உலகம் :
மோடியுடன் விரிவான பேச்சு: அமெரிக்கா ஆர்வம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆவலாக இருக்கிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் அடுத்த வாரம் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். வரும் 6-ஆம் தேதி வாஷிங்டனுக்கு செல்லும் அவர், அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் 7-ஆம் தேதி சந்தித்துப் பேச இருக்கிறார். பின்னர், அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் 8-ஆம் தேதி அவர் உரையாற்றவுள்ளார்.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு, முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அடுத்த வாரம் வருகை தரும் இந்தியப் பிரதமர் மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆவலுடன் இருக்கிறோம்.
பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கவுள்ளோம் என்றார் ஜான் கிர்பி.
இந்தியா :
பயங்கரவாதிகள்-குறித்த-தகவல்களை-பகிர்ந்து-கொள்ள-இந்தியாஅமெரிக்கா-ஒப்பந்தம்
பிரதமர்
நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில், பயங்கரவாதிகள் குறித்த
தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்காவின், பயங்கரவாதிகள் பற்றிய தகவல் மையம் பராமரித்து வரும் உலகளாவிய பயங்கரவாத வலைப்பின்னல் மற்றும் தரவுகளை பகிர்ந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் மத்திய உள்துறை செயலர் ராஜீவ் மெரிஷி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வெர்மா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

5-நாள்-பயணமாக-இமாச்சலுக்கு-சென்றார்-பிரணாப்
குடியரசுத்தலைவர்
பிரணாப் முகர்ஜி, ஓய்வு எடுப்பதற்காக இமாச் சலப் பிரதேச மாநிலம் மஷோப்ரா நகருக்கு
நேற்று சென்றார்.
முன்னதாக,
சரப்ரா என்ற இடத் தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பிரணாபை, மாநில முதல்வர் வீரபத்ர
சிங், ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத், அமைச்சர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள்
வரவேற்றார்.
அங்கிருந்து
சிம்லா மாவட்டத் தில் உள்ள மஷோப்ராவில் உள்ள குடியரசுத்தலைவரின் இல்லத் துக்கு
தனது மகள் ஷர்மிஸ்தாவுடன் வந்த பிரணாபுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்
பட்டது.
தமிழகம் :
ஆங்கிலோ-இந்திய
உறுப்பினர் நான்சி பதவியேற்றார்
தமிழகத்தின் 15-வது சட்டப் பேரவையின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஆங்கிலோ-இந்திய வழியைச் சேர்ந்த நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸை, 15-வது சட்டப் பேரவையின் நியமன உறுப்பினராக ஆளுநர் ரோசய்யா அண்மையில் நியமித்தார்.
இந்நிலையில், நான்சி பேரவைத் தலைவர் தனபால் முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
20 மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள்: ஜூன் 15 முதல் தேங்காய்
கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
தமிழகத்தில் ஜூன்
15-ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல்
நிலையங்கள் மூலம் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்படும் என முதல்வர்
ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில்
4 லட்சத்து 28 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தென்னை பயிரிடப்படுகிறது. தேசிய அளவில்
தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்திலும், சாகுபடி பரப்பில் 3-ம் இடத்திலும்
உள்ளது. தற்போது சந்தையில் கொப்பரைத் தேங்காய் விலை கிலோ ரூ.50-க்கும் குறைவாக
உள்ளது. இதனால், கொப்பரைத் தேங்காயை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என தென்னை
விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு :
ஒலிம்பிக்-போட்டிக்கு-தமிழக-வீரர்-தகுதி
ரியோ ஒலிம்பிக்
போட்டியில் கலந்து கொள்ள தமிழக ஓட்டப்பந்தய வீரர் மனோஜ் தகுதி பெற்றுள்ளார்.
சமீபத்தில்
ஆசியா ஒசானியா சாம்பியன்ஷிப் போட்டி துபையில் நடைபெற்றது. இதில் 63 நாடு களில்
இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் கலந்து கொண்ட மனோஜ் 200
மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும்
வென்றார்.
இதன்
மூலம் பிரேசிலில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் கலந்து கொள்ள
தகுதி பெற்றுள்ளார்.
சென்னை
திருவான்மியூரை சேர்ந்த மனோஜ் பொறியியல் பட்டதாரி ஆவார். சென்னை யிலுள்ள இந்தியா
ஸ்போர்ட்ஸ் புரோமோசன் அகாடமியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சி பெற்று
வந்துள்ளார். மேலும் வெளிநாட்டு போட்டிகளில் இவர் கலந்து கொள்ள எஸ்.எஸ்.
ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையம் உதவி புரிந்துள்ளது.
பிரெஞ்சு-ஓபன்-கலப்பு-இரட்டையரில்-சானியா-பயஸ்-ஜோடிகள்-இறுதிக்கு-முன்னேற்றம்
பிரெஞ்ச்
ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, லியாண்டர் பயஸ்
ஜோடிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி 4-6, 6-3, 12-10 என்ற செட் கணக்கில் 3-ம் நிலை ஜோடியான பிரான்சின் கிறிஸ்டினா மெடேன்னோவிக், ஹியூஸ் ஹர்பர்ட் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

வணிகம் :
ஜிஎஸ்டி-வரி-ஏற்றுக்கொள்ளக்கூடிய-வகையில்-இருக்கும்-அருண்-ஜேட்லி-கருத்து
வரும்
மழைக்கால கூட்டத்தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்றத் திட்டமிட்டிருக்கிறோம்.
இந்த வரி விகிதம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் என்று மத்திய நிதி
அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டு வாரியம் (டிஐபிபி) ஏற்பாடு செய்திருந்த ``மேக் இன் இந்தியா’’ கருத்தரங்கில் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது.
ஜிஎஸ்டி அமலுக்கு வரும் பட்சத்தில் மற்ற அனைத்து மறைமுகமான வரிகளுக்கும் மாற்றாக இந்த வரி இருக்கும். இதன் மூலம் தேசிய அளவில் ஒரே அளவிலான சந்தையாக இருக்கும். இதன் மூலம் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2 சதவீதம் வரை உயரும். மத்திய நிதி அமைச்சர், நிதித்துறை இணையமைச்சர், மாநில நிதி அமைச்சர்கள் உள்ளடங்கிய ஜிஎஸ்டி குழு இந்த வரி விகிதத்தை பரிந்துரை செய்யும்.

ஏர்டெல் பேமென்ட் பேங்க் சிஇஓ சஷி அரோரா
ஏர்டெல் பேமென்ட்
வங்கியின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சஷி அரோரா நியமனம்
செய்யப்பட்டிருக்கிறார். முன்னதாக நியமனம் செய்யப்பட்ட மணீஷ் கேரா வேறு தொழில்
தொடங்க சென்றுவிட்டதால் அரோரா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
இவர்
26 வருடங்களாக எப்எம்சிஜி, டெலிகாம், மீடியா மற்றும் பேங்கிங் துறைகளில் அனுபவம்
மிக்கவர் என்று பார்தி ஏர்டெல் குழுமத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல்
தெரிவித்தார்.
கடந்த
ஏப்ரல் 11-ம் தேதி ரிசர்வ் வங்கி ஏர்டெல் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியது. இந்த
நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பேமென்ட் வங்கியை தொடங்க
திட்டமிட்டுள்ளது.
முன்னதாக
அரோரா ஏர்டெல் மொபைல் தொழில் பிரிவின் சி.இஓ-வாக (பஞ்சாப், ஹரியாணா, இமாச்சல
பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லி வட்டாரம்). அதற்கு முன்பாக கோடக்
மஹிந்திரா வங்கியில் பணியாற்றியவர்.
No comments:
Post a Comment