Tuesday 25 October 2016

Daily Current Affairs For Competitive Exam - 25th October Review

உலகம் :

அமெரிக்காதென்கொரியா போர் ஒத்திகை
வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்காவும்தென்கொரியாவும் இணைந்து அடுத்த மாதம் போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளன.


வடகொரியா அடுத்தடுத்து அணுஆயுத சோதனைகளையும் ஏவுகணைசோதனைகளையும் நடத்தி வருகிறதுஅமெரிக்காதென்கொரியா மீதுஅணுஆயுத தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் என்றும் அந்த நாடு எச்சரிக்கைவிடுத்துள்ளதுஎனவே வடகொரி யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள் ளும்வகையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கொரிய தீபகற்பத்தில்அடுத்த மாதம் போர் ஒத்திகை நடத்த திட்டமிட்டுள்ளன.
சிவப்பு கொடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போர் ஒத்திகையில் இருநாட்டுவிமானப் படைகளும் பங்கேற்க உள்ளனவடகொரியாவின் அணு சக்திநிலையங்களைத் தாக்கி அழிக்கும் வகையில் போர் ஒத்திகை நடத்தப்படும் என்றுதென் கொரிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா :
இந்திய - சீன எல்லையில் முதல்முறையாக ஆயுதம் தாங்கிய 100 பெண்வீரர்கள் நியமனம்
கடினமான சீன எல்லையில் முதல்முறையாக ஆயுதம் தாங்கிய 100 பெண்வீரர்களை இந்திய திபெத் எல்லைக் காவல் படை நியமித்துள்ளது.
மத்திய அரசின் ஆயுதக் காவல் படைகளில் ஒன்றான இந்திய திபெத் எல்லைக்காவல் படை 80 ஆயிரம் வீரர்களைக் கொண்டுள்ளது. 1962-ம் ஆண்டு சீனஆக்கிரமிப்புக்குப் பிறகு இது உருவாக்கப்பட்டதுஇது தொடங்கப்பட்டதன் 55-ம்ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதன் தலைமை இயக்குநர் கிருஷ்ண சவுத்ரி நேற்று செய்தியாளர்களிடம்கூறும்போது, “இந்திய சீன எல்லையில் 15 எல்லைச் சாவடிகளில் 100 பெண்வீரர்கள் நியமிக்கும் நடைமுறைகள் சமீபத்தில் முடிவடைந்தனபோர்த் தளவாடமற்றும் ஆயுதப் பயிற்சி பெற்ற இப்பெண் வீரர்களுக்குத் தேவையான வசதிகள்அங்கு செய்யப்பட்டுள்ளன” என்றார்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “இந்தப் பெண் வீரர்களில்பெரும்பாலானோர் ஜம்மு காஷ்மீர் மாநிலம்லடாக்கில் உள்ள எல்லைச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்மற்றவர் கள் இமாச்சலப் பிரதேசம்,உத்தராகண்ட்சிக்கிம்அருணாச் சலப் பிரதேச எல்லையில்நியமிக்கப்பட்டுள்ளனர்வரும் நாட்களில் மேலும் சில எல்லைச் சாவடிகளில்பெண் வீரர்கள் நியமிக்கப்படுவார்கள்.
ராணுவ வீரர்களுக்கு -அஞ்சல் வாக்கு அறிமுகம்
ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று -அஞ்சல்வாக்கு முறையை மத்திய அரசு அறி முகம் செய்துள்ளது.
பொதுத் தேர்தலின்போது ராணுவத்தில் வீரர்கள் தங்கள் வாக்குகளைசெலுத்துவதற்காக அஞ்சல் மூலம் வாக்குச் சீட்டு களை வரவழைத்துவாக்களித்த பிறகு அதை மீண்டும் அஞ்சல் மூலம் அனுப்பி வருகின்றனர்காலதாமதம்ஆவதால் இந்த முறையை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர்.
இந்நிலையில்தேர்தல் நடத்தை விதிமுறைகளின் (1961) 23-வது பிரிவில் மத்தியஅரசு திருத்தம் செய்துள்ளதுஇது தொடர்பாக கடந்த 21-ம் தேதி அறிவிக்கைவெளியிடப் பட்டுள்ளதுஇதன்படிராணுவம் உட்பட பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ளவர்களுக்கு மட்டும் -அஞ்சல் வாக்கு முறை சோதனை முறையில்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு : 
.பன்னீர்செல்வம் தலைமையில் 2-வது முறையாக அமைச்சரவை கூட்டம்:உதய் திட்டம்புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை
நிதியமைச்சர் .பன்னீர்செல்வம் தலைமையில் 2-வது முறையாக தமிழகஅமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்ததுஇதில் காவிரி நீர் விவகாரம்உதய் மின்திட்டம்புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்துஆலோசிக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22-ம் தேதிசென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுதொடர்ந்துசிகிச்சை பெற்று வருகிறார்அவர்நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும்என மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளதாக அப்போலோ மருத்துவமனைநிர்வாகம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா கவனித்துவந்த உள்துறை,பொதுத்துறை உள்ளிட்ட துறைகளை நிதியமைச்சர் .பன்னீர்செல்வம்கவனிப்பார் என்றும்அமைச்சரவை கூட்டங்களுக்கு அவரே தலைமை வகிப்பார்என்றும் முதல்வர் ஜெயலலிதா பணிக்குத் திரும்பும் வரை இந்த ஏற்பாடுஇருக்கும் என்றும் தமிழக ஆளுநர் (பொறுப்புவித்யாசாகர் ராவ் அறிவித்தார்.
பெரியார் விருதுக்கு நவ.10 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை மாவட்ட ஆட்சியர் .மகேஸ்வரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை தேர்வு செய்து,அவர்களை சிறப்பிக்கும் வகையில் பெரியார் விருது அரசால் வழங்கப்பட்டுவருகிறதுஇந்த விருதை பெறுவோருக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியும்ஒரு பவுன்தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் பெரியார் விருதுக்கு தகுதியானவர் தேர்வுசெய்யப்பட உள்ளார்எனவேசமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் இந்த விருதுக்குவிண்ணப்பிக்கலாம்பிற்படுத்தப்பட்டோர்மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சீர் மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூகபொருளாதார மற்றும் கல்விமேம்பாட்டுக்காக மேற்கொண்ட முயற்சிகள்அம்மக்களின் வாழ்க்கைத் தரம்உயர மேற்கொண்ட பணிகள்கடந்த ஆண்டுகளில் மேற்கொண்ட பணிகள் குறித்தவிவரங்களை அளிக்க வேண்டும்.
இந்த விவரங்களுடன் பெயர்சுயவிவரம் மற்றும் முழு முகவரி யுடன் நவம்பர் 10-ம் தேதிக்குள், ‘மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர்சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்’ என்ற முக வரிக்குவிண்ணப்பிக்க வேண்டும்.
நேரு பூங்கா எழும்பூர் - சென்ட்ரல் இடையே டிசம்பரில் மெட்ரோ ரயில்சோதனை ஓட்டம்அடுத்த ஆண்டு ஜூனில் ரயில் ஓடும் என அதிகாரிகள்தகவல்
நேரு பூங்கா எழும்பூர் சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்வரும் டிசம்பரில் தொடங்கவுள்ளதுஅடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தவழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீதூரத்துக்கு மெட்ரோ ரயில்பணிகள் நடைபெற்று வருகின்றனஇதில், 24 கி.மீதூரத்துக்கு (19 ரயில்நிலையங்கள்சுரங்க வழிப்பாதை வழியாக இயக்கப்படவுள்ளதுதற்போது,விமான நிலையம் சின்னமலை கோயம்பேடு வரையில் மெட்ரோ ரயில்கள்இயக்கப்பட்டு வருகின்றனஇதில் தினமும் சராசரியாக 18 ஆயிரம் பேர் பயணம்செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டமாககோயம்பேட்டில் இருந்து நேரு பூங்கா வரையில் மொத்தம் 8கி.மீதூரத்துக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது.இதற்காககடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.
500 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் வாங்க அரசு திட்டம்
500 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க தமிழக மின் வாரியம் முடிவுசெய்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் தனது மின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகபல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதுஇதன் ஒரு பகுதியாகதற்போது 500 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க முடிவு செய்துள்ளது.இதற்காக தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ)டெண்டர் விட்டுள்ளது.
இதுகுறித்துமின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின் வாரியம். 500 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க முடிவுசெய்துள்ளதுஒரு யூனிட் 5 ரூபாய் 10 பைசா என்ற விலையில் வாங்கதீர்மானிக்கப்பட்டுள்ளதுஇதற்காக அண்மையில் டெண்டர் விடப்பட்டுள்ளது.எரிசக்தி கொள்முதல் ஒப்பந்தத்தின்படி நீண்டகால அடிப்படையில் இந்தமின்சாரம் வாங்கப்பட உள்ளது.
விளையாட்டு :
இந்தியாசீனா இன்று மோதல்
மலேசியாவில் நடைபெற்று வரும் 4-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆடவர்ஹாக்கியில் இன்று நடை பெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி சீனாவைஎதிர்கொள்கிறது.
குவான்டன் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியா முதல்ஆட்டத்தில் ஜப்பானை 10-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில்தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள தென் கொரியாவுடன் 1-1 என டிரா செய்திருந்ததுகடைசியாக நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.
ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி 7 புள்ளிகள் பெற்றுள் ளதுஇந்நிலையில்இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சீனாவை சந்திக் கிறதுஇந்திய அணிபாகிஸ்தான் அணியை வீழ்த்திய உற்சாகத் தில் இந்திய வீரர்கள்களமிறங்கு கின்றனர்.
எல்பிஜி விற்பனையில் இறங்கியது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,இப்போது எல்பிஜி விற்பனையில் இறங்கி இருக்கிறதுமுதல் கட்டமாக 4 கிலோஎல்பிஜி சிலிண்டர்களை இந்த நிறுவனம் விற்கத் தொடங்கி இருக்கிறது.இரண்டாம் காலாண்டு முடிவுகளை தொடர்ந்து நடந்த முதலீட்டாளர்களுடனானகலந் துரையாடலில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
சோதனை அடிப்படையில் நான்கு மாவட்டங்களில் இந்த விற்பனைதொடங்கப்பட்டிருக் கிறதுஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறுமாதத்தில்எல்பிஜி நுகர்வு 10.2 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறதுதனியார் சுத்திகரிப்புநிறுவனங் களான ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் இந்த சந்தையில் கணிச மாகபங்கினை கைப்பற்ற நுழைந் திருக்கின்றனஆறு மாத காலத் தில் 1.08 கோடி டன்பயன்படுத்தப் பட்டிருக்கிறதுஇதில் பாதி அளவு இறக்குமதி செய்யப்படுகிறது.
வர்த்தகம் :
டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி அதிரடி நீக்கம்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரிநீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக அடுத்த நான்கு மாத காலத்துக்கு ரத்தன் டாடா தலைவராகஇருப்பார் என டாடா சன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
திங்களன்று நடந்த டாடா சன்ஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளதுகார்ப்பரேட் வட்டாரத்தில் மிகப் பெரும் அதிர்வலையை இதுஏற்படுத்தியுள்ளது.
அடுத்த நான்கு மாத காலத்திற்குள் ரத்தன் டாடாவை உள்ளடக்கிய ஐந்து பேர்கொண்ட குழு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்இந்த குழுவை டாடா நிறுவனம்நியமித்துள்ளதுடிவிஎஸ் குழும தலைவரான வேணு ஸ்ரீநிவாசன்பாயின்கேபிடல் நிறுவனத்தின் அமித் சந்த்ராமுன்னாள் தூதரக அதிகாரியான ரோனென்சென் மற்றும் லார்ட் குமார் பட்டாச்சார்யா அகிய ஐந்து பேரும் புதிய தலைவரைதேர்ந்தெடுக்க உள்ளனர்இதில் பட்டாச்சார்யாவை தவிர மற்ற நால்வரும் டாடாசன்ஸ் நிர்வாக குழுவில் உள்ளவர்களாவர்.

No comments: