Monday 14 November 2016

Daily Current Affairs For Competitive Exam - 13th & 14th November

உலகம் :

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி
நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட் சர்ச் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். நியூசிலாந்தில் நள்ளிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதையடுத்து நியூசிலாந்தின் வடகிழக்கு கிழக்கு கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
நியூசிலாந்து நாட்டின் பசிபிக் எல்லையையொட்டிய பகுதிகளில் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு அடிக்கடி பாதிப்புக்குள்ளாரி வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 185 பேர் உயிரிழந்தனர். அது ரிக்டரில் 6.3 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது. அப்போது 11 அடி உயரத்துக்கு சுனாமி பேரலைகள் தாக்கின.
இந்நிலையில், நள்ளிரவு கிறிஸ்ட் சர்ச் பகுதியில் ரிக்டரில் 7.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட 2 மணிநேரத்துக்கு பின்னர் 6 அடி உயரத்துக்கு சுனாமி பேரலைகள் தாக்கின. நியூசிலாந்து அரசும் அவசர நிலையை பிரகடனம் செய்தது. இதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு பிரதமர் ஜான் ஹே தெரிவித்தார்.
புதிய அமைச்சரவை: பென்ஸ் தலைமையில் ஆலோசனைக் குழு
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய அமைச்சரவையை அமைப்பது குறித்து ஆலோசனை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
துணை அதிபராகப் பதவி வகிக்கவுள்ள மைக் பென்ஸ் தலைமையிலான அந்தக் குழுவில், டிரம்ப்பின் மருமகன் ஜேரட் குஷ்னர் இடம் பெற்றுள்ளார். மேலும், கட்சித் தலைவர் ரின்ஸ் பிரீபஸ், நியூஜெர்ஸி மாகாண ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி, அதிபர் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக இருந்த ஸ்டீபன் பேனன், மூத்த முன்னாள் தளபதி மைக்கல் ஃபிளின் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ரின்ஸ் பிரீபஸ், மூத்த அமைச்சர் பதவிக்கு நிகரான சக்தி வாய்ந்த அமைச்சரவை செயலராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.
டிரம்ப் தலைமையில் பதவி ஏற்கும் புதிய அரசில் இடம் பெறும் 15 அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பொறுப்புகளை யாருக்கு அளிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அந்தக் குழு ஆலோசனை வழங்கும். அட்டர்னி ஜெனரல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த சுமார் ஆயிரம் பதவிகள் குறித்து அந்தக் குழு முடிவெடுக்கும்.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில்: இந்தியா நிரந்தர உறுப்பினராக பல நாடுகள் ஆதரவு
விரிவாக்கம் செய்யப்படவுள்ள ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் (யு.என்.எஸ்.சி.) இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவதற்கு, அந்தக் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள பல உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷிய கூட்டமைப்பு, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினராக இடம்பெற்றுள்ளன. இது தவிர, 10 நாடுகள் தாற்காலிக உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், ஐ.நா. பொதுச் சபை கூட்டம், நியூயார்க்கில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலை விரிவுபடுத்துவது குறித்து 50க்கும் மேற்பட்டோர் தங்களது ஆலோசனைகளையும், கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.
விரிவுபடுத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில், இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் போன்ற எழுச்சி பெற்று வரும் நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இடம்பெற வேண்டும் என்று பலரும் ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ள பிரிட்டனும், பிரான்ஸýம், இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு குரல் கொடுத்தன.
கர்நாடக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமனம்
கர்நாடக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூரில் விசாரிக்க அமைக்கப்பட்டிருந்த சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றி, அந்த வழக்கில் பரபரப்பான தீர்ப்பு வழங்கிய ஜான் மைக்கேல் குன்ஹா தற்போது கர்நாடக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளராகப் பணியாற்றிவரும் ஜான் மைக்கேல் குன்ஹா, கூடுதல் நீதிபதியாக 2 ஆண்டு காலம் பணியாற்றுவார்.
இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு : 
கோவா கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல்
கோவாவில் புதிதாக அமைய உள்ள பசுமை (கிரீன்ஃபீல்டு) விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார்.
கோவா தலைநகர் பனாஜி அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் மோடி பங்கேற்க உள்ளார். அப்போது மோபா பகுதியில் அமைய உள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த கிரீன்ஃபீல்டு விமான நிலையத்துக்கும், துயெம் மின்னணு நகரத் திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த இரண்டு திட்டங்களும் கோவாவின் வடக்குப்பகுதி தாலுகாவான பர்னேமில் அமைய உள்ளன.
உலகத் திருக்குறள் பேரவை பொதுச் செயலாளர் ந.மணிமொழியன் காலமானார்
மதுரையைச் சேர்ந்த உலகத் திருக்குறள் பேரவைப் பொதுச்செயலரும், பிரபல தொழிலதிபருமான (காலேஜ்ஹவுஸ்), ந.மணிமொழியன் (71) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
இவர், மதுரையில் உலகத் திருக்குறள் பேரவையை தொடங்கி 38 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார். மலேசியா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உலகத் திருக்குறள் பேரவையை தொடங்கியுள்ளார்.
திருக்குறள் மீது பற்றுக்கொண்ட அவர், திருக்குறள் பயணம் உள்ளிட்ட நான்கு இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்செம்மல் விருது, சுவாமி கிருபானந்த வாரியார் விருதுகள் உள்ளிட்ட 14 விருதுகளையும் பெற்றுள்ளார்.
விளையாட்டு :
வரலாறு படைத்தார் அதிதி அசோக்
குர்கானில் நடைபெற்ற மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் ஐரோப்பிய கோல்ஃப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார் அதிதி.
18 வயதான அதிதி, ரியோ ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்டபோது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
மகளிர் கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா
மகளிர் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது.
விஜயவாடாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டாட்டின் 63 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் கோஸ்வாமி, பிஸ்த் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இந்திய அணி 38 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இந்திய அணியில் கேப்டன் மிதாலி ராஜ் 45, ஸ்மிருதி 44 ரன்கள் எடுத்தனர்.
டிராவில் முடிந்தது ராஜ்கோட் டெஸ்ட்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.
310 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தபோதிலும் கேப்டன் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தோல்வியிலிருந்து தப்பியது.
ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 159.3 ஓவர்களில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 128, ஜோ ரூட் 124, மொயீன் அலி 117 ரன்கள் குவித்தனர். இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வர்த்தகம் :
தொலைத்தொடர்பு தீர்ப்பாயத் தலைவர் பதவிக்கு விரைவில் முழு நேர தலைவர்
காலியாக உள்ள தொலைத் தொடர்பு தீர்ப்பாயத்தின் முழு நேர தலைவர் அடுத்த மாதம் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொலைத் தொடர்பு விவகாரங்களுக்கான தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (டிடிஎஸ்ஏடி) தலைவராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அஃப்தாப் ஆலம் கடந்த ஜூன் 16-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, தலைவர் பதவி காலியாக இருந்ததால் தொலைத்தொடர்பு விவகாரங்களில் இடைக்கால உத்தரவுகள் மட்டுமே பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
காப்பீட்டு நிறுவனங்களின் தலைவர் நியமனம்: மத்திய அரசு தீவிரம்
நீண்ட நாள்கள் காலியாக உள்ள பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளுக்கு அதிகாரிகளைத் தேர்வு செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பொதுக் காப்பீட்டு நிறுவனங்களான ஓரியன்டல் இன்சூரன்ஸ், யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ், அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகியவற்றின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்து வந்தன.
இந்த நிலையில், மத்திய நிதி சேவைகள் செயலர் அஞ்சலி சிப் துக்கல் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் தலைவர் பதவிக்கான நேர்காணலை கடந்த வாரம் புது தில்லியில் நடத்தி முடித்துள்ளது. அதில், 10 பேர் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

No comments: