் வாங்கிய பாலிடெக்னிக் கல்லூரியில் ஜுன் மாதம் 17-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று எஸ்.மதுமதி அறிவித்துள்ளார்.
ரூ258-கோடியில்-பிரம்மாண்ட-கடல்-அருங்காட்சியகம்-மாமல்லபுரத்தில்-அமைகிறது
மாமல்லபுரம் கடற்கரையில் 13.07 ஏக்கரில் ரூ.257.58 கோடி மதிப்பில் பிரம்மாண்ட கடல் அருங்காட்சியகம் அமைக்க மீன் வளத்துறை ஒப்பந்தம் கோரியுள்ளது.
மீன்வளத்துறை சார்பில் மாமல்லபுரம் கடற்கரையில், கடல் வளம் தொடர்பான ஆராய்ச்சிக்காகவும், சுற்றுலாப் பயணிகளை அதிகளவு ஈர்க்கவும், கடல் அருங்காட்சியகம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
அருங்காட்சியகத்தில் இருந்த படியே, கடலில் மீன்கள் இருப் பதை பார்க்க முடியும். இது தவிர ‘அக்ரிலிக்’ சுரங்கப்பாதையில் கடலுக்குள் சென்று, கடல் வாழ் உயிரினங்களை அதன் வாழ்க்கை சூழலில் கண்டு களிக்கும் வசதியும் இதில் செய்யப்பட உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் செல்லும் போது, கடலின் அடியில் மணலில் நடக்கும் அனுபவத்தை பெறும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாகவும் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
விளையாட்டு :
ஹைதராபாத் சாம்பியன் :ஏமாற்றத்தில் முடிந்தது கெயில்-கோலி அதிரடி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் 38 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் கட்டிங் 15 பந்துகளில் 39 ரன்களைக் குவித்ததோடு, கெயில், ராகுல் என இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார்.
பிரெஞ்சு ஓபன்: இவானோவிச்சை வெளியேற்றினார் ஸ்விட்டோலினா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் செர்பியாவின் அனா இவானோவிச், உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
ஆண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் 7-ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 18-ஆவது இடத்தில் உள்ள ஸ்விட்டோலினா 6-4, 6-4 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருந்த இவானோவிச்சை தோற்கடித்தார்.
வணிகம் :
பி-நோட்ஸ்-விதிகளில்-மாற்றம்-கருப்பு-பணத்துக்கான-இடம்-இந்தியா-அல்ல-செபி-அமைப்பு-திட்டவட்டம்
பி நோட்ஸ் முறையிலான முதலீடு தவறாக பயன்படுத்தப்படுவதால் செபி கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் யூகே சின்ஹா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
இந்தியர்கள் இதுபோல வெளிநாட்டு முதலீட்டு முறைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்படுத்த முடியாது. கருப்பு பணத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்களுக்கான (பிநோட்ஸ்) விதியில் செபி மாற்றம் செய்துவருகிறது. விரைவில் இவை இறுதி செய்யப்படும்.
அந்நிய முதலீடு ரூ.6,000 கோடி வெளியேற்றம்
முந்தைய மாதங்களில் அதிக முதலீடு வந்துள்ள நிலைமையில், மே மாதத்தில் இதுவரை இந்திய கடன் சந்தையில் இருந்து ரூ.6,000 கோடி அந்நிய முதலீடு வெளியேறியுள்ளது.
மாறாக இந்திய பங்குச்சந்தை யில் மே மாதம் ரூ.1,495 கோடி அந்நிய முதலீடு வந்திருக்கிறது. கடன் சந்தையில் இருந்து முதலீடு வெளியேறி பங்குச்சந்தைக்கு மாறி இருப்பது இந்தியாவின் வளர்ச்சியில் அந்நிய முதலீட்டாளர் கள் நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் கடன் பத்திரங் களில் செய்யப்பட்ட முதலீடுகள் வெளியேறி உள்ளன. ரூபாய் மதிப்பு சரிவு ஒரு காரணமாக இருந்தாலும், அந்த பத்திரங்கள் முதிர்வடைந்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கடன் சந்தையிலிருந்து 9,671 கோடி ரூபாய் வெளியேறியது. அதனை தொடர்ந்து ஏப்ரலில் ரூ.6,418 கோடி அந்நிய முதலீடு வந்தது. இப்போது மே மாதம் 27-ம் தேதி வரை ரூ.5,986 கோடி வெளியேறியுள்ளது.

No comments: