Sunday 20 November 2016

Daily Current Affairs For Competitive Exam - 20th & 21st November Review

உலகம் :

யுஎஸ் அதிபராக கடைசி சுற்றுப்பயணம்பெரு சென்றார் ஒபாமா
அமெரிக்க அதிபராக தனது கடைசி சுற்றுப்பயணமாக ஆசிய - பசுபிக்பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள பெரு நாட்டுக்குச் சென்றார் பாரக்ஒபாமா.


பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் ஆசிய - பசிபிக் பொருளாதாரக் கூட்டுறவுஅமைப்பின் உறுப்பு நாடுகளிடையேயான இரண்டு நாள் மாநாடு இன்று(சனிக்கிழமைதொடங்குகிறது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் இந்தமாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
இதன் முதல் கட்டமாக பெரு அதிபர் பெட்ரோ பாப்லோ குசின்ஸ்கியை ஒபாமாஇன்று காலை சந்தித்தார்இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஆசிய - பசிபிக்மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார் ஒபாமா.
மாநாட்டின் இறுதியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பார் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராகடொனால்டு ட்ரம்ப் பதவி ஏற்க உள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி ட்ரம்ப் புது முடிவு
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை தனது நம்பிக்கைக்குரியவரும்பாதுகாப்புத் துறை சம்பந்தமாக முக்கிய ஆலோசனைகளையும் வழங்குபவரானஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் பிளினுக்கு வழங்கஅமெரிக்காவின் அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
எதையும் ஒளிவுமறைவின்றி பேசுபவர்கூர்மையான அறிவு மிக்க புலானாய்வுவல்லுநர் என பெயர்பெற்றவர் 56 வயது பிளின்.
தீவிரவாத குழுக்களுக்கு உதவி செய்வதைப் பாகிஸ்தான் தொடர்ந்துநடத்தினால் அந்த நாட்டுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்திவிடலாம் என கூறிவருபவர் பிளின்.
ஓராண்டு காலமாகவே ட்ரம்ப்புக்கு ராணுவம் தொடர்பான ஆலோசனைகளைத்தெரிவித்து வருகிறார்தனது நிர்வாகத்தில் இவருக்குத்தான் தேசிய பாதுகாப்புஆலோசகர் பதவியை கொடுப்பது என ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இந்தியா :
கடலுக்கு அடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த இந்திய கடற்படையிடம்சோனார் கருவிகள்
கடலுக்கு அடியில் கண்காணிப்புத் திறனை அதிகரிக்கும் வகையில்உள்நாட்டிலேயே மேம்படுத்தப் பட்ட 4 வகையான சோனார் கருவிகள் இந்தியகடற்படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
இந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான அபய் உள்ளிட்ட கப்பல் களில் இந்த 4வகையான சோனார் களும் பொருத்தப்படவுள்ளனமுன்னதாக டெல்லியில்நேற்று நடந்த விழாவில் சோனார் கருவி களைஇந்திய கடற்படையிடம் ராணுவஅமைச்சர் மனோகர் பாரிக்கர் முறைப்படி ஒப்படைத் தார்.
கொச்சியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் இந்தசோனார்கள் தயாரிக்கப்பட்டனஇதன் மூலம்கடலுக்கு அடியில் கண்காணிப்புத்திறனை ஊக்குவிக்க முடியும்கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பல்களுக்குஏதேனும் ஆபத்து ஏற்பட்டால்சோனார் கருவிகள் உடனடியாக எச்சரிக்கை ஒலிஎழுப் பும்அதே போல் கடலுக்கு அடியில் எதிரிநாட்டின் நீர்மூழ்கி கப்பல்கள்அசைவது தெரிந்தாலும் சோனார் கருவிகள் கண்காணித்துகடற்படையினருக்குஉஷார் படுத்தும்.
தமிழ்நாடு : 
பாரதியார் விருதுக்கு வைஜயந்திமாலா பாலி தேர்வு: டிசம்பர் 11-ம் தேதிவழங்கப்படுகிறது
இந்த ஆண்டுக்கான பாரதியார் விருதுக்கு பிரபல நடிகையும்நடனக்கலைஞருமான வைஜயந்திமாலா பாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவானவில் பண்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்துவானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவிபாஜக எம்பிஇல.கணேசன்புரவலர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் நேற்றுசென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மகாகவி பாரதியின் நல்லுணர்வும்நற்சிந்தனைகளும் இன்றைய இளம்தலைமுறையினரிடம் பரவ செய்வதற்காக வானவில் பண்பாட்டு மையம்பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதுகடந்த 1994-ம் ஆண்டில்இருந்து பாரதியின் பிறந்தநாளை எங்கள் மையம் கொண்டாடி வருகிறதுஇந்தஆண்டுக்கான விழா டிசம்பர் 10, 11-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதன்படிடிசம்பர் 10-ம் தேதி மாலை திருவல்லிக்கேணி என்கேடி தேசியபெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மறைந்த எம்.பி.சீனிவாசின் சென்னைஇளைஞர் குழுவினரின் சேர்ந்திசை நிகழ்ச்சி, ‘வாழ்விக்க வந்தவர்கள்’ என்றதலைப்பில் சுகி சிவத்தின் சொற் பொழிவு நிகழ்ச்சியும் நடைபெறும்.
விளையாட்டு :
சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து
சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்துசாம்பியன் பட்டம் வென்றார்.
சீனாவில் உள்ள புஸ்ஹொவ் நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் போட்டிகள்நடந்ததுஇதில் பெண்களுக்கான பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில்இந்திய வீராங்கனையான பி.வி.சிந்துசீன வீராங்கனையான சன் யுவை எதிர்த்துவிளையாடினார்இப்போட்டியின் முதல் செட்டை 21-11 என்ற புள்ளிக்கணக்கில்வென்ற சிந்து, 2-வது செட்டை 17-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார்இருவீராங்கனைகளும் தலா ஒரு செட்டை வென்றதால், 3-வது செட் ஆட்டத்தில்அனல் பறந்தது.
இந்த செட்டில் துடிப்பாக விளையாடிய சிந்து 21-11 என்ற செட்கணக்கில் அதைக்கைப்பற்றினார்இதன்மூலம் 21 11, 17 21, 21 11 என்ற செட்கணக்கில் வென்றுசாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்இது அவர் வெல்லும் முதலாவது சூப்பர்சீரிஸ் சாம்பியன் பட்டமாகும்பி.வி.சிந்துவுக்கு முன்னதாக 2014-ம் ஆண்டுஇந்திய வீராங்கனை சாய்னா நெவால்சீன ஓபன் பாட்மிண்டன் பட்டத்தைவென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகம் :
பிளிப்கார்ட்டில் இனி மளிகைப் பொருட்கள்!
இந்தியாவின் மிகப் பெரிய -காமர்ஸ் நிறுவனமான பிளிப் கார்ட் விரைவில்மளிகைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறதுமேலும்ஆன்லைன் மூலம் பர்னிச்சர்கள் விற்பனையைப் புதுப்பிக்கவும் மேம்படுத்தவும்திட்டமிட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு முதல் மளிகைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறோம்மேலும் மூன்று ஆண்டுகளில் அதை விரிவுபடுத்தவும்திட்டமிட்டுள்ளோம்மளிகைப் பொருட்கள் விற்பனை என்பது லாபகரமானதொழில்தான்ஆனால் அது மிக கடினம் என்று பிளிப்கார்ட் நிறுவனத்தின்தலைமைச் செயல் அதிகாரி பின்னி பன்சால் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே அமேசான் நிறுவனம் முக்கியமான நகரங்களில் சோதனைமுயற்சியாக மளிகைப் பொருட்கள் விற்பனையைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் தற்போது அதிக மக்கள் துணிகள் முதல் ஸ்மார்ட் போன்கள் வரைஅனைத்தையும் ஆன்லைன் மூலமாக வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.இந்தியாவில் ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை 2025-ம் ஆண்டில் 18,800கோடி டாலராக உயரும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச்கணித்துள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் பிளிப்கார்ட்டில் மிக அதிகமாக விற்பனையாகும்பிரிவில் பேஷன் பொருட்கள் இருக்கும்ஆனால் பேஷன் பொருட்கள் மற்றும்எலெக்ட்ரானிக்ஸ் பொருட் களை விட அடுத்த ஆறு ஆண்டு களில் மளிகைப்பொருட்கள் அதிகமான விற்பனையாக சாத்தியங்கள் உள்ளன.
புதிதாக 10 விமானங்களை வாங்க ஏர்-இந்தியா ஒப்பந்தம்
ஏர்-இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விமானச் சேவை பிரிவான அலையன்ஸ்ஏர் புதிதாக 10 டர்போ-ப்ரோப் (.டி.ஆர்.) விமானங்களைக் குத்தகைக்கு வாங்கும்ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.
மத்திய அரசுயு.டி..என்திட்டத்தின் கீழ் உள்நாட்டு விமானப் போக்குவரத்துதொடர்புகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதுஅத்துடன் சாமானிய மக்களும்விமானச் சேவையைப் பயன்படுத்தும் வகையில் குறைந்த அளவிலானகட்டணங்களையும் நிர்ணயம் செய்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அடுத்து சிறு நகரங்களுக்கிடையிலானவிமானப் போக்குவரத்து சேவை விறுவிறுப்படையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறதுஇதனை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு விமானசேவை நிறுவனங்கள் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
அந்த வகையில்அலையன்ஸ் ஏர் நிறுவனம் புதிதாக 10 .டி.ஆர்ரகவிமானங்களைக் குத்தகைக்கு வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.

No comments: