Wednesday 1 June 2016

1st June Review in

உலகம் :
ஈரானுடன் இந்தியா ஒப்பந்தம்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பாகிஸ்தான் கவலை
ஈரான், ஆப்கானிஸ்தானுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தால் தங்கள் நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது.
அண்மையில் பிரதமர் மோடி ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது இந்தியா-ஈரான் இடையே சிறப்புமிக்க சாப்ஹார் துறைமுக மேம்பாடு, பயங்கரவாதத் தடுப்பு உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முக்கியமாக, ஈரானில் உள்ள சாப்ஹார் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானை தவிர்த்து விட்டு ஈரான் வழியாக மேலை நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தானுடன் இந்தியா சில ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
மத்திய - மாநில அரசுகள் இடையே விரைவில் மும்மொழிகளில் தகவல் தொடர்பு?
மத்திய மாநில அரசுகள் இடையி லான தொடர்பு மொழி குறித்து அமைக்கப்பட்ட நிபுணர் குழு விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இதில் மும்மொழி திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மாநில அரசுகளுக்கு ஈமெயில் மற்றும் கடிதங்கள் மூலம் உத்தரவு கள் மற்றும் பல்வேறு முக்கியத் தகவல்களை மத்திய அரசு அனுப்பி வருகிறது. இவற்றை குறிப் பிட்ட மொழியில் தான் அனுப்ப வேண்டும் என அரசு உத்தரவு எதுவும் இருப்பதாக தெரிய வில்லை. மேலும் தமிழகம் உள் ளிட்ட சில மாநிலங்களில் நிலவும் இந்தி எதிர்ப்பால் அம்மொழி அடிப் படையிலான ஒரு கொள்கையை மத்திய அரசால் எடுக்க முடியாமல் உள்ளது. தற்போது மத்திய அரசால் மாநிலங்களுக்கு அனுப் பப்படும் தகவல்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளன. சில சமயம், இந்தி பேசும் மாநிலங் களுக்கு மட்டும் இந்தியில் அனுப் பப்படுகிறது. தமிழகம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆங்கிலத்தில் அனுப்பப்படுகிறது. ஆனால் நிதி மற்றும் வருவாய் துறைகளுக்கு மட்டும் நாடு முழுவதிலும் ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்பப்படுகிறது.
சீரற்ற இந்தக் கொள்கையை சீராக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்துள் ளது. 17 உறுப்பினர்கள் கொண்ட இந்தக் குழுவுக்கு டெல்லி ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் கபில் கபூர் தலைவராக உள்ளார். இக்குழு வின் அறிக்கை விரைவில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத் திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்தியா :
யுபிஎஸ்சி உறுப்பினராக பி.எஸ்.பாசி நியமனம்
மத்திய அரசு தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) உறுப்பினராக, டெல்லி முன்னாள் காவல் துறை ஆணையர் பி.எஸ். பாசி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணி தேர்வுகளை நடத்தும் யுபிஎஸ்சி உறுப்பினர் பதவிக்காலம் 5 ஆண்டுகள். டெல்லியில் ஆம் ஆத்மி அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து சர்ச்சைகளில் சிக்கி ஓய்வு பெற்ற காவல் துறை ஆணையர் பி.எஸ்.பாசி (60) யுபிஎஸ்சி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.யுபிஎஸ்சி உறுப்பினராக வரும் 2021 பிப்ரவரி வரை இவர் பொறுப்பில் இருப்பார். இந்த பதவிக்கான வயது உச்ச வரம்பு 65 ஆண்டுகள்.
யுபிஎஸ்சி-யில் தலைவர் தவிர 10 உறுப்பினர்கள் இருப்பர். தீபக் குப்தா தலைவராக உள்ளார். அல்கா சிரோஹி, டேவிட் ஆர் சியம்லியா, மன்பிர் சிங், முன்னாள் கடற்படை துணை தலைவர் டி.கே. தேவன், வினய் மிட்டல், சத்தார் சிங், பேராசிரியர் ஹேம் சந்திரா, அரவிந்த் சக்ஸேனா, பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷி ஆகியோர் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.
தமிழகம் :
தொழிலாளர் மேலாண்மை படிப்புகளுக்கு ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமாகும். இக்கல்வி நிலையம் சார்பில் எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை, தொழிலாளர் நிர்வாகத்தில் ஓராண்டு பகுதி நேர முதுகலை பட்டயப்படிப்பு,. தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டங்களும் என்ற ஓராண்டு வார இறுதி பட்டயப்படிப்பும் நடத்தப்படுகிறது.
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததால், இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்: வழித்தடம் 1-ஐ நீட்டிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டிருக்கும் வழித்தடம் 1-ஐ நீட்டிக்கும் திட்ட முன்வடிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வழித்தடம் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை அமைக்கப்படும். இந்த வழித்தடம் சுமார் 9.051 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்படும். இதன் மொத்த செலவு ரூ.3770 கோடியாகும்.
மத்திய அரசும் தமிழக அரசும் இணைந்து ஏற்கெனவே அமைத்துள்ள சிறப்பு நிறுவனமான சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மூலம் இத்திட்டமும் செயல்படுத்தப்படும்.
இந்த நிறுவனத்தின் பங்கில் 50 சதவீதம் மத்திய அரசுக்கும் 50 சதவீதம் மாநில அரசுக்கும் சொந்தமாகும். இந்த வழித்தடத்தை 2018-குள் அமைத்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வழித்தடம் அமைப்பதன் மூலம் மக்கள், குறிப்பாக தொழிற்சாலைகளில் வேலை புரியும் மக்கள் நகரத்தின் மத்திய பகுதிக்கு எளிதில் வந்து செல்ல முடியும் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு :
ஐசிசி தரவரிசையில் ஆண்டர்சன் முதலிடம்
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடம் பிடித்தார். இந்தியாவின் அஸ்வின் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சன் முதலிடம் பிடிப்பது இதுவே முதன் முறையாகும். அவர் 884 புள்ளிகள் பெற்றுள்ளார். அஸ்வின் 871 புள்ளிகளுடன் அதே இடத்தில் உள்ளார். ரவீந்திர ஜடேஜா 789 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆண்டர்சன், இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் இரு இன்னிங்ஸையும் சேர்த்து 8 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவர் தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து வீரர்களில் இதற்கு முன்னர் 1980-ல் இயன் போத்தம், 2004-ல் ஸ்டீவ் ஹார்மிசன், 2016-ம் ஆண்டு தொடக்கத்தில் ஸ்டூவர்ட் பிராடு ஆகியோர் முதல் இடங்களை பிடித்துள்ளனர். இந்த வரிசையில் ஆண்டர்சன் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் 4-வது இங்கிலாந்து வீரர் ஆவார்.
பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-வது இடத்திலும், நியூஸிலாந்தின் வில்லியம்சன் 3-வது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் அஸ்வின் நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துள்ளார்.
வணிகம் :
பிஎப் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுத்தால் டிடிஎஸ் கிடையாது
ஐந்து ஆண்டுகளுக்கு உட்பட்ட வருங்கால வைப்பு நிதி (பிஎப்) தொகையை பணியாளர்கள் திரும்ப பெறும் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு உட்பட்ட பிஎப் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரம் வரையிலான வைப்பு நிதி தொகையைத் திரும்ப பெற டிடிஎஸ் செலுத்த தேவையில்லை. இந்த நடைமுறை இன்று (ஜூன் 1) முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
ஏற்கெனவே இருந்த விதிமுறையில் பிஎப் கணக்கிலிருந்து வெளியே எடுக்கும் பணம் ரூ.30 ஆயிரம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.
நிதிச்சட்டம் 2016 பிரிவு 192A ன் படி, பிஎப் கணக்கிலிருந்து வெளியே எடுக்கும் பணம் ரூ.30 ஆயிரம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்ற விதி இதுவரை நடைமுறையில் இருந்தது. இந்த வரம்பு தற்போது ரூ.50 ஆயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று (2016 ஜூன் 01) முதல் நடைமுறைக்கு வருகிறது.
பணக்கார-நாடுகள்-பட்டியல்-7வது-இடத்தில்-இந்தியா
உலக அளவில் பணக்கார 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் சராசரியாக இந்தியர்கள் மிகவும் வறுமையில் உள்ளதாகவும் ``நியூ வேர்ல்டு வெல்த்’’ என்கிற ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் அதிகம் செல்வம் படைத்தவர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 5,500 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்த சொத்து மதிப்பு மிகவும் அதிகம் என்றும் அந்த குறிப்பிட்டுள்ள அந்த ஆய்வு, இந்தியாவில் தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் பார்த்தால் சராசரியாக இந்தியர்கள் மிகவும் வறுமையில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
``நியூ வேர்ல்டு வெல்த்’’ அறிக் கையின்படி, உலக அளவில் பணக்கார பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியா 7 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் அதிகம் செல்வம் படைத்தவர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 48,700 பில்லியன் டாலர்களாக உள்ளது.

No comments: