Tuesday 15 November 2016

Daily Current Affairs For Competitive Exam - 16th November

உலகம் :

என்எஸ்ஜி-யில் இந்தியா உறுப்பினராக சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை
அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினாவதற்குமுட்டுக்கட்டைப் போடும் தனது நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடிப்பதாகசீனா தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்கெங் ஷுவாங் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
48 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அணுசக்தி விநியோக நாடுகளின்கூட்டமைப்பில்அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாதஇந்தியா போன்ற நாடுகள் இணைவதற்கான எங்களது இரு நிபந்தனைகளைநிறைவு செய்தால் மட்டுமேகூட்டமைப்பில் அந்த நாட்டை இணைப்பதற்குஆதரவளிப்பது என்ற சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவுமில்லை.என்எஸ்ஜி அமைப்பில் உறுப்பினர்கள் சேர்ப்பதில் பாகுபாடும்சிறப்புச்சலுகைகளும் காட்டப்படக்கூடாது என்பதே எங்கள் கொள்கையாகும் என்றார்அவர்.
என்எஸ்ஜி கூட்டமைப்பில் இந்தியா இணைவதற்கு முன்னர்அணு ஆயுதப்பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை இணைப்பது குறித்துஅந்தக் கூட்டமைப்பின் ஆலோசனை மற்றும் பரிந்துரைக் கூட்டங்கள் நடத்தப்படவேண்டும்.
இரு நாட்டு உறவை புதுப்பிக்க ஒப்புதல் : டொனால்டு டிரம்ப் - புடின்தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்பும்ரஷ்ய அதிபர்விளாடிமிர் புடினும்முதன்முறையாகநேற்று தொலைபேசியில் பேசினர்;அப்போதுஇரு நாட்டு உறவுகளை புதுப்பித்துநட்புறவுடன் திகழஇருவரும்சம்மதித்தனர்சமீபத்தில் முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில்குடியரசு கட்சிசார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப்வெற்றி பெற்றார்.

அடுத்தாண்டு ஜனவரியில்அமெரிக்க அதிபராகஅவர் பதவியேற்க உள்ளார்.இந்நிலையில்டிரம்பும்ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும்நேற்றுதொலைபேசியில் முதன்முறையாக பேசினர்டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தபுடின்முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார விவகாரங்கள்இரு நாடுகளுக்குஇடையிலான உறவு குறித்து விவாதித்தார்.

டிரம்ப் பேசுகையில், ''அமெரிக்கா - ரஷ்யா இடையிலான நட்புறவு மீண்டும் மலரவேண்டும்ரஷ்ய மக்களுடன் நல்லுறவு நீடிக்க வேண்டும்,'' என்றார்இருதலைவர்களும்இரு நாடுகள் இடையே நட்புறவை புதுப்பித்துநட்புறவுடன் திகழசம்மதித்தனர்.
இந்தியா :
மத்திய பட்ஜெட் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல்மத்தியஅரசு அறிவிப்பு 
மத்திய பட்ஜெட் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும்என மத்திய அரசு அறிவித்துள்ளத்து.

மேலும் பட்ஜெட் கூட்டத் தொடர் இனி ஜனவரி மாதம் தொடங்கும் என்றும்மத்திய அரசு அறிவித்துள்ளதுரயில்வே பட்ஜெட் இனி தனியாக தாக்கல்செய்யப்படாது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து மாலையில் தாக்கல் செய்யப்பட்டு வந்தமத்திய பட்ஜெடை 16 ஆண்டுகளுக்கு முன்பு பா.. கூட்டணி ஆட்சியில் காலை11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை கொண்டுவரப்பட்டது.அதேபோல் இப்போது மீண்டும் ஒரு மிகமுக்கியமான மாற்றம்கொண்டுவரப்பட்டுள்ளதுஅதாவது  பிப்ரவரி 28ம் தேதிக்கு பதில் பிப்ரவரி 1ம்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.பட்ஜெட் கூட்டத் தொடர் இனிஜனவரி மாதம் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
பணம் மாற்றுவோருக்கு மை வைக்கும் பணி தொடங்கியதுஎந்த விரலில்மை?
வங்கியில் பணம் மாற்ற வருவோருக்கு மை வைக்கும் பணி தில்லியில் உள்ளவங்கியில் தொடங்கியது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து,கையில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய்நோட்டுகளை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில்வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளைக்கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கும் பொது மக்களின் விரலில் மைவைக்கப்படும் என்ற புதிய முறையை மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இதையடுத்துஇன்று முதல் வங்கிகளில் பணம் எடுக்க வருவோரின் விரல்களில்மை வைக்கும் பணி தொடங்கியதுமுதல் முறையாக தில்லி வங்கியில் இந்ததிட்டம் தொடங்கியுள்ளது.
தேர்தல் நடக்காத பகுதிகளில் பணத்தை மாற்றும் பொதுமக்களின் இடது கையின்ஆட்காட்டி விரலிலும்தேர்தல் நடக்கும் இடத்தில் வலது கையின் ஆட்காட்டிவிரலிலும் மை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு : 
'குரூப் - 2 கவுன்சிலிங் வரும் 21ம் தேதி துவக்கம் - டிசம்பர் 4 வரைநடக்கிறது : .என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

'குரூப் - 2  பதவிகளுக்கான பணி நியமன கவுன்சிலிங்வரும், 21 முதல் டிச., 2வரை நடக்கும்எனதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது
இதுகுறித்துடி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்டசெய்திக்குறிப்பு:அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர் பணிக்கு, 1,863காலியிடங்களை நிரப்பஜன., 24ல், 'குரூப் - 2 எழுத்துத் தேர்வு நடந்ததுஇதன்முடிவுகள்ஜூன், 8ல் வெளியாகின.
வெற்றி பெற்றோருக்குஜூலை, 4 முதல், 19 வரைசான்றிதழ்கள்சரிபார்க்கப்பட்டனபணி நியமன கவுன்சிலிங்வரும், 21 முதல் டிச., 2 வரை,சென்னையிலுள்ளடி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கும்அழைப்பு கடிதம்குறித்த விபரங்களை தேர்வாணையத்தின்www.tnpsc.gov.in என்றஇணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்இவ்வாறு செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு :
சீன ஓபன்சாய்னா நேவால் தோல்விபி.வி.சிந்து வெற்றி!
சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டிசீனாவின் ஃபுசோ நகரில்இன்று தொடங்கியது
இப்போட்டியில் இந்தியாவின் சார்பில்மகளிர் பிரிவில் பி.வி.சிந்துசாய்னாநெவால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்ஆடவர் பிரிவில் அஜய் ஜெயராம்,ஹெச்.எஸ்.பிரணாய்சாய் பிரணீத் ஆகியோர் களம் காண்கிறார்கள்
இதில் சாய்னாவைப் பொறுத்த வரையில் இந்தப் போட்டி அவருக்குமுக்கியமானதாகக் கருதப்படுகிறதுலண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம்வென்ற சாய்னாரியோவில் அதைவிடச் சிறப்பாகச் செயல்படுவார் எனஎதிர்பார்க்கப்பட்டதுஎனினும், 2-வது சுற்றிலேயேதரவரிசையில் தன்னைவிடபின்தங்கிய உக்ரைனின் மரியா உலிடினாவிடம் வீழ்ந்தார்மேலும்காயம்காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்தார்சுமார் 3 மாதஇடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் அவர் போட்டிக்குத் திரும்பியுள்ளார்.
2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென்ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரையும் வென்றுள்ளது.
ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல்இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 32.5 ஓவர்களில் 85 ரன்களுக்கு சுருண்டதுஅந்தஅணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 48 ரன்கள்எடுத்தார்தென் ஆப்பிரிக்கத் தரப்பில் வெர்னான் பிலாண்டர் 5விக்கெட்டுகளையும்கைல் அபாட் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 100.5 ஓவர்களில் 326ரன்கள் எடுத்ததுஆஸ்திரேலியத் தரப்பில் ஹேஸில்வுட் 6 விக்கெட்டுகளையும்,மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவதுஇன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 3-ம் நாளின் ஆட்டநேர முடிவில் 36ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தபோது போதியவெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதுகவாஜா 56, ஸ்மித் 18ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்
வர்த்தகம் :
அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 500 ரூபாய் வெளியீடு
அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 500 ரூபாய் நோட்டுவெளியிடப்பட்டுள்ளதுபுதுடெல்லியில் நாடாளுமன்றம் அருகில் உள்ள எஸ்பிஐவங்கிக் கிளையில் நேற்று புதிய 500 ரூபாய் வெளியிடப் பட்டதாக ட்விட்டர் சமூகவலைதளம் மூலம் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்ய மூத்த குடிமக்கள்பெண்களுக்குதனியாக சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கவங்கிகளை வலியுறுத்தியுள்ளதாக அரசுதரப்பு மூத்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் தற்போதைய நிலையில் புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகளைஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பெற முடியாத நிலையே உள்ளதுரூபாய்தாள்களின் அளவுகளுக்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்களில் மாறுதல்கள் செய்யவேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்இந்த புதிய 500 ரூபாய் நோட்டில்ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம் பெற்றுள்ளது.
தூய்மை இந்தியா இலச்சினையுடன்அச்சடிக்கப்பட்ட ஆண்டான 2016 எனவும்குறிப்பிடப் பட்டிருக்கும்சாம்பல் வண்ணத்தில் உள்ளதுபழைய 500 ரூபாய்நோட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பல பாதுகாப்பு அம்சங்களுடன் இந்தநோட்டு உள்ளது.

No comments: