உலகம் :
ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக முழக்கம்: 2 எம்பிக்கள் தகுதி நீக்கம்
சீனாவின் பிடியில் உள்ள ஹாங்காங்குக்கு சுதந்திரம் வழங்கக்கோரி கடந்த சிலஆண்டுகளாக போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இந்த சூழலில் கடந்தசெப்டம்பர் மாதம் ஹாங்காங்கில் நடந்த தேர்தலில் ஜனநாயகத்துக்கு ஆதரவாகபோராடி வரும் சிக்ஸ்டஸ் லெயூங் (30) மற்றும் யாவூ வய் சிங் (25) இருவரும்முதல்முறையாக நாடாளுமன்ற எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் புதிய எம்பிக்கள் பதவி யேற்கும் நிகழ்ச்சிநடந்தது. அப்போது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட லெயூங்கும், யாவூம்,சீனாவுக்கு எதிராக கோஷமிட்டதுடன், ஹாங்காங் குக்கு சுதந்திரம் வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், ‘‘ஹாங்காங் சீனாவுக்குசொந்தமல்ல, ஹாங்காங் தனி நாடாக அறிவிக்கப்பட வேண்டும்’’ என்றவாசகங்கள் அடங்கிய கொடிகளையும் ஏந்திப் பிடித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்திய சீனாவின் நாடாளுமன்றநிலைக்குழு, ஜனநாயக முறைப்படி தேர்ந் தெடுக்கப்பட்ட இரு எம்பிக் களையும்தகுதி நீக்கம் செய்வதாக உத்தரவிட்டுள்ளது. சீன அரசின் இந்த நடவடிக்கையால்,ஹாங்காங் மக்களும், ஜனநாயா ஆதரவு போராளிகளும் கடும் அதிருப்திஅடைந்துள்ளனர்.
ஹிலாரி கிளின்டன், டொனால்டு ட்ரம்ப் இடையே கடும் போட்டி:அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் - புதிய அதிபர் ஜனவரி 20-ம் தேதிபொறுப்பேற்பு
உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்றுநடைபெறுகிறது. இதில் ஹிலாரி கிளின்டன், டொனால்டு ட்ரம்ப் இடையே கடும்போட்டி நிலவுகிறது.
அமெரிக்காவில் 4 ஆண்டு களுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.இப் போது அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன்முடிகிறது. இதனால் நாட்டின் 45-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்இன்று நடைபெறுகிறது.
அமெரிக்காவைப் பொருத்த வரை, அதிபர் வேட்பாளர்களுக்கு பொதுமக்கள்நேரடியாக வாக் களிப்பதில்லை. மாறாக நாடு முழுவதும் உள்ள 50 மாகாணங்கள் மற்றும் கொலம்பியா (மாகாணத்தின் கீழ் வராத வாஷிங்டன் நகரம்)மாவட்டத் திலிருந்து 538 தேர்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக பொது மக்கள்இன்று வாக்களிப்பார்கள்.
இந்த வாக்குகள் மாகாண அளவிலேயே நாளை எண்ணப்பட்டு முடிவுகள்அறிவிக்கப்படும். இதன் அடிப்படையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது யார்என்பது தெரிந்துவிடும்.
எனினும், இந்த தேர்வாளர்கள் புதிய அதிபர் மற்றும் துணை அதிபரை டிசம்பர் 19-ம் தேதி முறைப்படி தேர்ந்தெடுப்பார்கள். இதில் வெற்றி பெற குறைந்தபட்சம் 270தேர்வாளர்களின் ஆதரவு தேவை. புதிதாக தேர்ந்தெடுக்க ப்படும் அதிபர் அடுத்தஆண்டு ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார்.
இந்தியா :
"இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு முக்கியத்துவம்: தெரசா மே-விடம்மோடி வலியுறுத்தல்
இந்தியா - பிரிட்டன் இடையேயான வர்த்த உறவில் "இந்தியாவில் தயாரிப்போம்'திட்டத்துக்கும் முக்கிய இடமளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிவலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் பிரதமர் தெரசா மேபங்கேற்ற "இந்திய-பிரிட்டன் தொழில்நுட்ப மாநாடு' தில்லியில் திங்கள்கிழமைநடைபெற்றது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயவந்திபென் மேத்தா காலமானார்
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜெயவந்திபென்மேத்தா (78), உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் திங்கள்கிழமைகாலமானார்.
அவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில்எரிசக்தித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். முதலில் மும்பைமாநகராட்சி கவுன்சிலராக இருந்து பிறகு எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டவர்ஜெயவந்திபென் மேத்தா. 1975-ஆம் ஆண்டு நெருக்கடிநிலைக் காலத்தில் 19மாதங்கள் சிறையில் இருந்தார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும், கட்சியின் செயலாளராகவும், பாஜகமகளிரணித் தலைவராவும், கட்சியின் துணைத் தலைவராகவும்பணியாற்றியுள்ளார். மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு இருமுறையும், அந்தமாநிலத்தில் இருந்து மக்களவைக்கு இருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மகாத்மா காந்தியின் பேரன் கானுபாய் காந்தி காலமானார்
மகாத்மா காந்தியின் பேரன் கானுபாய் காந்தி இன்று காலமானார். அவருக்குவயது 87. கடந்த மாதம் 22-ம் தேதி அமெரிக்காவில் இருந்து குஜராத் வந்தகானுபாய் காந்தி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உடலின் ஒருபக்கம் செயலிழந்துபக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், ராதாகிருஷ்ணா ஆலயத்தின் தர்மஸ்தாபனத்தால் நடத்தப்படும் ஷிவ்ஜோதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் காலமானார். இவரது மனைவிக்குஷிவலட்சுமிக்கு தற்போது 90 வயதாகிறது.
தமிழ்நாடு :
ரயில்வே துறையின் தென்மண்டல பாதுகாப்பு ஆணையர் நியமனம்
ரயில்வே துறையின் தென்மண் டல பாதுகாப்பு ஆணையராக தமிழகத்தைச்சேர்ந்த கே.ஏ.மனோகரன் நேற்று பொறுப் பேற்றுக்கொண்டார்.
ஈரோட்டைச் சேர்ந்தவர் கே.ஏ.மனோகரன். எலக்ட் ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசனில் பொறியியல் பட்டம் படித்த இவர், கடந்த 1982-ம் ஆண்டு ரயில்வேத்துறையில் பணியில் சேர்ந்தார். வடக்கு கிழக்கு ரயில்வே மண்டலத்தில்பணியைத் தொடங்கி தொலைத் தொடர்பு பொறியாளர், மூத்த பொறியாளர் எனபல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.
தெற்கு ரயில்வேயில் தொலைத் தொடர்புப் பிரிவில் தலைமைப்பொறியாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலை யில், ரயில்வேத் துறையின்தென்மண்டல பாதுகாப்பு ஆணை யராக கடந்த 2-ம் தேதிபொறுப்பேற்றுக்கொண்டார். தெற்கு ரயில்வே, பெங்களூரு, சென்னை, கொச்சிஆகிய மெட்ரோ ரயில் நிறுவனங்களின் பாதுகாப்பு ஆணையராகபணியாற்றுவார்.
புதுச்சேரி, சிக்கிம் மாநிலங்களில் சரக்கு மற்று சேவை வரி இணையதளசேவை இன்று தொடக்கம்
புதுச்சேரி, சிக்கிம் மாநிலங்களில் முதற்கட்டமாக சரக்கு மற்றும் சேவை வரிஇணையதளம் செவ்வாய்க்கிழமை (8.11.16) தொடங்கப்படுகிறது என ஜிஎஸ்டிஎன்தலைவர் (Goods And Service Tax Network) நவீன்குமார் தெரிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 2017 ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாமுழுவதும் நடைமுறைக்கு வருகிறது. இதையொட்டி இந்திய தொழில்கூட்டமைப்பு (சிஐஐ) புதுச்சேரி பிரிவு சார்பில் ஜிஎஸ்டி இணையதளம் தொடர்பாகவணிகர்கள், தொழில்துறையினர் பங்கேற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம்தனியார் ஓட்டலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விளையாட்டு :
டென்னிஸ் தரவரிசை: முதலிடத்தில் ஆன்டி முர்ரே
சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரரான ஆன்டிமுர்ரே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில்நேற்று முன்தினம் இரவு நடப்பதாக இருந்த அரையிறுதிப் போட்டியில் மிலோஸ்ரோனிக்கை எதிர்த்து ஆண்டி முர்ரே ஆடுவதாக இருந்தது. ஆனால் காயம்காரணமாக மிலோஸ் ரோனிக் இப்போட்டியில் இருந்து வாபஸ் பெற்றார். இதன்காரணமாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற ஆன்டி முர்ரே, சர்வதேச டென்னிஸ்தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றினார். இந்த பட்டியலில்முதலிடம் வகிக்கும் முதலாவது இங்கிலாந்து வீரர் முர்ரே ஆவார்.
கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி முதல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தசெர்பிய வீரர் நோவாக் ஜோகோவிக்கை பின்னுக்கு தள்ளிவிட்டு, முர்ரேமுதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆன்டி முர்ரே 3 கிராண்ட் ஸ்லாம்பட்டங்களையும், 2 ஒலிம்பிக் பதக்கங்களையும் வென்றுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஊஷு: இந்தியாவுக்கு 5 பதக்கங்கள்
சீனாவின் ஜியான் நகரத்தில் நடைபெற்ற 8-ஆவது சான்டா உலகக் கோப்பைபோட்டியில், சீன தற்காப்புக் கலையான ஊஷுவில் இந்தியாவுக்கு 2 வெள்ளி, 3வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
கடந்த 4-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற இந்த உலகக்கோப்பை போட்டியில், 2015-ஆம் ஆண்டு உலக ஊஷு சாம்பியன்ஷிப்போட்டியில் விளையாடிய 80 சிறந்த வீரர்கள் பங்கேற்றனர்.
ஆடவர் 52 கிலோ பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய உசித் சர்மா, அதில்பிலிப்பின்ஸின் அர்னெல் மன்டலிடம் தோல்வி கண்டார்.
இதையடுத்து, இரண்டாம் இடம் பிடித்த அவருக்கு வெள்ளிப் பதக்கம்வழங்கப்பட்டது. அதேபோல், மகளிர் 52 கிலோ எடைப் பிரிவின் இறுதிச்சுற்றில்சீனாவின் லுவான் ஜாங்கிடம் தோல்வி கண்ட இந்திய வீராங்கனை சனதோய்தேவியும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வர்த்தகம் :
இந்திய தொழில் அதிபர்களுக்கு விசா எளிதாக்கப்படும்: இங்கிலாந்துபிரதமர் தெரசா மே அறிவிப்பு
இந்திய தொழிலதிபர்களுக்கு விசா நடைமுறைகள் எளிதாக்கப் பட்டுள்ளதாகஇங்கிலாந்து பிரதமர் தெரசா மே குறிப்பிட்டார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், பிரதமர் நரேந்திரமோடியுடன் சிஐஐ ஏற்பாடு செய்த இந்தியா - இங்கிலாந்து தொழில்நுட்பமாநாட்டில் கலந்து கொண்டார். இந்தியாவை முக்கிய மான ஒரு வர்த்தக நாடாகபார்க் கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தெரசா மே பேசியதாவது: புதிய விசா நடைமுறைகளின்மூலம் இங்கிலாந்துக்கு இந்திய தொழிலதிபர்கள் அடிக்கடி பயணம் மேற்கொள்ளமுடியும். இங்கி லாந்திலிருந்து பிற ஐரோப்பிய நாடு களுக்கும் செல்லலாம். இந்தநடை முறை ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்படும். எந்த நாட்டிலிருந்து பிரிட்டன் வருவதற்கும் முதல் முறையாக விசா கோரினால் ‘பதிவுசெய்யப்பட்ட பயணி’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்கிற சலுகை உள்ளது.
ரிசர்வ் வங்கி: புதிய செயல் இயக்குநர் நியமனம்
ரிசர்வ் வங்கியின் புதிய செயல் இயக்குநராக எம்.ராஜேஷ்வர் ராவ்நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக பதவி வகித்து வந்த ஜி.மகாலிங்கம்விருப்ப ஓய்வு பெற்றார். இதையடுத்து, நிதி சந்தை செயல்பாடுகள் துறையில்தலைமை பொது மேலாளராக பணியாற்றி வந்த எம்.ராஜேஷ்வர் ராவை புதியசெயல் இயக்குநராக நியமித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இவர்,புள்ளியியல் தகவல் மேலாண்மை, நிதி மற்றும் சர்வதேச சந்தைசெயல்பாடுகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர், கடந்த 1984 ரிசர்வ் வங்கி பணியில் சேர்ந்து பல்வேறு பொறுப்புகளில்பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment