Thursday 6 October 2016

Daily Current Affairs For Competitive Exam - 7th October

உலகம் :
.நா. புது பொதுச்செயலர் அந்தோனியோ குத்தேரஸ்
.நா.வின் புதிய பொதுச் செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் (67) தேர்வு செய்யப் பட்டுள்ளார். அவருக்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது.


.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செய லாளரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறு கட்டங் களாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
.நா.வின் புதிய பொதுச்செய லாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோனியோ குத்தேரஸுக்கு அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.
.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் வெளி யிட்ட அறிக்கையில், புதிய பொதுச் செயலாளரை வாழ்த்துகிறோம், வரவேற்கிறோம் என்று தெரி வித்துள்ளார்.
சனி கிரக நிலவில் தண்ணீர்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
சனிக்கிரகத்தின் டையோன் நில விலும் நிலத்தடிக்கு கீழே பல கிலோ மீட்டர் ஆழத்தில் கடல் ஓடு வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர். இதன் மூலம் அங்கு நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
சனிக்கிரகத்தை சுற்றும் டைட்டன், என்சலடஸ் ஆகிய இரு நிலவுகளும் பனிக்கட்டிக்கு அடியில் கடலை மறைத்து வைத்திருப்பதாக ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. இந்நிலையில் மற் றொரு நிலவான டையோனிலும் கடல் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
பெல்ஜியத்தின் ராயல் ஆய்வக விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித் துள்ளனர். டையோன் நிலவின் நிலத் தடிக்கு கீழே 100 கி.மீ ஆழத்தில் அந்தக் கடல் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த கடலைச் சுற்றி மிகப் பெரிய பாறை படிமங்கள் அமைந் திருப்பதாகவும் கூறுகின்றனர். இதன் மூலம் நீண்ட ஆயுள் கொண்ட நுண்ணுயிர்கள் அங்கு வாழ்வதற் கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கடல் ஆமை மையம் அமைக்க முடிவு: தென்சீன கடல் பகுதி மீதான பிடியை இறுக்குகிறது சீனா
சர்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதியில் உள்ள சன்ஷா நகரில் கடல் ஆமை பாதுகாப்பு மையத்தை நிறுவப் போவதாக சீனா நேற்று அறிவித்தது.
தென்சீன கடல் பகுதியில் உள்ள பல்வேறு தீவுக் கூட்டங்களுக்கு சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதே தீவுகளுக்கு வியட் நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனை உள்ளிட்ட நாடுகளும் சொந்தம் கொண்டாடி வரு கின்றன.
இந்நிலையில் தங்களது பிடிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியாக சீனா இந்த அறிவிப்பை வெளியிட் டுள்ளது.
இதுகுறித்து சன்ஷா நகர மேயர் ஜியாவ் ஜீ கூறும்போது, “கடல்சார் பல் உயிரின பாது காப்பை மேம்படுத்தும் வகையில், இங்கு கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். இங்கு ஆமை குஞ்சு பொரித்தல் மற்றும் ஆமை தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் இத்துறை சார்ந்த நிபுணர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இந்த மையம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்என்றார்.
இந்தியா :
பிரதமர் மோடி ஆட்சியில் அதிக பெண் ஆளுநர்கள் நியமனம்
கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்.
2 ஆண்டுகளை கடந்துள்ள மோடியின் ஆட்சியில் ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர்களாக இதுவரை 4 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மோடி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் முதல் பெண் ஆளுநராக மிருதுளா சின்ஹா, கோவா மாநிலத்தில் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு மே மாதம், திரவுபதி முர்மு என்பவர் ஜார்க்கண்ட் ஆளுநராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார்.
கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம், மணிப்பூர் மாநில ஆளுந ராக நஜ்மா நியமனம் செய்யப்பட் டுள்ளார். இதுபோல் முந்தைய ஆட்சிகள் எதிலும் இந்த எண்ணிக் கையில் பெண்கள் ஆளுநர்களாக அமர்த்தப்பட்டதில்லை.
பெண் ஆளுநர்களில் மிருதுளா சின்ஹா, பிகாரைச் சேர்ந்தவர். அம்மாநில பாஜக மகளிர் அணி பொறுப்பாளராக இருந்தவர். இவரது கணவர் டாக்டர் ராம்கிருபால் சின்ஹா, பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி ஆட்சியில் கேபினட் அமைச்சராக பதவி வகித்தவர்.
விரிவான திட்ட வரைவு தயார்: மேகேதாட்டுவில் ரூ.5700 கோடியில் புதிய அணை - கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ. 5,700 கோடி செலவில் புதிய அணை கட்டப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட வரைவு அறிக்கை தயாராக இருப்ப தால் விரைவில் மத்திய அரசிடம் அனுமதிக் கோரப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மைசூருவில் நேற்று சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்டை மாநிலங்களுடன் நிலவும் காவிரி, கிருஷ்ணா, மகதாயி ஆகிய நதி நீர் விவகாரங்களை பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்க்க கர்நாடக அரசு விரும்புகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களிடம் கர்நாடகா வலியுறுத்தி வருகிறது. கர்நாடகாவில் நிலவும் வறட்சியைப் போக்க, இந்த பிரச்சினைகளை தீர்ப்பதுதான் ஒரே வழி என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
காவிரி நீர்ப்பாசனப் பகுதிகளில் நிலவும் வறட்சி மற்றும் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க மேகேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே முடிவெடுக்கப்பட்டது. ரூ. 5,700 கோடி செலவில் கட்டப்படும் இந்த அணைக்கான விரிவான திட்ட வரைவு அறிக்கை தயாராக உள்ளது. அணை கட்டுமானத்துக்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் பணியில் நிறைவடையும் நிலையில் உள்ளது.
தமிழ்நாடு : 
மீனவர்களுக்கானபான் இந்தியா மீனவ நண்பன்கைப்பேசி செயலி: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது
கடலுக்குச் செல்லும் மீனவர்களுக் குத் தேவையான அத்தியாவசிய தகவல்களைத் தரும்பான் இந்தியா மீனவ நண்பன் கைப்பேசி செயலிசேவையை இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்துகிறது எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்.
மீனவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய தகவல்களை உடனுக்குடன் வழங்கும்மீனவ நண்பன் கைப்பேசிசேவையை 2007-ல் இருந்து வழங்கி வருகிறது
இதன்படி, கடலில் அலைகளின் உயரம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்ற அறிகுறிகள், ஆபத்து காலங் களில் தொடர்புகொள்ளும் வசதி, ஆபத்தான பகுதிகளை அறிவுறுத் துதல், மீன் வளம் உள்ள பகுதி களை அறிதல், குறிப்பிட்ட வகை மீன்கள் கிடைக்கும் இடங்களை அறிதல், சர்வதேச கடல் எல் லையை உணர்த்துதல் உள்ளிட்ட 13 அத்தியாவசிய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிக்கை: ஆணையரக அதிகாரிகள் ஆலோசனை
கடந்த 2003 ஏப்ரல் முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அரசு ஊழி யர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்து வதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய, முதல்வர் அலு வலக சிறப்பு பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமை யில் நிபுணர் குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்தார். இக்குழுவினர் அரசு பணியாளர் சங்கங்களை அழைத்து கருத்துகளை கேட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்பு, தங்கள் கருத்துகளையும் கேட்க வேண்டும் என ஓய்வூதிய ஆணையரகம் தெரிவித்திருந்தது. இதன்படி, நிபுணர் குழுவினரை ஓய்வூதிய ஆணையரக அதிகாரிகள் நேற்று சந்தித்தனர்.
ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிக்கையை நிபுணர் குழுவினர் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
விளையாட்டு :
கபடியில் இந்தியா இன்று மோதல்
உலகக் கோப்பை கபடி போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. இதில் போட்டியை நடத்தும் இந்திய அணியுடன், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஈரான், போலந்து, தாய்லாந்து, வங்க தேசம், தென் கொரியா, ஜப்பான், அர்ஜென்டினா, கென்யா ஆகிய 12 அணிகள் கலந்து கொள் கின்றன. இந்த தொடரானது வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இன்று இரு ஆட்டங்கள் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா-தென் கொரியா பலப்பரீட்சை நடத்துகின்றன. இதை தொடர்ந்து 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஈரான்-அமெரிக்கா மோதுகின்றன.
உலகக் கோப்பை கபடி தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
பாபர் ஆசம் சாதனை சதத்துடன் தொடரை வென்ற பாக்: 8-ம் இடத்திற்கு முன்னேற்றம்
மே..தீவுகளுக்கு எதிராக யு...யில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 3-0 என்று தொடரைக் கைப்பற்றி ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசையில் 8-ம் இடத்திற்கு வந்துள்ளது.

2019
உலகக்கோப்பை போட்டிகளில் நேரடியாகத் தகுதி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள பாகிஸ்தானுக்கு ஒவ்வொரு ஒருநாள் போட்டியும் இனி இறுதிப் போட்டிதான் என்ற நிலையில் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஆடாமல் உலகக்கோப்பைக்குத் தகுதி பெற 2017 செப்டம்பர் 30-க்குள் முதல் 8 அணிகளில் இடம்பெற தரநிலை எய்துவது கட்டாயமாக உள்ளது. இந்நிலையில் மே..தீவுகளுக்கு எதிரான இந்தத் தொடர் பாகிஸ்தானுக்கு ஒரு அக்னிப் பரிட்சையாக இருந்தது.

இந்நிலையில் கடினமான பணியை தன் மீது சுமந்து கொண்ட பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மே..தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-0 என்று வெற்றி பெற வீரர்களின் தன்னம்பிக்கைக்கும் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கும் உறுதுணையாக இருந்தார். கேப்டன் அசார் அலியும் தன்னம்பிக்கையுடன் ஆடினார்.
வர்த்தகம் :
வருமான வரி செலுத்துவோருக்கு அரசின் நற்சான்றிதழ்
வருமான வரி ரூ.1 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமாக செலுத்துபவர் கள் மத்திய அரசின் நற்சான்றிதழ் பெற உள்ளனர்.
இதற்கான திட்டத்தை அறிமுகப் படுத்திய இரண்டு வாரங்களுக்குள் மத்திய நேரடி வரி ஆணையம் இந்த சான்றிதழை 80 ஆயிரம் பேருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளது. வருமான வரித் துறை முன்னுரிமை அடிப்படையில் இந்த சான்றிதழ்களை அனுப்பி வருவதாக தகவல் அறிந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அரசின் புள்ளிவிவரங்களின்படி வருமான வரி செலுத்துபவர்களில் 10 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டி வருகின்றனர். இது நாட்டில் ஒட்டுமொத்தமாக வருமான வரி செலுத்துபவர்களில் 2 சதவீதமாகும்.
பிப்ரவரி 2-ம் தேதி பட்ஜெட் தாக்கல்: நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் நிதியமைச்சகம் விளக்கம்
பட்ஜெட் அறிவிப்பை முன்கூட்டியே நடத்த நிதியமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக பிப்ரவரி 2-ம் தேதி அல்லது அதற்கு முன்னரே நடத்த ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்கம் நேற்று நாடாளுமன்ற குழுவிடம் விரிவாக விளக்கியுள்ளது. மேலும் ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்கும் மத்திய அரசின் முன்வரைவையும் எடுத்துரைத்துள்ளது. பட்ஜெட்டை முன்கூட்டியே அறிவிப்பதற்கான நோக்கத்தையும் விரிவாக விளக்கி யுள்ளது என்று தகவலறிந்தவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சீரமைப்பு நடவடிக்கை யின் நிதி சார்ந்த பல்வேறு கோணங்களையும் நிதித்துறை செயலர் அசோக் லாவசா நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களுக்கு கூறியுள்ளார்.




No comments: