Monday 3 October 2016

Daily Affairs For Competitive Exam - 2nd & 3rd October

உலகம் :
‘செல்கள் ஆராய்ச்சியில் சாதனை: ஜப்பான் விஞ்ஞானி ஓஷுமிக்குமருத்துவத்துக்கான நோபல் பரிசு
இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசுஜப்பான் விஞ்ஞானியோஷிநோரி ஓஷுமிக்கு வழங்கப்படுகிறது.


ஸ்வீடன் நாட்டில் உள்ள ‘கரோலின்ஸ்கா மருத்துவப் பல்கலைக்கழகம்மருத்துவத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு ஆண்டு தோறும்நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது. (இந்த விருது ஆல்பிரட் நோபல்பெயரில் கடந்த 1905-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.)
உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசுக்குஇந்த ஆண்டு ஜப்பான்விஞ்ஞானி யோஷி நோரி ஓஷுமி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்இதற்கானஅதிகாரப் பூர்வ அறிவிப்பை கரோலின்ஸ்கா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது.
ஜப்பானின் டோக்கியா பல்கலைக்கழகத்தில் ஓஷுமி ஆராய்ச்சி செய்துவருகிறார்மனித உடலில் உள்ள செல்கள் பற்றி (ஆட்டோபேஜிதொடர்ந்துஆராய்ச்சி செய்து வருகிறார்.
மனித உடலில் செல்கள் அழிவதுபுதிய செல்களை தானே உருவாக்கிக்கொள்வதுசெல்கள் தம்மைத் தாமே எப்படி அழித்துக் கொள்கின்றன போன்ற பலஆய்வுகளை நடத்தி பல உண்மைகளை கண்டறிந்துள்ளார்.
இந்த சாதனைக்காக நோபல் பரிசுக்கு ஓஷுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜப்பானின் புகுவோகா நகரில் கடந்த 1945-ம் ஆண்டு பிறந்தவர் ஓஷுமி.
கடந்த ஆண்டு அயர்லாந்து மருத்துவர் வில்லியம் காம்பெல்ஜப்பான் மருத்துவர்சடோஷி ஒமுராசீன மருத்துவர் யூயூ டு ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துக்கானநோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படுகிறதுவேதியியலுக்குபுதன்கிழமையும்அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் அறிவிக்கப்படுகின்றனஅத்துடன் பொருளாதாரம் மற்றும் இலக்கியத் துக்கான நோபல்பரிசுகள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளன.
நோபல் பரிசுடன் சுமார் ரூ.6 கோடியே 25 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வாங்கும் ரபேல் போர் விமானங்கள்சீனா அச்சம்
பிரான்ஸிடமிருந்து இந்தியா வாங்கும் ரபேல் போர் விமானங்கள் சீனா,பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்படும் என்று சீன ஊடகம்தெரிவித்துள்ளது.
பிரான்ஸிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடியில் 36 ரபேல் போர் விமானங்களைஇந்தியா வாங்குகிறதுஇதற்கான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 23-ம் தேதிகையெழுத்தானதுஅடுத்த 36 மாதங்களில் ரபேல் போர் விமானங்களைஇந்தியாவிடம் ஒப்படைக்கும் பணிகளை பிரான்ஸ் தொடங்க உள்ளதுஇந்தவிமானங்கள் அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை.
இதுகுறித்து சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் அண்மையில்வெளியிட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது:
ஆசிய நாடுகள் பெருமளவில் ஆயுதங்களை வாங்கி குவித்து வருகின்றன.இந்தியா ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸிடம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதுஇந்த விமானங்கள் மூலம் அணுஆயுத தாக்குதல்களை நடத்தமுடியும்இதன்மூலம் இந்தியாவின் வலிமை மேலும் அதிகரித்துள்ளது.

இந்தியா :
எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல்: நவாஸ்ஷெரீப் ஆலோசகர் தகவல்
எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியாவும் பாகிஸ்தானும்ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் வெளியுறவுவிவகார ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறினார்.
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான இந்தியாவின் தாக்குதலைத்தொடர்ந்து இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சர்தாஜ்அஜீஸ் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் நேற்று இஸ்லாமாபத்தில் கூறும்போது, “இந்தியாவின்பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல்பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் நசீர்ஜன்ஜுவா ஆகிய இருவரும் தொலைபேசியில் பேசினர்அப்போது கட்டுப்பாட்டுஎல்லைக்கோட்டுப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் பதற் றத்தைத் தணிக்கவும்காஷ்மீர்விவகாரத்தில் முழு கவனம் செலுத்தவும் பாகிஸ்தான் விரும்பு கிறது.பதற்றத்தை அதிகரிப்பதன் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் இருந்து உலகின்கவனத்தை திசை திருப்ப இந்தியா முயற்சிக்கிறது” என்றார்.
ஆந்திர தலைநகர் அமராவதியில் புதிய தலைமை செயலகத்தில் பணிகள்தொடக்கம்
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரமாக உருவாகி வரும் அமராவதியில் உள்ளபுதிய தலைமைச் செயலகத்தில் அலுவல் பணிகள் நேற்று தொடங்கின.
வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள குளிர்காலக் கூட்டத் தொடர் புதிதாககட்டப்பட்டு வரும் சட்டப்பேரவையில் நடைபெறும் என பேரவைத் தலைவர்கோடல சிவப்பிரசாத் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விஜயவாடா-குண்டூர் இடையே 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆந்திரமாநிலத்தின் புதிய தலைநகரமான அமராவதி உருவாகி வருகிறது.முதற்கட்டமாக வெலகபுடி பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணிதொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது.
இதில் ஏற்கெனவே சில துறைகள் இயங்கி வரும் நிலையில் நேற்று அனைத்துத்துறையை சேர்ந்தவர்களும் ஹைதராபாத்தில் இருந்து வெலகபுடிக்கு வந்தனர்.இவர்களை மற்ற துறை அரசு ஊழியர்கள் வரவேற்றனர்பின்னர் இவர்கள்தொடர்புடைய துறையில் தங்களது அலுவலக பணிகளைத் தொடங்கினர்.இவ்வாறு கோடல சிவப்பிரசாத் கூறினார்.
காவிரி நதி நீர் பற்றி விவாதிக்க கர்நாடக சட்டப்பேரவை இன்று அவசரமாககூடுகிறது
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக‌ கர்நாடக சட்டப் பேரவைமற்றும் மேலவை இன்று அவசரமாக கூட்டப்படுகிறது.
கடந்த 30-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் மனுவைவிசாரித்த உச்ச நீதிமன்றம், “அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து 6-ம் தேதி வரைதினமும் 6 ஆயிரம் கனஅடி காவிரி நீரைத் தமிழகத்துக்கு கர்நாடகா திறந்து விடவேண்டும்வரும் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா அனைத்துக்கட்சி கூட்டம்மற்றும் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி நேற்று முன் தினம் விவாதித்தார்.
அப்போது அனைத்துக்கட்சித் தலைவர்களும் தமிழகத்துக்கு நீரைத் திறக்கவும்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வும் எதிர்ப்புத் தெரிவித்தனர்மேலும்கர்நாடக சட்டப்பேரவை யை உடனடியாகக் கூட்டிசிறப்புத் தீர்மானமும்உச்சநீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி தனிச்சட்டமும் இயற்ற வேண்டும் எனகோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சட்டப்பேரவை மற்றும் மேலவை இன்று மாலை அவசரமாககூடுகிறது.
புவி வெப்பமயமாதலை குறைக்க பாரிஸ் ஒப்பந்தத்துக்கு மத்திய அரசுஒப்புதல்
புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான பாரிஸ் பருவநிலை மாற்றஒப்பந்தத்துக்கு மத்திய அரசு முறைப்படி நேற்று ஒப்புதல் அளித்தது.
இது தொடர்பான ஆவணங்களை இந்தியாவுக்கான .நாதூதர் சையதுஅக்பருதீன்நியூயார்க்கில் உள்ள .நா.சபையின் தலைமையகத்தில் நேற்றுஒப்படைத்தார்இதன்மூலம் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்த நாடுகள்எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் முயற்சிமேற்கொண்டு வருகின்றனஇதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு இறுதியில்பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடந்தது.அதில்பசுமை குடில் வாயு வெளியேறுவதை கட்டுப்படுத்துவது தொடர்பானபருவநிலை மாற்ற ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
இதற்கு இதுவரை 61 நாடுகள் ஒப்புதல் வழங்கி இருந்தனபிரதமர் மோடிஅறிவித்தப்படிகாந்தி பிறந்த தினமான நேற்று பாரிஸ் ஒப்பந்தத்துக்கு மத்தியஅரசு முறைப்படி ஒப்புதல் அளித்தது.
தமிழ்நாடு : 
தமிழகம்புதுச்சேரி மாநிலங்களில் கணக்கில் வராத வருமானம் ரூ.3ஆயிரம் கோடி: ரூ.1,400 கோடி வரி வசூல் ஆகும் என தகவல்
தமிழகம் மற்றும் புதுவையில் தாமாக முன்வந்து வருமானம் தெரி விக்கும்திட்டத்தின் கீழ்ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாதவருமானம் வெளி வந்துள்ளதுஇதன் மூலம்ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரிவசூல் ஆகும் எனத் தெரிகிறது.
கணக்கில் காட்டப்படாத கறுப் புப் பணத்தை வெளிக்கொணரும் நோக்கில்வருமானம் தெரிவிக்கும் திட்டம்-2016’ என்ற திட்டத்தை மத்திய அரசுஅறிவித்ததுஇத்திட்டம் கடந்த ஜூன் 1-ம் தேதி தொடங்கி கடந்த செப்டம்பர் 30-ம்தேதியன்று முடிவடைந்ததுஅதற்குள் வரி ஏய்ப்பு செய்பவர்கள் தங்களிடம்உள்ள கணக்கில் காட்டப்படாத வருமானம் மற்றும் அசையா சொத்துகளைதாமாக முன்வந்து தெரிவிக்க வேண்டும்மேற்கொண்டு கால நீட்டிப்புவழங்கப்பட மாட்டாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்இத்திட்டத்தின் கீழ் தமிழகம் மற்றும் புதுவையில் ரூ.3 ஆயிரம்கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத பணம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டிஜிட்டல் மீட்டர் பயன்பாடுஅதிக விலை மின்சாரம் தவிர்ப்பு: தமிழ்நாடுமின்வாரிய நஷ்டம் கடந்த ஆண்டு 55% குறைந்தது - வாரிய தணிக்கைஅறிக்கையில் தகவல்
டிஜிட்டல் மீட்டர் பயன்பாடு மற்றும் அதிக விலை கொடுத்து மின்சாரம்வாங்கியதை நிறுத்தியதால்தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் நஷ்டம் கடந்த 2014-15- ஐவிட, 2015-16-ம் ஆண்டில் 55 சதவீதம்குறைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோருக்கான மின்சாரத்தைமின் உற்பத்தி மற்றும்பகிர்மானக் கழகம் வழங்கி வருகிறதுகடந்த பல ஆண்டுகளாக நஷ்டத் தில்இயங்கி வந்த இந்த நிறுவனம்கடந்த நிதியாண்டில் நஷ்டத்தை 55 சதவீதம்அளவுக்கு குறைத்துள்ளது.
மின்சார விற்பனைமானியம் மற்றும் நிதி ஒதுக்கீடு மற்றும் இதர வகையில்என, 2014-15-ல் ரூ.42ஆயிரத்து 507 கோடியே 9 லட்சமும், 2015-16-ல் ரூ.49ஆயிரத்து 705 கோடியே 39 லட்சமும் வருவாய் பெறப்பட்டுள்ளது.
அதே நேரம்மின் உற்பத்தி யாளர்களிடம் இருந்து மின்சாரம் வாங்கியதுமின்உற்பத்திபழுதுபார்த்தல்நிர்வாகம்வட்டி மற்றும் நிதி கட்டணம் உள்ளிட் டவைமூலம்மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்துக்கு செலவு ஏற்படுகிறதுஇந்தவகையில் கடந்த 2014-15-ல் ரூ.55 ஆயிரத்து 263 கோடியே 68 லட்சம் மற்றும் 2015-16-ல் ரூ.55 ஆயிரத்து 492 கோடியே 21 லட்சமும் செலவு ஏற்பட்டுள்ளது.
விளையாட்டு :
நியூஸி.க்கு எதிரான தொடரை வென்று நம்பர் 1 ஆனது இந்தியா!
கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிநியூஸிலாந்தை 178 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்று டெஸ்ட்தொடரைக் கைப்பற்றியதுஇதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும்முதலிடம் பிடித்தது இந்திய அணி.
இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 4-ம் நாள் காலையில் 263 ரன்களுக்குச்சுருண்டதுபோல்ட்ஹென்றிசாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளைக்கைப்பற்றினர்இதனையடுத்து 376 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியநியூஸிலாந்து 115/2 என்று பிறகு தேநீர் இடைவேளையின் போது 135/3 என்றும்இருந்து தேநீர் இடைவேளைக்குப் பிறகு விக்கெட்டுகளை மடமடவென இழந்து197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியதோடுதொடரையும் இழந்ததுஇந்திய அணித் தரப்பில் அஸ்வின்ஜடேஜாமொகமதுஷமி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டைக்கைப்பற்றினார்.
சீன ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ரட்வன்ஸ்கா
சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு போலந்து வீராங் கனைஅக்னீஸ்கா ரட்வன்ஸ்கா முன்னேறியுள்ளார்.
சீன ஓபன் டென்னிஸ் போட்டிகள் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறதுஇதில்நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் சீனாவின் வாங் கியாங்கை எதிர்த்துபோலந்து வீராங்கனையான அக்னீஸ்கா ரட்வன்ஸ்கா ஆடினார்இப்போட்டியில்ரட்வன்ஸ்கா, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குமுன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் வீராங்கனை யான கிறிஸ்டினாமாடெனோவிக் 6-3, 5-7, 7-6 (7/4) என்ற செட் கணக்கில் செர்பியாவின் ஜெலீனாஜான்கோவிக்கை தோற்கடித்தார்.
ஆசிய பைக் பந்தயம்
ஆசிய ரோடு ரேசிங் சாம்பியன் ஷிப் மற்றும் ஆசிய ட்ரீம் கோப் பைக்கான பைக்பந்தயத்தின் 5-வது சுற்று டெல்லியில் உள்ள புத்தா சர்வதேச சர்க்யூட்டில்நடைபெற்றதுஇதில் இந்தியாஆஸ்திரேலியாஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளைசேர்ந்த 19 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் இருந்து ஹரி கிருஷ்ணன்ராஜீவ் சேதுமதன குமார் ஆகியோர்பங்கேற்றனர்ஆசிய ட்ரீம் கோப்பைக்கான பந்தயத்தில் ஆஸ்திரேலியாவின்புராக் பியர்சன் பந்தய தூரத்தை 17:01:625 விநாடிகளில் கடந்து முதலிடத்தைபிடித்தார்.தாய்லாந்தின் மோன்ட்ரி 17:02:138 விநாடிகளில் 2-வது இடத்தையும்,மலேசியாவின் ஹபிஸ் நோரஸ்மான் 17:02:540 விநாடிகளில் 3-வது இடத்தையும்கைப்பற்றினர்.

இந்தியாவின் ஹரி கிருஷ்ணன் 11-வது இடத்தையும்மதன குமார் 15-வதுஇடத்தையும் பிடித்தனர்.சூப்பர் ஸ்போர்ட்ஸ் 600 சிசி பிரிவில் மேற்குஆஸ்திரேலியா வின் அந்தோனி கெய்த் 31:03:153 விநாடிகளில் இலக்கைஅடைந்து முதலிடம் பிடித்தார்.
வர்த்தகம் :
டெல்லியில் அக்.12-ல் தொடங்குகிறதுமுதலாவது ‘பிரிக்ஸ்’ வர்த்தகக்கண்காட்சி
பிரேசில்ரஷியாஇந்தியாசீனாதென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளைஉள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் சார்பிலான முதலாவது வர்த்தகக்கண்காட்சி டெல்லியில் இம்மாதம் 12-ம் தேதி தொடங்க உள்ளது.

பிரிக்ஸ் வர்த்தக அமைப்பு இந்த கண்காட்சிக்கான ஏற்பாட்டைசெய்துள்ளது.கோவாவில் பிரிக்ஸ் தலைவர் கள் சந்திக்கும் கூட்டம் இம்மாதம்15-ம் தேதி தொடங்குகிறதுஅக்கூட்டத்துக்கு முன்பாக இந்த வர்த்தகக்கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.ரஷியாவில் கடந்த ஆண்டுபிரிக்ஸ் மாநாடு நடைபெற்றபோது வர்த்தகக் கண்காட்சியை நடத்துவது உறுப்புநாடுகளுக்கு பலனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தை பிரதமர் நரேந்திர மோடிவலியுறுத்தி பேசினார்.டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்த வர்த்தகக்கண்காட்சி நடைபெற உள்ளதுமொத்தம் 20 துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள்தங்களது தயாரிப்பு களை இங்கு காட்சிப்படுத்த உள்ளன.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுங்கக் கட்டணம் மாற்றி அமைப்பு
சுங்கச்சாவடிகளில் சில்லரை கொடுப்பதில் ஏற்படும் தாமதத்தால் போக்குவரத்துநெரிசல் ஏற்படுகிறதுஇதற்குத் தீர்வுகாண மத்திய அரசு முடிவெடுத்திருக் கிறது.இதன்படி சுங்க கட்டணங்கள் முழுமைப்படுத்தபடும்.

அனைத்துக் கட்டணங்களையும் ஐந்து ரூபாயின் மடங்குகளாக மாற்றிஅமைக்கப்படுவதாக சாலைப் போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரி ஒருவர்கூறினார்.போக்குவரத்து நெரிசல்அதனால் கூடுதல் எரிபொருள் செலவு,சாலைகள் சரியில்லாத தால் அடிக்கடி வண்டியை நிறுத்த வேண்டி இருப்பது,சுங்க சாவடிகளில் சில்லரைத் தட்டுப்பாட்டால் ஏற்படும் காலதாமதம் மற்றும்நெருக்கடி காரணமாக ஆண்டுக்கு 2,130 கோடி டாலர் (சுமார் ரூ.1.4 லட்சம் கோடி)அளவுக்கு இந்தியாவில் நஷ்டம் ஏற்படுகிறது.

இதற்குத் தீர்வு காணும் வகையில் சுங்கச் சாவடி கட்டணம் 5 ரூபாயின்மடங்குகளாக மாற்றி அமைக்கப்படும்முதல்கட்டமாக 26 சுங்கச் சாவடிகளில்இந்தக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதுவிரைவில் நாடு முழுவதும்அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படும்ஐந்துரூபாயின் மடங்குக்கு மிக அருகில் இருக்கும் தொகைக்கு கட்டணம் மாற்றிஅமைக்கப்படும்.

No comments: