Friday 21 October 2016

Daily Current Affairs For Competitive Exam - 21st October

உலகம் :

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி
மேற்கு ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுஇந்த நிலநடுக்கம் 6.6ரிக்டர் அளவு கொண்டதாக பதிவாகியுள்ளதுவீடுகள் குலுங்கியதால் மக்கள்பீதிக்குள்ளாகினர்.


இது தொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமைஅதிகாலை 2மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுஇந்த நிலநடுக்கம் ரிக்டர்அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளதுஎன கூறப்பட்டுள்ளது.
'வடகொரியாவின் ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி'
வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வியில்முடிந்துள்ளதுஇந்த வாரத்தில் வடகொரியா நடத்திய இரண்டாவது ஏவுகணைசோதனை இதுவாகும்.
வடகொரியா இன்று (வியாழக்கிழமைநடத்தியஇலக்கை மிதமான வேகத்தில்சென்று தாக்கக் கூடிய ஏவுகணை சோதனை தோல்வியடைந்ததாகதென்கொரியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தென்கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், "வடகொரியாவின் சமீபகால செயல்பாடு உலகையே அச்சுறுத்தும் வகையில்உள்ளதுஎன்று கூறினார்.
முன்னதாகஅமெரிக்காவின் குவாம் தீவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தைதாக்கும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனையை வடகொரியாதிங்கட்கிழமை நடத்தியது.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா.நா.சபைஉள்ளிட்டவை தங்களது கண்டனத்தை தெரிவித்தனஇந்த நிலையில் மீண்டும்வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் சீனக் கடல் விவகாரம்சீனா - பிலிப்பைன்ஸ் அதிபர்கள் பேச்சு
சீனாவுடன் நிலவும் தென் சீனக் கடல் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தையில்ஈடுபட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட்சீன அதிபர் ஜி ஜின்பிங்கைசந்தித்தார்.
தென் சீனக் கடல் பிரச்சினை தொடர்பாக சீனாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடசீன தலைநகர் பெய்ஜிங்கில் இன்று (வியாழக்கிழமைபிலிப்பைனஸ் அதிபர்ரோட்ரிகோ டியுடெர்ட் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தைநடத்தினார்.
இந்தச் சந்திப்புக்கு முன்னதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்டுக்குசீனாவின் சார்பில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பு குறித்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ கூறும்போது, "சீனஅதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு பிலிப்பைன்ஸ்சீன உறவை மேலும்உறுதியடையச் செய்துள்ளதுமேலும்பிலிப்பைன்ஸை காலனியாதிக்கம்செய்து சுரண்டிய அமெரிக்காவுடன் இனி உறவு வைத்துக் கொள்ளப்போவதில்லைஎன கூறியுள்ளார்.
இந்தியா :
பாஜகவில் இணைந்தார் ரீட்டா பகுகுணா
காங்கிரஸ் மூத்த தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷிஅக்கட்சியிலிருந்து விலகிபாஜகவில் வியாழக்கிழமை இணைந்தார்அப்போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தஅவர்பாஜகவை விட்டால் தேசத்துக்கு வேறு மாற்று கிடையாது என்றும்தெரிவித்தார்.
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரான ஹேமாவதி நந்தன் பகுகுணாவின்மகளான ரீட்டா பகுகுணாகடந்த 24 ஆண்டுகளாக அக்கட்சியில் பல்வேறுபொறுப்புகளை வகித்தவராவார்.
உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக இருந்த அவர் அந்த மாநிலத்தில்நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் கட்சியின் முதல்வர் வேட்பாளராகமுன்னிறுத்தப்படலாம் என்று கூறப்பட்டதுஆனால்ஷீலா தீட்சித்தை முதல்வர்வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவித்தது.
தமிழ்நாடு : 
வெள்ள பாதிப்புகளைத் தடுக்க 20 பேர் கொண்ட குழு கூடி ஒரு வாரத்தில்முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
வெள்ள பாதிப்புகளைத் தடுக்க தமிழக அரசு அமைத்துள்ள 20 பேர் கொண்டபேரிடர் மேலாண்மைக் குழு ஒரு வாரத்தில் கூடி முக்கிய முடிவுகளை எடுக்கஅரசுக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவி்ட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தொடர் பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தானாக முன் வந்துவழக்கை விசாரித்ததுஇதுதொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆலோசனைக்குழுவை அரசு அமைக்காவி்ட்டால் நீதிமன்றமே அமைக்கும் என உயர்நீதிமன்றம் எச்சரித்து இருந்தது.
இந்நிலையில்இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில்விசாரணைக்கு வந்ததுஅப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமைவழக்கறிஞர் பேரிடர் மேலாண்மை தொடர்பாக 20 பேர் கொண்டஆலோசனைக்குழு அமைத்து அரசு கடந்த 18-ம் தேதி ஆணை பிறப்பித்துள்ளதாககூறி அந்த ஆணையை சமர்ப்பித்தார்.
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அலுவலக உதவியாளர் பணிக்கு அக்.31-க்குள் விண்ணப்பிக்கலாம்
அம்பத்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக வுள்ள அலுவலகஉதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பு வோர் அக்டோபர் 31-ம் தேதிக்குள்விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரி வித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அம்பத் தூரில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சிநிலையத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதுஅந்தப்பணியிடத்தை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளதுபொதுப்பிரிவில்இனசுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு மிதி வண்டி ஓட்டதெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்இருப்பினும் அரசுவிதிகளின்படி வயது தளர்வு உண்டுஇந்த பணியிடத்துக்கு தகுதியுள்ளோர்,தங்களது சாதிமுன் அனுபவ சான்றுவீட்டு முகவரிதொலைபேசி எண் ஆகியவிவரங்களுடன், ‘துணை இயக்குநர்முதல்வர்அரசினர் தொழிற்பயிற்சிநிலையம்அம்பத்தூர்சென்னை - 600098 (தொலை பேசி எண்:044 - 26252453)’ என்றமுகவரிக்கு அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்டஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக உடல் உறுப்பு தானத்துக்கான செல்போன்செயலி
இந்தியாவில் முதல்முறையாக ஒருங்கிணைந்த மருத்துவ சேவை மற்றும்உடல் உறுப்பு தானத்துக் கான செல்போன் செயலி (ஆப்ஸ்கோவையில்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தன்வந்திரி’ என்ற பெயரில் செயல்படும் இந்த செயலியை ‘கூகுள் ப்ளே ஸ்டோர்மற்றும் ‘ஐஓஎஸ்’ மூலம் பதிவிறக்கம் செய் யலாம்இதில்நாடு முழுவ தும் 15-க்கும் மேற்பட்ட நகரங் களில் உள்ள 30 ஆயிரம் மருத்து வர்கள், 20ஆயிரத்துக்கும் மேற் பட்ட மருத்துவமனைகள்ஆய்வ கங்கள்மருந்தகங்கள்உள்ளிட்ட வற்றின் பட்டியல் இடம்பெற்றுள் ளன.
இதுகுறித்து தன்வந்திரி மருத் துவ சுற்றுலா நிறுவன மேலாண் இயக்குநர்பி.சிவசெந்தூரான்செயல் இயக்குநர் ஆர்.பிரபா கரன் ஆகியோர் கோவையில்செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவதுமுற்றிலும் இலவசமாகவழங்கப்படும் இந்த செயலி மூலம் ஆங்கில மருத்துவம் மட்டுமின்றிசித்தா,ஆயுர்வேதம்யுனானி சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்மருத்துவமனைகள்,மருந்தகங் கள் உள்ளிட்டவற்றை அணுகு வதும்சிகிச்சை பெறுவதும் மிக வும்எளிதாகும்.
விளையாட்டு :
அபார பந்துவீச்சுஇந்தியாவை வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியைஈட்டியது நியூஸிலாந்து
டெல்லியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 6 ரன்கள்வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரை 1-1என்று சமன் செய்தது.
இதன் மூலம் நியூஸிலாந்துக்காக தொடரின் முதல் சதத்தை கேன் வில்லியம்சன்அடிக்க தொடரின் முதல் வெற்றியை ஈட்டியது நியூஸிலாந்து.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள்எடுக்கதொடர்ந்து ஆடிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
கேப்டன் தோனி 39 ரன்கள் எடுத்து சவுதியின் பந்து வீச்சில் சவுதியே பிடித்த அதிஅற்புதமான கேட்சிற்கு வெளியேறபிறகு மார்டின் கப்தில் ஒரே ஓவரில் அக்சர்படேல் (17), அமித் மிஸ்ரா (1) ஆகியோரை பெவிலியன் அனுப்ப இந்தியா 40.5ஓவர்களில் 183/8 என்று தோல்வி முகம் கண்டது.
கால்பந்து தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்
பிபா வெளியிட்டுள்ள உலக கால்பந்து தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 11இடங்கள் முன்னேறி 137-வது இடத்தை பிடித்துள்ளது.
தரவரிசையில் 114-வது இடத்தில் உள்ள புயர்டோ ரிகோவை கடந்த மாதம்நடைபெற்ற போட்டியில் வீழ்த்தியதால் இந்திய அணிக்கு 230 புள்ளிகள்கிடைத்தனகடைசியாக இந்திய அணி கடந்த 2010-ம் ஆண்டு 137-வது இடத்தைபிடித்திருந்தது.
சீன ஓபனில் களமிறங்கும் சாய்னா
முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட இந்திய பாட்மிண்டன்நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் தற்போது பயிற்சியைதொடங்கியுள்ளார்.
இந்நிலையில் அடுத்த மாதம் 12-ம் தேதி நடைபெறும் சீன ஓபன் பாட்மிண்டன்போட்டியில் சாய்னா களமிறங்க உள்ளதாக அவரது தந்தை ஹர்விர் சிங் நேற்றுதெரிவித்தார்.
ஹாக்கியில் இந்தியா அபார வெற்றி
மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை சாம்பி யன்ஷிப் ஆடவர்ஹாக்கியில் இந்தியா தனது முதல் ஆட்டத் தில் 10-2 என்ற கோல் கணக்கில்ஜப்பானை வீழ்த்தியதுஇந்திய அணி தரப்பில் ருபிந்தர் பால் சிங் 6 கோல்கள்அடித்து அசத்தினார்.
ராமன்தீப் சிங் 2, ஆபான் யூசுப்தல்வீந்தர் சிங் ஆகியோல் தலா ஒரு கோல்அடித்தனர்இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் நாளை கொரியாவை சந்திக்கிறது.நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் 2-4 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம்தோல்வியடைந்தது.
வர்த்தகம் :
பங்குச் சந்தையில் பிஎப் நிதி ரூ.9,148 கோடி முதலீடு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் நிதி ரூ.9,148 கோடியைபங்குச் சந்தை திட்டங்களில் (இடிஎப்முதலீடு செய்துள்ளதாக தொழிலாளர்நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்மேலும் கடந்தமாதம் செப்டம்பர் 30-ம் தேதி வரை முதலீடு செய்த தொகைக்கு 9.43 சதவீதம்லாபம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
1952-ம் கொண்டு வந்த தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தில்சீர்திருத்தம் கொண்டு வருவது பற்றி தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் மறுபரிசீலனை செய்துவருகிறது. 20-க்கும் குறைவாக பணியாளர்கள் உள்ளநிறுவனங்களை இபிஎப் திட்டங்களில் கொண்டு வருவதை மறுபரிசீலனைசெய்ய இருப்பதாக பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.
ரூ.3,340 கோடிக்கு அபிரியோ நிறுவனத்தை வாங்குகிறது விப்ரோ
நாட்டின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோகிளவுட் சேவைகளைவழங்கும் நிறுவனமான அபிரியோவை ரூ.3,340 கோடிக்கு வாங்கமுடிவெடுத்திருக்கிறதுஇந்த இணைப்பு முழுமையடையும் பட்சத்தில் இந்ததுறை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முக்கியமான மாற்றம் நிகழும் எனவிப்ரோ தெரிவித்துள்ளது.
தற்போது விப்ரோ நிறுவனத்தில் உள்ள கிளவுட் சம்பந்தமான சேவைகளைஅபிரியோ நிறுவனத்தின் கீழ் கொண்டுவர முடிவெடுத்திருக்கிறதுதலைமைச்செயல் அதிகாரியாக செயல்பட்டு வரும் கிறிஸ் பார்பின் அதே பொறுப்பில்தொடர்வார்.
கடந்த 2006-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது அபிரியோ நிறுவனம்.ஜெய்பூர்சான்பிரான்ஸிஸ்கோடப்ளின்லண்டன் மற்றும் டோக்கியோஉள்ளிட்ட நகரங்களில் அலுவலகங்கள் உள்ளனஉலகம் முழுவதும் 1,250பணியாளர்கள் உள்ளனர்கோக கோலாபேஸ்புக்சோனி பிளே ஸ்டேஷன்உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாவர்கடந்த2015-ம் ஆண்டு 19.60 கோடி டாலர் வருமானம் ஈட்டியுள்ளது.
இந்த இணைப்பு வரும் டிசம்பர் மாதத்துக்குள் முழுமையடையும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: