Monday 14 November 2016

Daily Crrent Affairs For Competitive Exam - 15th November

உலகம் :

மிக வெப்பமான ஆண்டு 2016?
கடந்த நூறு ஆண்டு கால அளவில் மிக வெப்பமான ஆண்டாக 2016 இருக்கக் கூடும் என்று .நாதெரிவித்தது.


.நாஉலக வானிலை ஆய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் பெட்டேரி தாலாஸ் இது தொடர்பாக மொராக்கோ நாட்டிலுள்ள மராக்கெஷ் நகரில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவதுதொழிற் புரட்சிக்குப் பிறகு நிலவிய சராசரி உலக வெப்ப அளவைவிட 1.2 செல்சியஸ் கூடுதலாக இந்த ஆண்டு பதிவாகியுள்ளதுநூறாண்டு அளவில் மிக வெப்பமான ஆண்டு என்னும் விதத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் வெப்ப நிலை பதிவானது.
இந்நிலையில்நடப்பு ஆண்டிலும் சராசரி நிலையைவிட 1.2 செல்சியஸ் அளவு கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளதுஇதையடுத்துமிக வெப்பமான ஆண்டு வரிசையில் 2016-ஆம் ஆண்டும் இடம் பெறப் போகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிடம் நீர்மூழ்கி கப்பல் வாங்கியது வங்கதேசம்
வங்கதேசம் கப்பல்படையில் முதன்முறையாக நீர்மூழ்கி கப்பல் சேர்க்கப்படஉள்ளதுஇதற்காக சீனாவிடம் இருந்து 2 நீர்மூழ்கி கப்பல்களை வாங்கியுள்ளது.
ரூ.1,370 கோடி செலவில்..
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம்வங்க கடல் பகுதியில் அதிகளவுசர்வதேச கடல் எல்லையை மியான்மர் நாட்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.இங்கு பாதுகாப்பை பலப்படுத்த கப்பல்படையில் நீர்மூழ்கி கப்பலை சேர்க்கதிட்டமிட்டதுஇதற்காக முதல்கட்டமாக சீனாவிடம் இருந்து 1,370 கோடி ரூபாய்செலவில் இரு நீர்மூழ்கி கப்பலை வாங்கியுள்ளது.
அடுத்தாண்டு..
பிஎன்ஸ் நபஜத்ரா மற்றும் பிஎன்ஸ் ஜாய்ஜத்ரா என அந்த கப்பல்களுக்குபெயரிடப்பட்டுள்ளதுஇக்கப்பல்கள் அடுத்தாண்டு வங்கதேச கப்பல்படையில்அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படும் என வங்கதேச கப்பல்படை அதிகாரிதெரிவித்தார்நேற்று சீனாவின் லியா நன் கப்பல் தளத்தில் நடந்த நிகழ்ச்சியில்வங்கதேச கப்பல்படை தளபதி நிஜாமுதின் அகமதுஇதனை பெற்றுக் கொண்டார்.
இந்தியா :
இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றம் 5.2% அதிகரிப்பு
இந்தியாவில் படிம எரிபொருள்களை எரிப்பதன் மூலம் வெளியேறும் கரியமிலவாயுவின் அளவு கடந்த 2015-ஆம் ஆண்டில் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளதாகபிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் "ஈஸ்ட் ஆங்க்லியாபல்கலைக்கழகம் மற்றும் "குளோபல் கார்பன்புராஜெக்ட்அமைப்பு அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியா 6.3 சதவீதம் பங்குவகிக்கிறது.கடந்த 2015-ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றம் 5.2சதவீதம் அதிகரித்துள்ளதுகடந்த சில ஆண்டுகளாகஇந்தியாவின் புகைமாசுவெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலை, 2015-ஆம் ஆண்டும்தொடர்ந்துள்ளது.
உலக அளவில் கரியமில வாயுவின் வெளியேற்றம் கடந்த 2015-ஆம் ஆண்டுஅதிகரிக்கவில்லைஇந்த ஆண்டும் ஏறத்தாழ அதே நிலை நீடிக்கும் எனக்கணிக்கப்படுகிறது.
இந்திய-சீன கூட்டு ராணுவப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி முகாம்செவ்வாய்க்கிழமை தொடங்கிவரும் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான கூட்டு ராணுவ நடவடிக்கையின்தொடர்ச்சியாக இந்த முகாம் நடைபெற உள்ளதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பாதுகாப்புத் துறையின் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய ராணுவமும் சீன மக்கள் குடியரசின் ராணுவமும் பங்கேற்கும் ஆறாவதுகூட்டு ராணுவப் பயிற்சி முகாம்மகாராஷ்டிர மாநிலம்புணேவில்செவ்வாய்க்கிழமை (15-ஆம் தேதிதொடங்குகிறது.
ஜிஎஸ்டி சட்ட விவரங்கள்மாநிலங்களுடன் இன்று பகிர்கிறது மத்திய அரசு
சரக்கு - சேவை (ஜிஎஸ்டிவரிச் சட்ட விவரங்கள் அடங்கிய மாதிரியை மாநிலஅரசுகளுடன் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை (நவ.15) பகிர்ந்து கொள்ளஇருப்பதாக மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் நஜீப் ஷாகூறினார்.
இதுதொடர்பாகதில்லியில் அவர் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது:
நாடு முழுவதும் சரக்கு - சேவை வரிச் சட்டம்அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்படும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்பல்வேறுதரப்பினரின் கருத்துகளைக் கேட்ட பிறகு மறுவரைவு செய்யப்பட்ட சரக்கு-சேவை வரிச் சட்ட விவரங்களின் மாதிரிமாநில அரசுடன் செவ்வாய்க்கிழமைபகிர்ந்து கொள்ளப்படவுள்ளது.
இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதால் வருவாய் இழப்பு ஏற்படும்மாநிலங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பானவழிமுறைகள்மாநில அரசுகளுடன்வரும் புதன்கிழமை (நவ.16)பகிர்ந்துகொள்ளப்படும் என்றார் அவர்.
தமிழ்நாடு : 
உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமைப் பதிவாளர்
சென்னை உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளராக மாவட்ட நீதிபதிஆர்.சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார்இதற்கான உத்தரவை தலைமை நீதிபதிஎஸ்.கே.கௌல் பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்துக்குசேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாகஇருக்கும் எஸ்.என்சேஷசாயிசென்னை உயர்நீதிமன்ற தலைமைப்பதிவாளராக இருக்கும் என்.சதீஷ்குமார்தமிழ்நாடு மாநில சட்ட பணிகள்ஆணைக்குழு உறுப்பினர் செயலராக இருக்கும் டீக்காராமன் ஆகியோரைநீதிபதிகளாக நியமிக்க குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல்அளித்துள்ளார்.
கூடுதலாக நியமிக்கப்பட இருக்கும் 3 புதிய நீதிபதிகளும் புதன்கிழமை (நவ.16)பொறுப்பேற்க உள்ளனர்இந்த நிலையில்புதிய நீதிபதிகள் பட்டியலில்தற்போதுஉயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளராக இருக்கும் என்.என்.சதீஷ்குமாரும்இடம்பெற்றுள்ளார்ஆகையால்அந்த இடத்துக்கு புதிதாக தலைமைப் பதிவாளர்நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு :
பிரேசில் கிராண்ட்ப்ரீ ஹாமில்டன் முதலிடம்
பிரேசில் கிராண்ட்ப்ரீ ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்ஸிடஸ் டிரைவர்லீவிஸ் ஹாமில்டன் முதலிடத்தைப் பிடித்தார்.
இதன்மூலம் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை நெருங்கியுள்ளார்ஹாமில்டன்புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மற்றொருமெர்ஸிடஸ் டிரைவரான நிகோ ரோஸ்பெர்க்கைவிட 12 புள்ளிகள்பின்தங்கியுள்ளார் ஹாமில்டன்.
இந்த சீசனின் கடைசிச் சுற்றான அபுதாபி கிராண்ட்ப்ரீ போட்டி அபுதாபியில் வரும்27-ஆம் தேதி நடைபெறுகிறதுஅதில் முதலிடத்தைப் பிடிக்கும்பட்சத்தில்ஹாமில்டன் 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வார்.
பிரேசிலின் சாவ் பாலோ நகரில் கடும் மழைக்கு இடையே ஞாயிற்றுக்கிழமைநடைபெற்ற கடைசிச் சுற்றுக்கு முந்தைய சுற்றான பிரேசில் கிராண்ட்ப்ரீபோட்டியில் லீவிஸ் ஹாமில்டன் 3 மணி, 1 நிமிடம், 1.335 விநாடிகளில் இலக்கைஎட்டி முதலிடத்தைப் பிடித்தார்.
முத்தரப்புத் தொடர்இலங்கை வெற்றி
முத்தரப்புக் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில்ஜிம்பாப்வே அணியைத் தோற்கடித்தது இலங்கை.
ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 41.3 ஓவர்களில் 154ரன்களுக்கு சுருண்டதுஅந்த அணியில் அதிகபட்சமாக பீட்டர் மூர் 47, கிரெமர்ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 24.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள்எடுத்து வெற்றி கண்டதுஅந்த அணியின் தொடக்க வீரர் டி சில்வாஆட்டமிழக்காமல் 78 ரன்கள் குவித்தார்முன்னதாக டிக்வெல்லா 41 ரன்கள்எடுத்து ஆட்டமிழந்தார்டி சில்வா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
புதன்கிழமை நடைபெறும் 2-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளும்,இலங்கையும் மோதுகின்றன.
வர்த்தகம் :
தில்லியில் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சிபிரணாப் தொடங்கிவைத்தார்
தில்லியில் இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை குடியரசுத் தலைவர்பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
தில்லியில் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி திங்கள்கிழமை (நவ.14) முதல்27-ஆம் தேதி வரை நடக்கிறதுஇக்கண்காட்சியில் 27 நாடுகளைச் சேர்ந்த 150நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.
இந்தக் கண்காட்சியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமைதொடங்கி வைத்தார்அப்போது அவர் பேசியதாவதுமின்னணு நிர்வாகத்தில்டிஜிட்டல் தொழில்நுட்பங்கள்இணைய-வர்த்தகம்செல்லிடப் பேசி சேவைகள்ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றனநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும்இது முக்கிய காரணிகளாக உள்ளன.
மின்னணு நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட சிலமுயற்சிகள்பொது மக்களுக்கான சேவைகளில் நல்ல பயன்களை அளிக்கத்தொடங்கியுள்ளன.

No comments: