Monday 10 October 2016

Daily Current Affairs For Competitive Exam - 10th October

உலகம் :

மேத்யூ’ புயலுக்கு ஹைதியில் பலி எண்ணிக்கை 900-ஆக அதிகரிப்பு

 மேத்யூ என்ற பயங்கர புயல் தாக்கிய ஹைதி நாட்டில் சுமார் 900 பேர்பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறதுமேலும் ஆயிரக்கணக்கானோர்தங்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர்.
ஹைதியை அடுத்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தென் கிழக்குப்பகுதியைத் தாக்கிய மேத்யூ புயலுக்கு அப்பகுதியில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் புளோரிடாவை ஓரளவுக்கு விட்டு வைத்த மேத்யூ அடுத்ததாககடற்கரை நகரங்களான சவனாஜார்ஜியாசார்லஸ்டன்சவுத் கரோலினா,விமிங்டன் மற்றும் வடக்கு கரோலினா ஆகியவற்றை அச்சுறுத்த நகர்ந்துள்ளது.
ஏழை நாடான ஹைதி மேத்யூவின் சீற்றத்துக்கு சின்னாபின்னமாகியுள்ளது.அதிகாரபூர்வ பலி எண்ணிக்கை 877 ஆக இருக்கும் போதுபுயலால் பாதிக்கப்பட்டுதொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் செய்திகளில் பலிஎண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
புளோரிடாஜார்ஜியாதெற்கு மற்றும் வடக்கு கரோலினா பகுதிகளில் மேத்யூபுயல் பாதிப்பினால் பெரிய அளவில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள்
அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைசேர்ந்த ஐந்து தொழிலதிபர்கள் இந்த ஆண்டு இடம்பிடித்துள்ளனர்.
பில்கேட்ஸ் முதலிடம் :
அமெரிக்காவின் 400 பெரும் பணக்காரர்கள் பட்டியலை 'போர்ப்ஸ்பத்திரிகைவெளியிட்டுள்ளதுஇந்த பட்டியலில் தொடர்ந்து 23-வது முறையாகமைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார். 81 பில்லியன்டாலர் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரராக இந்த சிறப்பிடத்தை பில்கேட்ஸ் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இந்திய தொழிலதிபர்கள் :
இந்த பட்டியலில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினரானசிம்போனி டெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனர் ரோமேஷ் வத்வானி,சின்ட்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனரான பாரத் நீர்ஜா தேசாய்இண்டிகோவிமான நிறுவன அதிபரான ராகேஷ் கங்வால்தொழிலதிபர் ஜான் கபூர்சிலிகான்வேல்லி ஏஞ்சல் முதலீட்டு நிறுவனத்தின் அதிபரான கவிதார்க் ராம் ஸ்ரீராம்ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சொத்து மதிப்பு :
சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளுடன் ரோமேஷ் வத்வானி இந்தபட்டியலில் 222-வது இடத்தில் உள்ளார். 2.5 பில்லியன் டாலர் மதிப்புள்ளசொத்துகளுடன் பாரத் நீர்ஜா தேசாய் 274-வது இடத்தில் உள்ளார். 2.2 டாலர்மதிப்புள்ள சொத்துகளுடன் ராகேஷ் கங்வால் 321-வது இடத்தில் உள்ளார். 2.1பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளுடன் ஜான் கபூர் 335-வது இடத்திலும், 1.9பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளுடன் கவிதார்க் ராம் ஸ்ரீராம் 361-வதுஇடத்திலும் உள்ளனர்.
இந்தியா :
பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றியமைப்பு: தலைவராகபி.எஸ்.ராகவன் நியமனம்
தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம்பி.எஸ்.ராகவன் தலை மையில் மாற்றிஅமைக்கப் பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (என்எஸ்ஏபிகடந்த 1998-ம் ஆண்டுஅமைக்கப்பட்டதுஅப்போது வாரியத்தின் ஒருங் கிணைப்பாளராக கே.சுப்பிரமணியம் பொறுப்பு வகித்தார்அதன்பிறகு வாரிய உறுப்பினர் களின் எண்ணிக்கைபடிப்படியாக அதிகரிக்கப்பட்டதுசரண் என்பவர் தலைமையில் 14 உறுப்பினர்களுடன் தேசிய பாதுகாப்பு ஆலோ சனை வாரியம் செயல்பட்டதுதற்போதுமத்தியில் பாஜக தலைமையில் பதவியேற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிஅரசுஎன்எஸ்ஏபி.யின் உறுப்பினர் எண்ணிக்கையை தலைவர் உட்பட 4 ஆககுறைத்துவிட்டது.
இந்நிலையில்முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் ஷியாம் சரண்தலைமையில் இயங்கி வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின்பதவிக் காலம் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைந்துள்ளது.அதற்குப் பதில் இப்போது ராகவன் தலைமையில் புதிய வாரியம்அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
2011-ல் பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன்ஜிஞ்சர்’ தாக்குதல்: ரகசிய ஆவணங்களில் தகவல்
கடந்த 2011-ம் ஆண்டிலும் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலுக்குப் பதிலடியாக அந்தநாட்டு எல்லைக்குள் புகுந்த இந்திய வீரர்கள் ‘ஆபரேஷன் ஜிஞ்சர்’ தாக்குதலைநடத்தி உள்ளனர்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் வீரர்கள் காட்டுமிராண்டித்தனமாக செயல்பட்டு 2 இந்திய வீரர்களின் தலையைக் கொய்துசென்றனர்இதற்கு பழிக்குப் பழியாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள்புகுந்து 3 பாகிஸ்தான் வீரர்களின் தலையை வெட்டி எடுத்து வந்தனர்.
ராணுவ தாக்குதலுக்கு அத்தாட்சியாக பாகிஸ்தான் வீரர்களின் தலைகள்புகைப்படம் எடுக்கப்பட்டனபின்னர் உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி அவைபுதைக்கப்பட்டனஇரண்டு நாட்களுக்குப் பிறகு மூத்த தளபதி ஒருவர்பாகிஸ்தான் வீரர்களின் தலைகள் குறித்து கேட்டார்அவை புதைக்கப்பட்டிருப்பது தெரிந்ததும் அவர் கோப மடைந்தார்அவரது உத்தரவுப்படி அந்ததலைகள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு எரிக்கப்பட்டனஅவற்றின் சாம்பல்நதியில் கரைக்கப்பட்டதுஇதன்மூலம் மரபணு தடயம் கிடைக்காத வகையில்அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டன.
தமிழ்நாடு : 
இன்று (அக்.10) உலக மன நல தினம்: மன நலத்தை பேணுவதற்கு முதலுதவிசிகிச்சை அவசியம்
கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை மக்களை அச்சுறுத்திய போலியோ,டெங்குமலேரியாகாசநோய்ரத்தசோகை நோய் களைக் கட்டுப்படுத்தியதில்அந் நோய்களுக்கான விழிப்புணர்வும்முதலுதவி சிகிச்சையும் முக்கிய காரணம்.
ஆனால்மனிதன் தோன்றிய காலம் முதலே பீடித்திருக்கும் மன நோய்,இத்தனை காலமாகியும்மருத்துவ வசதிகள் எவ்வளவோமுன்னேற்றமடைந்தும் இன்னமும்அதே அச்சமும்விழிப்புணர்வும் இல்லாதநிலையுமே இருக்கிறது.
மன நல சிகிச்சைக்கு நோயாளி கள் விருப்பப்பட்டால் மட்டுமேமருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் நிலை இருக்கிறதுஆரம்பக் கட் டத்திலேயேசிகிச்சைக்கு வராமல் நோய் முற்றிய நிலையில் சிகிச் சைக்கு வருவதால் மனநோய் தீர்க்க முடியாததாகவும்மன நோயாளிகள் அபாயகரமானவர்களாகவும்சமூகத்தில் சித்தரிக்கப்பட்டுள் ளனர்.
அதனால்வீட்டில் வைத்து பரா மரிக்க முடியாமல் மன நோயாளி களைசாலைகளிலும்கோயில்களி லும் உறவினர்களே விட்டுச் செல் லும் பரிதாபநிலை தொடர்கிறது.
அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில்ஹால் டிக்கெட்: எழுத்துத்தேர்வு அக். 22-ல் நடக்கிறது
தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் மற்றும்பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளில் (ஆங்கிலம்கணிதம்இயற்பியல்,வேதியியல்காலியாகவுள்ள 192 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நேரடிநியமன முறையில் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளனஇதற்கானஎழுத்துத்தேர்வு அக் டோபர் 22-ம் தேதி சென்னைதிருவள்ளூர்காஞ்சிபுரம்உட்பட 11 மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில்தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு தேர்வுக்கூடஅனு மதிச்சீட்டு (ஹால்டிக்கெட்ஆசிரியர் தேர்வு வாரியத்தின்இணையதளத்தில் (www.trb.tn.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர் அல்லது விண்ணப்ப எண்பிறந்த தேதிஆகியவற்றை குறிப்பிட்டு ஆன்லைனில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டைபதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின்உறுப்பினர்-செயலர் உமா அறிவித்துள்ளார்.
மதுரை இளைஞரின் குறும்படம்: இந்திய-ரஷ்ய திரைப்பட விழாவுக்கு தேர்வு
கடிதம் எழுதுவதை மறந்த இளைய சமுதாயத்தை பற்றி மதுரை இளைஞர்இயக்கிய ‘கடுதாசி’ குறும்படம்சென்னையில் வரும் 28-ம் தேதி நடைபெறும்இந்திய-ரஷ்ய திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.
உறவுகளின் அன்பையும்நேசத்தையும் சுமந்து வந்த கடிதங்கள்கடந்தகாலத்தில் தபால் ஊழியர் வடிவில் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளைஏற்படுத்தியதுஎத்தனை தொழில்நுட்பக் கருவிகள் தகவல் ஊடகமாக வந்தாலும்எழுத்துக்களைபோல் உயிரும்உணர்வும் எதற்கும் இல்லை என்பதை பற்றிகடுதாசி’ என்ற குறும்படம் விவரிக்கிறது.
இந்த படத்தை மதுரையைச் சேர்ந்த சந்தோஷ் மருது (23) இயக்கியுள்ளார்பி..மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்த இவர்கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே,குறும்படம் தயாரிப்பில் நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட்டார். ‘கடுதாசி’ இவர்இயக்கிய மூன்றாவது குறும்படம்தற்போது இவரது ‘கடுதாசி’ சென்னையில்வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள இந்திய-ரஷ்ய திரைப்பட விழாவுக்கு தேர்வாகிஉள்ளதுஇவரது குறும்படத்துடன் மேலும் இரண்டு குறும்படங்கள் இந்தவிழாவுக்கு தேர்வாகியுள்ளனஇதில் ‘கடுதாசி’ குறும்படம் 2-வது இடத்தைபெற்றுள்ளது.
விளையாட்டு :
ஆஸ்திரேலியா மீண்டும் தோல்விதென் ஆப்பிரிக்கா 4-0 ஆதிக்கம்
போர்ட் எலிசபத்தில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியிலும்ஆஸ்திரேலியாவை வென்று தென் ஆப்பிரிக்க அணி ஒயிட் வாஷ் வெற்றிக்குஆயத்தமாகி உள்ளது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 167 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்ததுதென் ஆப்பிரிக்க தரப்பில் கைல் அபாட் 4விக்கெட்டுகளையும் ஷம்ஸி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றதொடர்ந்து ஆடியதென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுதொடரில் 4-0 என்று முன்னிலை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
காற்று பலமாக வீச தொடக்க சூழ்நிலைமைகளைப் பயன்படுத்தி நன்றாக ஸ்விங்செய்தார் கைல் அபாட்இதனால் ஏரோன் பிஞ்ச்டேவிட் வார்னர் ஆகியோர்கைல் அபாட் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினர்பிஞ்சிற்கு அருமையானஇன்ஸ்விங்கர்மட்டைக்கும் கால்காப்பிற்கும் இடையே புகுந்து ஸ்டம்பைத்தாக்கியதுஇதே போல்தான் வார்னருக்கு ஒரு பந்து உள்ளே கடுமையாக ஸ்விங்ஆக இடைவேளியில் புகுந்து பவுல்டு ஆனது. 13 பந்துகளில் ஆஸிதொடக்கவீரர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
கோலிரஹானே புதிய சாதனைஇந்திய அணி 557 ரன்களைக் குவித்துடிக்ளேர்
நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல்இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.இப்போட்டியில் விராட் கோலி - ரஹானே ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 365 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்தது.
இந்தியா - நியூஸிலாந்து அணி களுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டிஇந்தூரில் நடந்து வருகிறதுஇதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி,முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களைஎடுத்திருந் ததுவிராட் கோலி 103 ரன்களு டனும்ரஹானே 79 ரன்களுடனும்ஆடிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை ஆட்டத்தைத் தொடர்ந்த இந்த ஜோடிநியூஸிலாந்தின் பந்துவீச்சை உறுதியாக எதிர்கொள்ளத் தொடங்கியதுமுதல்நாள் ஆட்டத் தில் 79 ரன்களை எடுத்திருந்த ரஹானேநேற்று 210 பந்துகளில்தனது சதத்தை பூர்த்தி செய்தார்சதத்தை எட்டிய பிறகு அவரது ஆட்டத்தில்இன்னும் வேகம் கூடியதுசிக்சர்களும் பவுண்டரி களுமாக விளாசித் தள்ளியஅவர்நியூஸிலாந்து அணிக்கு பெரும் தலைவலியாக மாறினார்.
ரஷ்ய ஓபன் பாட்மிண்டன் இறுதி போட்டியில் ருத்விகா
ரஷ்ய ஓபன் பாட்மிண்டனில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை ருத்விகாஷிவானி காடேவும் ஆடவர் பிரிவில் இந்தியாவின் சிரில் வர்மாவும் இறுதிபோட்டிக்கு முன்னேறினர்.
விலடிவோஸ்டாக் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மகளிர்ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் ரஷ்யாவின் கெசனியா போலிகர்போவாவைஎதிர்த்து விளையாடிய ருத்விகா 22-20, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் இவ்ஜெனி யாவைஎதிர்கொள்கிறார் ருத்விகா.
ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சிரில் வர்மா 24-22, 21-16என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் அனடோ லியை வீழ்த்தினார்இறுதிப்போட்டியில் மலேசியாவின் ஜூல்பாட்லியை எதிர்கொள்கிறார் சிரில் வர்மா.
வர்த்தகம் :
நீர்மின் திட்டங்களை ஊக்குவிக்க புதிய கொள்கைமத்திய அமைச்சர்பியூஷ் கோயல் அறிவிப்பு
நீர்மின் திட்டங்களை ஊக்குவிக்க அரசு புதிய கொள்கையை விரைவில் அறிவிக்கஉள்ளதுமரபு சாரா எரிசக்தி திட்டங்களான காற்றாலை மற்றும் சூரியமின்னுற்பத்தி போன்ற திட்டங் களுக்கு அளிக்கப்படும் சலுகையைப் போல நீர்மின்னுற்பத்தித் திட்டங்களுக்கும் அளிப்பது தொடர்பான புதிய கொள்கையைஅரசு விரைவில் வெளியிட உள்ளது என்று அவர் கூறினார்.
முடங்கியுள்ள மின் திட்டப் பணிகளை முடுக்கி விடவும் மற்ற மரபு சாராமின்னுற்பத்தித் திட்டங்களுக்கு சலுகை அளிப்ப தற்காகவும் புதிய கொள்கைவகுக்கப்படுகிறதுஅதன்படி 25 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்னுற்பத்தித்திட்டங்களுக்கு இச்சலுகையை வழங்க முடிவு செய்துள்ளதாக கோயல்கூறினார்.
இது தொடர்பாக மின்னுற் பத்தியாளர்கள்மின்சாரத்தைப் பயன்படுத்தும் மாநிலஅரசு களுடன் பேச்சு நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மோசடி முதலீட்டு ஆலோசகர்களை தடுக்க புதிய விதிமுறைகள்: `செபிபரிந்துரை
மோசடியான முதலீட்டு ஆலோசகர் களை தடுக்கும் நோக்கத்துடன் அங்கீகாரம்அல்லாத முதலீட்டு ஆலோசனைகளைத் தடுப்பதற்கு பங்குச்சந்தைஒழுங்குமுறை ஆணையமான `செபி’ பரிந்துரை செய்துள்ளதுஎஸ்எம்எஸ்,வாட்ஸ் அப்டிவிட்டர்பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைதளங்கள் மூலமாகபங்குச்சந்தை தொடர்பான முதலீட்டு ஆலோசனைகள் வழங்கு வதைதடுப்பதற்கு `செபி’ பரிந்துரைத்துள்ளதுஅதுமட்டு மல்லாமல் பங்குச்சந்தைதொடர் பான விளையாட்டுகள்போட்டிகள் நடத்துவதைத் தடை செய்வதற்கும்`செபி’ பரிந்துரை செய்துள்ளது.
முதலீட்டு ஆலோசகர்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் `செபி’ பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறதுஅதன் ஒரு பகுதியாக அங்கீகாரம் இல்லாதமுதலீட்டு ஆலோசனைகள்எலெக்ட்ரானிக் மீடியா மற்றும் ஊடகங்களின்வாயிலாக முதலீட்டு புராடெக்ட்களை பற்றி கூறுவதைத் தடுப்பதற்கு `செபிபரிந்துரை செய்துள்ளதுஆன்லைன் முதலீட்டு ஆலோசனைகள் குறித்த நன்மைதீமைகளை பற்றியும் ரோபோட்டிக் இயந்திரங்களின் பயன்பாடுகள் பற்றியும்`செபி’ ஆராய்ந்து வருகிறது.

No comments: