Tuesday 7 June 2016

7th June Current Affairs in Tamil

உலகம் :
அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியாவைச் சேர்க்க அமெரிக்கா உறுதியான ஆதரவு
அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்.எஸ்.ஜி.) இந்தியாவை உறுப்பினராக்க அமெரிக்கா தன் ஆதரவை மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளது.


சீனா உள்ளிட்ட நாடுகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க தேசிய உதவி பாதுகாப்பு ஆலோசகர் பெஞ்சமின் ரோட்ஸ் கூறும்போது, “சமூகப் பயன்பாட்டுக்கான அணு ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்ற பாதையில் இந்தியா பயணித்ததையடுத்தும், அணுப்பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் தனது உறவை கட்டமைக்க எடுத்துக் கொண்ட கால அவகாசம் ஆகியவற்றைப் பார்க்கும் போதும், இந்தியாவை ஆதரிப்பது குறித்து நாங்கள் நல்ல நிலையிலிருந்துதான் முடிவெடுத்துள்ளோம்.
இந்தியா :
புளூ-ஸ்டார்-ஆபரேஷன்-32வது-நினைவு-தினம்-அமிர்தசரஸில்-பலத்த-பாதுகாப்பு
பொற்கோயிலுக்குள் ராணுவம் ‘புளூ ஸ்டார் ஆபரேஷன்’ நடத்திய 32-வது ஆண்டு தினம் நேற்று (திங்கள் கிழமை) அனுசரிக்கப்பட்டது.
இதையடுத்து அமிர்தசரஸ் நகர் முழுவதும் போலீஸாரும் துணை ராணுவத்தினரும் குவிக் கப்பட்டனர். மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ஷிரோன் மணி குருத்வாரா பிரபந்த கமிட்டி தலைவர் அவ்தார் சிங் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு பொற்கோயிலுக்குள் அமைதியான முறையில் பிரார்த் தனைகள் நேற்று நடைபெற்றன.
பொற்கோயிலுக்குள் நினைவு தின நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சீக்கியர்களில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிகழ்ச்சி களை நடத்த விடமாட்டோம் என் றும், முழு அடைப்புக்கும் ‘தல் கல்சா’ உட்பட சில அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்து பொற்கோயி லுக்கு வெளியில் துணை ராணுவத்தினர் ஏராளமானோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீஸ் ஆணை யர் ஏ.எஸ்.சஹால் கூறும்போது, ‘‘கடைகளை மூடுவதற்கு யாரும் நிர்பந்திக்க முடியாது’’ என்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும்  நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் :
ஆழியாறு அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
பொள்ளாச்சி வட்டத்திலுள்ள ஆழியாறு அணையிலிருந்து நாளை (8.6.2016) முதல் தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திலுள்ள ஆழியாறு அணையின் ஐந்து பழைய வாய்க்கால்களின் பாசன பகுதிகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் போக பாசனத்திற்காகவும், பொள்ளாச்சி நகர குடிநீர் தேவைக்காகவும் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி, ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட கோயம்புத்தூர் மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பொள்ளாச்சி வட்டத்திலுள்ள ஆழியாறு அணையிலிருந்து 8.6.2016 முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திலுள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதோடு, பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது: விளாடிமிர் ஏ.ஏஞ்சலோ
ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் பேரழிவு ஏற்பட்ட பிறகு கூடங்குளம் அணுமின் நிலையம் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது என்று ரஷிய அணு ஆற்றல் துறை இயக்குநர் விளாடிதிர் ஏ.ஏஞ்சலோ தெரிவித்துள்ளார்.
ரஷிய நாட்டு உதவியுடன் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் நிறுவப்பட்டு கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அணுமின் நிலையம் செயல்பாட்டைத் தொடங்கியது.
மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளதாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்கு மட்டுமின்றி தென்தமிழகத்துக்கே பேரழிவு ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
விளையாட்டு :
முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியா வெற்றி
முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை தோற்கடித்தது.
ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், மேற்கிந்தியத் தீவுகளும் மோதின.
ரியோ ஒலிம்பிக்: போபண்ணா தகுதி
இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, ஆடவர் இரட்டையர் தரவரிசையில் 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன்மூலம் அவர் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றுள்ளார்.
சமீபத்தில் முடிந்த பிரெஞ்சு ஓபனில் காலிறுதியோடு வெளியேறினார் போபண்ணா. இதனால் மார்செலோ மெலோ-இவான் டோடிக் ஜோடி, பிரெஞ்சு ஓபனில் அரையிறுதியில் தோல்வி கண்டால் மட்டுமே போபண்ணாவால் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடித் தகுதி பெற முடியும் என்ற சூழல் ஏற்பட்டது.
வணிகம் :
வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அறிவிப்பு
பொருளாதார வல்லுநர்களின் கணிப்புக்கு ஏற்ப வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்தவிதமான மாற்றத்தையும் செய்யவில்லை. தற்போதைய நிலையிலேயே வட்டி விகிதங்கள் தொடரும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் அறிவித்தார்.
அதன்படி குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெபோ விகிதம்- குறுகிய காலத்தில் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி) தற்போதைய 6.5 சதவீத நிலையிலேயே தொடரும். அதேபோல ரிவர்ஸ் ரெபோ விகிதம் 6 சதவீத நிலையிலும், ரொக்கக் கையிருப்பு விகிதம் 4 சதவீதம் என்கிற நிலையிலும் தொடரும் என்று ராஜன் அறிவித்தார்.

No comments: