உலகம் :
சிரியாவில் வான்வழித் தாக்குதலில் 12 பேர் பலி
சிரியாவில் பொதுமக்கள் இருப்பிட பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.
சிரியாவின் அலெப்போ நகரின் இன்று (திங்கட்கிழமை) பொதுமக்கள்குடியிருப்புப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதல் குறித்து சிரிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டதகவலில், "பொதுமக்கள் பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 12பேர் பலியாகினர். வான்வழித் தாக்குதலில் தரைமட்டமான கட்டிடஇடிப்பாடுகளில் பலர் சிக்கியுள்ளனர்.
மேலும், அலெப்போ நகரின் கிழக்கில் போராட்டக்காரர்கள் பகுதியில் நடந்தசண்டையில் 5 சிறுவர்கள் பலியாகினர்" என்று கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அலெப்போ நகரில் நடைபெற்ற சண்டையில் 45 பேர்உயிரிழந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி: தென்கொரியா
வடகொரிய அரசு சமீபத்தில் அமெரிக்காவுக்கு எதிராக நடத்திய கண்டம் விட்டுக்கண்டம் பாயும் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக தென்கொரியராணுவம் கூறியுள்ளது.
இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) தென்கொரிய ராணுவம் தரப்பில்வெளியிட்ட தகவலில், "வடகொரியாவின் குசாங் பகுதியில் கடந்தசனிக்கிழமையன்று, அமெரிக்காவின் குவாம் தீவில் உள்ள அமெரிக்க ராணுவத்தளத்தை தாக்கும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனையைவடகொரியா நடத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான இந்த சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனைவடகொரியாவுக்கு தோல்வியைத் தந்திருக்கிறது. வடகொரியாவின் சோதனைகுறித்து ஆய்வு செய்ய தென்கொரியாவுக்கு நேரம் தேவைப்படுகிறது' என்றுகூறப்பட்டுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஆரம்பிக்கப்பட்ட சில மணிநேரங்களிலே தோல்வியடைந்ததாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சரும்கூறியிருக்கிறார்.
இலங்கை அரசியல் சாசனத்தில் அதிரடி சீர்திருத்தங்கள்
இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில், அதிபரின் அதிகாரம் குறைப்பு;தேர்தல் நடைமுறை மாற்றம்; மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் உள்ளிட்ட,பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளதாக, சிறுபான்மை தமிழர்களின்பிரதான கட்சியான, தமிழ் தேசிய கூட்டணி தெரிவித்து உள்ளது.
கூடுதல் அதிகாரம்
இலங்கையின் வவுனியா நகரில், டி.என்.ஏ., எனப்படும், தமிழ் தேசிய கூட்டணிமூத்த தலைவர் சுமந்திரன் பேசியதாவது: அரசியல் சாசனத்தில், பல்வேறுசீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதிபரின் அதிகாரங்கள் கணிசமாககுறைக்கப்படும்; தேர்தல் நடைமுறையில் பெரும் மாற்றம் செய்யப்படும்;மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க, சாசனம் வகை செய்யும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியா :
தில்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரி விதிப்பு விகிதத்தைஅறிவிக்க வாய்ப்பு
சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) குழுவின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம்தில்லியில் செவ்வாய்க்கிழமை (அக்.18) தொடங்குகிறது. தொடந்து 3 நாள்கள்நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி சட்டம் தொடர்பாக பல்வேறு முக்கியமுடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, ஜிஎஸ்டிவரி விதிப்பு விகிதம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும்தெரிகிறது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்புக்கு வித்திடும் ஜிஎஸ்டி சட்டத்தைஅமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. முன்னதாகஇது தொடர்பான மசோதா, பலத்த போராட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தின்இரு அவைகளிலும் நிறைவேறின.
என்எஸ்ஜி-யில் இந்தியா இணைய உதவுவோம்: மோடியிடம் பிரேசில்அதிபர் உறுதி
என்எஸ்ஜி-யில் இந்தியா இணைய உதவுவதாக பிரதமர் நரேந்திர மோடியிடம்பிரேஸில் அதிபர் மிஷெல் டெமர் உறுதியளித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேஸில் அதிபர்மிஷெல் டெமர், இந்தியா வந்துள்ளார். அவரும் பிரதமர் நரேந்திர மோடியும்கோவாவில் திங்கள்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதுபயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காகபிரேஸிலுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிப்பதாக மோடி தெரிவித்தார். மேலும்என்எஸ்ஜி எனப்படும் அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில்இணைவதற்கான இந்தியாவின் விருப்பத்தை எடுத்துக் கூறினார்.
அப்போது, இந்த விவகாரத்தில் இந்தியாவின் விருப்பதைப் புரிந்துகொண்டதாகவும், என்எஸ்ஜி-யில் இந்தியா இணைவதற்கு மற்ற நாடுகளுடன்இணைந்து பிரேஸில் பாடுபடும் என்று டெமர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு :
காவிரி பிரச்சினையில் மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியல்: தமிழகம்முழுவதும் 30 ஆயிரம் பேர் கைது-டெல்டா மாவட்டங்களில் ரயில்கள் ரத்து
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம்முழுவதும் விவசாய சங்கத்தினர், பல்வேறு கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், வைகோ,ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், திருமாவளவன், ஜி.கே.வாசன் உட்பட 30ஆயிரத் துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்துஅக்டோபர் 17, 18 தேதி களில் தமிழகம் முழுவதும் 48 மணி நேர தொடர் மறியல்போராட்டத் துக்கு தமிழ்நாடு விவசாய சங்கங் களின் கூட்டியக்கம் அழைப்புவிடுத் திருந்தது. இதற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்தியகம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தமாகா உள்ளிட்ட அரசியல் கட்சிகளும்,விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்தி ருந்தன.
அதன்படி, முதல் நாளான நேற்று காலை 6 மணி முதலே ரயில் மறியல்போராட்டம் தொடங்கியது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் மறியலில்ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின்,முன்னாள் அமைச்சர் பூங்கோதை, எம்எல்ஏக்கள் பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன்,தாயகம் கவி, ரவிச்சந்திரன் உட்பட 1,700 பேர் கைது செய்யப்பட்டனர்.
டிசம்பர் 3-ம் தேதி நடக்கிறது ஆசிரியர் திறன் மேம்பாட்டுக்கான 'சென்டாஒலிம்பியாட்' போட்டி: அக்.31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்
ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் டிசம்பர் 3-ம் தேதி நாடுமுழுவதும் நடத்தப்படவுள்ள ‘சென்டா ஒலிம்பி யாட்’ போட்டிக்கு அக்டோபர் 31-ம்தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
‘சென்டா டீச்சிங் புரொஃபஷ் னல்ஸ் ஒலிம்பியாட்- 2016’ என்பது ஆசிரியர்களின்திறமையை மேம்படுத்தும் வகையில் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிஆகும். இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் நாடு முழுவதும் 22 நகரங்களில்டிசம்பர் 3-ம் தேதி சென்டா போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளை ‘திஇந்து’நாளிதழ், மைக்கல் அண்ட் சூசன் டெல் ஃபவுண்டேஷன் ஆகியவைஇணைந்து நடத்துகின்றன.
உள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு நீடிப்பு
உள்ளாட்சித் தேர்தல் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரும் மாநிலத் தேர்தல்ஆணைய மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னைஉயர் நீதிமன்றம். இதனால், உள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்குதொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் திமுக தரப்பும், மாநிலத் தேர்தல் ஆணையமும் 4 வாரங்களுக்குள்பதில் மனு தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் ரத்து உத்தரவுக்கு தடை கோரிய மாநிலத் தேர்தல்ஆணையத்தின் மனு இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை உயர் நீதிமன்றம் 2-வது அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கஉயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை 4வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழக அரசு மற்றும் திமுக 4 வாரங்களுக்குள்பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தஉத்தரவு மூலம் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது மேலும் 4வாரங்களுக்கு தொடர்கிறது.
விளையாட்டு :
டென்மார்க் பாட்மிண்டன் இன்று தொடக்கம்: பி.வி.சிந்து மீது அதிகஎதிர்பார்ப்பு
டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மிண்டன் தொடர் டென்மார்க்கின்ஓடென்ஸ் நகரில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியாவின்பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். ரியோ ஒலிம்பிக்கில் அவர் வெள்ளிப் பதக்கம்வென்ற பிறகு பங்கேற்கும் முதல் தொடர் என்பதால் அதிக எதிர்பார்ப்புஎழுந்துள்ளது.
ஒலிம்பிக் பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனைஎன்ற சாதனையை நிகழ்த்திய சிந்து, கடந்த ஒன்றரை மாதகாலமாக பாராட்டுமழையில் நனைந்தார். இந்நிலையில் அவரது விளையாட்டை ரசிகர்கள் காணும்நேரம் மீண்டும் வந்துள்ளது. 6-ம் நிலை வீராங்கனையான சிந்து, டென்மார்க்ஓபனில் தனது முதல் ஆட்டத்தில் சீனாவின் ஹீ பிங்ஜியோவுடன் மோதுகிறார்.
இந்த ஆட்டம் நாளை நடை பெறுகிறது. போட்டி அட்டவணை யின் 2-வதுபாதியில் இடம் பெற்றுள்ள சிந்து முதல் சுற்றை கடக்கும் பட்சத்தில் அடுத்தடுத்தசுற்றுகளில் 2-ம் நிலை வீராங்கனை யான தாய்லாந்தின் இன்டனான், 4-ம் நிலைவீராங்கனையான கொரியாவின் சங் ஜி ஹூயுன், 5-ம் நிலை வீராங்கனையானசீன தைபேவின் டா டிசு யிங் ஆகியோருடன் மோதக்கூடும்.
வர்த்தகம் :
’மேட் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் 30 பேர் பயணிக்கக் கூடிய பேட்டரி பஸ்:அசோக் லேலண்ட் அறிமுகம்
ஹிந்துஜா குழுமத்தின் அங்கமான அசோக் லேலண்ட் நிறுவனம் `மேட் இன்இந்தியா’ திட்டத்தின்கீழ் பேட்டரியில் ஓடும் பஸ்ஸை தயாரித்துஅறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பஸ்ஸில் 30 பேர் வரை பயணிக்கலாம். பயணிகளின் எண்ணிக்கையை 65வரை உயர்த்தவும் வாய்ப்புள்ளது. இந்த பேட்டரி பஸ்ஸை ஒருமுறை சார்ஜ்செய்தால் 120 கி.மீ. வரை ஓடும் என்று அறிமுக விழாவில் பேசிய நிறுவனத்தின்நிர்வாக இயக்குநர் வினோத் கே தாசரி தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டரி பஸ் தயாரிப்புக்கு இந்நிறுவனம் ரூ. 22 கோடி முதலீடுசெய்ததாகவும் ஒட்டுமொத்தமாக இத்திட்டத்துக்கு ரூ.500 கோடி முதலீடு செய்யஉள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். முதலீடுகள் படிப்படியாகமேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த பஸ்ஸின் விலை ரூ. 1.50 கோடி முதல் ரூ. 3.50 கோடி வரையாகும்.
காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க ஜெர்மன் அமைப்புடன் ஒப்பந்தம்
இந்திய காற்றாலை மின் உற்பத்தி யாளர் கூட்டமைப்பு (ஐடபிள்யூடி எம்ஏ)ஜெர்மனியின் மெசி ஹூசும் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. மரபுசாரா மின் உற்பத்தி திட்டங் களை மேம்படுத்தும் வகையில்இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து இந்தோ - ஜெர்மன் மேம்பாட்டுகவுன்சில் உதவியுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
சென்னையில் நேற்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் ஜெர்மனியின்மின்சாரம் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ராபர்ட் ஹபீக் கலந்து கொண்டுபேசும்போது இந்த ஒப்பந்தம் வெறுமனே தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதற்கானது மட்டுமல்ல. இரு நாடுகளிடையிலான உறவைவலுப்படுத்துவதற்கும் உதவும். மரபு சாரா எரிசக்தியை ஊக்குவிக்க வேண்டும்என்ற இரு நாடுகளின் இலக்கை எட்டவும் இது பயன்படும் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment