Saturday 15 October 2016

Daily Current Affairs For Competitive Exam - 15th October

உலகம் :

இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு புதிய கவுரவம்
உலகின் மிக நீண்ட கால மன்னராட்சிக்கு சொந்தக்காரர் என்றபெருமையை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்பெற்றுள்ளார்.



தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெஜ் (88) நேற்று முன் தினம்காலமானார்கடந்த 1946-ல் அரியணை ஏறிய அவர் 70 ஆண் டுகள், 4மாதங்கள் மன்னராக நீடித்தார்உலகின் மிக நீண்டகால மன்னராகஅவர் விளங்கினார்.
அவரது மறைவைத் தொடர்ந்து அந்தப் பெருமை தற்போதுஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கிடைத்துள்ளது. 90வயதாகும் அவர் 1952-ம் ஆண்டு இங்கிலாந்தின் ராணியாகபதவியேற்றார்அவர் 64 ஆண்டுகள் 8 மாதங்களைப் பூர்த்திசெய்துள்ளார்.
தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சுவாசிலாந்தின் மன்னராக இருந்தசவுபுஸா, 4 மாத குழந்தையாக இருந்தபோது முடிசூட்டப்பட்டார்.அவர் 82 ஆண்டுகள் 253 நாட்கள் பதவியில் இருந்தார்அவர்தான்உலகின் மிக நீண்டகால மன்னர் ஆவார்கடந்த 1982-ம் ஆண்டில்அவர் உயிரிழந்தார்.
காமன்வெல்த்திலிருந்து மாலத்தீவு வெளியேறியது
மாலத்தீவுக்கு எதிராக காமன்வெல்த் அமைப்பு பாரபட்சமாகசெயல்படுகிறதுநாட்டின் உள் விவகாரங்களில் அந்த அமைப்புதலையிடுகிறதுஎனவே நாட்டின் சுதந்திரம்இறையாண்மையைப்பாதுகாக்க காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவுவெளியேறி உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாலத்தீவின் அறிவிப்பு குறித்து காமன்வெல்த் பொதுச்செயலாளர்பேட்ரிகா ஸ்காட்லேண்ட் கூறிய போதுஇதை ஒரு தற்காலிகபிரிவாகவே கருதுகிறோம்மீண்டும் காமன்வெல்த் குடும்பத்தில்மாலத்தீவு இணையும் என்று அவர் கூறினார்.
மாலத்தீவின் அதிபராக இருந்த முகமது நஷீத் ராணுவம் மற்றும்போலீஸ் துறை மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததால்அவருக்கு எதிராக போராட்டம் வெடித்ததுஇதைத் தொடர்ந்து 2012-ல் அவர் பதவி விலகினார்.
மாலத்தீவில் தற்போது அதிபர் அப்துல்லா யாமின் அப்துல் கயூம்தலைமையில் ஆட்சி நடந்து வருகிறதுஅங்கு ஜனநாயகம்நசுக்கப்பட்டு வருவதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டிவருகின்றன.
இந்தியா :
நாட்டிலேயே முதன்முறை.பி.யில் 'சிறப்பு போலீஸ்அதிகாரி'களாக 2 லட்சம் மாணவிகள் நியமனம்
இரண்டு லட்சம் மாணவிகளை 'சிறப்பு போலீஸ் அதிகாரிகள்எனநியமிக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக அதற்கான சான்றிதழைஇன்று வெள்ளிக்கிழமைநடைபெறும் நிகழ்ச்சியில் 25 மாணவிகளுக்கு அம்மாநில முதல்வர்அகிலேஷ்சிங் யாதவ் அளிக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் படிப்பறிவு இல்லாத மற்றும் நலிந்த பெண்கள்பிரிவினர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘1090 பெண்கள் சக்திவரிசை (Women Power Line) எனும் பெயரில் ஒரு திட்டம்அமலாகிறது.
பெண்களை மேம்படுத்தவும்தம்மை சுற்றி நடைபெறும்குற்றங்களை தடுக்கவும் இதில் முயற்சிக்கப்படுகிறதுஇதன்மூலம்,உபியின் ஏழை மற்றும் நலிந்த பிரிவின் பெண்களுக்கு உதவுவதுஉத்தரப் பிரதேச அரசின் நோக்கம் ஆகும்.
தமிழ்நாடு : 
உலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு மையம் தேவை: ‘அமெட்பல்கலைக்கழக வேந்தர் வேண்டுகோள்
'மூன்றாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு 2016' சென்னையில்நடைபெற்றதுஇம்மாநாட்டுக்கு உலகத் தமிழர் பொருளாதாரஅமைப்பின் தலைவர் வி.ஆர்.எஸ்.சம்பத் தலைமை வகித்தார்.கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்துமொரீசியஸ்துணை ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரிஇளைஞர் நலன்மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யோகிதா சுவாமிநாதன்,இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ்.ராதாகிருஷ்ணன்விஐடிபல்கலைவேந்தர் ஜி.விஸ்வநாதன்பாரத் பல்கலைநிறுவனர்எஸ்.ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் ‘அமெட்’ பல்கலைவேந்தர் நாசேஜெ.இராமச்சந்திரன் 'தமிழ்நாட்டில் தொழில் வாய்ப்புகள்', 'தமிழ்நாட்டில் கல்வியில் வாய்ப்புகள்ஆகிய தலைப்புகளில்பேசினார்அவர் பேசியதாவது:
இன்றைய சூழலில் உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத்துறையில் வல்லுநர்களாக தமிழர்கள் உயர்ந்துள்ளார்கள்.எனவேதான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் “நான் அமெரிக்கஅதிபரானால் இந்திய பொறியாளர்களுக்கு தங்கு தடையின்றிஅமெரிக்க விசா கொடுப்பேன்” என்று கூறினார்அப்படிப்பட்டஉயர்ந்த நிலையை நாம் பெற்றுள்ளோம்.
நான்கு நாட்களாக செய்திக் குறிப்பு அனுப்பாத அப்போலோ
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கடந்த 4நாட்களாக அப்போலோ மருத்துவமனை சார்பில் எவ்வித செய்திக்குறிப்பும் வெளியிடப்படவில்லை.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 10-ம் தேதிக்குப் பின்னர்அப்போலோ மருத்துவமனை சார்பில் செய்திக் குறிப்பு ஏதும்வெளியாகவில்லை.
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துகுறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்அவருக்கு லண்டன்மருத்துவர் ரிச்சட் பீல்எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானிஅஞ்சான்திர்காநிதிஷ் நாயக் ஆகியோர் சிகிச்சை அளித்து வரும் நிலையில்,கடந்த 10-ம் தேதிக்குப் பின்னர் அப்போலோ மருத்துவமனைசார்பில் செய்திக் குறிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி மருத்துவர்கள்இருவர் ஞாயிற்றுக்கிழமை சென்னை வருவார்கள் எனக்கூறப்படுகிறது.
விளையாட்டு :
அஜெய் ஜெயராம் முன்னேற்றம்
டச் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் நடப்பு சாம்பியனானஇந்தியாவின் அஜெய் ஜெயராம் கால் இறுதிக்கு முன்னேறிஉள்ளார்கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அவர் நார்வே நாட்டைசேர்ந்த மாரியஸ் மைரேவை 21-6, 21-6 என்ற நேர் செட்டில்தோற்கடித்தார். 16-ம் நிலை வீரரான ஜெயராம் கால் இறுதியில்பிரேசிலை சேர்ந்த யகோர் கோயல்கோ டி ஓலிவைராவைசந்திக்கிறார்.
மற்றொரு இந்திய வீரரான காஷ்யப் 18-21, 18-21 என்ற நேர் செட்டில்6-ம் நிலை வீரரான எஸ்டோனியாவின் ரவுல் மஸ்டிடம்தோல்வியடைந்தார்.
ஏஞ்சலிக் கெர்பர் தோல்வி
ஹாங்காங் ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதியில் முதல்நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர்தோல்வியடைந்தார்.
கெர்பர்தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ளஆஸ்திரேலியாவின் டரியா கவ்ரிலோவாவிடம் 3-6, 1-6 என்ற நேர்செட்டில் எளிதாக வீழ்ந்தார்இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 14நிமிடங்களில் முடிவடைந்ததுகடந்த வாரம் நடைபெற்ற சீன ஓபன்டென்னிஸ் போட்டியில் கெர்பர் 2-வது சுற்றுடன் வெளியேறினார்என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் டென்னிஸ்போட்டியின் கால் இறுதியில் முதல் நிலை வீரரான செர்பியாவின்ஜோகோவிச் 3-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீரரானஜெர்மனியின் மிஸ்ஷா ஜிரெவை வீழ்த்தினார்இந்த ஆட்டம் 2மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெற்றது.
மற்றொரு கால் இறுதியில் 15-ம் நிலை வீரரான ஸ்பெயின்பாடிஸ்டா அகுட் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் 9-ம் நிலை வீரரானபிரான்சின் சோங்காவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 12 நிமிடங்களில் முடிவடைந்தது.
வர்த்தகம் :
இன்போசிஸ் நிகர லாபம் 6.1% உயர்வுவளர்ச்சி 8 - 9 சதவீதமாகஇருக்கும் என கணிப்பு
பெங்களூரு இன்போசிஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டுநிகர லாபம் 6.1 சதவீதம் உயர்ந்து ரூ.3,606 கோடியாக உள்ளதுஅதேசமயத்தில் குறுகிய காலத் தில் நிச்சயமற்ற சூழல் இருக்கும்என்றும்இந்த ஆண்டில் வருமானம் குறையும் என்றும்இன்போசிஸ் கூறியிருக்கிறதுவருமானம் குறைவது குறித்துநடப்பாண்டில் இரண்டாவது முறையாக இன் போசிஸ்தெரிவித்திருப்பது குறிப் பிடத்தக்கதுஇதன் காரணமாகவர்த்தகத்தின் தொடக்கத்தில் 5 சதவீதம் அளவுக்கு சரிந்தது.வர்த்தகத்தின் இடையே 52 வார குறைந்தபட்ச விலையான 996.25ரூபாயை தொட்டதுவர்த்தகத்தின் முடிவில் 2.3 சதவீதம் சரிந்து1,027 ரூபாயில் முடிவடைந்தது.
இதேபோல நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமானடிசிஎஸ்-ம் வருமானம் குறைவாக இருக்கக்கூடும் என்று தெரிவித்திருந்ததுகடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.3,398கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கதுநிறுவனத்தின் வருமானம்10.7 சதவீதம் உயர்ந்து ரூ.17,310 கோடியாக இருக்கிறதுகடந்தவருடம் இதே காலாண்டில் ரூ.15,635 கோடியாக இருந்தது.
டிசிபி வங்கி லாபம் 31% உயர்வு
டிசிபி வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 31 சதவீதம்உயர்ந்து 48.9 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறதுகடந்த ஆண்டுஇதே காலத்தில் ரூ.36.9 கோடியாக நிகர லாபம் இருந்ததுமொத்தவருமானம் ரூ.464 கோடியில் இருந்து ரூ.567 கோடியாகஉயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 1.72 சதவீதத்தில் இருந்து 1.75சதவீதமாக உயர்ந்திருக்கிறதுஆனால் நிகர வாராக்கடன் 0.87சதவீதத்தில் இருந்து 0.84 சதவீதமாக சரிந்திருக்கிறது.வாராக்கடனுக்காக 26.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுகடந்தவருடம் இதே காலாண்டில் 21.67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.நிகர வட்டி வரம்பு 3.79 சதவீதத்தில் இருந்து 3.96 சதவீதமாகஉயர்ந்திருக்கிறதுநிகர வட்டி வருமானம் 22 சதவீதம்உயர்ந்திருக்கிறதுடெபாசிட்டுகள் 30 சதவீதம் உயர்ந்து 17,685கோடியாக இருக்கிறதுகாசா விகிதம் 22-ஆக உள்ளதுநேற்றையவர்த்தகத்தின் முடிவில் 1.21 சதவீதம் சரிந்து 122.10 ரூபாயாக இந்தபங்கின் வர்த்தகம் முடிந்தது.

No comments: