Monday 20 June 2016

20th June Current Affairs - Tamil

1) இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிக்க விரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு ரகுராம்ராஜன் எழுதிய கடிதத்தின் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.



2) பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு இன்று (திங்கள்கிழமை) அனுமதி வழங்கி அதிரடி மாற்றத்தை புகுத்தியுள்ளது.

3) 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஹாக்கிப் போட்டியில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்தார் சிங் கேப்டனாகவும், கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

4) இன்னும் 3 நாள்களில் தென்மேற்குப் பருவமழை மேலும் வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5) இந்தோனேஷியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25பேரின் நிலை என்னவானது என தெரியவில்லை.


No comments: