Thursday 10 November 2016

Daily Current Affairs For Competitive Exam - 10th November

உலகம் :

அமெரிக்க அதிபர் டிரம்ப்
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.


இதன் மூலம்அமெரிக்காவின் 45-ஆவது அதிபராகப் பொறுப்பேற்க உள்ள அவர்,அந்நாட்டில் அதிக வயதில் (70) அதிபராகும் நபர் என்ற சாதனையைப்படைத்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பு தனது பேச்சுகளாலும்செயல்களாலும் பல்வேறுசர்ச்சைகளில் சிக்கிய டொனால்ட் டிரம்ப்பல்வேறு கருத்துக் கணிப்புகளையும்பொய்யாக்கி வெற்றியை எட்டியுள்ளார்.
பதிவான வாக்குகளில் இருவருமே ஏறக்குறைய 48 சதவீத வாக்குகளைப்பெற்றுள்ளனர்எனினும்அதிபர் யார் என்பதை முடிவு செய்யும் தேர்வாளர் குழுவாக்குகளில் (எலெக்ட்டோரல் காலேஜ்) 289 வாக்குகள் டிரம்ப்புக்கு சாகமாகஅமைந்துள்ளன.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு 218 தேர்வாளர் குழுவாக்குகளே கிடைத்துள்ளனமொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில், 270வாக்குகளைப் பெறுபவர் அதிபராகத் தேர்வு செய்யப்படுவார்.
இந்தியா :
அமெரிக்கா - இந்தியா நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு தொடரும்:இந்தியாவுக்கான அமெரிக்க துணை தூதர் பிலிப்மின்
அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்வுசெய்யப்பட்டார்இதனையடுத்து வரும் ஆண்டு 2017 ஜனவரி  20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார்.
அமெரிக்க அரசியலில் செனட் உறுப்பினராக இல்லாமல்வேறெந்த அரசியல்பின்புலம் அல்லாத ஒரு தொழிலதிபர் அமெரிக்க அதிபராக தேர்வுசெய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்அமெரிக்க தேர்தல் முடிவு குறித்துஇந்தியாவுக்கான அமெரிக்க துணை தூதர் பிலிப்மின் கூறியதாவது:-
அமெரிக்காவில் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாகவும்நேர்மையாகவும்தேர்தல் நடைபெற்றுள்ளதுயார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல.இந்த ஜனநாயக வெற்றியை இன்று அனைத்து நாடுகளோடும் உறவுகளைமேம்படுத்தும் வகையில் கொண்டாடுகிறோம்.
அமெரிக்க அதிபர் ஓபாமாவும்இந்திய பிரதமர் மோடியும் இரு நாடுகளுக்குஇடையே நல்லுறவுக்காக வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளார்கள்இந்தநல்லுறவு தொடரும் என்று அவர் கூறினார்.
இந்திய வம்சாவளியினர் 4 பேர் வெற்றி
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியவம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்அவர்களில் மூன்று பேர் சென்னையைப்பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற இந்தியர்கள் அனைவரும் ஹிலாரி கிளிண்டனை முன்னிறுத்தியஜனநாயகக் கட்சி வேட்பாளர்களாகக் களமிறங்கியவர்களாவர்அவர்களில் 3 பேர்பிரதிநிதித்துவ சபைக்கும்ஒருவர் செனட் சபைக்கும்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்இந்தியர் ஒருவர் செனட் சபைக்குத் தேர்வுசெய்யப்படுவது அமெரிக்க நாடாளுமன்ற வராலாற்றில் இதுவேமுதன்முறையாகும்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவால் முன்மொழியப்பட்ட கமலா ஹாரிஸ்(51) என்ற இந்திய வம்சாவளிப் பெண்தான் அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்.
மனித உரிமைகள் ஆர்வலரான அவர்ஜனநாயகக் கட்சியில் பல்வேறுபொறுப்புகளை வகித்துள்ளார்கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன்சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவராவார்.
அதேபோல்பிரதிநிதித்துவ சபைக்கு ஜனநாயக் கட்சி சார்பில்தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா கிருஷ்ணமூர்த்திபிரமிளா ஜெயபால் ஆகியோரும்சென்னையில் பிறந்தவர்களாவர்அமெரிக்க பிரதிநிதித்துவ சபைக்கு இதுவரைஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எவரும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.அந்தக் குறையை இம்முறை பிரமிளா ஜெயபால் தீர்த்து வைத்துள்ளார்.
புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும்நிதித்துறை செயலாளர்
புதிய 1000 ரூபாய் நோட்டுகள் சில மாதங்களிலேயே  புதிய வண்ணத்தில்,கோணத்தில் வெளியிடப்படும் என நிதித்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ்தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செவ்வாய்க்கிழமை (நவ.8)நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்மேலும் மாற்றம்காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு புதன்கிழமை (நவ.9)விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை இன்று வியாழக்கிழமை(நவ.10) முதல் மாற்றிக் கொள்ளும் ஏற்பாடுகளை தமிழகம் உள்பட நாடுமுழுவதும் வங்கிகள் அனைத்தும் செய்து விநியோகம் செய்து வருகின்றன.
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள அனைத்து வங்கிக்கிளைகளிலும் சிறப்புக் கவுன்ட்டர் வசதி ஏற்பாடு செய்துள்ளனஇந்த சிறப்புக்கவுன்ட்டர் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை செயல்படும்.
நாடு முழுவதும் நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு வரை தேசியநெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ரத்துநிதின் கட்கரி
நாடு முழுவதும் நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு வரை தேசிய நெடுஞ்சாலைகளில்சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிஅறித்துள்ளார்
நாட்டில் மலிந்து கிடக்கும் கருப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நோக்கோடுரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்ற வரலாற்று சிறப்புமிக்கஅறிவிப்பை பிரதமர் மோடி நேற்று இரவு வெளியிட்டார்.
இதனால் பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூட்டது என்பதில் மத்தியஅரசு கவனமாக உள்ளதுஎனினும் எதிர்கட்சியான காங்கிரஸ் துணைத் தலைவர்ராகுல் காந்திகாங்கிரஸ் மூத்த தலைவர் .சிதம்பரம்மம்தாபானர்ஜிஉள்ளிட்டதலைவர்கள் அரசின் இந்த முடிவை விமார்சனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு வரை தேசியநெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி அறித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாடு : 
ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் குறித்த சந்தேகங்களுக்கு ரிசர்வ் வங்கி உதவிமையம் திறப்பு
நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செவ்வாய்க்கிழமை (நவ.8)நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்மேலும் மாற்றம்காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு புதன்கிழமை (நவ.9)விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வியாழக்கிழமை(நவ.10) முதல் மாற்றிக் கொள்ளும் ஏற்பாடுகளை தமிழகம் உள்பட நாடுமுழுவதும் வங்கிகள் அனைத்தும் செய்து தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில்பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது குறித்தவிளக்கம் அளிப்பதற்காக பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம்திறக்கப்பட்டுள்ளது.
பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற திட்டம்அறிமுகப்படுத்தப்பட்டதையொட்டிஇந்திய ரிசர்வ் வங்கி தனது www.rbi.org.inஇணையதளத்தில் இது குறித்து பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்குவிளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு :
பார்வையற்றோர் கிரிக்கெட் உலகக் கோப்பைதூதராக ராகுல் திராவிட்நியமனம்
பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தூதராகஇந்திய அணி முன்னாள் வீரர் ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி,பிப்ரவரி 12-ஆம் தேதி நிறைவடைகிறதுஇந்தப் போட்டியின் முதல் ஆட்டம் புதுதில்லியிலும்இறுதி ஆட்டம் பெங்களூரிலும் நடைபெற உள்ளது.
இந்தியாஆஸ்திரேலியாவங்கதேசம்இங்கிலாந்துநேபாளம்நியூஸிலாந்து,பாகிஸ்தான்தென் ஆப்பிரிக்காஇலங்கைமேற்கிந்தியத் தீவுகள் என 10 நாடுகள்இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கின்றனலீக் மற்றும் நாக் அவுட்முறையில்இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்தப் போட்டிக்கானஆட்டங்கள் நடைபெற உள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக மறுசுழற்சி முறையில் பதக்கங்கள்
2020-ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள்,மறுசுழற்சி முறையில் பழைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் இதர மின்னணுபொருள்களின் உலோகங்களில் இருந்து தயாரிக்கப்பட உள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ஒலிம்பிக் போட்டியைநடத்தும் முயற்சியாக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக போட்டிஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துடோக்கியோ ஒலிம்பிக்கின் செய்தித் தொடர்பாளர் ஹிகாரிகோஒனோ கூறியதாவது:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள்மறுசுழற்சி முறையில்பழைய செல்லிடப்பேசிகள்மின்னணு பொருள்களின் உலோகங்களைபயன்படுத்தி தயாரிக்கப்பட உள்ளனஇதுநிலைத்தன்மை மற்றும் பொது மக்கள்பங்களிப்புக்கான அடையாளமாகவும் இருக்கும்.
வர்த்தகம் :
இனி நகை வாங்க பான்கார்டு கட்டாயம்மத்திய வருவாய்த்துறை அதிரடிஉத்தரவு
நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செவ்வாய்க்கிழமை (நவ.8)நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்மேலும் மாற்றம்காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு புதன்கிழமை (நவ.9)விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்துபொதுமக்கள் அனைவரும் அத்தியாவாசிய செலவுகளுக்குரூ.100 நோட்டுகளை ஏடிஎம் மையங்களில் எடுக்க இரவு முழுவதும் கால் கடுக்கவரிசையில் நின்ற பொதுமக்கள்அன்று இரவே தங்கத்தின் மீது முதலீடு செய்யதொடங்கினர்.
இதனால் நகைக்கடைகளில் செவ்வாய்க்கிழமை இரவிலிருந்து வாங்ககுவிந்தனர்இதனால் தங்கத்தின் விலை என்றும் இல்லாத அளவுக்குஏறுமுகமாக காணப்பட்டதுமேலும்நகைக்கடைகளில் கூட்டம்அலைமோதியது.

No comments: