Wednesday 5 October 2016

Daily Current Affairs For Competitive Exam- 6th October

                                                          
உலகம் :
நேனோ இயந்திரங்களை வடிவமைத்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல்
 2016-ம் ஆண்டு வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மூலக்கூறு இயந்திரங்கள் வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்காக இவர்களுக்கு நோபல் அறிவிக்கப்ப்பட்டுள்ளது.



அதாவது தற்போது புழக்கத்தில் உள்ள சொல்லைப் பயன்படுத்த வேண்டுமென்றால் நேனோ-மெஷின்களை வடிவமைத்தவர்களான இந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சைச் சேர்ந்த ஜான் பியர் சாவேஜ், அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்காட்லாந்து விஞ்ஞானி சர் பிரேசர் ஸ்டோடர்ட், நெதர்லாந்து, கிரோனிஞ்சன் பல்கலைக் கழக விஞ்ஞானி பெர்னர்ட் ஃபெரிங்கா ஆகியோருக்கு 2016-ம் ஆண்டு வேதியியல் நோபல் வழங்கப்படுகிறது.

அதாவது, “மூலக்கூறு இயந்திரங்கள் மற்றும் ஒருங்கிணைப்புக்காகஇவர்களுக்கு இந்த நோபல் அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் அகாடமி செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் ஏற்கெனவே மருத்துவ மைக்ரோ-ரோபோக்கள் வடிவமைப்பிலும் வெளி சிக்னல்களுக்கு வினையாற்றும் சிறு இயந்திரங்கள் வடிவமைப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தொழில்நுட்பத்தை கையடக்கமாக சிறிய அளவினதாக மாற்றியது தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்டதை கணினி நமக்கு அறிவுறுத்துகிறது. 2016 வேதியியல் நோபல் அறிவிக்கப்பட்ட இந்த 3 விஞ்ஞானிகளும் இயந்திரங்களை சிறிய அளவினதாக்கி வேதியியலை புதிய பரிமாணத்திற்குக்கொண்டு சென்றனர்.
உரையாடல்களை பாதுகாக்க ஃபேஸ்புக் மெசஞ்சரிலும் என்க்ரிப்ஷன் வசதி அறிமுகம்
பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் அப், தன்னுடைய பயனர்களுக்காக என்க்ரிப்ஷன் வசதியை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது அதன் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கும் தன்னுடைய மெசஞ்சர் செயலியில் என்க்ரிப்ஷன் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் பயனரைத் தவிர நிறுவனம் உட்பட மற்றவர்கள் யாரும் படிக்க முடியாத என்க்ரிப்ஷன் முறையைப் பயன்படுத்தியபோது அனைத்து ப்ரைவஸி அமைப்புகளும் அதை வரவேற்றன. அதைத்தொடர்ந்து என்க்ரிப்ஷன் முறை ஃபேஸ்புக் மெசஞ்சரிலும் தொடங்கப்படும் என்று ஃபேஸ்புக் அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வசதியைப் பெறுவற்கு பயனர்கள், செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று "இரகசிய உரையாடல்கள்" (Secret Conversations) என்ற வசதியைக் க்ளிக் செய்யவேண்டும்.
அதே நேரம் எல்லாக் குறுஞ்செய்திகளும் தானாக குறியீடு வடிவிற்கு மாறிவிடும் வாட்ஸ் அப்பைப் போல் அல்லாது ஃபேஸ்புக்கில் ஒவ்வொரு புதிய குறுஞ்செய்திக்கும் பயனர்கள் என்க்ரிப்ஷன் வசதியை ஆக்டிவேட் செய்யவேண்டும்.
பயனர்கள் மெசஞ்சரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பைப் பதிவிறக்க வேண்டும். அதில் புதுக் குறுஞ்செய்திக்கான திரையின் வலது மேல் ஓரத்தில் தோன்றும் 'சீக்ரெட்' வசதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கு அனுப்புநர், பெறுநர் என இருவருமே மெசஞ்சரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா :
ஜிசாட்-18 செயற்கைகோள் ஏவும் திட்டம் ஒத்திவைப்பு
பிரெஞ்ச் கயானாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்தியாவின் ஜிசாட்-18 செயற்கை கோள் நேற்று விண்ணில் ஏவப் படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. வானிலை சீரானதும் இன்று ஏவப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை யின் சி-பேண்ட் மற்றும் க்யூ பேண்ட் களின் சேவையை வலுப்படுத்து வதற்காக 48 தொலைத்தொடர்பு டிரான்ஸ்பாண்டர்கள் இணைக்கப் பட்ட ஜிசாட்-18 என்ற செயற்கை கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையமானஇஸ்ரோஉருவாக்கியுள்ளது. இந்த செயற்கைகோள் பிரான்ஸில் உள்ள பிரெஞ்ச் கயானா ஏவுத் தளத்தில் இருந்து இன்று அதி காலை 2 மணியளவில் விண்ணில் செலுத்துவதாக இருந்தது. ஆனால் திடீரென பலத்தக் காற்று வீசியதால் கடைசி நேரத்தில் விண் ணில் ஏவும் திட்டம் கைவிடப் பட்டது.
வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஜிசாட்-18 செயற்கை கோள் இன்று விண்ணில் செலுத் தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துல்லிய தாக்குதலுக்கான வீடியோ: மத்திய அரசிடம் ராணுவம் ஒப்படைப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை துல்லிய தாக்குதல் மூலம் நிர்மூலம் செய்ததற்கான வீடியோ ஆதாரங்களை அரசிடம் ராணுவம் ஒப்படைத்துள்ளது என மத்திய உள்துறை இணை யமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்புக் காஷ்மீருக்குள் புகுந்து தாக்கியது தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளி யிட வேண்டும் என பல்வேறு தரப்பில் குரல்கள் எழத் தொடங்கி யுள்ளன. இதனிடையே நடை முறைப்படி அரசிடம் வீடியோ ஆதாரங்களை ராணுவம் ஒப்படைத்துள்ளது என ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்துள்ளார்.
ஆஹிர் மேலும் கூறும்போது, “வகுக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. துல்லிய தாக்குதல் குறித்து ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவர் தான் அறிவித்தார். பாதுகாப்பு அமைச்சரோ, பிரதமரோ, உள் துறை அமைச்சரோ அறிவிக்க வில்லை. ராணுவ நடவடிக்கை களுக்கான தலைவர் (டிஜிஎம்ஓ)தான் அறிவித்தார். அதுதான் சரியான நடைமுறை. அதைத் தான் ராணுவம் செய்தது. தற்போது நேரம் மாறிவிட்டது. வீடியோ ஆதாரங்கள் அரசிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளனஎன்றார்.
வீடியோ ஆதாரங்கள் எப்போது வெளியிடப்படும் என செய்தியாளர்கள் உள்துறையின் மற்றொரு இணையமைச்சரான கிரண் ரிஜிஜுவிடம் கேட்டபோது, “அரசின் மீது அனைவரும் நம்பிக்கை வைக்க வேண்டும். ராணுவம் சுயமாக முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும்என்றார்.
தமிழ்நாடு : 
இந்தியாவில் முதன்முறையாக கொடைக்கானலில்ஸ்கை வாக்அமைக்க முடிவு
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இந்தியாவில் முதன்முறையாக கொடைக்கானல் மலைப் பகுதியில்ஸ்கை வாக்அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. கொடைக்கானலில் 12 மைல் சுற்றுச் சாலையில் உள்ள சுற்றுலாத் தலங்களான மோயர் பாய்ன்ட், பைன் பாரஸ்ட், தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு என வரிசை யாக அமைந்து இயற்கையை ரசிக்க ஏற்றவையாக உள்ளன. இவற்றையும் கடந்து பிரை யண்ட் பூங்கா, ஏரியில் படகு சவாரி ஆகியவை உள்ளன.
சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை ஆகியவை பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கொடைக்கானல் மலைப் பகுதியில் டால்பின்நோஸ் என்ற இடத்தில்ஸ்கை வாக்திட்டத்தை வனத்துறை செயல்படுத்த உள்ளது.
மாநிலம் முழுவதும் ஆதார் மையங்கள் செயல்படத் தொடங்கின: சென்னையில் 64 மையங்கள் செயல்படுகின்றன
தமிழகம் முழுவதும் நேற்று முதல் ஆதார் நிரந்தர மையங்கள் செயல்படத் தொடங்கின.
அக்டோபர் 1-ம் தேதி முதல், தமிழகத்தில் ஆதார் பதிவுகளை மேற்கொள்ள, யூஐடிஏஐ நிறு வனத்திடம் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அனுமதி பெற்றுள்ளது. அத்துறையின் கீழ் செயல்படும் அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் எல்காட் ஆகியவற்றிடம் ஆதார் பதிவு செய்யும் பணி வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதார் நிரந்தர மையங்களில் ஆதார் பதிவு நடைபெறவில்லை. இதனால் கடந்த மாதம், அக்டோபர் 1, 3, 4 ஆகிய தேதிகளில் வருமாறு டோக்கன் வழங்கப்பட்டவர்கள், ஆதார் மையங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று எல்லா மையங்களுக்கும் பணியாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் பயன் படுத்துவதற்கான உபகரணங் களும் பயன்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டிருந்தன. ஆதார் பதிவு கோரி வந்திருந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்து வழங்கியோருக்கு, அசல் இருப்பிடச் சான்று மற்றும் புகைப்பட அடையாளச் சான்று ஆகியவை வைத்திருப்போருக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டது.
முன்பதிவு உட்பட 5 வகையான வசதி: செல்போன் செயலி மூலம் ரயில் டிக்கெட் பெறலாம் - 3 மாதங்களில் ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்துகிறது
ரயில் டிக்கெட் முன்பதிவு உட்பட 5 வகையான வசதிகள் செல்போன் மூலம் பெற புதிய செயலியை அடுத்த 3 மாதங்களில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) அறிமுகப்படுத்தவுள்ளது.
இது தொடர்பாக ஐஆர்சிடிசி உயர் அதிகாரிகள்தி இந்துவிடம் கூறியதாவது:
ஐஆர்சிடிசி-யில் மொத்தம் 4 கோடி பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். சராசரியாக தினமும் 5 லட்சம் முதல் 5.7 லட்சம் பேர் வரையில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் கவுன்ட்டர்களில் டிக்கெட் எடுத்து பயணம் செய்து வருகின்றனர்.
ரயில் பயணிகளுக்கு செல்போன் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு வசதிகள் எளிமையாக கிடைக்கும் வகையில் திட்டங்களை ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது. இதனால், பயணிகள் எளிமையாக சேவை பெறுவதுடன், வீண் அலைச்சலையும் தவிர்க்க முடியும். தற்போது ரயில் டிக்கெட் முன் பதிவு, உணவு ஆர்டர் செய்வது, கால்டாக்சி, ரயில் நிலையங்களில் ஓய்வு அறைகள் முன்பதிவு, ஹோட்டல் அறை முன்பதிவு, போர்ட்டர் சேவை கோருவது, காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருக்கும்போது விமான பயணம் சேவை பெறுவது, ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகளில் சுகாதாரம் தொடர்பாக புகார் தெரிவிப்பது உள்ளிட்ட ஒருங்கிணைந்த வசதிகளைக் கொண்ட புதிய செல்போன் செயலியை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 3 மாதங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்.
விளையாட்டு :
கபடி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு தடை
12 நாடுகள் பங்கேற்கும் கபடி உலகக் கோப்பை போட்டிகள் இந்த வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இருநாட்டு உறவுகளில் பதற்றம் நீடிப்பதால் பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்கள் கருதி பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளியன்று முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா-தென் கொரியா அணிகளும் ஈரான் அணி புதிய அணியான அமெரிக்க அணியுடனும் மோதுகின்றன.

பாகிஸ்தான் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது குறித்து சர்வதேச கபடி கூட்டமைப்பு தலைவர் தியோராஜ் சதுர்வேதி கூறும்போது, “இரண்டு நாடுகளுக்கு இடையேயும் பதற்றம் தொடரும் நிலையில் பாகிஸ்தானை அனுமதிப்பது சரியாகாது. பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு இது உகந்த நேரமல்ல.
மில்லர் காட்டடி சதம்: ஆஸி.க்கு எதிராக 372 ரன்களை விரட்டி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
டர்பனில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் 371 ரன்களை மகா விரட்டல் செய்த தென் ஆப்பிரிக்கா 372/6 என்று அபார வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்று கைப்பற்றியது.
மேலும், 2009-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்கிறது தென் ஆப்பிரிக்கா.
டேல் ஸ்டெய்ன், ரபாதா ஆகியோருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தென் ஆப்பிரிக்க அணியில் டேவிட் மில்லர் 79 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 118 ரன்களை குவித்து இறுதி வரை நாட் அவுட்டாக இருந்து வெற்றிக்கு இட்டுச் சென்றார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியடைந்த துரத்தலாகும் இது.
ஆஸ்திரேலியாவின் 372 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்கா 49.2 ஓவர்களில் எடுத்து தொடரை வென்றது. முன்னதாக, ஆஸ்திரேலியாவை படுத்தி எடுக்கும் குவிண்டன் டி காக் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 70 ரன்கள் எடுத்தார். ஹஷிம் ஆம்லா 30 பந்துகளில் 45 ரன்களையும், டுபிளெசிஸ் 32 பந்துகளில் 33 ரன்களையும் எடுத்தனர்.
ரஞ்சி கோப்பை இன்று தொடக்கம்
 2016-17-ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை ஆட்டங்கள் பல்வேறு பகுதிகளில் இன்று தொடங்கு கிறது. உள்நாட்டு தொடர்களில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடரில் தமிழக அணி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் மும்பை, ரயில்வே, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பரோடா, பெங்கால், பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் உள்ளன.தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் வலுவான மும்பை அணியை இன்று எதிர்கொள் கிறது. ரோஹ்டக்கில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.
தமிழக அணி விவரம்:
அபினவ் முகுந்த் (கேப்டன்), அபராஜித், இந்திரஜித், வாஷிங்டன் சுந்தர், ஜெகதீசன், தினேஷ் கார்த்திக், கவுசிக், சூர்ய பிரகாஷ், ரகில், ரங்கராஜன், அவுசிக் நிவாஸ், அஸ்வின் கிறிஸ்ட், முகமது, விக்னேஷ், நடராஜன், கவுசிக் காந்தி.
வர்த்தகம் :
செங்கல்பட்டில் அமைகிறது நாட்டின் முதலாவது மருத்துவ பூங்கா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாட்டின் முதலாவது மருத்துவ பூங்காவை (Medical Park) அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருத்துவ பூங்கா சென்னையை அடுத்த செங்கல்பட்டில் அமைய உள்ளது. அதி உயர் மருத்துவ கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு ஊக்கம் கொடுக்கும் விதமான இது அமைகிறது.
இந்த மருத்துவ கருவிகள் தயாரிப்பு பூங்காவை பொதுத்துறை நிறுவனமான ஹெச்எல்எல் லைப் கேர் நிறுவனம் 300 ஏக்கர் நிலத் தில் அமைக்க உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற் கான அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. மருத்துவ அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவன மான ஹெச்எல்எல் 330.10 ஏக்கர் குத்தகை நிலத்தில் இதை அமைக் கிறது. இதற்கான முதலீட்டில் 50 சதவீதத்தை ஹெச்எல்எல் நிறு வனமே மேற்கொள்கிறது. இதில் மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் தொழில் தொடங்க லாம் என மத்திய அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
தனிநபர் கடன் வட்டியை குறைக்கும் ஃபுல்லர்டன் இந்தியா
வங்கியல்லாத நிதிச் சேவை நிறுவனமான ஃபுல்லர்டன் இந்தியா தனிநபர் கடனுக்கு வட்டிக் குறைப்பு சலுகையை அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையாக தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தில் 0.50 சதவீத சலுகையை அறிவித்துள்ளது.
மேலும் பெண் விண்ணப்ப தாரர்களுக்கான பரிசீலனை கட்ட ணத்தில் 50 சதவீத சலுகையையும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் இந்த நிறுவனத்தின் செயல் துணைத் தலைவரும், வர்த்தகம், சந்தையிடல் துறையின் தலைவருமான ராகேஷ் மாக்கர் பேசியதாவது.
பண்டிகை கால தனிநபர் நிதித் தேவைகளை முன்னிட்டு ஃபுல்லர்டன் இந்தியா பல சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. தனி நபர் கடன்கள் தவிர வர்த்தக மற்றும் வாகனக் கடன்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வருகிறோம். தனிநபர் கடன் அளிப்பில் இரட்டை இலக்க வளர்ச்சியை எதிர்பார்க் கிறோம்.
அதே சமயத்தில் இந்த ஆண்டில் சிறிய ரக வர்த்தக வாகனங்களுக்கான கடனும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வும் குறிப்பிட்டார். இந்தியா முழு வதும் 16 லட்சம் வாடிக்கை யாளர்களுக்கு சேவை அளித்து வருவதாகவும் கூறினார்.




No comments: