Sunday 12 June 2016

12th June Current Affairs in Tamil


  1. ரியோ ஒலிம்பிக்கில் போபண்ணா ஜோடி லியாண்டர் பயஸ்: டென்னிஸ் கூட்டமைப்பு அறிவிப்பு.
  2. ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சதம் அடித்த கே.எல்.ராகுல் அறிமுக போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
  3. தபால் துறையின் பேமென்ட் வங்கிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலைமையில் இந்த பேமென்ட் வங்கிக்கான லோகோ வடிவ மைப்பு மற்றும் விளம்பர வாசகம் (டேக்லைன்) ஆகியவற்றை வடிமைப் பவர்களுக்கு ரூ.50,000 பரிசு வழங்க தபால் துறை திட்டமிட்டிருக்கிறது.
  4. யஸுங்கா (Kyazoonga) என்னும் இ-டிக்கெட் நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு செய்திருக்கிறார். ரத்தன் டாடா எவ்வளவு தொகையை முதலீடு செய்தார் என்பதை நிறுவனம் குறிப்பிடவில்லை. அதேபோல இதுவரை மொத்தமாக எவ்வளவு தொகையை திரட்டி இருக்கிறது என்பது குறித்த தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை.
  5. அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பின் (என்எஸ்ஜி) உச்சி மாநாடு இந்த மாத இறுதியில் தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெறவுள்ளது.
  6. என்எஸ்ஜியில் இந்தியாவை சேர்ப்பது குறித்து இந்த மாநாட்டில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments: