Saturday 4 June 2016

4th June Current Affairs in Tamil

இந்தியா :
ஆப்கனில் நட்புறவு அணையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ஆப்கானிஸ்தானில் ஹெராட் மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ள நட்புறவு அணையை பிரதமர் மோடியும், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனியும் சேர்ந்து திறந்து வைத்தனர்.


ஆப்கானிஸ்தான், கத்தார், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.
முதலாவதாக ஆப்கானிஸ்தான் சென்றடைந்த அவர், ஹெராட் மாகாணத்தில் ரூ.1700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அணையை அந்நாட்டு அதிபருடன் இணைந்து திறந்து வைத்தார்.
ஆபாகானிஸ்தானில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய அரசு நட்பு அடிப்படையில் மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் இருநாட்டு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஹெராட் மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ள நட்புறவு அணையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
கேரள-மாநில-சட்டப்பேரவையின்-புதிய-சபாநாயகராக-ஸ்ரீராமகிருஷ்ணன்-தேர்வு
கேரள சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மொத்தம், 140 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில், ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக, 92 ஓட்டுகளும், ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் வி.பி.சஜீந்திரனுக்கு, 46 ஓட்டுகளும் கிடைத்தன. சட்டப்பேரவையில் நேற்று சபாநாயகர் தேர்தல் முடிந்த தும், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் ஒன்றாக இணைந்து, ஸ்ரீராமகிருஷ்ணனை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளராக பொன்னனி தொகுதி யில் இருந்து சட்டப்பேரவை உறுப் பினரானவர் ஸ்ரீராமகிருஷ்ணன் (48). இவர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும் ஆவார்.
தமிழகத்தில்-அடுத்த-24-மணி-நேரத்தில்-சில-இடங்களில்-மழை-பெய்யும்-வானிலை-ஆய்வு-மையம்
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஓசூர், நத்தம் ஆகிய இடங்களில் தலா 60 மி.மீ. மீட்டர் மழை பதிவானது. காவேரிப்பாக்கம் 40 மி.மீ., சோளிங்கர், அரக்கோணத்தில் தலா 30 மி.மீ., மேட்டூரில் 20 மி.மீ., மேலூர், தாம்பரம், வாணியம்பாடி, காஞ்சீபுரம், அரூர், சூளகிரி, வாலஜா, ஊட்டி ஆகிய இடங்களில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவானது. இன்று அதிகபட்சமாக மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
“அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும்.
விளையாட்டு :

வசந்திதேவி, ஞாநி உட்பட 6 பேருக்கு விசிக விருது

அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் ஆண்டு விழாவை முன்னிட்டு முனைவர் வசந்தி தேவி, பத்திகையாளர் ஞாநி உட்பட 6 பேருக்கு விசிக சார்பில் விருதுகள் வழங்கப்படவுள்ளது என்று அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதியன்று ஒவ்வொரு ஆண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தகுதிவாய்ந்த சான்றோர்களுக்கு அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், காயிதேமில்லத் பிறை, அயோத்திதாசர் ஆதவன், செம்மொழி ஞாயிறு என்ற பெயர்களில் 6 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஏப்ரல் 14 அன்றே நடந்திருக்க வேண்டிய இந்த விழா தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காரணத்தால் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி இந்த விருதுகள் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் வரும் ஜூன் 21 அன்று மாலை 6 மணிக்கு நடக்கவுள்ளது.
அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டான 2016-ம் ஆண்டுக்கான விருதுகளைப் பெறுவோரின் விவரம் பின்வருமாறு:
அம்பேத்கர் சுடர் விருது நீதிபதி கே.சந்துருவுக்கும், பெரியார் ஒளி விருது முனைவர் வே.வசந்திதேவிக்கும், காமராசர் கதிர் விருது எல்.இளையபெருமாளுக்கும் (மறைவுக்குப் பின்), அயோத்திதாசர் ஆதவன் விருது பத்திரிகையாளர் ஞாநிக்கும், காயிதேமில்லத் பிறை விருது நாகூர் ஹனிஃபாவுக்கும், செம்மொழி ஞாயிறு விருது கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும் வழங்கப்படவுள்ளது. இந்த விருது ஒவ்வொன்றும் பட்டயமும், ரூ.50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியும் கொண்டதாகும்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு-ஓபன்-டென்னிஸ்-இறுதிப்போட்டியில்-செரீனா-முகுருசா-ஆடவர்-பிரிவில்-ஜோகோவிச்-முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக் காவின் செரீனா வில்லியம்ஸ், ஸ்பெயினின் கார்பைன் முகுருசா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தரவரிசை யில் 58-வது இடத்தில் உள்ள நெதர்லாந்தின் கிகி பெர் டென்ஸை சந்தித்தார். இதில் செரீனா 7-6(9-7), 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
முதல் செட்டில் பெர்டென்ஸ் கடும் நெருக்கடி கொடுத்தார். ஆனால் தனது அனுபவத்தால் செரீனா அந்த செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டில் பெர்டென்ஸால் அந்தளவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனது.
இந்தியாவில்-முதன்-முறையாக-பெண்கள்-கலந்துகொள்ளும்-பைக்-ரேஸிங்-சென்னை-கோவையில்-நடைபெறுகிறது
இந்தியாவில் முதன்முறையாக பெண்களுக்கான பைக் ரேஸிங் சென்னை மற்றும் கோவையில் நடைபெற உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் அலிஷா அப்துல்லா ரேஸிங் பயிற்சி பள்ளி இந்த போட்டியை நடத்துகிறது.
இதுகுறித்து பெண்களுக்கான அலிஷா அப்துல்லா ரேஸிங் அகாடமியின் நிறுவனர் அலிஷா அப்துல்லா சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
‘‘சென்னையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அலிஷா அப்துல்லா ரேஸிங் அகாடமி, ரேஸிங் வீராங்கனை களுக்காக இந்தியாவில் உருவாக் கப்பட்டுள்ள முதல் பயிற்சி பள்ளி யாகும். ரேஸிங்கில் ஆர்வமுள்ள பெண்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கவும் இந்த பயிற்சி பள்ளி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எங்களுக்கு டிவிஎஸ் ரேஸிங் அணி பைக்குகள், தொழில்நுட்ப உதவிகளை அளிக்க முன்வந்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி காலமானார்

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரரான முகமது அலி, சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.
74 வயதாகும் முகமது அலி அமெரிக்காவின் அரிஜோனா பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், அவருக்கு பார்கின்சன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. (பார்கின்சன் என்பது மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அதன்மூலம் மனிதனின் இயக்கத்தை முடக்கக்கூடிய ஒருவிதமான வாத நோயாகும்.) அந்த நோயின் பாதிப்பால் முகமது அலிக்கு தற்போது சுவாசக் கோளாறு பிரச்னை ஏற்பட்டது.
பீனிக்ஸில் உள்ள பேரோ நியூராலஜிக்கல் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த மருத்துவர் ஆப்ரஹாம் லீபெர்மேன்தான், முகமது அலிக்கு சிகிச்சையளித்து வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. இவர், 3 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் :
அமெரிக்காவில்-60-பணக்கார-பெண்கள்-பட்டியலில்-இரண்டு-இந்தியர்கள்
அமெரிக்காவின் 60 பணக்கார பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. இதில் இரண்டு இந்தியர்கள் உள்ளனர். இந்தியாவில் பிறந்த நீரஜா சேத்தி, ஐடி நிறுவனமான சின்டெல் நிறுவனத்தின் நிறுவனர் களில் ஒருவர். இவரது கணவர் பரத் தேசாயுடன் சேர்ந்த சின்டெல் நிறுவனத்தை தொடங்கிய இவர் இந்த பட்டியலில் 16-வது இடத்தில் இருக்கிறார்.
அதேபோல அரிஸ்டா நெட் வொர்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெய உல்லல் 30வது இடத்தில் உள்ளார்.
போர்ப்ஸ் பட்டியல்படி ஏபிசி சப்ளை நிறுவனத்தை சேர்ந்த டியான் ஹென்டிரிக்ஸ் முதலிடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 490 கோடி டாலர்கள். கடந்த வருடத்தை விட இப்போது 120 கோடி டாலர் அதிகம்.
இந்த 60 நபர்களின் மொத்த சொத்து மதிப்பு 5,300 கோடி டாலர்கள் ஆகும். கேப், ஸ்பாங்ஸ் உள்ளிட்ட முக்கிய பிராண்ட்களை உருவாக்கியவர் இதில் உள்ளனர். தவிர கூகுள், பேஸ்புக், இபே உள்ளிட்ட நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பணியாற்றியவர்களும் இதில் அடக்கம்.
நீரஜா சேத்தியின் சொத்து மதிப்பு 110 கோடி டாலர்கள் ஆகும். இவரது நிறுவனத்தில் 25,000 நபர்கள் பணிபுரிகிறார்கள்.
ஜெய உல்லலின் சொத்துமதிப்பு 47 கோடி டாலர். லண்டனில் பிறந்து, புதுடெல்லியில் வளர்ந்தவர். 2008-ம் ஆண்டு முதல் அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார்.
ரிலையன்ஸ்-ஜியோ-4ஜி-அறிமுகம்-3-மாதங்களுக்கு-இலவசம்
நீண்ட நாள்களாக எதிர்பார்த்த ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரிலையன்ஸ் குழும பணி யாளர்கள் மட்டுமே (கடந்த டிசம்பர் முதல்) பயன்படுத்தி வந்த சேவையை இப்போது பொது மக்களும் பயன்படுத்தும் வகை யில் இது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. முதல் மூன்று மாதங்களுக்கு இந்த சேவை இலவசமாக இருந்தாலும், ஜியோ எல்ஒய்எப் ஸ்மார்ட் போன் வாங்குபவர்கள் மட்டுமே இந்த இலவச சேவையை பயன்படுத்த முடியும். தவிர 4,500 நிமிடங்கள் இலவசமாக பேசவும் முடியும். இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ5,490 முதல் ரூ.19,399 வரை விற்கப்படுகின்றன.
மேலும் ஜியோ டாட் காம் என்னும் இணையதளமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.



No comments: