Tuesday 31 May 2016

31st May Current Affairs in Tamil

உலகம் :
ஜப்பானின் புகுவோகா விருதுக்கு ஏர்.ஆர். ரகுமான் தேர்வு

2016ம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் புகுவோகா விருதுக்கு இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

யோகோபோடியா என்ற அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் கிராண்ட், அகாடமிக், கலை மற்றும் கலாச்சாரம் என 3 துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த புகுவோகா விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு இசைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான புகுவோகா விருது ஏ.ஆர். ரகுமானுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விமான தாக்குதலை தடுக்க சீனாவிடம் உதவி கோருகிறது பாகிஸ்தான்
பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் நடத்தும் ஆளில்லா விமான தாக்குதலை தடுத்து நிறுத்த உதவுமாறு சீனா விடம் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதிகளில் தலிபான், அல்-காய்தா தீவிரவாதிகள் பதுங்கி வாழ்கின்றனர். அவர்களை குறிவைத்து அமெரிக்க ராணுவம் அவ்வப் போது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்திவருகிறது.
பாகிஸ்தானின் குவெட்டா நகர் அருகே அண்மையில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டார்.
இது குறித்து அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறிய போது, பாகிஸ்தானின் இறை யாண்மையில் அமெரிக்கா தலை யிடக்கூடாது என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் பாகிஸ்தானிடம் முறைப்படி தகவல் தெரிவித்த பிறகே தாக்குதல் நடத்தப்பட்டது என்று அமெரிக்க தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் அமெரிக்க தாக்குதலை தடுத்து நிறுத்த சீனாவிடம் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது. இதுதொடர் பாக பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து ஐ.நா. சபையில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளன.
ஏற்கெனவே கடந்த ஏப்ரலில் ஐ.நா. சபையில் சீனா தாக்கல் செய்த அறிக்கையில் அமெரிக்கா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு களை சுமத்தியது. அதில் கூறியிருப் பதாவது: உலகம் முழுவதும் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா வாதிட்டு வருகிறது. ஆனால் அந்த நாடு சிரியா, இராக்கில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்க ளை கொன்று குவித்து வரு கிறது. இதேபோல பாகிஸ்தான் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் நடத்தி வரும் ஆளில்லா விமான தாக்குதலில் அப்பாவிகள் கொல் லப்பட்டு வருகின்றனர். இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
டெல்லியை 5 நிமிடத்தில் தாக்க முடியும்: பாகிஸ்தான் அணு விஞ்ஞானி தகவல்
ஐந்து நிமிடங்களில் டெல்லியை தாக்கும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது என்று அந்த நாட்டு அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அணுசக்தி துறை தந்தை என்றழைக்கப்படும் அவர் இஸ்லாமாபாத்தில் நடந்த விழாவில் பேசியதாவது:
கடந்த 1998-ல் முதல் அணு குண்டு சோதனையை பாகிஸ்தான் நடத்தியது. அதற்கு முன்பு 1984-ம் ஆண்டிலேயே அணுகுண்டு சோதனை நடத்த திட்டமிட்டோம். ஆனால் சர்வதேச பொருளாதார தடை அச்சத்தால் அன்றைய ராணுவ தளபதி ஜியா உல் ஹக் திட்டத்தை தடுத்துவிட்டார்.
ராவல் பிண்டி அருகேயுள்ள கதுவா தளத்தில் இருந்து 5 நிமிடங்களில் ஏவுகணை மூலம் டெல்லியை தாக்கும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியா :
அரசு மருத்துவர்கள் ஓய்வு வயது 65: அரசாணை வெளியீடு
மத்திய, மாநில அரசு மருத்துவர்களின் ஓய்வு வயதை 65 ஆக அதிகரித்து மத்திய அரசு இன்று ஆணை பிறப்பித்தது.
உத்தரப் பிரதேசம் சஹரன்பூரில் கடந்த 26-ம் தேதி நடந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. எனவே ஏழை நோயாளிகளின் நலன் கருதி மத்திய, மாநில அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி மத்திய, மாநில அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணை மே 31-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்ட டவிட்டர் பதிவில், அனுபவம் வாய்ந்த டாக்டர்களை பணியில் நீடிக்கச் செய்திருப்பதால் ஏழைநோயாளிகள் பெரிதும் பயன் அடைவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
நவீன அடிமைகள் பட்டியல்: இந்தியா 1.83 கோடி பேருடன் சர்வதேச அளவில் முதலிடம்
சர்வதேச அளவில் 4.6 கோடி பேர் நவீன அடிமைகளாக இருப்பதாகவும், அந்த எண்ணிக்கையில் 1.83 கோடி பேருடன் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
அதேவேளையில், நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடப்படும்போது, சதவீத அடிப்படையிலான நாடுகள் பட்டியலில் வடகொரியா முதலிடத்தில் உள்ளது.
பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுத்தல் ஆகியவற்றில் அச்சுறுத்தலுடன் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுபவர்கள், கொத்தடிமைத் தொழிலாளர்களே நவீன அடிமைகள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.
பிரதமர் மோடி - சத்யா நாதெள்ளா சந்திப்பு
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நாதெள்ளா, பிரதமர் மோடியை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
இது தவிர மத்திய அமைச்சர்கள் பலரையும் நாதெள்ளா சந்தித்தார். அப்போது இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் மேம்படுத்துவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்தவரான நாதெள்ளா, அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைமைப் பொறுப்பை கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றார். அதன் பிறகு அவர் இந்தியா வருவது இது 3-ஆவது முறையாகும்.
ஒருநாள் பயணமாக இந்தியா வந்த நாதெள்ளா, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, தொழில் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்தனர்.
தமிழகம் :
கூடங்குளத்தில் 4, 5-வது அணு உலைகளுக்கான செயல் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து
ரஷ்ய நாட்டு உதவியுடன் கூடங்குளத்தில் அமைக்கப்படும் 4 மற்றும் 5-வது அணு உலைகளுக்கான செயல் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
இந்தியாவில் அதி நவீன  12 அணு உலைகளை அமைப்பதற்காக இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 6 அணு உலைகள் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்படுகிறது. இதில் முதல் இரு அணு உலைகள் ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில், இரண்டாம் அணு உலையில் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.
தமிழகம்-புதுச்சேரியில்-ஒருசில-இடங்களில்-மழை-பெய்யும்-வானிலை-ஆய்வு-மையம்
தமிழகம், புதுச்சேரியில் புதன்கிழமை ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெப்பத் தாக்குதல் குறைந்தபாடில்லை. இன்று அதிகபட்சமாக திருத்தணியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அதேநேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இன்று அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் கல்லணையில் 60 மில்லி மீட்டர் மழை பதிவானது.
கோத்தகிரி 50 மி.மீ., லால்குடி 40 மி.மீ., வாழப்பாடி, நடுவட்டம், நிலக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ., திருக்காட்டுப்பள்ளி, ஏற்காடு, ஊத்தங்கரை, திருச்சி விமான நிலையம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.
“அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
விளையாட்டு :
வரலாறு படைத்த இந்திய வீரர்
இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பர் குர்பீரித் சிங் சாந்து நார்வே நாட்டை சேர்ந்த ஸ்டெபக் எப்சி அணிக்காக நேற்று முன்தினம் விளையாடினார். ஐகே அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் ஸ்டெபக் அபார வெற்றி பெற்றது. 24 வயதான சாந்து கடந்த 2014-ம் ஆண்டே ஸ்டெபக் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் தற்போது தான் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி முதல் இந்திய வீரர் என்ற வரலாறை படைத்தார் சாந்து.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் சாம்பியன்
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதி ஆட்டத்தில் அந்த அணி அட்லெடிகோ மாட்ரிட் அணியை 5-3 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் இரவு மிலன் நகரில் நடந்தது. இதில் ரியல் மாட்ரிட் அணியும், அட்லெடிகோ மாட்ரிட் அணியும் மோதின. கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரோட்ரிகஸ், பெபே, கேசிலா என்று வலுவான வீரர்களைக் கொண்ட ரியல் மாட்ரிட் அணி 11-வது முறை பட்டம் வெல்லும் முனைப்பில் இறுதிப் போட்டியில் ஆடியது. மறுபுறம் முதல்முறை சாம்பியன் பட்டம் வெல்லும் கனவுடன் அட்லெடிகோ மாட்ரிட் அணி களம் இறங்கியது.
வணிகம் :
போலி-நிதி-நிறுவனங்களை-ஒழிக்க-புதிய-சட்டம்-மத்திய-அரசு-தீவிரம்
மோசடி திட்டங்கள் மூலம் பொது மக்களிடம் பணம் திரட்டி ஏமாற்றும் நிதி நிறுவனங்களை முற்றிலுமாக ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான அப்பாவி முதலீட்டாளர்களைக் காக்க முடியும் என்று மத்திய அரசு உறுதியாக நம்புகிறது.
மரம் வளர்ப்புத் திட்டம், ஈமு கோழி வளர்ப்புத் திட்டம் உள்ளிட்ட நூதனமான திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி மக்களை ஏமாற்றும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டம் அவசியம் என அரசு கருதுகிறது.
இது போன்ற மோசடி திட்டம் மூலம் நிதி திரட்டிய சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் 2014-ம் ஆண்டிலிருந்து சிறையில் உள்ளார். இவரிடமிருந்து பணத்தை வசூலித்து முதலீட்டாளர் களிடம் திரும்ப அளிக்கும் நடவடிக்கையை நீதிமன்றம் தீவிரமாக எடுத்து வருகிறது. முறையற்ற திட்டங்கள் திரட்டிய 540 கோடி டாலர் (சுமார் ரூ. 35 ஆயிரம் கோடி) தொகையை முதலீட்டாளர்களிடம் திரும்ப அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேவை, ஆடம்பர வரி நாளை முதல் அதிகரிப்பு
ஜூன் 1 ஆம் தேதியிலிருந்து கூடுதலாக வரி செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. ரூ.10 லட்சத்துக்கு மேற் பட்ட விலையுள்ள கார்கள் வாங்கு கிறபோது கூடுதலாக 1 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டிருந்தார். இந்த கூடுதல் வரி விதிப்பு முறை நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த கூடுதல் வரி, விற்பனையக விலையின் அடிப்படையில் கார் விற்பனை யாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும். கார் வாங்குபவர்களின் வருமான வரி கணக்கில் இந்த கூடுதல் வரி சரி செய்யப்படும்.
இந்த வரி தவிர ஜூன் 1-ம் தேதிக்குப் பிறகு சில கூடுதல் வரியும் அமலுக்கு வர உள்ளன. ஹோட்டல் உணவுகள், தொலைபேசி கட்ட ணங்கள், பயணக் கட்டணங்கள், இன்ஷூரன்ஸ், சொத்துக்கள் வாங்கு கிறபோதும் கிருஷி கல்யாண்’ சேவை வரி 0.50 சதவீதம் கூடுத லாக செலுத்த வேண்டும். இதன் மூலம் தற்போதுள்ள சேவை வரி 14.5 சதவீதத்துடன் சேர்த்து 15 சதவீதமாக சேவை வரியைச் செலுத்த வேண்டும்.

No comments: