Sunday 6 November 2016

Daily Current Affairs For Competitive Exam - 7th November

உலகம் :

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் சர்வதேச சட்டமானது
பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்துக்கு நேற்று சர்வதேச சட்ட அந்தஸ்து வழங்கப் பட்டது.


சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள புவிவெப்பமயமாதலை கட்டுப் படுத்த உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சிய ஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்து வதற்கான பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த ஆண்டு பாரிஸில் நடந்த கூட்டத் தின்போது எட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்தியா உட்பட 96 நாடுகள் இந்த ஒப்பந்தத் தில் முறைப்படி கையெழுத்திட்டு இணைந்துள்ளன. மேலும் சில நாடுகள் அடுத்து வரும் மாதங் களுக்குள் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சட்ட ஆணைய பதவிக்கு இந்திய இளம் வழக்கறிஞர் தேர்வு
ஜெனிவாவைத் தலைமையக மாகக் கொண்டு இயங்கும் சர்வ தேச சட்ட ஆணையத்தின் 34 உறுப் பினர்களுக்கான தேர்தல் ஐ.நா.பொதுச் சபையில் நேற்று நடை பெற்றது. ஆப்பிரிக்கா, ஆசிய-பசிபிக், கிழக்கு ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப் பிய நாடுகள் குழு என, 5 பிரிவு களாக பிரிக்கப்பட்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், ஆசிய-பசிபிக் பிரிவில் போட்டியிட்ட 7 உறுப்பினர்களில், இந்தியாவைச் சேர்ந்த அனிருத்தா ராஜ்புத்(33) அதிகபட்சமாக, 160 வாக்குகளைப் பெற்று முதலிடம் வகித்தார். இவருக்கு அடுத்தபடி யாக ஜப்பானைச் சேர்ந்த வேட்பாளர் 148 வாக்குகளையும், சீனாவைச் சேர்ந்தவர் 146 வாக்குகளும் பெற்றனர்.
வரும் ஜனவரி மாதம் தொடங்கி, 5 ஆண்டுகள் வரை உறுப்பினர்கள் பதவியில் நீடிப்பார்கள். இந்த ஆணையத்தின் தலைவர் பதவி யை இந்தியாவைச் சேர்ந்த நரிந்தர் சிங் வகிக்கிறார்.
இந்தியா :
ஐ.நா. முக்கிய பொறுப்புக்கு மற்றொரு இந்தியர் தேர்வு
வழக்கறிஞர் அனிருத்தா ராஜ்புத்தைத் தொடர்ந்து, மற்றுமொரு இந்தியர் ஐ.நா. சபையின் முக்கிய பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் நிதிநிலை மற்றும் நிர்வாக விவ காரங்களுக்கான ஆலோசனைக் குழு உறுப்பினராக இந்தியாவைச் சேர்ந்த மகேஷ்குமார் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். ஐ.நா. பொதுச் சபையில் நடைபெற்ற தேர்தலில் ஏகோபித்த ஆதரவுடன் அவர் தேர்வு செய்யப்பட்டார்.
ஐ.நா.வுக்கான நிரந்திர இந்திய தூதுக்குழுவில் முதல்நிலை செயலாளராக பொறுப்பு வகித்து வரும் மகேஷ் குமாருடன், ஜப்பானின் தகேஷி அகமட்சு மற்றும் சீனாவின் யி ஸியுனாங் ஆகியோரும் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஆசிய பசிபிக் நாடுகளுக்கான இக்குழுவில் மூவரும், வரும் ஜனவரி மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை பதவியில் நீடிப்பார்கள்.
ஐ.எஃப்.எஸ் அதிகாரியான மகேஷ்குமார், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எம்ஃபில் முடித்தவர். டெல்லி தவிர, பிரஸ்ஸல்ஸ், டெல் அவிவ், ரமல்லா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணி அனுபவம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இந்தியா வருகை
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். இன்று அவர் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.
பிரக்ஸிட் ஓட்டெடுப்பை தொடர்ந்து பதவி விலகிய டேவிட் கேமரூனுக்கு பின், இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரசா மே கடந்த ஜூலை மாதம் பதவியேற்றார்.
இந்நிலையில், இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்யும் அவர், நேற்று இரவு தனி விமானம் மூலம் தில்லி வந்தடைந்தார். தில்லி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் இங்கிலாந்து தொழில் அதிபர்கள் சுமார் 40 பேரும் வந்துள்ளனர்.
தமிழ்நாடு : 
10 தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்பட்ட 10 தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு துறைகளில் இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பிரிவுகளில் காலியாகவுள்ள 5,451 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இதில், தமிழகம் முழுவதும் 5,296 மைங்களில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வெழுதினர்.
இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி. மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருந்த தேர்வு மையத்தை அருள்மொழி ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:-
இந்தத் தேர்வை எழுத, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்களில் 2,291 பேர் மாற்றுத்திறனாளிகள். விண்ணப்பித்தவர்களில் 80 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.
முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், 5,296 தலைமை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 78,216 கண்காணிப்பாளர்கள், 566 பறக்கும்படை ஆகியோர் மேற்பார்வையில் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த வாரத்தில் டி.இ.ஒ. தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த 12 மாதங்களில் மட்டும் 15 எழுத்துத் தேர்வுகளும், 13 நேர்முகத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
2009, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கை செய்யப்பட்டு, பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த உடற்கல்வி இயக்குநர், மோட்டார் வாகன ஆய்வாளர், நூலகர் ஆகிய மூன்று போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் மாதங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
2014-இல் அறிவிக்கை செய்யப்பட்ட 11 காலிப் பணியிடங்களுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்துக்கானத் தேர்வு முடிவு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வாரத்துக்குள் இந்த முடிவும் அறிவிக்கப்பட்டுவிடும்.
விளையாட்டு :
காமன்வெல்த் மல்யுத்தம்: ஒரே நாளில் இந்தியாவுக்கு 8 தங்கம், 8 வெள்ளி
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை 8 தங்கம் மற்றும் 8 வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.
இதில், ஹர்ஃபுல் (61 கிலோ), பஜ்ரங் (65 கிலோ), ஜிதேந்தர் (74 கிலோ), தீபக் (86 கிலோ), ஹிதேந்தர் (125 கிலோ) ஆகியோர் ஃபிரீஸ்டைல் பிரிவில் தங்கம் வென்றனர். கிரேக்கோ ரோமன் பிரிவில், ரவீந்தர் (59 கிலோ), தீபக் (71 கிலோ), ஹர்தீப் (98 கிலோ) ஆகியோர் தங்கம் வென்றனர்.
அதேபோல், விகாஸ் (61 கிலோ), ராகுல் மான் (65 கிலோ), சந்தீப் கேட் (74 கிலோ), அருண் (86 கிலோ), கிருஷண் (125 கிலோ) ஆகியோர் ஃப்ரீஸ்டைல் பிரிவிலும், கிருஷண் (59 கிலோ), ரஃபிக் (71 கிலோ), சச்சின் (98 கிலோ) ஆகியோர் கிரேக்கோ ரோமன் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
பெண்களுக்கான 4வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தின.
இதில் இந்திய பெண்கள் அணி 2-1 என சீன அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஒரு கட்டத்தில் 1-1 என ஸ்கோர் சமநிலையில் இருந்தது. ஆட்டம் முடிவடைவதற்கான கடைசி நிமிடத்தில் இந்திய வீராங்கனை தீபிகா கோல் அடிக்க இந்தியா 2-1 என சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
முதல் முறையாக இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிட்பர்கர் ஓபன்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் செளரவ்
ஜெர்மனியில் நடைபெற்று வரும் பிட்பர்கர் ஓபன் கிராண்ட் ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் செளரவ் வர்மா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக தனது அரையிறுதியில், போட்டித் தரவரிசையில் 15-ஆவது இடத்தில் இருக்கும் டென்மார்க் வீரரான ஆண்டர்ஸ் ஆன்டன்சனை அவர் எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே 39 நிமிடங்கள் விருவிருப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 21-15, 21-18 என்ற நேர் செட்களில் செளரவ் வர்மா வெற்றி பெற்றார்.
நடப்புச் சாம்பியனான செளரவ், உலகின் 16-ஆம் நிலை வீரரும், போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருப்பவருமான சீனாவின் ஷி யூகியை தனது இறுதிச்சுற்றில் எதிர்கொள்கிறார்.
ஷி யூகி, முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் செளரவின் சகோதரர் சமீர் வர்மாவை 21-18, 21-15 என்ற நேட் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
வர்த்தகம் :
700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையைப் பெற பி.எஸ்.என்.எல். மும்முரம்
இந்தியாவின் மிகப்பெரிய அலைக்கற்றை ஏலத்தில் விற்கப்படாமல் போன 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை வாங்க பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஆர்வம் காட்டி வருகிறது.
அண்மையில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை அடிப்படை விலை மெகாஹெர்ட்ஸ் ஒன்றுக்கு ரூ.11,485 கோடியாக மத்திய அரசு நிர்ணயம் செய்தது.
இந்த விலை மிகவும் அதிகம் என்று தெரிவித்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அந்த அலைக்கற்றையை ஏலத்தில் எடுக்கவில்லை.
இந்த நிலையில், 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் 5 மெகாஹெர்ட்ஸ் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்படி மத்திய தொலைத் தொடர்பு துறையிடம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கு ஈடாக, மத்திய அரசு, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை குறைந்த கட்டமைப்பு வசதியில் அதிக கவரேஜ் தரக் கூடியது. அந்த அலைக்கற்றையைக் கையகப்படுத்துவதன் மூலம் 4ஜி சேவையில் களமிறங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி இழப்பீடு மசோதா தாக்கல்
ஜிஎஸ்டி இழப்பீடு மசோதாவை வரவிருக்கும் குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த மசோதா வில் ஜிஎஸ்டி வரியால் மாநிலங் களுக்கு ஏற்படப் போகும் வரி இழப்பை மத்திய அரசு எவ்வாறு சரி செய்யப் போகிறது என்பது உட்பட பல்வேறு விவரங்கள் இடம்பெறும்.
ஜிஎஸ்டி மசோதாவால் மாநிலங் களுக்கு ஏற்படும் இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்குவதற்கான சட்டப் பாதுகாப்பை ஜிஎஸ்டி இழப்பீடு மசோதா அளிக்கும். இந்த மசோதாவை மத்திய அரசு வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய இருக்கிறது. முதல் ஐந்து வருடங்களில் வருவாய் வளர்ச்சி விகிதம் 14 சதவீதத்துக்கு குறைவாக இருப்பின் மத்திய அரசு மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கும்.
இழப்பீடு தொடர்பாக மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான புரிதலில் எந்தவொரு தவறும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக தனியான ஒரு சட்டமும் கொண்டு வரப்படுகிறது.

No comments: