உலகம் :
ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக அந்தோனியோ இன்று முறைப்படிநியமனம்
ஐ.நா.வின் புதிய பொதுச் செயலா ளராக அந்தோனியோ குத்தேரஸ் (67)முறைப்படி இன்று நியமிக் கப்பட உள்ளார்.
ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, இந்தப் பதவிக்கு வேறு ஒருவரைதேர்ந்தெடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் ரகசிய வாக்கெடுப்புநடத்தப்பட்டது.
இதில் போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரும் ஐ.நா.வின் அகதிகள்அமைப்பின் முன்னாள் தலைவருமான அந்தோனியோ குத்தேரஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை யடுத்து 193 உறுப்பு நாடுகளைக்கொண்ட ஐ.நா. பொது சபையின் இறுதி ஒப்புதலுக்காக இவரது பெயர் பரிந்துரைசெய்யப்பட்டது.
இந்நிலையில், புதிய பொதுச் செயலாளரை நியமிப்பது குறித்து புதன்கிழமைஇறுதி முடிவு எடுக் கப்பட உள்ளதாக உறுப்பு நாடு களுக்கு ஐ.நா. பொதுச்சபையின் தலைவர் பீட்டர் தாம்சன் சுற்ற றிக்கை அனுப்பி உள்ளார். எனவேஇன்று அந்தோனியோ முறைப்படி பொதுச் செயலாளராக தேர்ந் தெடுக்கப்படஉள்ளார்.
கனடாவில் தமிழ் கலாச்சார மாதம்: நாடாளுமன்றத்தில் தீர்மானம்நிறைவேற்றம்
இந்தியாவில் ஹிந்தி மற்றும் இதர பிராந்திய மொழிகளுக்கிடையே மொழிப்போர் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், ஆண்டு தோறும் ஜனவரிமாதத்தைத் தமிழ் கலாச்சார மாதமாக கொண்டாடப் போவதாக கனடா அரசுஅறிவித்துள்ளது. இதனால் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக கனடா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் பட்ட தீர்மானத்துக்குகட்சி பாகுபாடு இன்றி அனைத்து உறுப்பினர்களும் (283) அமோக ஆதரவுஅளித்தனர். ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அனைவரதுகை தட்டல்களுக்கு நடுவே இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறை வேறியது.
எம்-24 என்று பெயரிடப்பட்ட இந்தத் தீர்மானத்தில், “வரும் 2017-ம் ஆண்டு முதல்ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதமாக கொண்டாடமுடிவு செய்யப்பட்டுள்ளது. கனடா சமுதாயத்துக்காக கனடா வாழ் தமிழர்கள்ஆற்றி வரும் பங்களிப்பையும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின்பாரம்பரியத்தையும் அங்கீகரிக் கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது”என கூறப் பட்டுள்ளது.
இந்தியா :
கர்நாடக அணைகள் மூடப்பட்டாலும் தமிழகத்துக்கு 2 ஆயிரம் கன அடி நீர்வரத்து
கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகள் மூடப்பட்டநிலையிலும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டியநொடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர், தமிழகத்துக்கு வந்துகொண்டிருக்கிறது.
காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் மனுவை கடந்த 4-ம் தேதிவிசாரித்த உச்ச நீதிமன்றம், அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து 18-ம் தேதி வரைதமிழகத்துக்கு நொடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரைக் கர்நாடகா திறக்க வேண்டும்என உத்தரவிட்டது.
இந்த நீர் காவிரியில் தானாகப் பாயும் நீரை விடக் குறைந்த அளவிலானதுஎன்பதால் கர்நாடக அரசு எவ்வித ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.
உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு நொடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு குறைவாகநீரைத் திறக்க உத்தரவிட்டதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகள்மூடப்பட்டன. கடந்த சில தினங்களாக மைசூரு, மண்டியா, ராம்நகர் ஆகியமாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் காவிரியில் சிறிய அளவில்வெள்ளம் ஓடுகிறது. இந்த நீர் கர்நாடக - தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுஅளவை நிலையத்தை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்குச்செல்கிறது.
31 மாவட்டங்களாக தெலங்கானா விரிவாக்கம்
நாட்டின் 29-வது மாநிலமாக உருவான தெலங்கானா மாநிலம் 31 மாவட்டங்களாகவிரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான மாவட்ட ஆட்சியர்களும் நேற்றுநியமனம் செய்யப்பட்டனர்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தனியாக பிரிந்த தெலங்கானாமாநிலம், ஹைதராபாத்தை தலைநகரமாக கொண்டு விளங்குகிறது. இதில் 10மாவட்டங்களாக இருந்ததை, முதல்வர் கே.சந்திரசேகர ராவ், 31 மாவட்டங்களாகவிரிவாக்கம் செய்துள்ளார். புதிதாக பிரிக்கப் பட்ட 21 மாவட்டங்களிலும் மாவட்டஆட்சியர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நேற்று காலை 11.12 மணிக்கு முதல்வர் கே.சந்திரசேகர ராவ், புதியமாவட்டங்களில் ஒன்றான சித்திப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தேசியக்கொடி யேற்றி தொடங்கி வைத்தார். இதேபோன்று புதிய மாவட்டங்களில்அமைச்சர்கள் தேசியக் கொடி ஏற்றி புதிய ஆட்சியர் அலுவலகங்களை தொடங்கிவைத்தனர்.
தமிழ்நாடு :
பின்லாந்து, கனடாவைச் சேர்ந்த 2 பேருக்கு சாஸ்த்ரா - ராமானுஜன் விருது
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 2016-ம் ஆண்டுக்கான ஸ்ரீநிவாச ராமானுஜன்விருது, பின்லாந்து நாட்டின் துர்க் பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்தகைசாமடோமகி, கனடா நாட்டின் மெக்கில் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த மாக்சிம்ரட்ஸ்வில் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சாஸ்த்ரா பல் கலைக்கழகம் கூறியிருப்பதாவது: குறுகியஇடைவெளிகளில் பன்முகச் செயல்பாடுகள் குறித்த இவர்களின் புரட்சிகரமானஆய்வு கணித உலகை பிரமிக்க வைக்கிறது. சிக்கலான கேள்விகளுக்கு தீர்வுசொல்லும் வகையில் இவர்களின் ஆய்வு அமைகிறது. எர்டாஸ் வேறுபாடு,சவ்லாவின் இணைப்பு போன்ற கடுமையான வினாக்களுக்கு விடை தேடும்வகையில் இவர்களுடைய விளக்கம் உள்ளது.
2005 முதல் வழங்கப்படும் இந்த விருது, கணித மேதை ராமானுஜன் ஈடுபட்டதுறையில் ஆர்வம் காட்டும் இளம் கணிதவியல் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீநிவாச ராமானுஜன் மையத்தில் வரும் டிசம்பர் 21, 22-ம் தேதிகளில் நடைபெறும் எண்ணியல் கோட்பாடு பற்றிய பன்னாட்டுக்கருத்தரங் கின்போது இந்த விருது வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாட விவரத்தை எஸ்எம்எஸ்மூலம் தெரிவிக்கும் வசதி: 44 அரசு மாதிரி பள்ளிகளில் விரைவில் அறிமுகம்
மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாடம், கல்வி நிலை ஆகியவிவரங்களை அவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி44 அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி களில் விரைவில் அறிமுகப்படுத் தப்படஆர்எம்எஸ்ஏ திட்ட மிட்டுள்ளது.
கல்வியில் பின்தங்கிய பகுதி களில் மாணவர்களின் கல்வித் தரத்தைமேம்படுத்தும் வகையில் மாதிரி பள்ளிகள் திட்டம் மத்திய இடைநிலைக் கல்விதிட்டத்தின் (ஆர்எம்எஸ்ஏ) மூலம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. தமிழகத்தில்கல்வியில் பின்தங்கிய அரியலூர், பெரம்பலூர், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி,விழுப்புரம், சேலம் உள்பட 13 மாவட்டங்களில் ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ்அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
பொதுவாக, தனியார் பள்ளி களில் படிக்கின்ற மாணவர்களின் வருகைப் பதிவு,வீட்டுப் பாடம், தேர்ச்சி நிலை உள்ளிட்ட விவரங் கள் அவர்களின் பெற்றோருக்குஎஸ்எம்எஸ் வாயிலாக தெரிவிக் கப்படும். கனமழை உள்ளிட்ட எதிர் பாராதசூழலில் திடீரென பள்ளி களுக்கு விடுமுறை விடப்படும் விவரமும் இது போன்றுஎஸ்எம்எஸ் மூலமாக மாணவர்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.
விளையாட்டு :
ஒருநாள் தொடரில் ஆஸி.க்கு முதல் ஒயிட்வாஷ்: தென் ஆப்பிரிக்காமகத்தான 5-0 வெற்றி!
ரைலி ருசோவ்வின் அதிரடி சதத்தின் மூலம் கேப்டவுனில் நடைபெற்ற 5-வதுஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 5-0 என்று தொடரைக்கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா முதன்முதலாக ஒருநாள் தொடரில்ஆஸ்திரேலியாவுக்கு ஒயிட்வாஷ் தோல்வியைப் பெற்றுத் தந்தது.
அனுபவமற்ற ஆஸ்திரேலிய பந்துவீச்சு மட்டுமல்ல, டேவிட் வார்னர் நீங்கலாகஆஸ்திரேலிய பேட்டிங்கும் சப்பென்று ஆகி வரலாறு காணாது ஒருநாள் போட்டிஒயிட்வாஷ் தோல்வியை அடைந்தது ஆஸ்திரேலியா.
கேப்டவுனில் நேற்று நடைபெற்ற பகலிரவு ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்தது.ரைலி ரூசோவ் 118 பந்துகளில் 18 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 122 ரன்களையும்,ஜே.பி.டுமினி 75 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 73 ரன்களையும் விளாசினர்.தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் 136 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன்173 ரன்களை எடுத்து டேவிட் வார்னர் இறுதி வரை போராடி 9-வதுவிக்கெட்டாகத்தான் ஆட்டமிழந்தார், ஆஸ்திரேலியா 48.2 ஓவர்களில் 296ரன்களுக்கு மடிந்து ஒயிட்வாஷ் செய்யப்பட்டது.
உலகக்கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து: பிரேசில் முன்னிலை; கடும்சிக்கலில் அர்ஜென்டினா
உலகக்கோப்பை கால்பந்து தென் அமெரிக்கப் பிரிவு தகுதிச் சுற்று போட்டிகளில்பிரேசில் தொடர்ச்சியாக தனது 4-வது வெற்றியைப் பதிவு செய்து முன்னிலைவகிக்க மற்றொரு பெரிய அணியான அர்ஜென்டினா பராகுவே அணிக்கு எதிராகசொந்த மண்ணில் அதிர்ச்சித் தோல்வி கண்டு 5-வது இடத்தில் உள்ளது.
பராகுவே அணிக்கு எதிராக 1-0 என்று காயமடைந்த மெஸ்ஸி இல்லாதஅர்ஜென்டின அணி தங்கள் நாட்டிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்ததையடுத்துரஷ்யாவில் 2018-ல் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்குநேரடியாக தகுதி பெறாமல் பிளே ஆஃப் சுற்றுகளை நம்ப வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.
ஆனால் வெனிசூலாவுக்கு எதிராக நட்சத்திர வீரர் நெய்மர் இல்லாத பிரேசில் 2-0என்று வெற்றி பெற்று முதலிடம் பெற்றுள்ளது, பிரேசில், அர்ஜெண்டின அணிகள்அடுத்த போட்டியில் மோதவுள்ளன.
வர்த்தகம் :பராகுவே அணிக்கு எதிராக 1-0 என்று காயமடைந்த மெஸ்ஸி இல்லாதஅர்ஜென்டின அணி தங்கள் நாட்டிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்ததையடுத்துரஷ்யாவில் 2018-ல் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்குநேரடியாக தகுதி பெறாமல் பிளே ஆஃப் சுற்றுகளை நம்ப வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.
ஆனால் வெனிசூலாவுக்கு எதிராக நட்சத்திர வீரர் நெய்மர் இல்லாத பிரேசில் 2-0என்று வெற்றி பெற்று முதலிடம் பெற்றுள்ளது, பிரேசில், அர்ஜெண்டின அணிகள்அடுத்த போட்டியில் மோதவுள்ளன.
இண்டஸ்இந்த் வங்கி நிகர லாபம் 25% உயர்வு
தனியார் துறை வங்கியான இண்டஸ்இந்த் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் 25.75 சதவீதம் உயர்ந்து ரூ.704 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம்இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.560 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,439 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம்ரூ.3,581 கோடி யாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 0.77 சதவீதத்தில்இருந்து 0.90 சதவீதமாக அதிகரித் திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.31சதவீதத்தில் இருந்து 0.37 சதவீதமாக அதிகரித்தது.
வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.214 கோடி யாகஅதிகரித்திருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 25.85 சதவீதம்உயர்ந்து ரூ.1,365.64 கோடியாக இருக்கிறது. நேற்று 0.02 சதவீதம் உயர்ந்து 1,221.05ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
மியூச்சுவல் பண்டில் 5 கோடி முதலீட்டாளர்கள்
மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர் களின் எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது.இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 29 லட்சம் புதிய முதலீட்டாளர்கள்மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் இணைந்துள்ளனர்.
2015-16 நிதியாண்டில் 59 லட்சம் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர் களும், 2014-15-ம் நிதியாண்டில் 22 லட்சம் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களும் மியூச்சுவல்பண்ட் திட்டங்களில் இணைந் துள்ளனர். முதலீட்டாளர்களின் எண்ணிக்கைமுதலீட்டாளர் களின் கணக்குகளின் எண்ணிக் கையை வைத்து கணக்கிடப்படுகிறது.
இந்திய மியூச்சுவல் பண்ட் கூட்டமைப்பு (ஆம்பி) தகவல் படி 43 மியூச்சுவல் பண்ட்நிறு வனங்களில் 5,05,59,495 முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். கடந்தமார்ச் மாத நிலவரப்படி முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 4,76,63,024-ஆக இருந்ததுகுறிப்பிடத்தக்கது.
சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது அதிலும் குறிப்பாக சிறியநகரங்களில் இருந்து ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் அதிக முதலீடுசெய்ததன் காரணமாகவே முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவல்லுநர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment