உலகம் :
டிரம்ப் அமைச்சரவை பட்டியல் தயார்
டொனால்டு டிரம்ப் தனது அமைச்சரவையில் இடம்பெறவுள்ளஅமைச்சர்களின் பட்டியலை இறுதி செய்துள்ளார்.இதில்மிட்ரோமனியும், மேத்திசும் இடம் பிடித்துள்ளனர்.
பட்டியல் :
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் தனதுஅமைச்சரவையில் நியமிக்கப்படும் அமைச்சர்களின் பட்டியலைதயார் செய்துள்ளார். இதில் வெளியுறவுதுறைக்கு மிட்ரோமனியும்,ஜேம்ஸ் மேத்திஸ் ராணுவ அமைச்சராக நியமிக்கப்படுவர்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் டிரம்ப் தனது 'டுவிட்டரில்'மேத்திசை புகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேத்திஸ் 2010-முதல் 2013 வரை ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற மத்திய கிழக்கு,மத்திய ஆசிய போர்களை அவர் வழி நடத்தியுள்ளார்.
பசிபிக் வர்த்தக ஒப்பந்தம்: வெளியேற அமெரிக்கா முடிவு
''அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, பசிபிக் பெருங்கடல்நாடுகளின் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற நடவடிக்கைஎடுப்பேன்,'' என, அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கஉள்ள டொனால்டு டிரம்ப், அதிரடியாக அறிவித்துள்ளார்.
செயல் திட்டங்கள் :
அமெரிக்காவில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சிவேட்பாளராக போட்டியிட்ட, டொனால்டு டிரம்ப், 70, வெற்றிபெற்றார். 2017 ஜனவரியில் பதவி ஏற்க உள்ள அவர், தன் செயல்திட்டங்களை நேற்று அறிவித்தார். அவர் கூறியுள்ளதாவது:
பசிபிக் பெருங்கடல் நாடுகளிடையேயான வர்த்தக ஒப்பந்தம்,அமெரிக்க பொருளாதாரத்திற்கு பெரும் சுமை; அது, கைவிடப்படும்.அதிபராக பதவியேற்கும் முதல் நாளிலேயே, இதற்கான உத்தரவைபிறப்பிப்பேன்.
தகவல்களை திரட்ட உத்தரவு :
அமெரிக்காவின் உள்நாட்டு தொழில், உற்பத்தியை பெருக்குவதேஎன் திட்டம். அமெரிக்காவில், சட்ட விரோதமாக குடியேறியுள்ளவெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்த, தகவல்களை உடனடியாகதிரட்டும்படி, தொழிலாளர் நலத்துறைக்கு உத்தரவிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஜப்பானில் நிலநடுக்கம்: ஃபுகுஷிமா அணு உலை அருகேசுனாமி
ஜப்பானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாகஅந்த நாட்டின் கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கியது.
கடந்த 2011-ஆம் ஆண்டு 18,000 பேரது உயிரிழப்புக்குக் காரணமாகஃபுகுஷிமா அணு உலை விபத்து நேரிட்ட பகுதிக்கு அருகே சுனாமிதாக்கியதால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஜப்பானின் வடகிழக்குக் கடல் பகுதியில், டோக்கியோவுக்கு 240கி.மீ. தொலைவில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமைஅதிகாலை 5.59 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடலுக்கடியில் 11.4 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் டோக்கியோ உள்ளிட்டநகரங்களில் கட்டடங்கள் குலுங்கின.
இந்தியா :
உ.பி. முன்னாள் முதல்வர் ராம்நரேஷ் யாதவ் காலமானார்
உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்ததலைவருமான ராம் நரேஷ் யாதவ், உடல் நலக் குறைவுகாரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 90.
உடல் நலக் குறைவை அடுத்து, உத்தரப் பிரதேச மாநிலம்,லக்னௌவில் உள்ள மருத்துவமனையில் ராம்நரேஷ் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றிசெவ்வாய்க்கிழமை காலை 9.15 மணியளவில் அவர் காலமானார்.
இவர் மத்தியப் பிரதேச மாநில ஆளுநராக கடந்த 2011-ஆம் ஆண்டுமுதல் 2016 செப்டம்பர் வரை பதவி வகித்திருக்கிறார்.
இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசமுதல்வர் அகிலேஷ் யாதவ், அந்த மாநில ஆளுநர் ராம் நாயக்,மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உள்படபல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
5 மாநில இடைத்தேர்தல்: ஆளுங்கட்சிகள் வெற்றி
மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், திரிபுரா, அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்றமக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் அந்தந்தமாநில ஆளுங்கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன. கட்சி ரீதியில்பார்த்தால், பாஜக, திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை தலா 2மக்களவைத் தொகுதிகளில் வெற்றிவாகை சூடியுள்ளன.
மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அண்மையில்காலியான மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குகடந்த 19-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில்பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள்அறிவிக்கப்பட்டன.
அதன்படி, தாம்லுக் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸின்திப்யேந்து அதிகாரி, தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட்வேட்பாளரை 4.97 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து,அமோக வெற்றி பெற்றார்.
அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி
அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று தாக்கும் கொண்ட அதிநவீனஅக்னி-1 ஏவுகணை, ஒடிஸா மாநிலம், பலாஸோரில்செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ)சார்பில் உருவாக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணை, சுமார் 12 டன் எடைமற்றும் 15 மீட்டர் நீளம் கொண்டது.
முப்படைகளிலும் பயன்படுத்தப்படும் வகையிலான இந்தஏவுகணையானது, முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயேதயாரிக்கப்பட்டது. சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளஇலக்குகளையும் துல்லியமாகத் தாக்கும் வகையில் இதுவடிவமைக்கப்பட்டுள்ளது.
இலக்கை மிகச் சரியாக தாக்குவதற்காக அக்னி-1 ஏவுகணையில்வழிகாட்டி சாதனங்கள் (நேவிகேஷன் சிஸ்டம்)பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏவுகணை செல்லும்பாதையை ரேடார் மூலம் கண்காணிக்க இயலும். மேலும், சுமார் 1டன் வரை எடைகொண்ட அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும்ஆற்றல் கொண்டது.
மன்மோகன் சிங் கெளரவப் பேராசிரியராக பணியாற்றலாம்:நாடாளுமன்றக் குழு அனுமதி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில்கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றலாம் என்று நாடாளுமன்றக்கூட்டுக் குழு செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.
சண்டீகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில்தான் மன்மோகன்சிங், பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1963 முதல்1965-ஆம் ஆண்டு வரை அங்கு பொருளாதாரப் பேராசிரியராகவும்பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் ஜவாஹர்லால் நேருஅமர்வில் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்ற மன்மோகன்சிங்குக்கு நிர்வாகக் குழு அழைப்பு விடுத்தது.
மன்மோகன் சிங், அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.யாக பதவியில் உள்ளார்.இந்நிலையில், கெளரவப் பேராசிரியர் பொறுப்பை ஏற்பதன் மூலம்ஆதாயம் தரும் பதவி வகிப்பதாக குற்றச்சாட்டு எழும். இதனால்எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படும் சூழல் ஏற்படும்என்பதால், இது தொடர்பாக விளக்கம் கேட்டு மாநிலங்களவைத்தலைவருக்கு மன்மோகன் சிங் கடந்த ஜூலை மாதம் கடிதம்எழுதியிருந்தார்.
தமிழ்நாடு :
3 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி
தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் கட்சியானஅதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, சட்டப்பேரவையில் அந்தக் கட்சியின் பலம் 136 ஆக அதிகரித்துள்ளது.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொதுத் தேர்தலும், திருப்பரங்குன்றம் தொகுதிஉறுப்பினராக இருந்த சீனிவேல் மரணத்தால் அங்கு இடைத்தேர்தலும் நடந்தன. இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ஆம் தேதி நடந்தது.
அரவக்குறிச்சி, தஞ்சாவூரில்...: தேர்தலில் பதிவான வாக்குகள்செவ்வாய்க்கிழமை (நவ.22) எண்ணப்பட்டன. அரவக்குறிச்சியில்பதிவான வாக்குகள் கரூரில் உள்ள எம்.குமாரசாமி பொறியியல்கல்லூரியிலும், தஞ்சாவூர் தொகுதிக்குட்பட்ட வாக்குகள் குந்தவைநாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரியிலும்,திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் பதிவானவை மதுரைமருத்துவக் கல்லூரியிலும் எண்ணப்பட்டன.
ஜனவரி 21-இல் தொடங்குகிறது ஹாக்கி இந்தியா லீக்
5-ஆவது ஹாக்கி இந்தியா லீக் (ஹெச்ஐஎல்) ஹாக்கிப் போட்டிகள்அடுத்த ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது.
இந்தப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தபங் மும்பை-ராஞ்சிரேய்ஸ் அணிகள் மோதுகின்றன. அரையிறுதிப் போட்டிகள் பிப்ரவரி25-ஆம் தேதியும், இறுதிப் போட்டி 26-ஆம் தேதியும் நடைபெறஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியானது, நடப்புச் சாம்பியனான பஞ்சாப் மாநிலத்தின்சண்டீகரில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, சர்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா லீக்ஆகியவற்றின் தலைவர் நரீந்தர் துருவ் பத்ரா கூறியதாவது:
எதிர்வரும் ஹாக்கி இந்தியா லீக் போட்டியானது, ஹாக்கிவிளையாட்டுப் போட்டியின் நிலையான வளர்ச்சியைபறைசாற்றுவதற்கான உதாரணமாக இருக்கும். இந்த ஆண்டுஹாக்கிஇந்தியா லீக் போட்டியில், புதிதான ஊடகங்களின் மூலம்ரசிகர்களை ஈர்க்கவும், அதேவேளையில், விளையாட்டு வீரர்கள்மற்றும் விளம்பரதாரர்களின் வருமானத்தை பெருக்குவதற்கும்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விளையாட்டு :
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 4-ஆவது இடத்தில் கோலி
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில்இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி 4-ஆவது இடத்துக்குமுன்னேறியுள்ளார்.
ஒரு நாள் போட்டித் தரவரிசையில் முன்னதாக முதலிடம்பிடித்திருந்த கோலி, தற்போதுடி20 தரவரிசையில் முதலிடத்தில்உள்ளார். எனினும், டெஸ்ட் தரவரிசையில் முதல் 10இடங்களுக்குள் அவர் வருவது இதுவே முதல் முறையாகும்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவதுடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடியதை அடுத்து,கோலி இத்தகைய முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.
கோலிக்கு 2 இடங்கள் முன்பாக, இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோரூட் 2-ஆவது இடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையே 22புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளதால், வரும் சனிக்கிழமைமொஹாலியில் தொடங்கும் 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்போட்டியில் கோலி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவர் மேலும்முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
வர்த்தகம் :
முன்னுரிமை பங்கு ஒதுக்கீடு: நிறுவனங்கள் திரட்டிய தொகைரூ.18,594 கோடி
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் முன்னுரிமை பங்குஒதுக்கீடுகள் மூலம் இந்திய நிறுவனங்கள் ரூ.18,594 கோடியைதிரட்டியுள்ளன.
விரிவாக்க திட்டம், செயல்பாட்டு மூலதனம், கடன் மறுசீரமைப்புஆகிய நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை, குறிப்பிட்ட சிலபங்குதாரர் குழுக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பங்குகளைஒதுக்கீடு செய்வதன் மூலம் நிறுவனங்கள் திரட்டுகின்றன.
அந்த வகையில், நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் முதல்செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் நிறுவனங்கள்ரூ.18,594 கோடியை திரட்டியுள்ளன. கடந்த நிதி ஆண்டின் இதே காலஅளவில் திரட்டிய ரூ.20,874 கோடியுடன் ஒப்பிடும்போது இது 11சதவீதம் குறைவாகும்.
ஏப்ரலில் ரூ.3,829 கோடியும், மே மாதத்தில் ரூ.5,218 கோடியும்,ஜூனில் ரூ.2,009 கோடியும், ஜூலையில் ரூ.1,470 கோடியும்,ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் குறைவாக ரூ.350 கோடியும்,செப்டம்பரில் அதிகபட்சமாக ரூ.5,718 கோடியும் நிறுவனங்கள்திரட்டியுள்ளன. மொத்தம் 211 முன்னுரிமை பங்கு ஒதுக்கீடுகள்வாயிலாக இந்த மூலதனத்தை நிறுவனங்கள் பெற்றுள்ளன.
எல் & டி லாபம் ரூ.1,434 கோடி
உள்கட்டமைப்பு துறையில் ஈடுபட்டு வரும் லார்சன் அண்டு டூப்ரோ(எல் & டி) நிறுவனம் இரண்டாம் காலாண்டில் ரூ.1,434.63 கோடிலாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்குஅளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர்வரையிலான இரண்டாம் காலாண்டில் எல் & டி நிறுவனத்தின்மொத்த வருவாய் ரூ.25,010.70 கோடியாக இருந்தது. கடந்த நிதிஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.23,123.48கோடியுடன் ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் அதிகமாகும்.
சர்வதேச செயல்பாடுகள் மூலம் ரூ.8,930 கோடி வருவாய்ஈட்டப்பட்டது. மொத்த வருவாயில் இதன் பங்களிப்பு 36சதவீதமாகும். நிறுவனத்தின் செலவினம் ரூ.21,521.06கோடியிலிருந்து அதிகரித்து ரூ.23,173.16 கோடியாக இருந்தது.
No comments:
Post a Comment