உலகம் :
2016-ம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு
2016-ம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு இரண்டு அமெரிக்கஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆலிவர் ஹார்ட் மற்றும்மாசாசுசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் பெங்ட்ஹோம்ஸ்ட்ரோம் ஆகியோருக்கு அறிவிக்கபட்டுள்ளது.
குடிமக்கள், அரசுகள், வர்த்தகங்கள், பங்குதாரர்கள் மற்றும் நிறுவனத்தின்முன்னிலை நிர்வாகத்தினர், காப்பீட்டு நிறுவனம் மற்றும் கார் முதலாளிகள்என்று ஒப்பந்த உறவுகளை, அதாவது வாழ்க்கையில் உள்ள ஒப்பந்தங்கள்மற்றும் நிறுவனங்கள் தொடர்பான ஆய்வில் புதிய கண்டுபிடிப்புகளைநிகழ்த்தியதற்காக இவர்களுக்கு இந்த நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்.எஸ்.ஜி.,யில் இந்தியாவுக்கு இடம்:பேச்சுக்கு தயார் என்கிறது சீனா
'என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாஇணைவது தொடர்பாக பேச்சு நடத்த தயார்' என, சீனா அறிவித்து உள்ளது.
என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் கூட்டமைப்பில், 48நாடுகள் உள்ளன. இந்த நாடுகள், அணு மூலப்பொருட்கள் மற்றும் அணு உலைதொழில்நுட்பங்களை பரஸ்பரம் தங்களுக்குள் வினியோகம் செய்துகொள்கின்றன.
சீனா தயார்
இந்தியா, இந்த கூட்டமைப்பில் சேர முயற்சித்து வருகிறது. இதற்கு, அமெரிக்கா,சுவிட்சர்லாந்து
உள்ளிட்ட நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், சீனா, தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.இந்நிலையில், 'அணுசக்தி வினியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாஇணைவது குறித்து பேச்சு நடத்த தயார்' என, சீனா அறிவித்துள்ளது.
தமிழ்நாடு :
'இ - சேவை' மையத்தில் விண்ணப்பித்தால் அலைபேசியில் எஸ்.எம்.எஸ்.,தகவல்
தமிழகம் முழுவதும், 'இ - சேவை' மையங்களில், அரசின் சேவைகளை பெற மனுசெய்வோருக்கு, அலைபேசியில், எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பும் நடைமுறை,வரும், 17 முதல், செயல்பாட்டுக்கு வருகிறது. தமிழக அரசின், மின் மாவட்டம்திட்டத்தின் கீழ், பல அரசு திட்டங்கள் மற்றும் சேவைகள், பொதுமக்களுக்குஅவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகே, இ - சேவை மையங்கள் மூலமாகவழங்கப்படுகிறது.
ஜாதிச்சான்று, பிறப்பிடச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள்; ஓய்வூதியங்கள், 'ஆதார்' அட்டை பெறுதல் மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட, 100சேவைகள் வழங்கப்படுகின்றன.
இங்கு விண்ணப்பித்தோர், மனு ஏற்கப்பட்டதா; சான்றிதழ் எப்போது கிடைக்கும்என அறிய, இ - சேவை மையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால்,மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க, அலை பேசி வழியாக, எஸ்.எம்.எஸ்.,தகவல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட உள்ளது.
இது குறித்து, தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகள் கூறியதாவது:இ- சேவை மையங்களில், விண்ணப்பிப்போருக்கு, அவர்களின் அலைபேசிகளுக்கு,மூன்று கட்டங்களாக, எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பப்படும். அதில்,விண்ணப்பம் ஏற்கப்பட்ட விபரம்; பெறப்பட்ட சேவை கட்டணம்;நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம்; குறைபாடு இருந்தால், 1800 425 1333,என்ற கட்டணமில்லாத தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம் என்றதகவல்கள் இடம்பெறும். இது, கிராமப்புற மக்களுக்கு பெரிதும் உதவியாகஇருக்கும். தமிழகம் முழுவதும் உள்ள, 10 ஆயிரம், இ - சேவை மையங்களிலும்,இந்த சேவை, வரும், 17ம் தேதி நடைமுறைக்கு வரும்.இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்.
மாணவிகள் தேசிய டேக்வாண்டோ பதக்கங்களை குவித்தது தமிழகம்
தெலுங்கானாவில் நடந்த மாணவிகளுக்கான தேசிய டேக்வாண்டோபோட்டியில், ஒரு தங்கம் உட்பட பத்து பதக்கங்களுடன் தமிழக அணி மூன்றாம்இடம் பிடித்தது.
இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில், மாணவிகளுக்கான தேசியடேக்வாண்டோ போட்டி தெலுங்கானா ரெங்காரெட்டி மாவட்டத்தில் நடந்தது.இதில் 14, 17 வயதினருக்கான போட்டியில், தமிழக அணி சார்பில் தலா 10 பேர்பங்கேற்றனர். பதக்க பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம், நாகாலாந்துஇரண்டாமிடம் பிடித்தது. ஒரு தங்கம், நான்கு வெள்ளி, ஐந்து வெண்கலபதக்கங்களுடன் தமிழகம் மூன்றாம் இடம் பிடித்தது.
இதில், 17 வயதினருக்கான 32--35 கிலோ எடை பிரிவில் கோத்தகிரி எச்.ஆர்.எம்.,பள்ளியின் சவுமியா தங்கப் பதக்கம் வென்றார். 35--38 கிலோ பிரிவில் அபிதா, 48--52 கிலோ பிரிவில் கோவை சாரி சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி அவந்திகா, 60கிலோவுக்கு மேற்பட்ட எடை பிரிவில், சேலம் பள்ளபட்டி வித்யா பீடம்பள்ளியின் அனுசியா பிரியதர்ஷினி, 14 வயதினருக்கான 26--29 கிலோ பிரிவில்கோத்தகிரி விஸ்வசாந்தி வித்யாலயா பள்ளி நிமிஷா வெள்ளி பதக்கம்வென்றனர்.
17 வயதினர் 32 கிலோ பிரிவில் வேடுகாத்தாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியின்மஞ்சு, 38--41 கிலோ பிரிவில் கோத்தகிரி விஸ்வ சாந்தி வித்யாலயா பள்ளி சபிதா, 44--48 கிலோ பிரிவில் சென்னை ஜெய்பால் கரோடியா பள்ளி ஹேமாஸ்ரீ, 14வயதினருக்கான 22-- 24 கிலோ பிரிவில் கோத்தகிரி எச்.ஆர்.எம்., பள்ளி விந்தியா, 29--35 கிலோ பிரிவில் பவதாரிணி ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
முழு வீச்சில் மின் கோபுரம் அமைப்பு : 'ஓவர்லோடு' பிரச்னைக்கு தீர்வு
காஞ்சிபுரம் மாவட்டம், காயாறு, வெண்பேட்டில், மின் கோபுரம் அமைக்கும் பணிமுழு வீச்சில் நடந்து வருவதால், சென்னையில், 'ஓவர்லோடு' பிரச்னைக்கு,விரைவில் தீர்வு கிடைக்க உள்ளது.
சூரிய சக்தி : தென் மாவட்டங்களில் உற்பத்தியாகும் காற்றாலை, சூரிய சக்திமின்சாரத்தை, தமிழ்நாடு மின் வாரியம், சென்னைக்கு கொண்டு வர உள்ளது.இதற்காக, நெல்லை - கயத்தாறு முதல், காஞ்சி - களிவந்தப்பட்டு,ஒட்டியம்பாக்கம் இடையில், மின் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.கயத்தாறு - கலிவந்தப்பட்டு வழித்தட பணிகள் முடிந்து, மின்சாரம் கொண்டுசெல்லப் படுகிறது.
கலிவந்தப்பட்டு - ஒட்டியம்பாக்கம் இடையில் வழித்தடம் அமைக்க,திருப்போரூர் அருகே உள்ள வெண்பேடு, காயாறு கிராமங்களில், 12 மின்கோபுரங்கள் அமைக்க வேண்டும். அதற்கு, ரியல் எஸ்டேட் அதிபர்கள், உள்ளூர்மக்களை துாண்டி, போராட்டம், நீதிமன்றத்தில் வழக்கு என, முட்டுக்கட்டைபோட்டனர்; இதனால், வழித்தட பணி பாதிக்கப்பட்டது. பின், நீதிமன்ற உத்தரவு,மின் வாரியத்திற்கு சாதகமாக வந்தது.
மின்தடை : இதையடுத்து, பிரச்னைக்குரிய கிராமங்களில், மின் கோபுரம்அமைக்கும் பணி, ஆக., 22ல் துவங்கியது; தற்போது, அந்த பணிகள் முழு வீச்சில்நடக்கின்றன.
விளையாட்டு :
அஸ்வினின் அபாரப் பந்து வீச்சில் 299 ரன்களுக்குச் சுருண்டதுநியூஸிலாந்து; இந்தியா மீண்டும் பேட்டிங்
இந்தூர் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் 557 ரன்களுக்கு எதிராக நியூஸிலாந்துதன் முதல் இன்னிங்சில் 3-ம் நாளான இன்று 299 ரன்களுக்குச் சுருண்டது.அஸ்வின் 6 விக்கெடுகளைச் சாய்த்தார்.
இந்தியா தன் 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது.கம்பீர் காயமடைந்து பெவிலியன் செல்ல புஜாராவும், விஜய்யும் களத்தில்உள்ளனர்.
258 ரன்களை முன்னிலை பெற்றிருந்தாலும் இந்தியா நியூஸிலாந்துக்கு பாலோஆன் கொடுக்கவில்லை. அஸ்வின், ஜேம்ஸ் நீஷம் (71) விக்கெட்டை எல்.பியில்வீழ்த்திய போது டெஸ்ட் போட்டிகளில் 20-வது முறையாக 5 விக்கெட்டுகளைக்கைப்பற்றியவரானார்.
இந்தியா தன் 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது.கம்பீர் காயமடைந்து பெவிலியன் செல்ல புஜாராவும், விஜய்யும் களத்தில்உள்ளனர்.
258 ரன்களை முன்னிலை பெற்றிருந்தாலும் இந்தியா நியூஸிலாந்துக்கு பாலோஆன் கொடுக்கவில்லை. அஸ்வின், ஜேம்ஸ் நீஷம் (71) விக்கெட்டை எல்.பியில்வீழ்த்திய போது டெஸ்ட் போட்டிகளில் 20-வது முறையாக 5 விக்கெட்டுகளைக்கைப்பற்றியவரானார்.
வர்த்தகம் :
வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும்: நிதியமைச்சர் அருண்ஜேட்லி கருத்து
இந்தியா தற்போது அடைந்திருக்கக் கூடிய வளர்ச்சி போதுமானதாக இல்லை.நாம் முன்பை விட தற்போது சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நிதியமைச்சர்அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணிமையம் இணைந்து நடத்திய கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: தற்போது நல்ல வளர்ச்சியடைந்திருக்கிறோம்.அதனை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த வளர்ச்சி போதுமானதுஅல்ல. தற்போதைய வளர்ச்சியை ஊக்கப்படுத்த வேண்டும். சர்வதேசநாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். ஆனால்நமது சொந்த அளவுகோலுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி போதுமானதுஅல்ல. நாம் இன் னும் சிறப்பாகச் செயல்பட முடியும்.
No comments:
Post a Comment