உலகம் :
சீன விஞ்ஞானிகள் இருவருடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது‛ஷெங்ஸோ-11'
சீனா, இரண்டு விஞ்ஞானிகளுடன் ‛ஷெங்ஸோ-11' என்ற ராக்கெட்டைஇன்று(அக்., 17) காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
2013ம் ஆண்டிலேயே விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தைஅமைக்க திட்டமிட்டுள்ள சீனா, கடந்த 2013ம் ஆண்டு மூன்று சீனவிஞ்ஞானிகளுடன் 'டியாங்காங்-1' என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில்செலுத்தியது. 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து, பல்வேறு கட்டஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக அவர்கள் பூமிக்கு திரும்பினர்.
இந்நிலையில், வடக்கு சீனாவில் உள்ள ஜியோசுவான் செயற்கைக்கோள்ஏவுகணை மையத்திலிருந்து, சென் டாங் மற்றும் ஜின் ஹயெ்பெங்க் என்ற இருவிஞ்ஞானிகளுடன், 'ஷெங்ஸோ-11' ராக்கெட் இன்று வெற்றிகரமான விண்ணில்ஏவப்பட்டது. விண்வெளியில் சுமார் ஒருமாத காலம் தங்கியிருக்கும் இருவிஞ்ஞானிகளும், அங்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
ஒரு லட்சத்து 67 ஆயிரம் கோடியில் இந்தியா–ரஷ்யா இடையே இயற்கைஎரிவாயு குழாய் பதிக்க முடிவு
உலகிலேயே அதிக பொருட் செலவில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கஇந்தியாவும், ரஷ்யாவும் ஒப்புக் கொண்டுள்ளன. அதன்படி ரூ. ஒரு லட்சத்து 67ஆயிரம் கோடியில் சைபீரியாவில் இருந்து இந்தியா வரை எரிவாயு குழாய்அமைக்கப்படவுள்ளது.
ரஷ்யாவின் எரிவாயு நிறுவனத்தில் இருந்து இந்தியா வரை சுமார் 4,500 கி.மீமுதல் 6,000 கி.மீ வரை இந்தக் குழாய் பதிப்பு அமைக்கப்படவுள்ளதாகஅதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு குழாய் பதிக்க இமயமலை பாதை தான்குறுகிய தூரம் கொண்ட வழியாக கணக்கிடப்பட்டது. ஆனால் பல தொழில்நுட்பசவால்களை சந்திக்க வேண்டியிருந்ததால், இந்த வழி கைவிடப்பட்டது.
அடுத்தபடியாக இரான், பாகிஸ்தான் வழியாக மத்திய ஆசிய நாடுகளை கடந்துஇந்தியாவுக்குள் குழாய் பதிக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதுவும் இரான்,பாகிஸ்தான், இந்தியா குழாய் வழியை விட அதிக செலவு கொண்டதாககருதப்பட்டது. இதனால் இந்த திட்டமும் கைவிடப்பட்டது.
கடைசியாக ரஷ்யாவில் இருந்து சீனா, மியான்மர் வரை குழாய் பதித்துஅங்கிருந்து வங்கதேசத்தை கடந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாகஇந்தியாவுக்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இந்தப் பாதைக்கானஆரம்பக் கட்ட செலவு கணக்கிடப்பட்டதை அடுத்து ரஷ்யாவின் எரிவாயுநிறுவனமான கஸ்புரோமுடன் நேற்று முன் தினம் ஒப்பந்தம் கையெழுத்தானது.அதன்படி ரஷ்யாவில் இருந்து இந்தியா வரையிலான 6,000 கி.மீ தூரத்துக்குஇயற்கை எரிவாயு குழாய் பதிப்பதற்கான ஆய்வு தொடங்கவுள்ளது. குழாய்பதிக்கும் பணிக்கு தோராயமாக ரூ. ஒரு லட்சத்து 67 ஆயிரம் கோடி செலவாகும்என கணக்கிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் எரிவாயு நிறுவனத்தில் இருந்து இந்தியா வரை சுமார் 4,500 கி.மீமுதல் 6,000 கி.மீ வரை இந்தக் குழாய் பதிப்பு அமைக்கப்படவுள்ளதாகஅதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு குழாய் பதிக்க இமயமலை பாதை தான்குறுகிய தூரம் கொண்ட வழியாக கணக்கிடப்பட்டது. ஆனால் பல தொழில்நுட்பசவால்களை சந்திக்க வேண்டியிருந்ததால், இந்த வழி கைவிடப்பட்டது.
அடுத்தபடியாக இரான், பாகிஸ்தான் வழியாக மத்திய ஆசிய நாடுகளை கடந்துஇந்தியாவுக்குள் குழாய் பதிக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதுவும் இரான்,பாகிஸ்தான், இந்தியா குழாய் வழியை விட அதிக செலவு கொண்டதாககருதப்பட்டது. இதனால் இந்த திட்டமும் கைவிடப்பட்டது.
கடைசியாக ரஷ்யாவில் இருந்து சீனா, மியான்மர் வரை குழாய் பதித்துஅங்கிருந்து வங்கதேசத்தை கடந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாகஇந்தியாவுக்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இந்தப் பாதைக்கானஆரம்பக் கட்ட செலவு கணக்கிடப்பட்டதை அடுத்து ரஷ்யாவின் எரிவாயுநிறுவனமான கஸ்புரோமுடன் நேற்று முன் தினம் ஒப்பந்தம் கையெழுத்தானது.அதன்படி ரஷ்யாவில் இருந்து இந்தியா வரையிலான 6,000 கி.மீ தூரத்துக்குஇயற்கை எரிவாயு குழாய் பதிப்பதற்கான ஆய்வு தொடங்கவுள்ளது. குழாய்பதிக்கும் பணிக்கு தோராயமாக ரூ. ஒரு லட்சத்து 67 ஆயிரம் கோடி செலவாகும்என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியா :
5-ம் தலைமுறை போர் விமானம்: ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து 5-ம் தலைமுறை போர் விமானத்தைதயாரிக்கும் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதியில்கையெழுத்தாகும் என்று ரஷ்ய அரசு நிறுவனமான ரோஸ்டெக் தெரிவித்துள்ளது.
மணிக்கு 2200 கி.மீ. வேகத்தில் செல்லும் 5-ம் தலைமுறை போர் விமானத்தைச்சீனா உருவாக்கி உள்ளது. இதற்குப் போட்டியாக ரஷ்யாவுடன் இணைந்து 5-ம்தலை முறை போர் விமானத்தை உரு வாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. இதுகுறித்து ரஷ்ய அதிபர்புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் விரிவான ஆலோசனைநடத்தினார்.
இதைத்தொடர்ந்து ரோஸ்டெக் தலைமை செயல் அதிகாரி செர்ஜி செம்சோவ்,பிரிக்ஸ் மாநாட்டு வளாகத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: 5-ம்தலைமுறை போர் விமானத்தைத் தயாரிக்க இந்தியாவுடன் பேச்சுநடத்தி வருகிறோம். இந்த ஆண்டு இறுதியில் ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும்.
பாகிஸ்தானுக்குப் பயணிகள் போக்குவரத்துக்கான ஹெலி காப்டர்களை மட்டுமேவிநியோகம் செய்ய உள்ளோம். போர் விமானங் களையோ, ராணுவஹெலிகாப்டர் களையோ வழங்கவில்லை.
தமிழ்நாடு :
கலாமுக்காக ஆன்லைனில் தபால் அட்டை கண்காட்சி
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 85-வது பிறந்ததினத்தை முன்னிட்டு ‘கனவு’ தொடர்பான அவரது பொன்மொழிகள் தாங்கியதபால் அட்டை கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியைஆன்லைன் மூலம் கண்டு ரசிக்கலாம்.
கொச்சியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பான ‘லெட்டர்பார்ம்ஸ்’,நியூயார்க்கின் ‘ஹேண்ட்ரிட்டன்’ என்ற அமைப்புடன் இணைந்து கலாமின்அறிவுரைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க முடிவு செய்தது.
இதற்காக கடந்த ஆண்டு தபால் அட்டை இயக்கம் தொடங் கப்பட்டது. அதில்தங்களை ஈர்த்த கலாமின் பொன்மொழிகள், அவரது ஓவியங்களை எழுதிஅனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதில் இந்தியாவின் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்துஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, தங்களுக்கு உத்வேகம் அளித்த கலாமின்பொன்மொழிகளைக் கைப்பட எழுதியும், ஓவியமாக தீட்டியும் தபால் அட்டைமூலம் அனுப்பி வைத்தனர்.
அதில் இருந்து சிறந்த 85 தபால் அட்டைகளைத் தேர்ந்தெடுத்து, கலாமின் 85-வதுபிறந்தநாளை முன்னிட்டு, காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது.
அயோத்தியில் ராமாயண பூங்கா: மத்திய அரசு திட்டம்
அயோத்தியில் 25 ஏக்கர் பரப்பளவில் ராமாயண பூங்காவை அமைக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச சட்டப்பேர வைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.இந்தத் தேர்த லில் ராமர் கோயில் விவகாரத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்யமாட் டோம் என்று பாஜக கூறி வருகிறது.
இந்நிலையில் ராமர் ஜென்மபூமி- பாபர் மசூதி வளாகத்தில் இருந்து சுமார் 15 கி.மீ.தொலைவில் ராமாயண பூங்காவை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 25ஏக்கரில் அமையும் பூங்காவில் ராமரின் வாழ்க்கை வரலாறு, பய ணங்கள்சித்தரிக்கப்பட உள்ளன. இதற்கான இடத்தை மத்திய சுற்றுலா அமைச்சர் மகேஷ்சர்மா வரும் 18-ம் தேதி பார்வையிடுகிறார் என்று அரசு வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.
பாட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் எஸ்ஆர்எம்பல்கலை. வழங்கியது; முதுமுனைவர் பட்டம் பெற்றார் நீதிபதிஏஆர்.லட்சுமணன்
சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் 12-வது சிறப்புப்பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் முனைவர்பா.சத்தியநாராயணன் தலைமை வகித்தார்.
விழாவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர் ஏஆர்.லட்சுமணனுக்குமுதுமுனைவர் பட்டமும், இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னாநேவாலுக்கு கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. பல்வேறு துறைகளின்இளநிலை, முதுநிலை உட்பட 6,000 மாணவர்களும் பட்டம் பெற்றனர். 190மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பெற்றனர்.
சிறப்புரையாற்றிய அமெரிக்க முன்னாள் இணை அமைச்சர் இவான் சாமுவேல்டோபல், ‘‘பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுவருகிற,எதிர்காலத்தில் வல்லரசாகப் போகிற இந்தியாவின் அடையாளமாக நீங்கள்திகழ்கிறீர்கள். அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு வேலை தேடிச்சென்ற காலம் போய், அவர்கள் இந்தியாவைத் தேடி வரும் நிலைஉருவாகியுள்ளது’’ என்றார்.
இன்று (அக்.16) உலக உணவு தினம்: 280 மில்லியன் டன் தானியங்கள்பயனின்றி வீணாகும் அவலம் - 100 கோடி பேர் பசியால் வாடும் பரிதாபம்
நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கு, நமக்கு வந்து சேரும்முன்னாலேயே வீணாக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
உலக அளவில் மொத்த தானிய உற்பத்தியில் 30% தானியங்கள் யாருக்கும்பயனின்றி வீணாவதாக கூறப்படுகிறது. அதாவது 280 மில்லியன் டன்தானியங்களை நுகர்வோர் வீணாக்குவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.அதே நேரம், உலகில் சுமார் 100 கோடி மக்கள் பசியால் அவதிப்படுவதாகக்கூறுகிறது ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு. இது விவசாயிகளின்உழைப்பு, நீர், ஆற்றல், நிலம் மற்றும் அந்த உணவுப் பொருளை உருவாக்கத்தேவைப்பட்ட அனைத் துக் காரணிகளும் வீணாக்கப் படுவதையே காட்டுகிறது.
முதல்வரின் துறைகள் மாற்றம்: உள்துறைக்கு ஆளுநர் அறிக்கை
முதல்வர் ஜெயலலிதாவின் துறைகள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்குமாற்றப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக ஆளுநர்(பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை அப்போலோமருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்துசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டன் மருத்துவர் மற்றும் எய்ம்ஸ்மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளிக்கின்றனர். முதல்வரின்உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்துவருகிறது. அவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டும் என அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா பணிக்கு திரும்பும் வரை அவரதுதுறைகள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மாற்றப்படுவதாகவும்,அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் அவரே தலைமை வகிப்பார் என்றும் தமிழகஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்தார்.
விளையாட்டு :
முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா:ஹர்திக் பாண்டியா, விராட் கோலி அபாரம்
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியாவும்,பேட்டிங்கில் விராட் கோலியும் சிறப்பாக செயல்பட்டனர்.
தர்மசாலாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின்கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் அறிமுக வீரராகஹர்திக் பாண்டியா களமிறங்கினார். அவருக்கு அறிமுக தொப்பியை கிரிக்கெட்ஜாம்பவான் கபில்தேவ் வழங்கினார். வேகப்பந்து வீச்சில் உமேஷ் யாதவ்,ஜஸ்பிரித் பும்ரா களமிறக்கப்பட்டனர். சுழற்பந்து வீச்சாளராக அக் ஷர் படேல்இடம் பெற்றார்.
வர்த்தகம் :
வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினையில்லை: வட்டி குறைப்பு மூலம் ரூ.2.5லட்சம் கோடி கிடைக்கும்- புதிய மேம்பாட்டு வங்கி தலைவர் கே.வி. காமத்கருத்து
தற்போதைய நிலைமையில் வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினை யில்லை. அதுகுறித்து கவலை யடையவும் தேவையில்லை. வட்டி குறைப்புசெய்யப்பட்டிருப்பதால் வங்கிகள் சுமூகமான நிலைமையில் இருக்கும். மேலும்வட்டி குறைப்பு செய்திருப்பதால் கருவூல லாபம்(பத்திரங்களை விற்பதன் மூலம்கிடைக்கும் தொகை) ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என எட்டாவதுபிரிக்ஸ் மாநாட்டில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது புதிய மேம்பாட்டு வங்கித்தலைவர் கே.வி.காமத் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: ஏற்கெனவே வட்டி குறைப்பு செய்திருப்பதைவிடமேலும் ஒரு சதவீதம் வட்டி குறைப்பு செய்வதற்கான சூழல் இருக்கிறது. வட்டிகுறைக்கப்படும் பட்சத்தில் கரூவூல லாபம் ரூ.1.5 லட்சம் கோடியாக இருக்கும்.மொத்தமாக வட்டி குறைப்பின் மூலம் ரூ.2.5 லட் சம் கோடி லாபம் கிடைக்கும்.கடந்த சில காலாண்டுகளாக வாராக்கடன் அதிகரிப்பால் வங்கிகள் நஷ்டம்அடைந்தன. அதனால் மூலதனம் ஒரு பிரச்சினையாக இருக்கும் எனகருதப்பட்டது. வட்டி குறைப் பினால் வங்கிகளுக்கு மூலதனம் பிரச்சினையாகஇருக்கவில்லை.
எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தை கையகப்படுத்தியது ரஷியாவின்ரோஸ்நெப்ட்
இந்திய எண்ணெய் நிறுவனங்களில் இரண்டாவது மிகப் பெரிய தனியார்நிறுவனமான எஸ்ஸார் ஆயிலை ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய்நிறுவனமான ரோஸ்நெப்ட் குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்களும்கையகப்படுத்தியுள்ளன. இந்த கையகப்படுத்தலின் மதிப்பு 1,300 கோடிடாலர்களாகும்.
எஸ்ஸார் ஆயிலின் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோல் நிலையங்களின் 49சதவீதத்தை ரோஸ்நெப்ட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. மேலும் உலகஅளவில் மிகப் பெரிய கமாடிட்டி வர்த்தக நிறுவனமான நெதர்லாந்தைச் சேர்ந்தடிராபிகுரா குழுமம் மற்றும் ரஷியாவின் யுனைடெட் கேபிடல் பார்ட்னர்ஸ்நிறுவனங்கள் 49 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளன.
No comments:
Post a Comment