Sunday 2 October 2016

Daily Current Affairs For Competitive Exam - 2nd & 3rd October

உலகம் :

இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ரா கிளை நதியை தடுத்துநிறுத்தியது சீனா
திபெத்தில் உற்பத்தியாகி இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ராநதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணையின் கட்டுமானப்பணிக்காக ஒரு கிளை நதியின் நீரோட்டத்தை சீனா தடுத்து நிறுத்திஉள்ளது.


பிரம்மபுத்ரா நதியின் கிளை களில் ஒன்று ஜியாபுகுநீர் மின்உற்பத்தி திட்டத்துக்காகஇந்த ஆற்றின் குறுக்கே திபெத்தின்ஜிகாஜே என்ற இடத்தில் சுமார் ரூ.5 ஆயிரம் கோடியில் லால்ஹோஎன்ற பெயரில் அணை கட்டப்பட்டு வருவதாக சீன அதிகாரி ஜாங்யுன்பாவ் அந்நாட்டு செய்தி நிறுவனமான ஜின்ஹுவாவுக்கு அளித்தபேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த அணை அமைய உள்ள ஜிகாஜேஇந்தியாவின் சிக்கிம்மாநிலத்துக்கு அருகே அமைந்துள்ளதுபிரம்மபுத்ரா நதியானதுஜிகாஜேவிலிருந்து அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்குள்நுழைகிறதுமிகவும் அதிக செலவில் கட்டப்படும் திட்டமான இந்தஅணையின் கட்டுமானப் பணி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம்தொடங்கப்பட்டதாகவும், 2019-ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த அணை கட்டப்படுவதால் பிரம்மபுத்ரா நதி பாயும் இந்தியாமற்றும் வங்கதேசத்துக்கு வர வேண்டிய நீரின் அளவு குறையும்என்ற அச்சம் எழுந்துள்ளது.
காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிர வாதிகள்தாக்குதல் நடத்தினர்இதையடுத்து அந்த நாட்டுக்கு நெருக்கடிகொடுக்கும் வகையில்சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர் பாகபாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை நிறுத்தி வைக்கஇந்திய அரசு பரிசீலித்து வந்த நிலையில்சீனா இந்தநடவடிக்கையை எடுத்துள்ளது.
இஸ்லாமாபாத் சார்க் மாநாட்டை ஒத்திவைத்தது பாகிஸ்தான்
இந்தியா உட்பட 5 நாடுகள் புறக்கணித்திருப்பதால் சார்க் மாநாட்டைபாகிஸ்தான் ஒத்திவைத்துள்ளது.
வரும் நவம்பர் 9, 10 தேதி களில் இஸ்லாமாபாதில் 19-வது சார்க்மாநாடு நடைபெற இருந் ததுஇதில் பிரதமர் மோடி உட்பட சார்க்நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீதுபாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் சார்க்மாநாட்டை இந்தியா புறக்கணித் ததுஇதற்கு ஆதரவாக வங்கதேசம்பூடான்ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் மாநாட்டைபுறக்கணித்தன.
இந்த வரிசையில் 5-வது நாடாக இலங்கையும் சார்க் மாநாட்டில்பங்கேற்க முடியாது என்று அறிவித்துள்ளதுஇதுதொடர்பாக அந்தநாட்டு வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்கூறியிருப்பதாவதுசார்க் மாநாட்டின் எந்தவொரு முடிவும்ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மட்டுமே எடுக் கப்படுவதுவழக்கம்தெற்காசி யாவின் தற்போதைய சூழல் சார்க் மாநாட்டைநடத்துவதற்கு உகந்ததாக இல்லைஎனவே இந்த மாநாட்டில்இலங்கை பங்கேற்கவில்லை.
தெற்காசிய பிராந்தியத்தில் அமைதிஸ்திரத்தன்மையைநிலைநாட்ட அனைத்து உறுப்பு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்தீவிரவாத நடவடிக் கைகளை இலங்கை வன்மையாகக் கண்டிக்கிறதுதீவிரவாதத் துக்கு எதிராக ஒன்றிணைந்துபோராட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட 5 நாடுகள் புறக்கணித்திருப்பதால் சார்க் மாநாட்டைபாகிஸ்தான் அரசு ஒத்திவைத்துள்ளது.இதுதொடர் பாக அந்த நாட்டுவெளியுறவு செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஜகாரியா நேற்றுகூறியிருப்ப தாவது:
சார்க் மாநாடு நடைபெற விடாமல் இந்தியா தடுத்துள்ளது.வறுமைக்கு எதிராக சார்க் நாடுகள் போரிட வேண்டும் என்றுபிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்ஆனால் அவரின் நடவடிக்கைமுரண்பாடாக உள்ளதுசார்க் அமைப்புக்கு தலைமை வகிக்கும்நேபாளத்துடன் கலந்தாலோசித்து புதிய தேதி பின்னர்அறிவிக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தியா :
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரைதிறந்துவிட முடியாது: கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில்முடிவு
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படிதமிழகத்துக்கு வரும் 6-ம் தேதி வரை காவிரியில் 6 ஆயிரம் கன அடிநீரை திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையாதெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் மனுவைவிசாரித்த உச்ச நீதிமன்றம், “1-ம் தேதியில் இருந்து வரும் 6-ம் தேதிவரை தமிழகத்துக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீரை கர்நாடகாதிறந்துவிட வேண்டும்மத்திய அரசு வரும் 4-ம் தேதிக்குள் காவிரிமேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்” என நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து விவாதிப்பதற்காக அவசரமாகஅனைத்துக்கட்சி கூட்டத்தை கர்நாடக அரசு நேற்று மாலைகூட்டியதுமுதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்றஇந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடாரமேஷ்ஜிகஜினகிகாங்கிரஸ் மக்களவை குழு தலைவர் மல்லிகார்ஜூனகார்கேபாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாமஜத மாநிலத்தலைவர் குமாரசாமிஎதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர்,நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.
மைசூரு தசரா திருவிழா தொடங்கியது
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா நேற்று தொடங்கியது.
வரும் 11-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவையொட்டிமைசூருவில் உள்ள முக்கிய இடங்கள் மின் விளக்குகளால்அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மைசூருவை ஆண்ட‌ உடையார் மன்னர்கள் கிபி 1610-ம் ஆண்டில்இருந்து தசரா விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்நாடு சுதந்திரம் அடைந்த பிறகுகர்நாடக அரசு சார்பில் 11நாட்கள் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறதுமைசூரு வில்நிகழும் பல்வேறு பாரம் பரிய கலை நிகழ்ச்சிகளை காண சுற்றுலாப்பயணிகள் குவிவார்கள்.
இந்த ஆண்டின் மைசூரு தசரா திருவிழா சாமுண்டி மலையில்உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் நேற்று காலை தொடங்கியது.கன்னட கவிஞர் சென்னவீரகனவிசிறப்பு பூஜை செய்து விழாவைதொடங்கி வைத்தார்இந்நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர்சித்தராமையாமைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர்மகாதேவப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வரும் 11-ம் தேதி வரை நடைபெறும் தசரா விழாவில் கர்நாடகாவில்நிலவும் வறட்சியை வெளிப்படுத்தும் வகையில் நீர் பாதுகாப்பைமையப்படுத்தி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதுஇவை மட்டுமின்றிமைசூரு அரண்மனைவளாகத்தில் இளைஞர் தசராமகளிர் தசராஉணவுத் திருவிழா,கலாமந்திர்குத்துச்சண்டைதசரா திரைப்பட விழா உள்ளிட்டநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
உதயமானது "ஸ்வராஜ் இந்தியாஅரசியல் கட்சி!
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர்களானயோகேந்திர யாதவ்பேராசிரியர் ஆனந்த் குமார் உள்ளிட்டோர்"ஸ்வராஜ் இந்தியாஎனும் புதிய கட்சியை தில்லியில்ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர்.
இந்தியாவில் ஊழலை ஒழிக்கும் நோக்கில் அண்ணாஹசாரேவுடன் இணைந்து அரவிந்த் கேஜரிவால்யோகேந்திரயாதவ் உள்ளிட்டோர் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர்.இதைத்தொடர்ந்துஅரவிந்த் கேஜரிவால் தலைமையில் தில்லியில்ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது.
இதில் யோகேந்திர யாதவ்மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண்உள்ளிட்ட பலர் இணைந்தனர்இதன்பின் தில்லி சட்டப்பேரவைதேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது.அப்போது கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக யோகேந்திர யாதவ்,பிரசாந்த் பூஷண்ஆனந்த் குமார் உள்ளிட்டோர் அடிப்படைஉறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்இதைத்தொடர்ந்துஊழலுக்கு எதிராகவும் அரசு இயந்திரங்கள்வெளிப்படைத்தன்மையுடன் பொது மக்களின் நலனைபாதுகாக்கவும் "ஸ்வராஜ் அபியான்எனும் அமைப்பை யோகேந்திரயாதவ் தொடங்கினார்.
தமிழ்நாடு : 
பயணிகளின் வசதிக்காக விமான நிலையம் - மெட்ரோஇடையே பேட்டரி கார் சேவை தொடக்கம்
சென்னை விமான நிலையம் - மெட்ரோ ரயில் நிலையம் இடையேபயணிகள் சிரமமின்றி வந்து செல்வதற்காக இலவச பேட்டரி கார்சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து சின்னமலைவரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதாகடந்த 21-ம் தேதி தொடங்கி வைத்தார்கோயம்பேடு ஆலந்தூர்இடையே ஏற்கெனவே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோரயில்கள் இயக்கப்படுகின்றனஞாயிறு மட்டும் மெட்ரோ ரயில்சேவை காலை 8 மணிக்கு தொடங்குகிறதுபுதிய வழித்தடத்தில்மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால்அதில் பயணம் செய்வோர்எண்ணிக்கை 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்துவிமான நிலையத்துக்குச் செல்ல பயணிகள் அவதிப்படுகின்றனர்.இதை கருத்தில் கொண்டுமெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்துபன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான முனையநுழைவுவாயில்களுக்கு 4 பேட்டரி கார் சேவை நேற்றுதொடங்கப்பட்டதுஇதற்கு கட்டணம் கிடையாதுதினமும் காலை10 மணி முதல் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் இந்த பேட்டரி கார்கள்இயக்கப்படுகின்றன.
முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார்ஆளுநர்வித்யாசாகர் ராவ் தகவல்
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர்ஜெயலலிதாவை ஆளுநர் வித்யா சாகர் ராவ் நேற்று மாலை பார்த்தார்முதல்வர் உடல்நிலை தேறி வருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைபாடு காரணமாக அவர்அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்து வமனை நிர்வாகம் தெரிவித்தது.
கடந்த 10 நாட்களாக முதல் வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டுவருகிறது. ‘முதல்வருக்கு காய்ச்சல் குணமடைந்து விட்டது.தேவையான மருத்துவ பரிசோத னைகள் நடந்து வருவதால்மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனை யில் இருக்கவேண்டியுள்ளது’ என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது.
இதற்கிடையேமுதல்வரின் உடல்நிலை பற்றி அவ்வப்போதுவதந்திகள் பரவிவந்தனவதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்திருந்தது.
இந்நிலையில்மும்பையில் இருந்து நேற்று சென்னை வந்தஆளுநர் வித்யாசாகர் ராவ்அப்போலோ மருத்துவமனைக்குச்சென்று முதல்வர் ஜெயலலிதாவை பார்த்தார்.
விளையாட்டு :
204 ரன்களுக்குச் சுருண்டது நியூஸிலாந்துஇந்தியா 112 ரன்கள்முன்னிலை
கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்றுநியூஸிலாந்து அணி தன் முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்குஅனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து இந்திய அணி 112 ரன்கள் முன்னிலை பெற்றுஇன்னும் சற்று நேரத்தில் 2-வது இன்னிங்சில் களமிறங்குகிறது.புஜாரா நீண்ட நேரம் பீல்டில் இல்லாததால் அவர் 3-ம் நிலையில்களமிறங்குவது கடினம் என்று தெரிகிறதுஆனால் டிவிவர்ணனையாளர்கள் அவர் 3-ம் நிலையில் இறங்குவார் என்றுதெரிவித்தனர்.
இன்று 128/7 என்று ஜீதன் படேல் 5 ரன்களுடனும்பி.ஜே.வாட்லிங் 12ரன்களுடனும் இறங்கினர்இதில் ஜீதன் படேல் ஆக்ரோஷமாகஆடினார் அவர் 9 பவுண்டரிகளுடன் 47 பந்துகளில் 47 ரன்கள் எடுக்க,இவரும் வாட்லிங்கும் சேர்ந்து 8-வது விக்கெட்டுக்காக 60 ரன்களைச்சேர்த்தனர்.
அஸ்வின் தன் ஓவரை வீச வந்தவுடனேயே அவரை ஸ்லாக் ஸ்வீப்செய்ய முயன்றார் ஆனால் மிட் ஆஃபில் கேட்ச் ஆனதுமுன்னதாகஜடேஜா பந்தில் எல்.பிஆனார்ஆனால் அது நோ-பால் என்பதால்தப்பித்தார் ஜீதன் படேல்.

25 
ரன்கள் எடுத்த பி.ஜே.வாட்லிங்ஷமியின் ரிவர்ஸ் ஸ்விங்கில்எல்.பி.ஆனார்காலை முன்னால் தூக்கிப்போட்டிருந்தால் காலில்வாங்கினால் கூட அவுட் கிடையாது ஆனால் வாட்லிங் அப்படிச்செய்யவில்லை.மிடில் ஸ்டம்புக்கு நேராக வாங்கினார்.
ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்த குவிண்டன் டி காக் அதிரடி:சாதனைத் துளிகள்
செஞ்சூரியனில் வெள்ளியன்று நடைபெற்ற முதல் ஒருநாள்போட்டியில் குவிண்டன் டி காக் 113 பந்துகளில் 178 ரன்கள் விளாசிதனி வீரனாக ஆஸி.யை வீழ்த்தியது சில சாதனைக்குரியதானது.
178 ரன்களில் 16 பவுண்டரிகள் 11 சிக்சர்கள் அடங்கும்அதாவது 130ரன்கள் பவுண்டரிகளிலேயே!
அன்று ஆஸ்திரேலியா 25 ஓவர்களில் 192 ரன்களை விளாசினாலும்விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் அதன் பிறகு நின்று ஆடவேண்டிய நிலை ஏற்பட்டதுஇதனால் 350 ரன்களுக்குச்சென்றிருக்க வேண்டிய ஸ்கோர் 294 ரன்களில் முடிந்த்துஆனால்36.2 ஓவர்களில் டி காக் இதனை ஒன்றுமில்லாமல் செய்ததைநினைக்கும் போது 400 கூட தாங்கியிருக்க முடியாது என்றேதெரிகிறதுரன் விகிதம் 8.11 என்பது குறிப்பிடத்தக்கது.
டி காக் விளாசிய 178 ரன்கள் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள்கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர்கேரி கர்ஸ்டனுக்கு அடுத்தஸ்கோராக இது உள்ளது.

25 
வயதுக்குட்பட்ட வீரர்கள் வரிசையில் இது 3-வது பெரிய ஸ்கோர்.
வர்த்தகம் :
வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்கும் திட்டம்:ரூ.65,250 கோடி கருப்பு பணம் வெளிவந்துள்ளது - மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி தகவல்
வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்கும் (ஐடிஎஸ்)திட்டத்தின் கீழ் கடந்த நான்கு மாதங்களில் ரூ.65,250 கோடிமதிப்பிலான சொத்து மற்றும் வருமானக் கணக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிதெரிவித்துள்ளார்.
கணக்கில் காட்டப்படாத வருமானத்தை தாமாக முன்வந்துதெரிவிக்கும் திட்டத்தின் கடைசி நாளாக செப்டம்பர் 30 ம் தேதிஅறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அருண்ஜேட்லி,இந்தத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட நான்கு மாதங்களில்ஆன்லைன் மூலமாகவும்நேரிலுமாக 64,275 கணக்குகள் தாக்கல்செய்யப்பட்டுள்ளனஇதன்படி மொத்தம் ரூ.65,250 கோடிமதிப்பிலான சொத்துகள் வரித்தாக்கல் செய்யப்பட்டுள்ளதுஇதில்45 சதவீதம் அளவு அரசு வரியாகவும்அபராதமாகவும் எடுத்துக்கொள்ளும்.
உள்நாட்டில் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவர மத்திய அரசு தானாக முன்வந்து வருமானத்தைஅறிவிக்கும் திட்டத்தை முன்வைத்தது. 45 சதவீதம் அளவுக்கு வரிமற்றும் அபராதம் செலுத்தி அந்த வருமானத்தைசட்டபூர்வமானதாக மாற்றிக் கொள்வதற்காக ஜூன் 01 முதல் இந்ததிட்டத்தை கொண்டுவந்ததுஇதற்கு நான்கு மாத கால அவகாசம்அளிக்கப்பட்டது.
உலக வங்கி கூட்டம்ஜேட்லி பங்கேற்பு
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அரசு பயணமாக 7 நாட்களுக்கு அமெரிக்காகனடா நாடுக ளுக்கு சுற்றுபயணம் மேற்கொள்கிறார்இன்று புறப்படும் ஜேட்லி உலக வங்கி மற்றும் சர்வதேசசெலாவணி நிதியம் உள்ளிட்ட அமைப்புகளின் ஆண்டு கூட்டங்களில் கலந்து கொள்வதுடன்சர்வதேச முதலீட்டாளர்களையும்சந்திக்க உள்ளார்இது தொடர்பாக டிவிட்டரில் தகவல்வெளியிட்டுள்ள ஜேட்லி அக்டோபர் 10 ஆம் தேதி இந்தியா திரும்பஉள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மதியம் கனடாவில் சர்வதேச முதலீட்டாளர்களை சந் திக்கஉள்ளதாகவும் குறிப்பிட்டுள் ளார்அமெரிக்க பயணத்தில்வாஷிங்டனில் 3 நாட்கள் நடை பெறும் உலக வங்கி மற்றும்சர்வதேச செலாவணி அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொள்கிறார் என்று நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளதுபொருளாதாரவிவகாரத்துறை செயலர் சக்தி காந்த தாஸூம் கலந்து கொள்கிறார்.
இந்த கூட்டங்களில் சர்வதேச பொருளாதார நிலைமைகள் குறித்துவிவாதிக்க உள்ளனர்முக்கியமாக ஆண்டுக் கூட்டத்தில் சர்வதேசசெலாவணி அமைப்பின் ஒதுக்கீடு சீரமைப்புபரிவர்த்தனைமதிப்புகளில் நெகிழ்வுதன்மைநிதியியல் கட்டமைப்புஐரோப்பியகூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறிய விவகாரம் மற்றும்சர்வதேச வளர்ச்சிக்கான வர்த்தக ஒத்துழைப்புகள் குறித்து பேசஉள்ளதாக நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

No comments: