Monday 24 October 2016

23rd & 24th October Review

உலகம் :

இந்தியாசீனாவின் காற்று மாசு அளவு அதிர்ச்சிக்குரியதுயுஎஸ்விண்வெளி வீரர் கெல்லி
இந்தியாசீனா நாடுகளில் நிலவும் காற்று மாசுவின் அளவு அதிர்ச்சியளிப்பதாகஅமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி தெரிவித்துள்ளார்.



வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர்ஒபாமாவுடனான சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
விண்வெளியில் மிக அதிக நாட்கள் தங்கியிருந்த பெருமை கொண்ட ஸ்காட்கெல்லி வெள்ளிக்கிழமை அதிபர் ஒபாமாவை அவரது அலுவலகத்தில்சந்தித்தார்.
ஐஎன்எஸ் விராட்: உலகின் மிகப் பழமையான போர்க்கப்பல்
உலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி போர் கப்பலான ஐஎன்எஸ் விராட்,இந்திய கடற்படை சேவையில் இருந்து விரைவில் விடைபெறுகிறது.
இந்திய கடற்படையில் 55 ஆண்டுகளாக சேவையாற்றிய ஐஎன்எஸ் விராட்விமானம் தாங்கி போர் கப்பல் இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெறவுள்ளது.இதற்காக கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இக்கப்பல் நேற்றுமூன்று இழுவை கப்பல்கள் மூலம்மும்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.முன்னதாக இக்கப்பலுக்கு கொச்சியை சேர்ந்த கடற்படை அதிகாரிகளும்,பொதுமக்களும் பிரியாவிடை அளித்தனர்.
கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் விராட் ஓய்வு பெற்றதும்கப்பலை ஆந்திரஅரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க அம்மாநிலத் திடம் ஒப்படைக்க கடற்படைசம்மதம் தெரிவித்துள்ளதுவிசாகப் பட்டினம் துறைமுகத்தில் நிறுத்திஇக்கப்பல்மூலம் சுற்றுலாவை மேம்படுத்த ஆந்திர அரசு திட்ட மிட்டிருப்பதாககூறப்படுகிறது.
இந்தியா :
.பிமுதல்வர் நடவடிக்கைஷிவ்பால் யாதவ் உட்பட 4 அமைச்சர்கள் நீக்கம்
உத்தரப் பிரதேச அமைச்சரவை யில் ஷிவ்பால் யாதவ் உட்பட 4 அமைச்சர்களைமுதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று நீக்கினார்இதற்குப் பதிலடியாகஅகிலேஷின் ஆதரவாளர் ராம் கோபால் யாதவ் எம்.பிசமாஜ்வாதி கட்சியில்இருந்து நீக்கப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பாஷிவ்பால் யாதவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறதுஇந்நிலையில் அகிலேஷ்தலைமையில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் லக்னோவில் நேற்று நடந்ததுஇதில்ஷிவ்பாலும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டத்தில் ஷிவ்பால் யாதவ்அவரது ஆதரவாளர்கள் சதாப் பாத்திமா,நராத் ராய்ஓம்பிரகாஷ் சிங் ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கமுடிவு செய்யப்பட்டதுஇதற்கான அறிவிப்பை அகிலேஷ் யாதவ் வெளியிட்டார்.
மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு .பிஉட்பட 5 மாநிலங்களுக்குபிப்ரவரிமார்ச்சில் தேர்தல்
மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்த பிறகுஉத்தரப் பிரதேசம்உட்பட 5 மாநிலங்களுக்கு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மே மாதம்27-ம் தேதி முடிவடைகிறதுபஞ்சாப்கோவாமணிப்பூர் ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி முடிகிறது.உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் மார்ச் 27-ம் தேதிமுடிகிறதுஇதையடுத்து இந்த 5 மாநிலங்களுக்கும் அடுத்த ஆண்டுதொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டது.
தமிழ்நாடு : 
காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க .பன்னீர்செல்வம் தலைமையில்அமைச்சரவை இன்று மீண்டும் கூடுகிறது
காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம்,நிதியமைச்சர் .பன்னீர் செல்வம் தலைமையில் இன்று மாலை 5 மணிக்குநடக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுகடந்த ஒருமாதமாக சிகிச்சை பெற்று வருகிறார்முதல்வர் உடல்நலம் பெற்று பணிக்குதிரும்பும் வரை அவர் கவனித்து வந்த உள்துறைபொதுத்துறை உள்ளிட்டதுறைகள் நிதியமைச்சர் .பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளன.மேலும்அமைச் சரவை கூட்டங்களுக்கும் .பன்னீர் செல்வமேதலைமையேற்பார் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த 19-ம் தேதி .பன்னீர்செல்வம் தலைமையில்அமைச்சரவைக் கூட்டம் நடந்ததுஇதில்உணவு பாதுகாப்புச் சட்டம்உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நிய மனம் தொடர்பான முக்கிய முடிவு கள்எடுக்கப்பட்டனசில திட்டங் களுக்கு ஒப்புதலும் வழங்கப் பட்டன.
தமிழகத்தில் முழுநேர ஆளுநராகிறார் வித்யாசாகர் ராவ்? - விரைவில்அறிவிப்பு வெளியாகும் என தகவல்
மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ்தமிழகத்துக்கு முழுநேரஆளுநராக நியமிக்கப் படலாம் என தெரிகிறது.
தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யா பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 31-ம்தேதி முடிவடைந்ததுஇதைத் தொடர்ந்து தமிழக ஆளுநராக பலரது பெயர்அடிப்பட்டாலும்புதியவர் நியமிக்கப்படும்வரைமகாராஷ்டிர ஆளுநர்வித்யாசாகர் ராவிடம் கூடுதல் பொறுப்பாக தமிழகம் வழங்கப்பட்டதுஅவர்தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.
தற்போது இவரையே தமிழகத் துக்கு முழுநேர ஆளுநராக நியமிக்க மத்திய அரசுமுடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறதுமுன்னதாககுஜராத் முதல்வராக இருந்தஆனந்தி பென் படேல் தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்பரவியதுஅதன் பின் தமிழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த பாஜ மூத்த தலைவர்டி.எச்.சங்கரமூர்த்தியை ஆளுநராக நியமிக்க முயற்சி நடந்தது.
ஸ்லெட் தேர்வு முடிவு இன்று வெளியீடு
57 ஆயிரம் முதுகலை பட்டதாரி கள் எழுதியுள்ள ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு முடிவுஇன்று (திங்கள்கிழமைவெளியிடப்படும் என்று கொடைக்கானல் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கீ ஆன்சர் வெளியாகி 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் ‘ஸ்லெட்’ தேர்வு முடிவுகள்வெளியிடப்படாமல் இருந்து வந்ததுஇந்த நிலையில், ‘ஸ்லெட்’ தேர்வுமுடிவுகள் 24-ம் தேதி (திங்கள்கிழமைவெளி யிடப்படும் என்று அன்னை தெரசாபல்கலைக்கழகம் அறிவித் துள்ளதுஇது தொடர்பாக அந்த பல்கலைக்கழகம்சார்பில் ‘ஸ்லெட்’ தேர்வுக்குழு உறுப்பினர் -செயலர் நேற்று வெளியிட்ட ஓர்அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஸ்லெட்’ தகுதித் தேர்வு முடிவுகள் 24-ம் தேதி (திங்கள் கிழமைகாலை 10மணிக்கு www.setresult2016.in மற்றும் www.motherteresawomenuniv.ac.in ஆகியஇணையதளங்களில் வெளியிடப்படும்.
ஸ்லெட்’ தேர்வு நடந்து 8 மாதங்களுக்குப் பிறகு முடிவுகள் வெளியிடப்படஉள்ளன என்பது குறிப்பிடத்தக்கதுசிபிஎஸ்இ ‘நெட்’ தகுதித் தேர்வு ஆண் டுக்கு 2தடவை (ஜூன்டிசம்பர்நடத்தப்படுகின்றனஇதேபோன்று ‘ஸ்லெட்’ தேர்வும்திட்டமிட்டபடி ஆண்டுக்கு 2 தடவை நடத்தப் படுவதுடன் தேர்வு முடிவுகளை யும்காலதாமதம் செய்யாமல் வெளியிட வேண்டும் என்று பட்டதாரிகள்எதிர்பார்க்கிறார்கள்.
விளையாட்டு :
ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
மலேசியாவில் நடைபெற்று வரும் 4-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆடவர்ஹாக்கி லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில்பாகிஸ்தானை வீழ்த்தியது.
குவான்டன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்குஆரம்பத்திலேயே பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத் ததுஆனால் இந்தியஅணியின் கோல்கீப்பர் ஜேஷ் சாமர்த்திய மாக செயல்பட்டு பாகிஸ்தான்அணியை கோல் அடிக்கவிடாமல் தடுத்தார்.
22-வது நிமிடத்தில் இந்தியா முதல் கோலை அடித்ததுபிரதீப் மோர் அற்புதமாகபீல்டு கோல் அடிக்க முதல் பாதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது. 13 போட்டிகளில் விளையாடி உள்ள பிரதீப் மோருக்கு சர்வதேச போட்டிகளில்இது முதல் கோலாகவும் அமைந்தது.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே பாகிஸ்தான்பதிலடி கொடுத்தது. 31-வது நிமிடத்தில் முகமது ரிஸ் வான் கோல் அடித்து 1-1என சம நிலையை உருவாக்கினார்.
அடுத்த 8-வது நிமிடத்தில் முகமது இர்பான் பீல்டு கோல் அடிக்க பாகிஸ்தான் 2-1என முன்னிலை பெற்றது.
இதனால் இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட தொடங்கினர். 43-வதுநிமிடத்தில் இந்தியாவுக்கு முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்ததுஇதைபயன்படுத்தி ருபிந்தர் பால் சிங் கோல் அடிக்க ஆட்டம் 2-2 என சமநிலையைஎட்டியது.
உலகக் கோப்பை கபடியில் இந்தியா சாம்பியன்
இந்தியாதாய்லாந்துஈரான் உள்ளிட்ட 12 நாடுகள் கலந்து கொண்ட உலகக்கோப்பை கபடி போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.இதன் இறுதிப்போட்டியில் நேற்று இந்தியா-ஈரான் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.முதல் பாதியில் ஈரான் ஆதிக்கம் செலுத்தியதுமுதல் பாதியில் அந்த அணி 18-13என்ற புள்ளி கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இந்திய அணியினர் ஆட்டத்தின் கடைசி பகுதியில் ஆக்ரோஷமாகவிளையாடினர். 10 நிமிடங்கள் மீதமிருந்த நிலையில் 25-21 என இந்தியாமுன்னிலை வகித்ததுமுடிவில் இந்திய அணி 38-29 என்ற கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
வர்த்தகம் :
விரைவில் ரூ.2000 நோட்டு புழக்கத்துக்கு வர வாய்ப்பு
ரூ.2000 நோட்டு விரைவில் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் தற்போது ரூ.10, 20, 50, 100, 500, 1000 மதிப்பிலான நோட்டுகள்மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்விரைவில் ரூ.2000 நோட்டு புழக்கத்துக்கு கொண்டுவரப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.2000 மதிப்பிலான நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் மைசூருவில்தொடங்கிவிட்டதாகவும்விரைவில் இதை மக்கள் மத்தியில் புழக்கத்தில்விடரிசர்வ் வங்கி ஆயத்தப்பணிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்வெளியாகியுள்ளது.
கருப்புப் பண பதுக்கலை கட்டுப்படுத்த ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள ரூ.500,ரூ.1000 நோட்டுகள் அச்சிடப்படுவதை தடுக்க வேண்டும் என ஒருசிலதரப்பிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலையில் ரூ.2000 மதிப்பிலானநோட்டு அச்சடிக்கப்பட்டு புழக்கத்துக்கு தயாராகியிருக்கிறதுஇது பல்வேறுவிவாதங்களை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
17 சென்செக்ஸ் பங்குகளில் அந்நிய முதலீடு உயர்வு
கடந்த காலாண்டில் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங் களில் 17நிறுவன பங்குகளில் அந்நிய முதலீடு உயர்ந்துள்ளதுஅந்நிய நிறுவனமுதலீட்டாளர்கள் இந்த பங்குகளில் ரூ.34,000 கோடி அளவுக்கு முதலீடுசெய்திருக்கின்றனர்மாறாக 12 நிறுவனங்களில் இருந்து அந்நிய முதலீடுவெளியேறி இருக்கிறதுஒரு நிறுவனத்தின் தகவல் கிடைக்கவில்லை.
இந்த காலாண்டில் (ஜூன் செப்டம்பர்ஆக்ஸிஸ் வங்கியில் அந்நிய முதலீடுஅதிகரித்திருக்கிறது. 4.94 சதவீதம் அந்நிய முதலீடு உயர்ந்திருக்கிறதுஜூன்காலாண்டு இறுதியில் 45.81 சதவீதமாக இருந்த அந்நிய முதலீட்டாளர் பங்குஇப்போது 50.75 சதவீதமாக இருக்கிறது.
அதேபோல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 8.24 சதவீதமாக இருந்தஅந்நிய முதலீட்டாளர் பங்குசெப்டம்பர் இறுதியில் 12.86 சதவீதமாகஉயர்ந்திருக்கிறதுதற்போதைய விலை அடிப்படையில் ரூ.33,900 கோடி முதலீடுசெய்திருக்கிறார்கள்அதேபோல ரூ.6,180 கோடி அளவுக்கு விற்றிருக்கின்றன.

No comments: