Thursday 20 October 2016

Daily Current Affairs For Competitive Exam - 20th October

உலகம் :
விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு 3 வீரர்களுடன் சோயுஸ் பயணம்
ரஷ்யா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 3 வீரர்களுடன், கஜகஸ்தானில் இருந்து விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு சோயுஸ் விண்கலம் நேற்று புறப்பட்டது.


ரஷ்யாவின் ராஸ்காஸ்மாஸ் விண்வெளி வீரர்களான செர்கி ரைஸிகோவ் மற்றும் ஆண்ட்ரே பொரிசென்கோ, அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரரான ஷேன் கிம்ப்ரோ ஆகிய 3 பேரும், கஜகஸ் தானில் உள்ள பைகானூர் ஏவு தளத் தில் இருந்து, சோயுஸ் எம்எஸ்-02 விண்கலம் மூலம் நேற்று புறப் பட்டனர். கஜகஸ்தானின் உள்ளூர் நேரப்படி, பிற்பகல் 2.05 மணிக்கு சோயுஸ் விண்கலம் புறப்பட்டது. விண்ணில், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை, அடுத்த 2 நாட்களில் இந்த விண்கலம் சென்றடையும்.
கடந்த செப்டம்பர் 23-ம் தேதியே இப்பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புறப்பாடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பழுது சரி செய்யப்பட்டதையடுத்து, விண்கலம் நேற்று புறப்பட்டுச் சென்றது.
கிம்ப்ரோ, ரைஸிகோவ் மற்றும் பொரிசென்கோ ஆகிய 3 வீரர்களும், 4 மாதங்கள் விண்வெளி நிலையத் தில் தங்கியிருந்து பணிகளை மேற் கொள்வார்கள். வரும் பிப்ரவரி மாதம் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள்.
இந்தியா :
பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை வலுப்படுத்த முடிவு: இந்தியா, மியான்மர் இடையே 3 ஒப்பந்தம்
பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா வும் மியான்மரும் முடிவு செய் துள்ளன.
மியான்மர் அரசு ஆலோசகரும் வெளியுறவு அமைச்சருமான ஆங் சான் சூகி, கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றார். பிறகு தனது 3 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
பயணத்தின் இறுதி நாளான நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இதையடுத்து மோடி மற்றும் சூகி தலைமையில் இரு நாட்டுப் பிரதிநிதிகள் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இந்தப் பேச்சு வார்த்தையில், பாதுகாப்பு, வர்த்தகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, வேளாண்மை, புதுப்பிக் கத்தக்க எரிசக்தி, சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் உறவு களை மேம்படுத்த முடிவு செய்தன.
மேலும் மின்சாரம், வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் 3 உடன்பாடுகளில் கையெழுத்திட்டன.
பிரதமர் மோடியுடன் ஆங் சான் சூச்சி சந்திப்பு
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆங் சான் சூச்சி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் வெளியிட்ட தகவலில், ''கிழக்கில் இருந்து வந்த நண்பரும், தோழமையுமான மியான்மர் வெளியுறவு அமைச்சர் ஆங் சான் சூச்சியை, ஹைதராபாத் ஹவுஸில் பிரதமர் வரவேற்றார்'' என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது மூன்று நாள் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆங் சான் சூச்சி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் சந்தித்தார்.
மியான்மரில் கடந்த மார்ச் மாதம் தமது என்.எல்.டி. கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின், ஆங் சான் சூச்சி இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக, கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் அவர் பங்கேற்றார்.
தமிழ்நாடு : 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.28-க்குள் தொடங்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதிக்குள் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:
தென்மேற்குப் பருவமழை தற்போது தெலங்கானாவில் விலகி விட்டது. தமிழ்நாடு, கேரளா வில் மட்டும் இப்பருவ மழை விலக்கிக் கொள்ளப் பட வேண்டும். அதையடுத்து வட கிழக்கு பருவமழை குறித்த அறிவிப்பு வெளியாகும்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் வடகிழக்கு பருவ மழைக் காலம் ஆகும். இந்த கால கட்டத்தில் இயல்பாக 442 மில்லி மீட்டர் மழை பெய்யும். சில ஆண்டுகள் இப்பருவமழை அக்டோபர் 10 ம் தேதி தொடங்கி யுள்ளது. பல ஆண்டுகள் அக்டோபர் 20-ம் தேதிக்கு பிறகு தொடங்கியிருக்கிறது. பொதுவாக 19, 20 தேதியில் தொடங்க வேண்டும். இந்தாண்டு காற்றின் போக்கில் மாற்றம் ஏற்படாததால் வடகிழக்குப் பருவமழை தள்ளிப்போகிறது.
மின்வாரியம் நடத்திய 750 பணி இடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு
தமிழ்நாடு மின்வாரியத்தில் காலி யாக உள்ள 750 பதவிகளுக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக இருக்கும் 750 பல்வேறு பதவிகளுக்கு அண்ணா பல்கலை கழகம் வாயிலாக கடந்த ஜூன் 19 மற்றும் ஆகஸ்ட் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் முடிவு நேற்று (19-ம் தேதி) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அவர்களுடைய மதிப் பெண்களை www.tangedcodirect recruitment.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள இடைக்கால தடை உத்தரவு நீக்கம் செய்யப்பட்ட பிறகு 525 (500 மின்னியல் + 25 இயந்திரவியல்) தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் 900 கள உதவியாளர்கள் பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப் படும்.
மதுரையில் ரூ.5.3 கோடியில் வேளாண் மகத்துவ மையம்: உலகளாவிய உயர்தொழில் நுட்ப ஆராய்ச்சிகளுக்கு வாய்ப்பு
மதுரை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரியில் தென் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் விஞ்ஞானிகள் உலகளாவிய புதிய வேளாண் ஆராய்ச்சிகளில் ஈடுபட ரூ.5.3 கோடியில் வேளாண் மகத்துவ மையம் (Centre of Innovation) அமைக்கப்படுகிறது.
காய்கறிகள், தானியங்கள், பூக்கள், பழங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய ரகங்கள் கண்டுபிடிக்கவும், பாரம்பரிய ரகங்களில் இருக்கும் சிறப்பு களை ஆவணப்படுத்தவும் நாடு முழுவதும் வெளிநாட்டு உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய வேளாண் மகத்துவ மையங்கள் அமைக்கப்படுகின்றன.
மதுரை ஒத்தக்கடை தமிழ்நாடு வேளாண்மை பல்லைக்கழக கல்லூரியில் தென் தமிழக விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேளாண் மகத்துவ மையம் அமைக்கும் பணி தொடங் கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.5.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகள் வரும் பிப்ரவரில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாட்டு :
ஹாக்கியில் இந்தியா இன்று மோதல்
ஆடவருக்கான 4-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் மலேசியாவின் குவான்டன் நகரில் இன்று தொடங்குகிறது.
வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், கொரியா, சீனா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் 29-ம் தேதியும் இறுதிப் போட்டி 30-ம் தேதியும் நடைபெறுகிறது.
இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று ஜப்பானை எதிர்கொள்கிறது. 22-ம் தேதி கொரியாவுடனும், 23-ம் தேதி பாகிஸ்தானுடனும், 25-ம் தேதி சீனாவுடனும், கடைசி லீக் ஆட்டத் தில் 26-ம் தேதி மலேசியாவுடன் இந்திய அணி மோதுகிறது.
2-வது சுற்றில் அஜெய் ஜெயராம்
டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஜெய் ஜெயராம் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஓடென்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் சாய் பிரணீத் 17-21, 21-19, 15-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் பூன்சக்கிடம் வீழ்ந்தார். மற்றொரு முன்னணி இந்திய வீரரான அஜெய் ஜெயராம் 21-15, 21-16 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் போன்ஷாக் பொன்சானாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
வர்த்தகம் :
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விதிகளை மீறியதால் ரூ.10.80 கோடி அபராதம்
செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு அளவு கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.10.80 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.
கடந்த ஜுலை 31-ம் தேதி அன்று மத்திய தொலைத்தொடர்பு துறையினர் 3.19 லட்சம் தொலைக் கோபுர நிலையங்களை சோதனை யிட்டனர். இதில் 205 தொலைக் கோபுர நிலையங்களில் கதிரியக்க விதிகள் மீறப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இந்த தொலைக் கோபுரங்களுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.10.80 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இபிபோவை கையகப்படுத்தியது மேக் மை டிரிப்
ஆன்லைன் மூலம் பயண சேவைகளை வழங்கிவரும் மேக் மை டிரிப் நிறுவனம் இபிபோ குழும நிறுவனத்தின் இந்திய வர்த்தகச் செயல்பாடுகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் பயண சேவைகளை வழங்கும் நிறுவனமாக மேக் மை டிரிப் உருவாகியுள்ளது. இந்த கையகப்படுத்துதல் மதிப்பு 180 கோடி டாலராக இருக்கும் என மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இந்த இணைப்பு நிறுவனத்தில் 40 சதவீத பங்குகள் நாஸ்பர்ஸ் மற்றும் டென்செண்ட் ஆகிய நிறுவனங்களிடம் இருக்கும். மீதமுள்ள 60 சதவீத பங்குகள் மேக் மை டிரிப் பங்குதாரர்களிடம் இருக்கும். நாஸ்பர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமே இபிபோ.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இபிபோ குழும நிறுவனங்களான கோஇபிபோ, ரெட்பஸ், ரைடு, ரைட்ஸ்டே ஆகியவை மேக் மை டிரிப் நிறுவனத்தின் கீழ் வரும்.

No comments: