உலகம் :
ஏமனில் 72 மணி நேர போர் நிறுத்தம்: ஐ.நா. சிறப்பு தூதர் அறிவிப்பு
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் நாளை முதல் 72 மணி நேரபோர் நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என அந்நாட்டுக்கான ஐ.நா. சிறப்பு தூதர்இஸ்மாயில் உலது ஷேக் அகமது அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “ஏமனில்முதல்முறையாக கடந்த ஏப்ரலில் அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் தற்போதுமீண்டும் நடைமுறைக்கு வருகிறது. வியாழக்கிழமை அதிகாலை முதல், 72 மணிநேரத்துக்கு போர் நிறுத்தம் அமலில் இருக்கும்.
இது புதுப்பிக்கப்படவும் வாய்ப்புள்ளது. போர் நிறுத்த நிபந் தனைகளுக்குக்கட்டுப்பட்டு நடப்பதாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் என்னிடம் உறுதிஅளித்துள்ளனர். ஏமன் மக்கள் மேலும் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவும்,மனிதாபிமான உதவியை விரிவுபடுத்தவும் இது உதவும்” என்று கூறியுள்ளார்.
இராக்கில் 2-வது நாளாக சண்டை
இராக்கின் 2 வது மிகப்பெரிய நகரமான மொசுல், கடந்த 2014-ல் ஐஎஸ்தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. இதையடுத்து நாட்டின் பிறபகுதிகளையும் கைப்பற்ற ஐஎஸ் மேற் கொண்ட முயற்சியை ராணுவம்முறியடித்தது. இப்போது, மொசுல் நகரை மீட்க ராணுவம் அதிரடிநடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்காக இந்த நகரத்தை ராணுவம் சுற்றிவளைத்தது. சுமார் 3 லட்சம் வீரர்கள் ஆயுதங் களுடன் அங்கு குவிக்கப்பட்டுஉள்ளனர்.
இந்நிலையில், மொசுல் நகரை மீட்க போர் தொடங்குவதாக அந்நாட்டு பிரதமர்ஹைதர் அல் அபாதி நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் தோன்றிஅறிவித்தார். இதையடுத்து, 2-வது நாளான நேற்று மொசுல் நகரை நோக்கிராணுவ டாங்கிகள் மற்றும் வீரர்கள் படிப்படியாக முன்னேறிச் சென்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்து கணிப்பு: ஹிலாரிக்கு வெற்றி வாய்ப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், ஹிலாரிகிளின்டனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்து வருவது சமீபத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் அடுத்த மாதம் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரியும் குடியரசு கட்சி சார்பில் டொனால்டுட்ரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், “கடந்தகாலங்களில் ட்ரம்ப் தங்களுக்குப் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார்” எனபல பெண்கள் புகார் கூறி உள்ளது அவருக்குத் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழ்நிலையில் சிபிஎஸ் நியூஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில்ஹிலாரிக்கு 47 சதவீதம் பேரும் ட்ரம்புக்கு 38 சதவீதம் பேரும் ஆதரவுதெரிவித்துள்ளனர்.
இந்தியா :
கடற்படையில் இணைந்தது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்: அணு ஆயுததாக்குதல் நடத்தும் திறன் கொண்டது
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இந்திய கடற்படையின்முதலாவது அணு சக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹந்த் சத்தமின்றிசேவையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் அணு ஆயுத ஏவுகணைகளை வீசும் திறன் கொண்டது. நிலம்,வான்வெளி, கடல் என 3 வழிகளிலும் எதிரிகளின் இலக்குகளைக் குறிவைத்துஅணுஆயுதங்களை வீசும் வல்லமை பெற்றது.
இந்த கப்பலில் இருந்து ஒரே நேரத்தில் 4 திசைகளிலும் 12 ஏவுகணைகளை ஏவமுடியும். இதில் 700 கி.மீ. தொலைவு பாயும் கே 15 ரகத்தைச் சேர்ந்த 12ஏவுகணைகளும் 3500 கி.மீ. சீறிப் பாயும் கே 4 ரகத்தைச் சேர்ந்த 4 ஏவுகணைகளும்பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்டில் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் எவ்வித அறிவிப்பும் இன்றிகடற்படை சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறுஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலைப் பாதுகாப்புஅமைச்சகம் உறுதி செய்யவோ, மறுக்கவோ முன்வரவில்லை.
கடற்படையின் வைஸ் அட்மிரல் ஜி.எஸ்.பப்பி டெல்லியில் நேற்றுநிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அரிஹந்த் சம்பந்தமாக எழுப்பப்பட்ட 6கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. எனினும் அரிஹந்த் தொடர்பானமுறையான அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என்று அவர் தெரிவித்தார்.
இலவச வைஃபை வசதி பயன்பாட்டில் பாட்னா ரயில் நிலையம் முதலிடம்
இலவச வைஃஃபை வசதியைப் பயணிகள் அதிகளவில் பயன் படுத்தியஇடங்களின் வரிசையில், பாட்னா ரயில் நிலையம் முத லிடத்தை பிடித்துள்ளது.எனினும் இதில் பெரும்பாலானவை ஆபாச இணைய தளங்களுக்கானதேடலாகவே இருந்துள்ளன.
ரயில்வே துறை சார்பில் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இணைய சேவைவழங்க இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப் பட்டது. இதற்காக பிரத்தியேகரயில்வயர் பிராட்பேண்ட் வினி யோக முறை உருவாக்கப்பட்டு, ரயில்டெல்மற்றும் கூகுள் நிறு வனங்கள் இணைந்து, அதிவேக இணைய சேவையைவழங்கி வருகின்றன.
நாட்டில் முதல்முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் இலவசவைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் பல்வேறு முக்கியநிலையங்களைத் தொடர்ந்து பாட்னா, விசாகப்பட்டினம், ராஞ்சி ஆகிய 3 ரயில்நிலையங்களில் கடந்த மாதம் இப்புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது, நாடு முழுவதும் 23 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதிஉள்ளது. படிப் படியாக அடுத்த 3 ஆண்டுகளில் 400 நிலையங்களுக்கு இவ்வசதியை விரிவுபடுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு :
விசாரணையை துரிதப்படுத்த புதிய வடிவில் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள்:உயர் நீதிமன்றம் அறிவிப்பு
வழக்கு விசாரணையை துரிதப் படுத்த உதவும் வகையில், மனு தாரர் வழக்குதொடர்பான 22 விவ ரங்களுடன் புதிய வடிவில் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள்தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் ஜாமீன், முன்ஜாமீன் மனுக் களை நீதிபதிஎஸ்.வைத்திய நாதன் விசாரித்து வருகிறார். இவர் விசாரணையை துரிதப்படுத்துவதற்காக ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை புதிய வடிவில் தாக்கல் செய்யுமாறுவழக்கறிஞர்களை கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு நேற்றுவெளியிடப்பட்டது.
ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை சுலபமாக அடையாளம் காணும் வகையில்இபிகோ, குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சிகள் சட்டம் தவிர்த்து பிறசட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை குறிப்பிட வேண்டும்,முதல்முறை யாக மனு தாக்கல் செய்தபோது ஜாமீன், முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து யாராவது மனு தாக்கல் செய்திருந்தால், 2-வது, 3-வது ஜாமீன்,முன் ஜாமீன் மனுவில் அவர்களை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும். மேலும்வழக்கு, மனுதாரர் தொடர் புடைய 22 விபரங்களை குறிப்பிட வேண்டும் என அந்தஅறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை இன்று கூடுகிறது
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கிறது. இதில், காவிரிவிவகாரம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 27நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அரசு நிர்வாகம் தொடர்பாக திமுக உட்பட பல்வேறு அரசியல்கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். அரசுப் பணிகளை கவனிக்கபொறுப்பு முதல்வர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன.
இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த உள்துறை, பொதுத்துறைஉள்ளிட்ட துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என தமிழகஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்தார். அமைச்சரவைக்கூட்டத்துக்கும் ஓ.பன்னீர்செல்வமே தலைமை ஏற்பார் என தெரிவித்திருந்தார்.
விளையாட்டு :
பத்மபூஷண் விருதுக்கு பி.வி.சிந்து பெயர் பரிந்துரை
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தபாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு நாட்டின் 3-வது உயரிய விருதானபத்மபூஷண் வழங்கக் கோரி ஆந்திர அரசு, மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவின் போது ரியோ ஒலிம்பிக்கில்வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தெலுங்கு தேசஎம்பி.யும், நடிகருமான முரளி மோகன் உட்பட 22 பேருக்கு பத்மபூஷண் விருதுவழங்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான கடிதத்தை மத்தியஅரசுக்கு நேற்று ஆந்திர அரசு அனுப்பி வைத்தது.
ஒலிம்பிக் தடகள கமிஷன் உறுப்பினரானார் சாய்னா
இந்திய பாட்மிண்டன் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெவால், சர்வதேசஒலிம்பிக் கமிட்டியின் தடகள கமிஷனின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான கடிதம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச்சிடம்இருந்து சாய்னாவிடம் வழங்கப்பட்டுள்ளது.
தடகள கமிஷனின் சார்பில் சாய்னாவுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில்,
‘‘உங்கள் வேட்பு மனுவை, ரியோ ஒலிம்பிக் போட்டி யின் போது நடைபெற்றசர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள கமிஷனின் தேர்தலில் பரிசீலனை செய்தநிலையில் தற்போது உங்களை உறுப்பினராக நியமனம் செய்வதில் பெருமைஅடை கிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் கமிட்டியின் தடகள கமிஷன் அமைப்பானது அங்கேலா ருக்கெய்ரோதலைமையில் 9 துணை தலைவர்கள் மற்றும் 10 உறுப்பினர்களுடன் செயல்பட்டுவருகிறது. இந்த கமிஷனின் அடுத்த கூட்டம் வரும் நவம்பர் 6-ம் தேதிநடைபெறுகிறது.
வர்த்தகம் :
அக்.25- ல் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் ஐபிஓ
பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை நிறுவனமான பிஎன்பி ஹவுசிங்நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு அக் டோபர் 25-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை வெளியாக இருக்கிறது. விலைப் பட்டையாக ரூ.750-775 என நிர்ணயம்செய்யப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் ரூ.3,000 கோடி திரட்ட நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.திரட்டப்படும் தொகையை விரிவாக்க பணிகளுக்கு முதலீடு செய்ய நிறுவனம்முடிவு செய்திருக்கிறது.
தற்போது 28 நகரங்களில் 48 கிளைகள் மட்டுமே இருக்கிறது. நிறுவனத்தை விரிவுசெய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஐபிஓ மூலம் கிடைக்கும் தொகையில்நிறுவனத்தை விரிவுப்படுத்த முடிவு செய்திருக்கிறோம் என நிர்வாக இயக்குநர்சஞ்சய் குப்தா தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டில் 18 கிளைகள் தொடங்கஇருப்பதாகவும், இதில் 6 கிளைகள் ஏற்கெனவே செயல்பட்டு வரும்நகரங்களிலும், 12 கிளைகள் இரண்டாம் கட்ட நகரங்களில் தொடங்கஇருப்பதாகவும் கூறினார்.
சென்செக்ஸ் 521 புள்ளிகள் உயர்வு
திங்கள் கிழமை சரிவுடன் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள், நேற்று ஏற்றத்தில்முடிவடைந்தன. சர்வதேச சூழல் மற்றும் முதலீட்டாளர்களின் வாங்கும் போக்குஅதிகரித்ததன் காரணமாக நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றம் இருந்தது.
சென்செக்ஸ் 521 புள்ளிகள் உயர்ந்து 28050 புள்ளியில் முடிவடைந்தன. அதேபோலநிப்டி 157 புள்ளிகள் உயர்ந்து 8677 புள்ளியில் முடிவடைந்தன. மிட்கேப் மற்றும்ஸ்மால்கேப் குறியீடுகளும் ஒரு சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன.
அனைத்துத் துறை குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன. குறிப்பாகவங்கித்துறை குறியீடு 2.37 சதவீதம் உயர்ந்தது. கேபிடல் குட்ஸ், தகவல்தொழில்நுட்பம் மற்றும் மெட்டல் ஆகிய குறியீடுகளும் உயர்ந்தேமுடிவடைந்தன.
No comments:
Post a Comment