உலகம் :
பழம்பெரும் கனடா பாடகர் லியோனார்ட் கோயன் காலமானார்
உலகின் மிகப் பிரபலமான பழம்பெரும் கனடிய பாடகர் மற்றும் கவிஞர்,பாடலாசிரியர், ஓவியர் என பன்முகத்தன்மை கொண்டவருமான லியோனார்ட்கோயன் (82) நேற்று இரவு காலமானார்.
கனடாவைச் சேர்ந்த லியோனார்ட் கோயன், இசை உலகில் தவிர்க்க முடியாதஆளுமைகளில் ஒருவராகவும் மிகவும் மரியாதைக்குரியவராகவும் இருந்துவந்தார்.
கனடாவில் 1934-ஆம் ஆண்டு பிறந்த கோயன் நாவல், கவிதை என ஏற்கெனவேபுகழ்பெற்றிருந்த நிலையில், 1960களில் அமெரிக்காவில் ராக் இசைப்பாடல்களைஎழுதி பாட ஆரம்பித்தார். பிற்காலத்தில் அவரது பாடல் எழுதும் திறனைசமீபத்தில் நோபல் பரிசு வென்ற அமெரிக்க பாடகரான பாப் டிலனுடன் ஒப்பிட்டுபேச ஆரம்பித்தனர். இதன் மூலம் சிறந்த ராக் இசைப் பாடகராக அவர்அமெரிக்காவில் புகழடைந்தார்.
வெள்ளை மாளிகையில் ஒபாமா - டொனால்டு டிரம்ப் சந்திப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், அதிபர் பராக்ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம், அடுத்தாண்டு ஜனவரியுடன்முடிவடைகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கடந்த செவ்வாய்க்கிழமை 8-ஆம் தேதி நடந்தது. இதில், ஜனநாயக கட்சி சார்பில்ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபர்டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர்.
மொத்தமுள்ள 538 உறுப்பினர்களில், 270 உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரே,அமெரிக்க அதிபராக முடியும். இதில், டிரம்ப், 279 தேர்வு குழுஉறுப்பினர்களையும், ஹிலாரி, 218 தேர்வு குழு உறுப்பினர்களின் ஆதரவையும்பெற்றனர். இதனையடுத்து கருத்து கணிப்புகளை பொய்யாக்கி அதிபர் தேர்தலில்டிரம்ப் வெற்றி பெற்றார்.
இந்தியா :
ஜப்பான் அரசர் அக்கிடோ - மோடி சந்திப்பு
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நேற்று ஜப்பான் சென்றுள்ள பிரதமர்நரேந்திர மோடி, தற்போது டோக்கியோவில் உள்ள ஜப்பான் அரசர் அக்கிடோவைசந்தித்து பேச்சவார்த்தை நடத்தி வருகிறார்.
அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல் ஆகியோரையும் மோடிசந்திக்கவுள்ளார்.
இந்தியா-ஜப்பான் இடையேயான வருடாந்திர மாநாடு, டோக்கியோவில் இன்றுவெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது. வருடாந்திர மாநாட்டில் இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, திறன் மேம்பாடு,உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் உறவுகளைமேம்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோஅபேவும் விவாதிக்கவுள்ளனர்.
மாநாட்டின் முடிவில், 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என்றுதகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு :
தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து
தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகபெட்ரோலியத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தமிழகத்தில் திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 1.75 லட்சம்ஏக்கர் விவசாய நிலங்களில் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசுஉத்தேசித்திருந்தது. ஆனால் இந்த திட்டத்தால் வேளாண் விளை நிலங்களில்நிலத்தடி நீர் வெளியேறும் என்றும் அதன் விளைவாக பிற பகுதிகளில் வேளாண்சாகுபடி பாதிக்கப்படும் என்றும் விவசாயிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள்தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே, மீத்தேன் எரிவாயு எடுக்கதனியார் நிறுவனத்துக்கு அளித்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.
விளையாட்டு :
இளையோர் தடகளம்: தில்லி வீரர் தேசிய சாதனை
கோவையில் வியாழக்கிழமை தொடங்கிய தேசிய இளையோர் தடகளப்போட்டியில் தில்லியைச் சேர்ந்த தமிழ் மாணவர் தேஜஸ்வின் உயரம்தாண்டுதலில் தேசிய சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 32-ஆவது தேசிய ஜூனியர் தடகளப் போட்டிகோவை நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது. வரும் 14-ஆம் தேதி வரைநடைபெறும் இந்தப் போட்டியில் 28 மாநிலங்களைச் சேர்ந்த 1,800 வீரர்கள், 900வீராங்கனைகள் என சுமார் 2,700 பேர் பங்கேற்கின்றனர்.
இதில், 14, 16, 18, 20 வயதுக்குள்பட்டோருக்கான ஓட்டம், நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்நடைபெறுகின்றன. போட்டியின் முதல் நாளில் ஓட்டம், நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள்நடைபெற்றன.
18 வயதுக்கு உள்பட்டோருக்கான உயரம் தாண்டும் போட்டியில் தில்லி மாணவர்தேஜஸ்வின் சங்கர் 2.26 மீ. உயரம் தாண்டி தேசிய சாதனை படைத்தார்.முன்னதாக 2011-இல் கர்நாடகத்தைச் சேர்ந்த சசிதர் ஹர்சித் 2.17 மீ. தாண்டியதேசாதனையாக இருந்தது.
வர்த்தகம் :
மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் சதம் : 537 ரன்கள் குவித்தது இங்கிலாந்து
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிதனது முதல் இன்னிங்ஸில் 159.3 ஓவர்களில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
மொயீன் அலி 117 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 128 ரன்களும் குவித்தனர்.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்தஇங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 124 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, முதல் நாள்ஆட்டநேர முடிவில் 93 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள்குவித்திருந்தது. மொயீன் அலி 99, பென் ஸ்டோக்ஸ் 19 ரன்களுடன் களத்தில்இருந்தனர்.
2-ஆவது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில்மொயீன் அலி 195 பந்துகளில் சதம் கண்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர்213 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் சேர்த்து முகமது சமி பந்துவீச்சில்போல்டு ஆனார்.
டிசிஎஸ் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கம்
டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் (டிசிஎஸ்) தலைவர் பதவியில் இருந்துசைரஸ் மிஸ்திரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இஷாத்ஹுசைன் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பொறுப்பில் சைரஸ் மிஸ்திரி கடந்தஅக்டோபர் 24-ஆம் தேதி நீக்கப்பட்டார். ரத்தன் டாடா அப்பொறுப்பைதாற்காலிகமாக ஏற்றார். அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்தமுடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, ரத்தன் டாடா மீது சைரஸ் மிஸ்திரிபல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினார்.
தேசத்தில் சிறந்த பாரம்பரியமும், பழமையும் வாய்ந்த டாடா குழுமத்தில்நிகழ்ந்த இந்த அதிகார மோதல் தேசிய அளவில் மட்டுமன்றி சர்வதேசஅளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
டாடா குழும தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், டிசிஎஸ், டாடாமோட்டார்ஸ், டாடா பவர், டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல் உள்ளிட்டநிறுவனங்களின் தலைவர் பதவியில் சைரஸ் மிஸ்திரி இருந்து வந்தார்.
இந்நிலையில், டாடா குழுமத்தின் அதிக லாபம் ஈட்டுவதும்,அதிகமுக்கியத்துவம் வாய்ந்ததுமான டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர்பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி வியாழக்கிழமை நீக்கப்பட்டார். அவருக்குப்பதிலாக இஷாத் ஹுசைன் (69) அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment