Saturday 19 November 2016

Daily Current Affairs For Competitive Exam - 19th November

உலகம் :

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சீன விஞ்ஞானிகள்
சீனா விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு மையத்தில்ஆராய்ச்சியில்ஈடுபட்டிருந்த 2 விஞ்ஞானிகள்ஒரு மாத பயணத்துக்குப் பின் நேற்று பத்திரமாகபூமிக்கு திரும்பினர்


நிரந்தர விண்வெளி ஆய்வு மையம்:
சீனா வரும் 2022ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தர விண்வெளி ஆய்வுமையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதுஇதற்காக விண்வெளிக்குசென்று திரும்பும் வகையிலான விண்கலத்தை அனுப்பி வருகிறதுஇதற்காகஇதுவரை 5 முறை விண்வெளிக்கு விஞ்ஞானிகளை அனுப்பியுள்ளது.
விண்வெளி பயணம்:
ஆறாவது முறையாக கடந்த அக்., 17ம் தேதி 'செனஷோவ் 11' என்ற விண்கலம்மூலம் ஜிங் ஹெய்பிங்,50, ஷென் டங், 38, என்ற இரண்டு விஞ்ஞானிகள்விண்வெளிக்கு அனுப்பியதுஇதில் ஜிங் ஹெய்பிங் ஏற்கனவே 2 முறைவிண்வெளிக்கு சென்ற அனுபவம் உள்ளவர்ஷென் பிங் முதல்முறையாகசென்றிருந்தார்இவர்கள் விண்வெளிக்கு சென்றவுடன் ஏற்கனவே 2விஞ்ஞானிகளுடன் அனுப்பப்பட்டிருந்த 'டியாங்காங் 2'விண்கலத்துடன் இணைந்துகொண்டனர்.
பூமி திரும்பினர்:
பின் இருவரும் ஒரு மாதம் அங்கு தங்கியிருந்து திட்டமிடப்பட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்பணி முடிந்து நேற்று வெற்றிகரமாக பூமிக்குதிரும்பினர்நீண்டகாலம் விண்வெளியில் தங்கிய சீன வீரர்கள் என்றபெருமையையும் பெற்றனர்இதற்கு முந்தைய ஐந்து விண்வெளி பயணங்களும்குறுகிய கால ஆய்வுப் பணியாக அமைந்திருந்தன.
2022ல் முடிவடையும்:
பூமியில் இருந்து சுமார் 393 கி.மீ., உயரத்தில் சீனா அமைத்து வரும் விண்வெளிஆய்வு மையத்தின் மாதிரி 2018ல் முடிவு பெறும்முழுமையான பணி 2022ல்முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் - ஜப்பான் பிரதமர் அபே சந்திப்பு
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை ஜப்பான்பிரதமர் ஷின்ஸோ அபே நியூயார்க்கில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதும் அவரை சந்திக்கும் முதல்வெளிநாட்டுத் தலைவர் ஷின்ஸோ அபே என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்கில் உள்ள பிரபல டிரம்ப் டவர் கட்டடத்தில் அவர்கள் இருவரும்சந்தித்தனர்ஒன்றரை மணி நேரம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்இந்தசந்திப்பின்போதுடிரம்ப்பின் மகள் இவான்காஅவரது கணவர் ஜேரட் கஷ்னர்ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தியா :
நாடு முழுவதிலும் 4 மக்களவை தொகுதிகளிலும், 8 சட்டப்பேரவைத்தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
நாடு முழுவதிலும் 4 மக்களவைத் தொகுதிகளிலும், 8 சட்டப்பேரவைத்தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.காலை 7 மணிமுதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று விறுவிறுப்பாக தங்களதுவாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ்நாடுபுதுச்சேரிமேற்கு வங்களாம்திரிபுராஅஸ்ஸாம்,அருணாச்சலபிரதேசம்மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று 4மக்களவை தொகுதிகள் மற்றும் 8 சட்டப்பேரவை தொகுதிகள் ஆகியவற்றில்இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிநடைபெற்று வருகிறது.
இதில்மத்தியபிரதேசம்மேற்கு வங்களாம் மற்றும் அஸ்ஸாமில் உள்ள 4மக்களவை தொகுதிக்கும், 6 மாநிலங்களில் உள்ள 8 சட்டப்பேரவைத்தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு : 
அமெரிக்க தமிழருக்கு விருது
வேளாண் ஆராய்ச்சியில் சாதனை புரிந்ததற்காகஅமெரிக்காவில் பணிபுரியும்தமிழருக்குஅந்நாட்டின் தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளதுகன்னியாகுமரிமாவட்டம்ஆறுதேசத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி செல்லப்பன் பத்மநாபன்.
இவர்அமெரிக்க வேளாண் துறை ஆராய்ச்சி கழகத்தில்விஞ்ஞானியாகபணிபுரிந்து வருகிறார்நோயில்லாத தாவரங்களை உருவாக்குவது குறித்தஆராய்ச்சியில்இவர் சாதனை புரிந்துள்ளார்இதற்காகஇவரை கவுரவிக்கும்வகையில்அமெரிக்காவின் தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளதுஇந்தியர்ஒருவர்வேளாண் ஆராய்ச்சிக்காகஅமெரிக்க தேசிய விருது பெறுவதுஇதுவேமுதன்முறைசெல்லப்பன் பத்மநாபன்சென்னை பல்கலையில் ஆராய்ச்சிபடிப்பை முடித்தவர்.
விளையாட்டு :
சீன ஓபன்அரையிறுதியில் சிந்து
சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துஅரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
சீனாவின் புஜெள நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமைநடைபெற்ற காலிறுதியில் சிந்து 22-20, 21-10 என்ற நேர் செட்களில் சீனாவின்பிங்ஜியாவை தோற்கடித்தார்.
சிந்து தனது அரையிறுதியில் தென் கொரியாவின் சங் ஜி ஹியூனை சந்திக்கிறார்.முன்னதாக ஹியூன் தனது காலிறுதியில் 22-20, 10-21, 21-18 என்ற செட் கணக்கில்ஜப்பானின் அகானே யமாகுசியைத் தோற்கடித்தார்.
ஜெயராம் தோல்விஆடவர் ஒற்றறையர் காலிறுதியில் இந்தியாவின் அஜய்ஜெயராம் 15-21, 14-21 என்ற நேர் செட்களில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனானசீனாவின் சென் லாங்கிடம் தோல்வி கண்டார்இதில் அபாரமாக ஆடிய லின் டான்40 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
வர்த்தகம் :
2018-ம் நிதி ஆண்டு வளர்ச்சி 5.8% ஆம்பிட் கேபிடல் கணிப்பு
பணப்புழக்க பிரச்சினை காரணமாக குறுகிய காலத்தில் பொருளாதார தேக்க நிலைஇருக்கும் என்றும்அடுத்த நிதி ஆண்டு (2017-18) வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும்எனவும் ஆம்பிட் கேபிடல் தெரிவித்திருக்கிறது.இந்த நிறுவனத்தின் அறிக்கையில்மேலும் கூறியிருப்பதாவது:

நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி விகிதம் 6.4 சதவீதமாக இருக்கிறது.இரண்டாம் பாதியில் 0.5 சதவீதம் குறைந்து 5.9 சதவீத மாக இருக்கும்வரும் 2019-ம்ஆண் டில்தான் முறைப்படுத்தப்படாத துறை சீரடையும்அதனால் 2018-ம் நிதிஆண்டு ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும். (முன்பு 7.3 சதவீத வளர்ச்சிஇருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.

ரியல் எஸ்டேட்முறைசாரா கடன்கட்டுமானம் சார்ந்த இதர தொழில்கள்உள்ளிட்ட ரொக்கப் பணம் சம்பந்தப்பட்ட தொழில்கள் குறுகிய காலத்தில்கடுமையாக பாதிக்கப்படும்இந்த சிக்கல் அடுத்த சில வருடங்களுக்கு நீடிக்கும்.அதே சமயத்தில் இந்த துறையில் இருக்கும் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள்ஆதாயம் அடைய வாய்ப்பு இருக்கிறது.அதேபோல பங்குச்சந்தை யிலும் ஏற்றம்இருக்காதுவரும் மார்ச் மாத இறுதியில் சென்செக்ஸ் 29500 புள்ளியிலும், 2018-ம்ஆண்டு மார்ச் மாத இறுதியில் 29000 புள்ளியிலும் சென்செக்ஸ் இருக்கும்.

No comments: