Thursday 17 November 2016

Daily Current Affairs For Competitive Exam - 17th November

உலகம் :

11 புதிய மொழிகளில் விரைவில் சேவைபிபிசி அறிவிப்பு
லண்டனில் இருந்து செயல்படும் பிபிசி சர்வதேச வானொலி மற்றும் தொலைக்காட்சி, 4 இந்திய மொழிகள் உள்பட 11 புதிய மொழிகளில் தனது சர்வதேச சேவையை விரைவில் விரைவுபடுத்தவுள்ளது.


இதுகுறித்து பிபிசி சார்பில் மும்பையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டுபிபிசி சர்வதேசச் சேவையை விரிவுபடுத்துவதற்காகபிரிட்டன் அரசு நிதியுதவி அறிவித்திருந்ததுஅதன்படிதெலுங்குகுஜராத்திமராத்திபஞ்சாபி ஆகிய 4 இந்திய மொழிகள் உள்பட 11 புதிய மொழிகளில் வானொலி மற்றும் வலைதளச் சேவைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளோம்.
அடுத்த ஆண்டில் (2017) செய்திச் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்மேலும்இந்தியப் பிராந்தியத்தில் 157 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளோம்இதன் மூலம்பிரிட்டனுக்கு வெளியே பிபிசியின் மிகப்பெரிய மையமாக தில்லி உருவெடுக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக பொறுப்பேற்றார் நவ்தேஜ்சர்னா
அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக நவ்தேஜ் சர்னா பொறுப்பேற்றுக்கொண்டார்.
1980-ஆம் ஆண்டின் இந்திய அயலகச் சேவைப் பணி (.எஃப்.எஸ்.) அதிகாரியானநவ்தேஜ் சர்னாஇதற்கு முன்பு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில்பணியாற்றியுள்ளார்மேலும்பிரிட்டன்இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கானஇந்தியத் தூதராகவும் நவ்தேஜ் சர்னா பணியாற்றியிருக்கிறார்.
இந்நிலையில்அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நவ்தேஜ் சேனாஅண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்இதையடுத்துஅமெரிக்காவுக்குச் சென்றஅவர் புதிய இந்தியத் தூதராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதிவேக "சூப்பர் கம்ப்யூட்டர்கள்': மீண்டும் சீனாவுக்கு முதலிடம்
உலகின் அதிவேகத் திறனுள்ள சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில் தொடர்ந்துஎட்டாவது முறையாக சீனாவின் கணினி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சன்வே தாய்ஹுலைட் என்ற அந்தக் கணினிசீனாவின் தேசிய இணைவரிசைக்கணினிப் பொறியியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டது.
இந்தக் கணினியால் நொடிக்கு 9300 கோடி கோடி கணக்கீடுகளை செய்ய முடியும்என்பதால் உலகின் அதிவேக 500 கணினிகளின் பட்டியலில் இது முதலிடம்பெற்றுள்ளது.
ஏற்கெனவேகடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட உலகின் அதிவேக சூப்பர்கம்ப்யூட்டர்கள் வரிசையிலும் சன்வே தாய்ஹுலைட் முதலிடத்தைப் பிடித்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னர் உலகின் அதிவேகக் கணினிகளின் பட்டியலில் முதலிடத்தில்இருந்த சீனாவின் தியான்ஹே-2 கணினியைவிட சன்வே தாய்ஹுலைட் கணினிமடங்கு வேகமும்செயல்திறனும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய எல்லைப் பகுதியில் பாக்ராணுவப் பயிற்சிநவாஸ் நேரில்பார்வையிட்டார்
இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பயற்சி மேற்கொண்டுள்ளது.இதனை அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃப்ராணுவ தளபதி ரஹீல் ஷெரீஃப்ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல்நடத்தியதை அடுத்து இருநாட்டு எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.எல்லையில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் ராணுவம்இந்தியப் பகுதிகளை நோக்கி ராக்கெட் குண்டுகளை வீசியும்துப்பாக்கியால்சுட்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு இந்திய ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த பதிலடியில்பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 7 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில்அதற்கு அடுத்த நாளிலேயே பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம்பகவல்பூரில் அந்நாட்டு ராணுவம் பயற்சி மேற்கொண்டுள்ளதுஇந்தப்பயிற்சியில் விமானப் படையினரும்தரைப்படையினரும் பங்கேற்றனர்.ஹெலிகாப்டரில் சென்று துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது உள்ளிட்டபல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியா :
ரஸ்டம் 2 ஆளில்லா விமானம் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது
நீண்ட தூரம் சென்று அதிக சக்தி வாய்ந்து தாக்கும் திறன் கொண்டஉள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் தான் ரஸ்டம் 2 என்றஉளவு விமானத்தின் முதலாவது சோதனை வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால்ரஸ்டம் 2  "TAPAS 201 (RUSTOM - II)"  என்ற குண்டு வீசும் ஆளில்லா விமானம்பெங்களூரிலிருந்து250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்ரதுர்கா விமான சோதனை மையத்தில்(ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்ச் (ஏடிஆர்)) வெற்றிகரமாக நேற்றுபரிசோதிக்கப்பட்டது.
நம்முடைய முப்படைகளின் நுண்ணறிவுகண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்கு (ISR)  இதனை பயன்படுத்த முடியும். 24 மணி நேரம் நீடித்துஉழைக்கும் ஆற்றல் கொண்டது.
எலக்ட்ரோ ஆப்டிக் (MREO), லாங் ரேஞ்ச் எலக்ட்ரோ ஆப்டிக் (LREO), செயற்கைராடார் (SAR), மின்னணு புலனாய்வு (ELINT), புலனாய்வு தொடர்பியல் (COMINT)மற்றும் சூழ்நிலை விழிப்புணர்வு விண்கலங்கள் (எஸ்ஏபிபோன்ற பல்வேறுதகவல்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டதுபகல் மற்றும் இரவு என நாள்முழுவதும் பயணங்கள் செய்ய ஏதுவானதுஇரண்டு டன் எடைக்கொண்டது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது
நாட்டில் மிகப்பெரிய பொருளாதார மாற்றம் நடந்தேறியிருக்கும் நிலையில்நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுஇந்தியாவில்மிகவும் பரபரப்பான சூழ்நிலை இருக்கும் நிலையில்இன்று குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மறைந்த மக்களவை மற்றும்மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிஅனைத்துபிரச்னைகள் குறித்தும் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட்டுநல்லமுடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு : 
புதிய நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 கூடுதல் நீதிபதிகள்புதன்கிழமை (நவ.16) பதவி ஏற்றுக் கொண்டனர்இவர்களுக்கு தலைமை நீதிபதிஎஸ்.கே.கௌல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்துக்குநீதித்துறையை சேர்ந்த மேலும் மூன்று பேரைநீதிபதிகளாக நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.
இதன்படிதமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலராகஇருக்கும் ஆர்எம்டி.டீக்காராமன்சென்னை உயர்நீதிமன்ற தலைமைப்பதிவாளராக இருக்கும் என்.சதீஷ்குமார்சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாகஇருக்கும் எஸ்.என்சேஷசாயி ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகநியமிக்கப்பட்டனர்.
விளையாட்டு :
2-வது டெஸ்ட்இந்தியா பேட்டிங்ஜெயந்த் யாதவ் அறிமுகம்!
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ்வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது
முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில்விசாகப்பட்டினத்தில் நடைபெறும்இந்தப் போட்டியில் வென்று தொடரில் முன்னிலை பெறும் முனைப்பில்களமிறங்குகியுள்ளது இந்தியாஅதேநேரத்தில் இங்கிலாந்து அணிகடந்தப்போட்டியில் இந்தியாவை தோல்வியின் விளிம்பு வரை கொண்டு சென்றது.
அதனால் அந்த அணியும் அபாரமாக ஆட முயற்சிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறதுஇந்திய அணியைப் பொறுத்தவரையில் காயத்திலிருந்துமுழுமையாக குணமடைந்துவிட்ட தொடக்க வீரர் கே.எல்.ராகுல் இந்தஆட்டத்தில் களமிறங்குகிறார்அதனால் கடந்த போட்டியில் தொடக்க வீரராககளமிறங்கிய கெளதம் கம்பீருக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.அதேபோல அமித் மிஸ்ராவுக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ் அறிமுகமாகியுள்ளார்.
வர்த்தகம் :
3-வது நாளாக சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்
ரூபாய் மதிப்பு செல்லாது என்ற மத்திய அரசு அறிவிப்பால் மூன் றாவது நாளாகநேற்றும் இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்துடன் காணப்பட்டன.
நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு 5.94புள்ளிகள் சரிந்து 26298.69 புள்ளிகளுடனும்தேசிய பங்குச் சந்தை நிப்டி குறியீடு3.15 புள்ளிகள் உயர்ந்து 8111.60 புள்ளிகளுடனும் நிறைவடைந் தன.
நேற்று காலை நேர வர்த்தகத்தில் பங்குச் சந்தை ஏற்றத்துடன் காணப்பட்டது.சில்லரை பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.2 சதவீதம்குறைந்திருப்பது மற்றும் டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைகுறைக்கும் என்ற எதிர்பார்ப்பாலும் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்துகாணப்பட்டதுநிப்டி 8200 புள்ளிகளை கடந்து வர்த்தகமானது.
அதுமட்டுமல்லாமல் நேற்று காலை ஆசிய பங்குச்சந்தைகள் உயர்ந்துகாணப்பட்டதாலும் இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டதுஆனால் வர்த்தகத்தின்முடிவில் சென்செக்ஸ் 6 புள்ளிகள் சரிந்து முடிவடைந்தது.
வங்கி டெபாசிட் ரூ. 2.5 லட்சத்தை தாண்டினால் நடவடிக்கைபான் கார்டுஅவசியமாகிறது
வங்கிகளின் சேமிப்புக் கணக்கில் டிசம்பர் 30-ம் தேதி வரை போடப்படும் தொகைரூ. 2.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும் எனமத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரூ. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகை செலுத்துவோர் பான் கார்டு விபரத்தைஅளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்ததுஇதனால் பலரும் ரூ. 49ஆயிரத்தை பல முறை தங்கள் வங்கிக் கணக்கில் போட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வெளியிடப் பட்ட அறிக்கையில் நவம்பர் 9-ம் தேதி முதல்டிசம்பர் 30-ம் தேதி வரையான காலத்தில் ஒரு கணக்கில் போடப்படும் தொகைரூ. 2.5 லட்சத்துக்கு அதிகமாயிருந் தால் அது வரி விதிப்புக்குள்ளாகும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கேற்றார்போல மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் ஆண்டு வருவாய்கணக்கு தாக்கல் விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளதுஅதாவதுஒரு ஆண்டில் ஒரு தனிநபர் தங்கள் கணக்கில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமானதொகையை டெபாசிட் செய்தால் அது குறித்த தகவலை தங்களுக்குதெரிவிக்குமாறு வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களுக்கு வரி விதிப்புஆணையம் குறிப்பிட்டிருந்ததுஆனால் தற்போது அந்த வரம்பை ரூ. 2.5லட்சமாகக் குறைத்துள்ளது.

No comments: