1)அமெரிக்க தொழில்நுட்ப உதவியின்றியே சீனா அதிவேக சூப்பர் கணினியைத் தயாரித்து
அசத்தியுள்ளது.
2) ‘நியூயார்க்கில் இன்று
நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில், 135 நாடுகள் பங்கேற்பது, குறிப்பிடத்தக்க
சாதனை’ என, ஐநாவுக்கான இந்திய தூதர் சையது அக்பருதின் கூறினார்.
3)ரொட்டி வகைகளில் ரசாயனப் பொருளான பொட்டாசியம் புரோமேட் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பது உறுதி செய்யப்பட்டதன் காரணமாக மத்திய அரசு அதன் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது.
4)தமிழகத்தில் மின் தேவை குறைந் ததைத் தொடர்ந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
5)மத்திய அரசு முக்கியமான துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை தளர்த்தியுள்ளது. குறிப்பாக மருந்து உற்பத்தி, ராணுவம் மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment