உலகம் :
தோழியால் எழுந்த சர்ச்சை: பிரதமரை மாற்றிய தென்கொரிய அதிபர்
நெருங்கிய தோழியால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து தென் கொரிய அதிபர்பார்க் குவென் ஹை, பிரதமரை மாற்றியிருப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.
தென்கொரியாவின் பெண் அதிபரான பார்க் குவென் ஹை, அரசின் முக்கியமுடிவுகளை எடுக்க தனது நெருங்கிய தோழி, சோய் சூன் சில்லுக்கு அனுமதிவழங்கியதாக அண்மையில் சர்ச்சை எழுந்தது. மேலும் அரசின் முக்கியஆவணங்களைப் பார்வையிடுவதற்கும், கொள்கை விவகாரங்களில் அவர்தலையிடு வதற்கும் அனுமதித்தார் என்றும் கூறப்பட்டது. இதனால் அதிபர் பார்க்குவென் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகளும், பொது மக்களும் தொடர்ந்துகண்டனப் பேரணி நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சோய் சூனிடம் அந்நாட்டு விசா ரணை அதிகாரிகள்தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிபர் பார்க்குடன் இணைந்துஎந்ததெந்த விவகாரத்தில் சோய் தலையிட்டார், அதில் அவருக்கு இருந்ததொடர்பு என்ன ஆகியவை குறித்து விரிவாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
'மறைமுக திட்டம் சீனாவுக்கு இல்லை'
''இலங்கை விஷயத்தில், சீனாவுக்கு மறைமுகத் திட்டம் எதுவும் இல்லை,'' என,இலங்கைக்கான சீனத்துாதர் ஸி ஸியாங்லியாங் கூறியுள்ளார்.
சீனத்துாதர் ஸியாங்லியாங், இலங்கை தலைநகர் கொழும்புவில், நிருபர்களிடம்நேற்று கூறியதாவது: இலங்கையில், சீனாவின் செயல்பாடுகள் குறித்து, உள்ளூர்பத்திரிகைகளிலும், பொதுமக்கள் மத்தியிலும், தவறான கருத்து வெளிப்பட்டுவருகிறது.
சீனாவின் செயல்பாடுகளுக்கு, உள்ளர்த்தம் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால்,இலங்கையில், சீனாவுக்கு மறைமுகத் திட்டம் எதுவும் இல்லை. சீன அரசின்செயல்பாடுகள் வெளிப்படையானவை. இலங்கையில் உள்ள அரசியல்கட்சிகளுடன், சீனாவுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை; இங்கு தொழில் செய்ய,சீன நிறுவனங்கள், லஞ்சம் எதுவும் தருவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா :
எம்.பி.க்களின் சம்பளம் இரு மடங்காக உயருகிறது
எம்.பி.க்களின் சம்பளம் இரு மடங்காகவும், குடியரசுத் தலைவரின் சம்பளம் 3மடங்காகவும் அதிகரிக்கப்பட உள்ளது.எம்.பி.க்களின் அடிப்படை சம்பளம், ரூ.50ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக விரைவில் உயர்த்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, எம்.பி.க்களின் சம்பள விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுஅளித்த பரிந்துரையை பிரதமர் அலுவலகம் பரிசீலித்து வருவதாக நம்பத்தகுந்தவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத்தலைமையிலான, எம்.பி.க்களின் சம்பளம் மற்றும் சலுகைகளுக் கானநாடாளுமன்றக் குழு, எம்.பி.க்களின் அடிப்படை சம்பளத்தை மட்டும்இரட்டிப்பாக்க வில்லை;
இதர சலுகைகளையும் கணிசமான அளவுக்கு உயர்த்த பரிந்துரைசெய்துள்ளது.இதனைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் மாத சம்பளத்தையும்ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், ஆளுநர்களின் சம்பளத்தை, ரூ.1.10லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்த வும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ராஜஸ்தானில் பதுக்கப்பட்ட 23.5 டன் மாத்திரைகள்: ரூ.4,700 கோடிமதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்- சினிமா தயாரிப்பாளர் கைது
ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, ராஜஸ்தான் மாநிலத்தில்சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ரூ. 4,700 கோடி மதிப்பிலான, 23,500கிலோ போதை மாத்திரைகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள்கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக, பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியத் தலைவர் நஜிப் ஷா டெல்லியில் நேற்றுசெய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறியதாவது:தடை செய்யப்பட்ட மாண்ட்ராக்ஸ் போதை மாத்திரைகள், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் அதிக அளவில்தயார் செய் யப்பட்டு, பதுக்கப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுஇயக்குநரகத்தின் மும்பை பிரிவு அலுவலகத்துக்கு ரகசிய தகவல்கிடைத்தது.இதன் அடிப்படையில், உதய் பூரில் உள்ள ‘மருதர் ட்ரிங்க்ஸ்’ என்றநிறுவனத்தின் வளாகத்தில், வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கடந்த 28-ம் தேதிஅதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கோவா பட விழாவில் எஸ்.பி.பி.க்கு மத்திய அரசு கவுரவம்
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு (70) இந்த ஆண்டின்இந்திய திரை ஆளுமைக்கான நூற்றாண்டு விருதை மத்திய அரசுஅறிவித்துள்ளது.கோவாவில் வரும் 20-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரைநடைபெறும் 47-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு இந்தகவுரவம் அளிக்கப்படுகிறது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில்மத்திய தகவல், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுநிருபர்களிடம் கூறும்போது, "சர்வதேச திரைப்பட விழாவுக்காக 88 நாடுகளைச்சேர்ந்த 1032 திரைப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டு 192 படங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மிகச்சிறந்த பாடகர்.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறைக்கு அவர் சேவையாற்றிவருகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தியில் இதுவரை 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ்நாடு :
சென்னை உயர் நீதிமன்ற பணிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு:டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை உயர் நீதிமன்ற பணி களுக்கான எழுத்துத் தேர்வு முடிவு கள் நேற்றுவெளியிடப்பட்டன.இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிவே.ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர் நீதிமன்றப் பணிகளில் அடங்கிய நீதிபதியின் நேர்முகஉதவியாளர், பதிவாளரின் நேர்முக உதவியாளர், நேர்முக எழுத்தர், கணினிஇயக்குபவர், நீதிமன்ற அலுவலர், காசாளர், ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர்ஆகியவற்றில் 391 காலியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த ஆகஸ்டு மாதம் 27மற்றும் 28-ம் தேதியில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 41 ஆயிரத்து 813 பேர்தேர்வெழுதினர்.
இத்தேர்வில் நீதிபதியின் நேர்முக உதவியாளர், பதிவாளரின் நேர்முகஉதவியாளர், நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கான நேர்முகத் தேர்வுக்குதற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல்டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 14, 15-ம் தேதிகளில் நடைபெறும்.நேர்காணல் இல்லாத மற்ற பதவிகளுக்கான தேர்வில் பங்கேற்றவர்களின்மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலும் இணையதளத்தில்வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 14-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறும்.சான்றிதழ் சரிபார்ப்பின்போது,ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத்தெரியவந்தால் அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வில்கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட குறைந் தபட்ச மதிப்பெண் பெறாதவர் களின்மதிப்பெண்களும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
விளையாட்டு :
ரோஹித், தவண், ராகுல் இல்லை; பாண்டியாவுக்கு வாய்ப்பு: இந்திய டெஸ்ட்அணி அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணிஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயமடைந்த ரோஹித் சர்மா, ஷிகர்தவண், லோகேஷ் ராகுல் ஆகியோர் இடம்பெறவில்லை.
இதில் முதன்முறையாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்குவாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் ராஜ்கோட் மைதானத்தில் நவமப்ர் 9-ம்தேதி தொடங்குகிறது, 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டணத்தில் நவம்பர் 17முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கானஅணியே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வருமாறு:
விராட் கோலி
ரவிச்சந்திரன் அஸ்வின்
கவுதம் கம்பீர்
ரவீந்திர ஜடேஜா
அமித் மிஸ்ரா
மொகமது ஷமி
செடேஸ்வர் புஜாரா
அஜிங்கிய ரஹானே
விருத்திமான் சஹா
கருண் நாயர்
முரளி விஜய்
உமேஷ் யாதவ்
ஹர்திக் பாண்டியா
இசாந்த் சர்மா
ஜெயந்த் யாதவ்
இதில் முதன்முறையாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்குவாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் ராஜ்கோட் மைதானத்தில் நவமப்ர் 9-ம்தேதி தொடங்குகிறது, 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டணத்தில் நவம்பர் 17முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கானஅணியே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வருமாறு:
விராட் கோலி
ரவிச்சந்திரன் அஸ்வின்
கவுதம் கம்பீர்
ரவீந்திர ஜடேஜா
அமித் மிஸ்ரா
மொகமது ஷமி
செடேஸ்வர் புஜாரா
அஜிங்கிய ரஹானே
விருத்திமான் சஹா
கருண் நாயர்
முரளி விஜய்
உமேஷ் யாதவ்
ஹர்திக் பாண்டியா
இசாந்த் சர்மா
ஜெயந்த் யாதவ்
வர்த்தகம் :
அமெரிக்க தேர்தல் கருத்து கணிப்பு: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு
அமெரிக்க தேர்தல் கருத்து கணிப்புகளில் டொனால்ட் ட்ரம்ப் முந்துவதால்முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்கின்றனர். இதன் காரணமாக இந்தியபங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகியவைஒரு சதவீதத்துக்கும் மேல் சரிந்தன. சந்தைக்கு சாதகமான ஹிலாரிகிளிண்டனை விட ட்ரம்ப் முந்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 349 புள்ளிகள் சரிந்து 27527 புள்ளியில்முடிவடைந்தது. அதேபோல நிப்டி 112 புள்ளிகள் சரிந்து 8514 புள்ளியில்முடிவடைந்தது. அதேபோல மிட்கேப் குறியீடு 2 சதவீதமும், ஸ்மால்கேப்குறியீடு 1.8 சதவீதமும் சரிவடைந்தன.துறைவாரியாக பார்க்கும் போது ஆயில்அண்ட் கேஸ் குறியீடு 2.76 சதவீதம் சரிந்தது. அதனை தொடர்ந்து ரியால்டிகுறியீடு 2.18 சதவீதமும், ஹெல்த்கேர் குறியீடு 2.15 சதவீதமும், பொதுத்துறைகுறியீடு 2.05 சதவீதமும் சரிந்தன.
சென்செக்ஸ் பங்குகளில் ஓஎன்ஜிசி (4.1), டாடா மோட்டார்ஸ் (3.19%), ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா (2.75%), சன் பார்மா (2.61%) மற்றும் ரிலையன்ஸ் (2.31%)சதவீதம் சரிந்தன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 பங்குகளில் 4 பங்குகள்மட்டுமே உயர்ந்து முடிந்தன. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, என்டிபிசி,ஹெச்யூஎல் மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகிய பங்குகள் மட்டுமே உயர்ந்துமுடிந்தன.
டாடா குழுமத்தில் இரு அதிகார மையங்கள்: குழும நிறுவனங்களின்தலைவராக தொடரும் சைரஸ் மிஸ்திரி
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து மிஸ்திரிநீக்கப்பட்டாலும், 10-க்கும் மேற்பட்ட குழும நிறுவனங்களின் தலைவராகதொடர்கிறார். குழும நிறுவனங்களின் தலைவர் பொறுப்பிலிருந்து அவரைநீக்குவது அவ்வளவு எளிதானது அல்ல.
அதனால் டாடா குழும நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் இருஅதிகார மையங்களுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.டாடாமோட்டார்ஸ், டாடா பவர் மற்றும் இந்தியன் ஓட்டல்ஸ் உள்ளிட்ட சிலநிறுவனங்களின் தலைவர் மற்றும் தினசரி அலுவல்கள் அல்லாத இயக்குநர்பொறுப்புகளில் சைரஸ் மிஸ்திரி இருக்கிறார்.
இந்த நிறுவனங்களில் டாடா சன்ஸுக்கு பெரும்பான்மை பங்குகள் இல்லாததால்,இந்த நிறுவன பொறுப்புகளில் இருந்து சைரஸ் மிஸ்திரியை நீக்குவது சவாலானவிஷயமாகும்.பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டிலும்முடிவுகளை தாக்கல் செய்ய வேண்டும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலானகாலாண்டு முடிவுகளை நவம்பர் 15-ம் தேதிக் குள் தாக்கல் செய்ய வேண்டும்.
அதனால் இன்னும் 15 நாட்களுக்கு இயக்குநர் குழு காலாண்டு முடிவுகள்மட்டுமல்லாமல், சைரஸ் மிஸ்திரி விவகாரத்தையும் விவாதிக்கும் எனதெரிகிறது. டாடா குழுமத்தில் 29 பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன.மிஸ்திரி நீக்கத்துக்கு பிறகு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 350கோடி டாலர் அளவுக்கு சரிந்திருக்கிறது.
No comments:
Post a Comment