Monday 21 November 2016

Daily Current Affairs For Competitive Exam - 22nd November

உலகம் :

முடிவுக்கு வந்தது யேமன் போர் நிறுத்தம்
யேமனில் அரசுப் படையினருக்கும்ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 48மணி நேரமாக அமலில் இருந்த சண்டை நிறுத்தம் திங்கள்கிழமையுடன்முடிவுக்கு வந்தது.


இந்தப் போர் நிறுத்தத்தை மீறியதாக இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிவந்த நிலையில்இது நீட்டிக்கப்படுவது குறித்து உறுதியான தகவல்கள்வெளியாகவில்லை.
யேமனில் தலைநகர் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளைக் கைப்பற்றிய,ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும்அதிபர் மன்சூர்ஹாதிக்கு அதரவான படையினர் மற்றும் சவூதி கூட்டுப் படையினருக்கும்இடையே கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கடும் உள்நாட்டுச் சண்டைநடைபெற்று வருகிறது.
இந்தச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவததற்காக அமெரிக்கவெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியின் முன்முயற்சியில், 48 மணிநேரப் போர் நிறுத்தம் மேற்கொள்ள அரசுப் படையினரும்கிளர்ச்சியாளர்களும்ஒப்புக் கொண்டனர்.
மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டிமெர்கெல் விருப்பம்
ஜெர்மனியில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும்போட்டியிட விரும்புவதாகஅந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கெல் (62)தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெர்மனியின் ஜனநாயகப் பண்புகளை பேணவும்பாரம்பரியத்தைப்பாதுகாக்கவும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும்போட்டியிட விரும்புகிறேன்இதுவரை நான் சந்தித்தத் தேர்தல்களிலேயேமிகவும் கடினமான தேர்தலாக அது இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.
ஜெர்மனி இணைப்புக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களிலேயே அது மிகக்கடுமையாக இருக்கும் என்றார் அவர்.
ஏற்கெனவே 3 முறை தேர்தலில் போட்டியிட்டு ஜெர்மனியின் அதிபராகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஏஞ்சலா மெர்கெல்கடந்த 2005-ஆம் ஆண்டு முதல்அந்தப் பதவியை வகித்து வருகிறார்.
இந்தியா :
.பி.: போர் விமானம் தரையிறங்கும் வகையிலான நவீன சாலை திறப்பு
ஆக்ரா - லக்னெள விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தின் தொடக்க விழா உத்தரப்பிரதேச மாநிலம்உன்னூவ் மாவட்டம் பங்கர்மெளவில் திங்கள்கிழமைநடைபெற்றதுஇவ்விழாவின் முக்கிய நிகழ்வாக இந்திய விமானப் படைக்குச்சொந்தமான 6 போர் விமானங்கள் அந்த நெடுஞ்சாலையைத் தொட்டுவிட்டுமீண்டும் விண்ணில் பறந்து சென்றன.
லக்னெளவில் இருந்து தில்லி வரை 302 கிலோ மீட்டர் தொலைவுக்கு 6 வழிவிரைவு நெடுஞ்சாலை அமைக்க உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டதுஇந்தத்திட்டத்தின் மூலம் அந்த நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் வெகுவாகக்குறைய உள்ளது.
மேலும்போர்ச் சூழல்களிலும்அவசர காலங்களிலும் இந்த நெடுஞ்சாலையின்ஒரு பகுதியில் விமானங்களைத் தரையிறக்க முடியும்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த சாலைத்திட்டத்தின் பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்தனஇதையடுத்து,அந்தச் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சிஉத்தரப் பிரதேசத்தில் திங்கள்கிழமை நடைபெற்றதுஇதில் மாநில முதல்வர்அகிலேஷ் யாதவ்சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாடகைத்தாய் நெறிமுறை மசோதா மக்களவையில் அறிமுகம்
வாடகைத்தாய் நடைமுறையை வர்த்தகரீதியில் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரூபாய் நோட்டுகளை வாபஸ் விவகாரத்தை முன்வைத்து மக்களவையில்எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனஅந்தக் கூச்சல்-குழப்பத்துக்கு இடையே வாடகைத்தாய் (ஒழுங்குமுறைமசோதா-2016- மத்தியசுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததும் வாடகைத்தாய்நடைமுறையை வர்த்தகரீதியில் (லாப நோக்கில்பயன்படுத்துவதற்கு முழுஅளவிலான தடை அமலுக்கு வந்துவிடும்எனினும்குழந்தைப் பேறில்லாததம்பதிகளின் நலன் கருதிலாபநோக்கமின்றி மேற்கொள்ளப்படும் வாடகைத்தாய்சேவையானது கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும்.
பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகர சோதனை
இந்தியாவிலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்ட பிருத்வி-2 ஏவுகணைகள்திங்கள்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
ஒடிஸாவின் சண்டிப்பூரில் அமைந்துள்ள ஏவுகணை சோதனை மையத்திலிருந்துபிருத்வி-2 ரகத்தைச் சேர்ந்த இரு ஏவுகணைகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன.
வாகனத்தில் எடுத்துச் செல்லக்கூடிய ஏவு கருவியின் மூலம் ஒரே நேரத்தில் இருஏவுகணைகள் செலுத்தப்பட்டன.
அவை பாய்ந்து செல்லும் பாதைகள் நவீன சாதனங்கள் மூலம்கண்காணிக்கப்பட்டனராணுவ அதிகாரிகளும்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டிஓஅதிகாரிகளும் இந்தப் பரிசோதனையைமேற்பார்வையிட்டனர்.
இரு ஏவுகணைகளும் இலக்குகளைச் சென்றடைந்ததைஅந்தப் பகுதிக்கு அருகேகப்பலில் நிறுத்தப்பட்டிருந்த ஆய்வுக் குழுவினர் மேற்பார்வையிட்டனர்இந்தப்பரிசோதனையில்பிருத்வி-2 ஏவுகணைகளின் செயல்பாடும்அவற்றைஇயக்குவதற்கான கருவிகளின் செயல்பாடும் திருப்திகரமாக இருந்தது.
இதேபோன்ற இரட்டை ஏவுகணைப் பரிசோதனை கடந்த 2009-ஆம் ஆண்டும்வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாடு : 
குரூப் 1 தேர்வுவிண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்
குரூப் 1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக கவனிக்கவேண்டிய அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.,) அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சிதிங்கள்கிழமை வெளியிட்ட தகவல்:-
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி.விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரைகாத்திருக்காமல்அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.
கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போதுவிண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்ப பிரச்னைகளோஎழ வாய்ப்புள்ளது.
விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்துவிவரங்களையும் கவனமாக உள்ளீடு செய்ய வேண்டும்விண்ணப்பம்சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களை விண்ணப்பதாரர்கள் மாற்றமுடியாதுஎனவே இணையவழி விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்துசமர்ப்பிக்கும் முன்பு தாங்கள் அளித்துள்ள விவரங்கள் சரியானதுதான் என்பதைஉறுதி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்ப விவரங்களை மாற்றக் கோரிபெறப்படும் கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாதுஎன்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு :
ஏடிபி பைனல்ஸ்முர்ரே சாம்பியன்
ஏடிபி உலக டூர் பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலைவீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே முதல்முறையாக சாம்பியன் பட்டம்வென்றார்.
லண்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் முர்ரே 6-3, 6-4 என்றநேர் செட்களில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சைதோற்கடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டார் முர்ரேஇந்த சீசனில் தொடர்ச்சியாக 24 ஆட்டங்களில் வென்றுள்ளமுர்ரேதொடர்ச்சியாக 5-ஆவது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இதன்மூலம் ஏடிபி பைனல்ஸில் தொடர்ச்சியாக கோலோச்சி வந்த நோவக்ஜோகோவிச்சின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்ஜோகோவிச் 5முறை இந்தப் போட்டியில் வாகை சூடியுள்ளார்.
உலக செஸ் 7-ஆவது சுற்று டிரா
உலக செஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன்-ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் இடையிலான 7-ஆவது சுற்று ஆட்டம் டிராவில்முடிந்தது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 7சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில்கார்ல்சன்கர்ஜாகின் ஆகிய இருவரும்தலா 3.5 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 7-ஆவது சுற்றில் கார்ல்சன் தனது 16-ஆவதுநகர்த்தலின்போது தவறு செய்தார்ஆனால் அதைப் பயன்படுத்தி வெற்றி பெறும்வாய்ப்பை கர்ஜாகின் கோட்டைவிட்டார்.
7-ஆவது சுற்றுக்குப் பிறகு பேசிய கார்ல்சன், "16-ஆவது சுற்றின்போதுகவனக்குறைவாக எனது யானையை இரு கட்டங்கள் நகர்த்திவிட்டேன்அந்தத்தவறை எப்படி செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லைஎன்றார்.
வர்த்தகம் :
சீனாவிலிருந்து 84% சூரிய தகடுகள் இறக்குமதி
கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டில் சீனாவிலிருந்து 84 சதவீத சூரிய தகடுகள்மற்றும் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்திதுறை அமைச்சர் பியூஷ் கோயல் திங்கள்கிழமை மாநிலங்களவையில்தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த நிதி ஆண்டில் 234 கோடி டாலர் (சுமார் ரூ.15,444 கோடிமதிப்பிலான சூரியதகடுகள் மற்றும் பாகங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.அதில்சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சூரிய தகடுகளின் மதிப்பு 196கோடி டாலராக (சுமார் ரூ.12,396 கோடிஇருந்ததுஒட்டு மொத்த இறக்குமதியில்இது 84 சதவீதமாகும் என்றார் அவர்.
வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து, 175ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்குநிர்ணயித்துள்ளதுஅதில், 100 ஜிகாவாட் சூரிய சக்தியிலிருந்தும், 60 ஜிகாவாட்காற்றிலிருந்தும், 10 ஜிகாவாட் உயிரி எரிபொருள்களிலிருந்தும் (பயோமாஸ்), 5ஜிகாவாட் சிறிய நீர்மின் திட்டங்களிலிருந்தும் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
வங்கிகளில் முஸ்லீம்களுக்கு தனி பிரிவுஆர்பிஐ பரிந்துரை
தற்போது இருக்கும் வங்கி நடைமுறையில் முஸ்லீம்களுக்கு தனியான பிரிவைஏற்படுத்த ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது.
மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் முஸ்லீம் மக்களை வங்கி அமைப்புக்குள்கொண்டுவரும் நோக்கில் தனியான முஸ்லீம் வங்கிகளை ஏற்படுத்த உண்டானவாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறதுமுஸ்லீம் மக்கள் அவர்களுடைய மதநம்பிக்கைகளின் காரணமாக வங்கி அமைப்புக்குள் வருவதில்லை.
``பல்வேறு விதிகள் மற்றும் சவால்கள் இந்த விஷயத்தில் அடங்கியுள்ளது.மேலும் இந்திய வங்கிகளுக்கு இதில் முன் அனுபவம் இல்லைமுஸ்லீம்வங்கிகள் இந்தியாவில் படிப்படி யாக கொண்டுவரப்படும்முதலில் தற்போதுள்ளவங்கிகளில் முஸ்லீம்களுக்கு தனிப்பிரிவு மூலம் சில திட்டங்களைக் கொண்டுவரப்படும்.
முழுவதும் முஸ்லீம் வங்கிகளைக் கொண்டு வருவது தற்போது உள்ளசூழ்நிலையில் மிக சிக்கலானது’’ என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ்பதிவுசெய்த கேள்விக்கு நிதியமைச்சகம் பதிலளித்துள்ளதுமுஸ்லீம் வங்கி கள்என்பது வட்டிகள் ஏதும் விதிக்கப்படாமல் இயங்குவதுமுஸ்லீம் மதத்தின்படிவட்டி விதிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

No comments: