Wednesday 8 June 2016

8th june current affairs in tamil

உலகம் :
உலகளவில் அதிகாரமிக்க பெண்கள் பட்டியலில் 4 இந்தியர்கள்
உலகளவில் அதிகாரமிக்க 100 பெண்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில், எஸ்பிஐ வங்கியின் பொது மேலாளர் அருந்ததி பட்டாச்சார்யா உட்பட 4 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.


சர்வதேச அளவில் செய்யப்பட்ட ஆய்வில், 100 பெண்கள் கொண்ட பட்டியலில், அருந்ததி பட்டாச்சார்யா 25வது இடத்தில் உள்ளார்.
ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார் 40வது இடத்திலும், இந்தியாவில் மருந்து ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் பயோ பார்மா நிறுவனத் தலைவர் கிரண் மசும்தார் ஷா 77வது இடத்திலும் உள்ளார்.
நாளிதழ் முதல் வானொலி வரை, ஆன்லைன் வேலை முதல் கல்வி வரை கொடிகட்டிப் பறக்கும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைவர் ஷோபனா பார்டியா 93வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தியா :
ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் உறுப்பினராகிறது இந்தியா
உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அந்த அமைப்பில் நிகழ் ஆண்டு இறுதியில் இந்தியா முறைப்படி உறுப்பினராகச் சேர்த்து கொள்ளப்பட இருக்கிறது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
34 நாடுகளைக் கொண்ட ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் உறுப்பினராவதற்கு இந்தியா கடந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தது. அதற்கான நடைமுறை திங்கள்கிழமையுடன் முடிவடைந்தன. அதாவது, அந்த அமைப்பில் ஏற்கெனவே உறுப்பினராக இருக்கும் நாடுகள் இந்தியாவை சேர்ப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்க அளிக்கப்பட்டிருந்த காலக்கெடு திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது.
ஆனால், எந்தவொரு உறுப்பு நாடும், இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதனால் அந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ளது.
தமிழகம் :
பிரதமர் மோடியை சந்திக்க 14ம் தேதி தில்லி செல்கிறார் ஜெயலலிதா
பிரதமர் மோடியை சந்திக்க வரும் 14ம் தேதி தில்லி செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அப்போது முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜூன் 14ம் தேதி தில்லியில் மோடியை சந்தித்து தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் மற்றும் திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பேச உள்ளார்.
தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு அன்றைய தினமே சென்னை திரும்புகிறார்.
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி: தினசரி 8 கோடி யூனிட் மின்சாரம் அதிகரிப்பு
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி 3,500 மெகாவாட்டாக அதிகரித்திருப்பது உற்பத்தியாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதேநேரம் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் தினசரி சராசரி மின்தேவை 15 ஆயிரம் மெகாவாட்டாக உள்ள நிலையில் உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே சுமார் 2 ஆயிரம் மெகாவாட் இடைவெளி நிலவி வருகிறது. மின் உற்பத்தி குறையும் நேரங்களில் அதை ஈடுகட்டும் விதமாக காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
விளையாட்டு :
அமெரிக்க அணி அபாரம்: கோஸ்டா ரிகாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் கோஸ்டா ரிகாவை அமெரிக்க அணி 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கள் கணக்கைத் தொடங்கியது.
கொலம்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்கா போராடி தோல்வி கண்டது. ஆனால் இந்த முறை ஆதிக்க வெற்றி பெற்றது.
அமெரிக்க அணியின் டெம்ப்சே 9-வது நிமிடத்திலும், ஜோன்ஸ் 37-வது நிமிடத்திலும் பி.உட் 42-வத் நிமிடத்திலும் கடைசியில் 87-வது நிமிடத்தில் ஜி.சூஸீ கோல்களை அடித்து கோஸ்டா ரிகா வெற்றிக் கனவைத் தகர்த்தனர்.
முதல் 5 நிமிடங்கள் தவிர கோஸ்டா ரிகா மீதி 85 நிமிடங்களில் ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தவில்லை. அமெரிக்க அணியில், ஜோன்ஸ், ஜான்சன், டெம்ப்சே மிக அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்ததாக பராகுவே அணியைச் சந்திக்கின்றனர்.
வணிகம் :
பேஸ்புக் இந்தியா நிர்வாக இயக்குநராக உமாங் பேடி நியமனம்
சமூக வலைதளமான பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உமாங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். உமாங் பேடி இதற்கு முன்பு அடோப் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பேஸ்புக் இந்தியா நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
ஜூலை மாதத்திலிருந்து உமாங் பேடி நிர்வாக இயக்கு நராக தனது பணிகளை தொடங்க உள்ளார். இந்தியாவின் முக்கிய வாடிக்கையாளர்கள் மற்றும் மண்டல அளவிலான முகவர் களிடம் நிறுவனத்தின் உத்திகள் சார்ந்த உறவுகளை உருவாக்குவது மற்றும் மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளது.
நீர்வழி-பாதை-போக்குவரத்தை-உயர்த்த-திட்டம்-கட்கரி
நீர்வழிப்பாதைகளை அதிகரித்து போக்குவரத்து கட்டணங்களை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள் ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது.
மொத்த சரக்கு போக்குவரத்தில் நீர்வழிப்பாதைகள் மூலம் 3.5 சதவீதம் மட்டுமே நடக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் இதனை 15 சதவீதமாக உயர்த்த திட்ட மிட்டிருக்கிறோம். தற்போது சரக்கு போக்குவரத்து கட்டணம் 18 சதவீத மாக இருக்கிறது. அதிகளவு நீர்வழிச் சாலைகளை பயன்படுத்தும்போது இதனை 12 சதவீதமாக குறைக்க முடியும். சீனாவில் 8 சதவீதமாக சரக்கு போக்குவரத்து கட்டணம் இருக்கிறது. இதனை குறைக்க மத்திய அரசு தேவையான நடவடிக் கைகளை எடுத்து வருகிறது.
சாலை வழியாக போக்குவரத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.1.5 செலவாகிறது. ரயிலில் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.1 செலவாகிறது. ஆனால் நீர்வழிப் போக்கு வரத்தில் இதே தொலைவுக்கு 20 பைசா மட்டுமே செலவாகிறது.


No comments: