உலகம் :
அனைத்து வகை புற்றுநோய்களை
எதிர்க்கும் புதிய சிகிச்சை முறை: ஜெர்மனி ஆய்வாளர்கள் சோதனை
அனைத்து வகையான புற்றுநோய்களையும் எதிர்த்து
அழிக்கும்ஆர்.என்.ஏ. (RNA) வாக்சைன் என்ற புதிய நோய் எதிர்ப்பு சக்தியை ஜெர்மன்
ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், இந்த ஆய்வு அதன் முதற்கட்ட நிலையில்
உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
அதாவது, வைரஸ் போன்று செயல்படும் ‘மாறாட்ட வைரஸ்களை’
உடலுக்குள் செலுத்தி புற்றுநோய் கட்டிகளுக்கு எதிரான ஒரு தாக்குதல் தடுப்பு
உத்தியை உடலே வினையாற்றுமாறு செய்யப்படும் புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.
3 பேரிடம் மட்டுமே சோதனை செய்யப்பட்ட இந்தப் புதிய
சிகிச்சை முறை, நோய் எதிர்ப்புச் சக்தித் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக
நோக்கப்படுகிறது. அதாவது, உடலில் இயல்பாக உள்ள நோய் எதிர்ப்புச் சக்திக் கூறுகளை
ஒன்று திரட்டி புற்றுநோய்க்கு எதிரான ஒரு ராணுவமாக படையெடுப்பு செய்ய இந்த புதிய
சிகிச்சை முயற்சி செய்வதாக ‘நேச்சர்’ இதழில் வெளியான இந்த ஆய்வு பற்றிய தகவல்கள்
தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தில்
17 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த உலகின் நீளமான சுரங்க ரயில் பாதை திறப்பு
சுவிட்சர்லாந்தில்
கடந்த 17 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த உலகிலேயே மிக நீளமான மற்றும் ஆழமான சுரங்க
ரயில் பாதையை அந்நாட்டு அதிபர் ஜோகன் ஸ்க்னீடர்-அம்மான் நேற்று திறந்து வைத்தார்.
எனினும்,
இந்தப் பாதையில் வர்த்தக ரீதியிலான ரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜுரிச் மற்றும் இத்தாலியின் மிலன்
நகரங்களுக்கிடையிலான பயண நேரம் 2 மணி 40 நிமிடங்களாகக் குறையும். இதனால் ஒரு மணி
நேரம் மிச்சமாகும். இந்தப் பாதையை 17 நிமிடங் களில் கடக்க முடியும். மேலும்
தினமும் 260 சரக்கு ரயில்கள் மற்றும் 65 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என
எதிர்பார்க்கப்படு கிறது.
‘காட்ஹார்டு
பேஸ் டனல்’ என்ற இந்த சுரங்கப்பாதை இரண்டு துளைகளைக் கொண்டது. 57 கி.மீ. நீளம் கொண்ட
இந்தப் பாதை, வடக்கு மற்றும் தெற்கு ஐரோப் பாவுக்கு நடுவே ஆல்ப்ஸ் மலைத் தொடரைக்
குடைந்து உருவாக்கப் பட்டுள்ளது. மலையின் மேற்பரப்பிலிருந்து 2.5 கி.மீ. ஆழத்தில்
இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா :
இன்று கேரள சட்டப்பேரவையில் 140 உறுப்பினர்களும் பதவியேற்பு: நாளை
சபாநாயகர் தேர்வு நடக்கிறது
கேரள சட்டப்பேரவை
தேர்தல் கடந்த மாதம் 16-ம் தேதி நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 91 இடங் களில் வெற்றி பெற்றது. ஆட்சியில்
இருந்த காங்கிரஸ் முன்னணி 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தத்
தேர்தலில் பாஜக சார்பில் முதல் முறையாக முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜகோபால்
(86) வெற்றி பெற்றார்.
இதையடுத்து
கேரள முதல்வராக மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் பினராயி விஜயன் (72) கடந்த
மாதம் 25-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 18 அமைச்சர்களும் பதவி யேற்றனர்.
அவர்களுக்கு கேரள ஆளுநர் பி.சதாசிவம் பதவிப்பிர மாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில்,
கேரள மாநிலத்தின் 14-வது சட்டப்பேரவைக்கான 140 உறுப்பினர்களும் இன்று
எம்எல்ஏ.க்களாக பதவியேற்கின்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் எஸ்.சர்மா பதவிப்
பிரமாணம் செய்து வைக்கிறார்.
அதன்பின்,
நாளை வெள்ளிக் கிழமை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப் பட உள்ளார். ஆளும் இடதுசாரி ஜனநாயக
முன்னணி சார்பில் பி.ராமகிருஷ்ணன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 2 முறை
எம்எல்ஏ.வாக இருந்தவர். எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதுவரை யாருடைய பெயரையும்
அறிவிக்கவில்லை.
கேரளத்தின்
14-வது சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வர் கள் உம்மன் சாண்டியும் அச்சுதா
னந்தனும் இடம்பெறுகின்றனர். 140 உறுப்பினர்களில் 83 பேர் 13-வது சட்டப்பேரவையில்
இடம் பெற்றவர்கள். 44 பேர் புது முகங்கள். 13 பேர் பல ஆண்டுகளுக்குப் பிறகு
மீண்டும் எம்எல்ஏ.க்களாக ஆனவர்கள்.
பேரிடர்-மேலாண்மை-திட்டம்-பிரதமர்-மோடி-வெளியிட்டார்
இயற்கை பேரிடர்
ஏற்படும் போது பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகள் பறிபோவதை குறைப்பதற்கான
தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார்.
ஜப்பானின்
சென்டாய் நகரில் கடந்த 2015, மார்ச் 18-ம் தேதி இயற்கை பேரிடர் குறைப்புக்கான
ஐ.நா.வின் மூன்றாவது உலக மாநாடு நடந்தது. அப்போது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை
ஐ.நா உறுப்பு நாடுகள் அனைத் தும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டன. அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட
தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார்.
இது
குறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘‘சென்டாய் மாநாட்டில் முடிவு
செய்யப்பட்டதன் அடிப்படையில், தற்காப்பு, நிவாரணம், மீட்பு என பல கட்டங்களில்
பேரிடர் மேலாண்மை வகுக்கப்பட்டுள்ளது. அரசின் அனைத்து துறைகளை யும் நெடுஞ்சாணாக
ஒருங் கிணைக்கவும் இந்த திட்டம் வழிவகுத்துள்ளது. இயற்கை பேரிடர் ஏற்படும்போது
பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் எப்படி செயல்பட வேண்டும். அரசுத்
துறைகளில் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்களின் பொறுப்புகள், கடமைகள் என்ன?
முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தகவல் பரிமாற்றம், மருத்துவ உதவி, எரிபொருள்,
போக்குவரத்து, மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இந்த
திட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன’’ என குறிப் பிடப்பட்டுள்ளது.
தமிழகம் :
சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல்
தமிழக சட்டப்பேரவை
சபாநாயகர் பதவிக்கு ப.தனபால், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன்
ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழக
சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள
நிலையில், இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
சபாநாயகர்
பதவிக்கு ப.தனபால், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர்
வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு
சென்னை ஸ்மார்ட்
சிட்டி நிறுவனம், கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை
மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்தியாவில்
ஸ்மார்ட் நகரங்களாக மாற்றப்பட உள்ள 100 நகரங்களில் முதல்கட்டமாக 20 நகரங்களின்
பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த ஜனவரியில்
வெளியிட்டது. அதில் சென்னை மாநகரமும் இடம்பெற்றது. சென்னையில் இத்திட்டம், மத்திய
மற்றும் மாநில அரசுகள் தலா 50 சதவீதம் நிதியுதவியுடன் ரூ.1,366 கோடியில்
செயல்படுத்தப்பட உள்ளது.
அதற்காக
சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்க, சென்னை மாநகராட்சி
நிர்வாகம், அரசிடம் அனுமதி கேட்டது. கடந்த மே 24-ம் தேதி அரசு அனுமதி வழங்க அரசாணை
வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் தலைவராக மாநகராட்சி ஆணையர் சந்தரமோகன் நியமிக்
கப்பட்டுள்ளார். மேலும் 13 இயக்குநர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இது
தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “தற்போது உருவாக்கப்பட்டுள்ள
ஸ்மார்ட் சிட்டி நிறுவனம், கம்பெனி சட்டம் 2013-ன் கீழ் இயங்கக்கூடியது. அதனால்
இந்த நிறுவனம் அச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு
விரைவில் மத்திய, மாநில அரசுகளின் நிதி கிடைக்கும். அதைக்கொண்டு திட்டப் பணிகள்
தொடங்கப்படும்” என்றார்.
விளையாட்டு :
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு ஜோகோவிச், செரீனா முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன்
டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் காலிறுதிக்கு
முன்னேறினர்.
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த
போட்டியில் ஆடவர் பிரிவு 4-வது சுற்றில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச்
3-6, 6-4, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் 14-ம் நிலை வீரரான ஸ்பெயினின் பட்டிஸ்டா
அகுட்டை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தார்.
2017-ம் ஆண்டு
சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள்
ஐசிசி
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் 2017-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம்
தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறு கிறது. இன்னும் ஒருவருட காலம் உள்ள நிலையில் இந்த
தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான்
அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளன.
2015-ம்
ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில்
உள்ள அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்கின்றன. இதன்படி தரவரிசையில் நம்பர் ஒன்
இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு முதல் நிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. நடப்பு
சாம்பியனான இந்தியாவுக்கு 2-வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
வணிகம் :
நிதிச் செயலாளராக அசோக் லவாசா நியமனம்
மூத்த ஐஏஎஸ்
அதிகாரியான அசோக் லவாசா நிதித் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
முன்னதாக இவர் செலவுகள் பிரிவின் செயலாளராக இருந்தார். 1980-ம் ஆண்டு ஹரியானா
மாநில ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர். பொருளாதார துறை விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி
காந்த தாஸ் பேட்சினை சேர்ந்தவர் என்பது முக்கியமானது.
முன்பு
நிதித் துறை செயலாளராக இருந்த ராஜன் வாட்டால் ஓய்வு பெற்றதையடுத்து இந்த பதவி
காலியாக இருந்தது. ராஜன் வாட்டால் இப்போது நிதி ஆயோக் அமைப்பின் மூத்த ஆலோசகராக
(சிறப்பு) இருக்கிறார்.
No comments:
Post a Comment