Sunday 5 June 2016

5th June Current Affairs in Tamil

உலகம் :
ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்த செயல்பாடு
இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் மற்ற நாடுகளின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.


ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் 15-ஆவது மாநாடு சிங்கப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள பிராந்தியமாக ஆசிய - பசிபிக் பிராந்தியம் கருதப்படுகிறது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இல்லையெனில், பயங்கரவாதத்தின் வேர்கள் நமது நாடுகளை ஆக்கிரமித்துக் கொள்ளும்.
இந்தியா :
நோய் எதிர்ப்பு, சர்க்கரை நோய்க்கான மருந்து விலை 35% வரை குறையும்
நோய் எதிர்ப்பு மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்து விலையை, தேசிய பார்மாசூட்டிக்கல் விலை கட்டுப்பாட்டு ஆணையம் (என்பிபிஏ) குறைத்துள்ளது.
உயிர்க் காக்கும் மருந்துகளின் விலையை, தேசிய பார்மாசூட்டிக்கல் விலை கட்டுப் பாட்டு ஆணையம் அவ்வப்போது நிர்ணயித்து வருகிறது. இந்நிலையில், நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் விலையை என்பிபிஏ குறைத்துள்ளது. அதன்படி, 25 அத்தியாவசிய மருந்துகளின் சில்லறை விலை 10 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை குறையும். இந்த மருந்துகளில் பெரும்பாலானவை சர்க்கரை நோய்க்கானவை.
‘‘இந்த மருந்து விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் (என்எல்இஎம்) உயிர்க் காக்கும் மருந்துகள் இடம்பெற்றுள்ளன. அந்தப் பட்டியலில் உள்ள மருந்துகள், மக்கள் வாங்கும் அளவுக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம்’’ என்று என்பிபிஏ தலைவர் பூபேந்திர சிங் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஏற்கெனவே இந்த 25 மருந்துகள் விலை கட்டுப்பாட்டில்தான் உள் ளன. தற்போது மேலும் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
அத்துடன் மொத்த விலை அட்டவணையின் மாற்றங்களுக்கு ஏற்ப ஆண்டுதோறும் மருந்துகளின் விலையை மருந்து நிறுவனங்கள் மாற்றி வருகின்றன.
வருமான வரிக் கணக்கை இனி ஏடிஎம் மூலம் தாக்கல் செய்யலாம்!
வருமான வரிக் கணக்கினை ஏடிஎம் மூலம் தாக்கல் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வருமான வரித் துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தற்போது வருமான வரிக் கணக்கினை ஏடிஎம் மூலம் செலுத்தும் வசதியை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வருமான வரியை இணைய வங்கிச் சேவை (இ-பேங்கிங்) மூலம் செலுத்தும் வசதி உள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்துவோர் அதுதொடர்பான இணைய முகவரிக்குச் சென்று தனது வருமான வரிக் கணக்கினை தாக்கல் செய்ய முடியும்.
அவ்வாறு இணைய வங்கி வசதி இல்லாதவர்களுக்காக ஏடிஎம் எந்திரம் மூலம் வருமான வரிக் கணக்கினை தாக்கல் செய்யும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
இதன்படி, வருமான வரி செலுத்துபவர் கணக்கு வைத்துள்ள வங்கி மூலம் மின்னணு சரிபார்த்தல் குறியீடு (இ.வி.சி.) வழங்கப்படும். ஏடிஎம் எந்திரத்தில் அந்தக் குறியீட்டைப் பயன்படுத்தி வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்யலாம்.
தற்போது இந்த வசதியானது பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் :
கோயம்பேடு - ஷெனாய்நகர் இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்: விரைவில் தொடக்கம்
சென்னை கோயம்பேட்டில் இருந்து ஷெனாய் நகர் வரை சுரங்கப் பாதை வழியாக மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்குவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயம்பேட்டில் இருந்து எழும்பூர் வரையில் மொத்தம் 8 கி.மீ. தூரத்துக்கு 6 மீட்டர் அகலத்தில் 10 முதல் 20 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்டி, ஏசி வசதியுடன் கூடிய ரயில் நிலையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கோயம்பேட்டில் இருந்து ஷெனாய்நகர் வரையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்துவதற்கான முழு பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்ததால், மெட்ரோ ரயில் சோதனை ஒட்டம் தொடங்க மெட்ரோ ரயில் அதிகாரிகள் தயக்கம் காட்டி வந்தனர். தற்போது, தேர்தல் முடிந்துள்ள நிலையில் விரைவில் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கோயம்பேட்டில் இருந்து ஷெனாய்நகர் வரையில் ரயில் இன்ஜின் மூலம் சோதனை ஓட்டம் முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தவுள்ளோம். அடுத்த ஒரு மாதத்துக்குள் இந்த பணி தொடங்கிவிடும்.
பிறகு, 6 மாதங்களுக்கு சுரங்கப் பாதையில் சோதனை ஓட்டம் நடத்திய பிறகு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வந்து ஆய்வு நடத்துவார்கள். அதன்பிறகு மக்களின் சேவைக்கு திறந்து வைக்கப்படும்” என்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு: ஜூன் 14-ம் தேதி டெல்லி செல்கிறார் ஜெயலலிதா?
பிரதமர் மோடியை சந்திப்பதற் காக ஜூன் 14-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா டெல்லிக்கு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக அதிமுக ஆட்சியமைத்துள்ளது. கடந்த 23-ம் தேதி முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.
முதல்வராக பதவியேற்றவர்கள் டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் முக்கியத் துறைகளின் மத்திய அமைச்சர்களை சந்திப்பது வழக்கம். அதன்படி, 6-வது முறையாக முதல்வராக பதவியேற் றுள்ள ஜெயலலிதா வரும் 14-ம் தேதி டெல்லிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டு :
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முகுருசாவுக்கு சாம்பியன் பட்டம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருசா சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிருக்கான பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் கார்பைன் முகுருசாவும், முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்சும் மோதினர். கடந்த சில ஆண்டுகளாக மிகச் சிறப்பாக ஆடிவரும் செரினா வில்லியம்ஸ், இப்போட்டியில் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு நேர் மாறாக நேற்று ஆட்டத்தின் ஆரம்பம் முதலே முகுருசா அனல் கக்கினார்.
வணிகம் :
ஒரே பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 30 சதவீதம் உள்ளூர் தயாரிப்பாளர்கள்: நிதியமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தல்
ஒரே பிராண்ட் சில்லரை வர்த்தக நிறுவனங்களுக்கான அனுமதியில் 30 சதவீதம் உள்ளூர் தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்க வேண்டும் என்கிற விதிமுறையில் மாற்றமில்லை என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். இந்தியா வர்த்தகர்களுக்கான நாடாக மட்டுமே இருக்க முடி யாது என்று குறிப்பிட்டவர், ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை யகங்கள் இந்தியாவில் தொடங் கும் விண்ணப்பத்துக்கான அனுமதியில் இதுவே இறுதியான முடிவல்ல என்றும் குறிப்பிட்டடார்.

No comments: