Thursday 27 October 2016

Daily Current Affairs For Competitive Exam - 27th October

உலகம் :

சிரியாவில் விமானத் தாக்குதலில்  பள்ளிக் குழந்தைகள் உட்பட 22 பேர் பலி
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஹாஸ் கிராமத்தின் மீது இன்று காலைநடைபெற்ற வான் வழித்  தாக்குதலுக்கு 7 பள்ளிக் குழந்தைகள் உட்பட 22 பேர்பலியாகினர்.


சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷியாவின்படைகள் இணைந்து அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு  எதிரான தொடர்வான்வழி  தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்திலும் கடந்த சிலதினங்களாக தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
அந்த வகையில் இட்லிப் மாகாணத்தின் ஹாஸ் கிராமத்தின் மீது இன்று காலை11.30 மணி அளவில் நடைபெற்ற விமானத் தாக்குதலில்  7 பள்ளிக் குழந்தைகள்உட்பட 22 பேர் பலியாகினர்இந்தத் தாக்குதலை நடத்தியது ரஷிய படைகளா?இல்லை சிரிய படைகளாஎன்பது இப்போதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
இந்தியா :
தில்லியில் "சிப்பெட்மாற்றுத் தலைமையகம்மத்திய அமைச்சர் அனந்த்குமார் விளக்கம்
சென்னையில் இயங்கி வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்பநிறுவனத்தின் (சிப்பெட்தலைமையகம் முழுமையாக தில்லிக்கு மாற்றப்படாதுஎன்றும்தில்லியில் சிப்பெட் மாற்றுத் தலைமையகம் உருவாக்கப்படும் என்றும்மத்திய ரசாயனஉரத் துறை அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அனந்த் குமார்புதன்கிழமை கூறியதாவது:
மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்ஒருமுன்னணி நிறுவனமாகும்முன்புஇந்தியாவில் 23 சிப்பெட் மையங்கள் மட்டுமேஇருந்தனஅவற்றின் மூலம் 44 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவந்ததுஆனால்மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகஆட்சிக்குப் பிறகு இரண்டரை ஆண்டுகளில் இந்த மையங்களின் எண்ணிக்கை 39ஆக உயர்த்தப்பட்டது.
அமலாக்கத் துறை இயக்குநராக கர்னல் சிங் நியமனம்
பல்வேறு கருப்புப் பண வழக்குகளை விசாரிக்கும் அமலாக்கத் துறையின்இயக்குநராகமூத்த ஐபிஎஸ் அதிகாரி கர்னல் சிங் நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை புதன்கிழமைவெளியிட்ட உத்தரவில், ""அமலாக்கத் துறையின் புதிய இயக்குநராக கர்னல்சிங்கை நியமிக்கமத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல்அளித்துள்ளதுஅவர் ஓய்வு பெறும் நாளான அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவடையும்'' என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 1984-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான கர்னல்சிங்குக்குகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறை தலைவராகக்கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டதுமுன்னதாகஅமலாக்கத் துறையின் சிறப்புஇயக்குநராக அவர் பணியாற்றி வந்தார்.
தமிழ்நாடு : 
குரூப் 4: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கலாம்டி.என்.பி.எஸ்.சி.தகவல்
டி.என்.பி.எஸ்.சிகுரூப் 4 தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை (ஹால்டிக்கெட்பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
5,451 காலிப் பணியிடங்களுக்கான நவம்பர் 6-இல் நடைபெறவுள்ள எழுத்துத்தேர்வுக்காக, 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை  www.tnpscexams.net,  www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்ப பதிவு எண்பிறந்த தேதிஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்மேலும்,விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலும் அதற்கான காரணத்தையும்தெரிந்துகொள்ளலாம்.
சரியாக விண்ணப்பம் பதிந்துஉரிய கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டுகிடைக்காதவர்கள் பணம் செலுத்துச்சீட்டின் நகலுடன் தங்களது முழுவிவரங்களைக் குறிப்பிட்டு contacttnpsc@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்குஅக்டோபர் 31-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
நீர்மட்டம் தொடர்ந்து சரிவுமேட்டூர் அணை மின் நிலையங்களில் உற்பத்திபாதிக்கும் அபாயம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால்நீர் மின்நிலையங்களில் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியாகக் குறையும் வரை அணையின்மேல்மட்ட மதகுகள் வழியாகவும்சுரங்க மின் நிலையம் மற்றும் அணை மின்நிலையம் வழியாகவும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கலாம்.
நொடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டால்அணை மின்நிலையத்தில் 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்சுரங்க மின்நிலையத்தில் நொடிக்கு 20 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கலாம்.அப்போது சுரங்க மின் நிலையத்தில் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும்.
விளையாட்டு :
சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிமலேசியாவை வீழ்த்தியது இந்தியாபுள்ளிகள்பட்டியலில் முதலிடம் பிடித்தது
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தனது கடைசிலீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்தது.
இதன்மூலம் 4 வெற்றிஒரு டிராவைப் பதிவு செய்த இந்திய அணி 13புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மலேசியாவின் குவான்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில்புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியாவும்மலேசியாவும் மோதின.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின்
12-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்கஅதைஅற்புதமாக கோலாக்கினார் ரூபிந்தர் சிங்.
பிரெஞ்சு ஓபன்: 2-ஆவது சுற்றில் சிந்து
பிரெஞ்சு ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து,எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சிந்துதனது முதல் சுற்றில் 21-9, 29-27 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் இப் புய்இன்னை தோற்கடித்தார்.
ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் எச்.எஸ்.பிரணாய் 21-16, 21-18 என்ற நேர்செட்களில் தாய்லாந்தின் பூன்சாக் பொன்சனாவை தோற்கடித்தார்அடுத்தசுற்றில் சீன தைபேவின் செள டியென் சென்னை எதிர்கொள்கிறார் பிரணாய்.
அதேநேரத்தில் மற்றொரு ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அஜய்ஜெயராம் 22-20, 10-21, 18-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின்அந்தோணி சினிசுகா ஜின்டிங்கிடம் தோல்வியடைந்தார்.
வர்த்தகம் :
பிளிப்கார்ட் சிஎப்ஓ ராஜினாமா
பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சஞ்சய் பவேஜா ராஜினாமாசெய்திருக்கிறார்பிளிப்கார்ட் நிறுவனத்தில் முக்கிய அதிகாரிகள் தொடர்ந்துவெளியேறி வரும் சூழலில் சஞ்சய் பவேஜாவும் வெளியேறி இருக்கிறார்.இருந்தாலும் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை இந்த பதவியில் தொடருவார்என்றும்புதிய தலைமை நிதி அதிகாரியை நியமனம் செய்யும் பணிதொடங்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு வருடங்களுக்கு முன்பு டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில்பணியாற்றியவர் அங்கிருந்து வெளியேறி பிளிப்கார்ட் நிறுவனத்தில்இணைந்தார்வர்த்தக பிரிவு தலைவர் முகேஷ் பன்சால்தலைமை தொழில்அலுவலர் அங்கித் நகோரி ஆகியோர் கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தனர்.
அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் தலைமை புராடக்ட் அலுவலர் புனித் சோனிவெளியேறினார்தவிர மணீஷ் மகேஷ்வரிசுனில் கோபிநாத் மற்றும் லலித்சர்னா ஆகிய முக்கிய அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறியதுகுறிப்பிடத் தக்கது.
தொழில்புரிய ஏற்ற நாடுகள் வரிசை 130-வது இடத்தில் இந்தியா: உலகவங்கி அறிக்கை
தொழில் நடத்துவதற்கு சாதகமான நாடுகள் வரிசையில் இந்தியா கடந்தஆண்டில் இருந்த நிலையிலேயே உள்ளதுஉலக வங்கியின் ‘தொழில் நடத்தசாதகமான சூழல் 2017’ என்கிற அறிக்கை மூலம் இது தெரிய வந்துள்ளது.
ஆண்டுக்காண்டு மேற் கொள்ளப்படும் இந்த ஆய்வில் கடந்த ஆண்டின் தரவரிசைப் பட்டியலில் இருந்த இடத்திலேயே இந்தியா உள்ளதுதொழில்புரிவதற்கான சாதகமான சூழல்கள் அடிப்படையில் உலக வங்கி இந்த பட்டியலைவெளியிடுகிறதுசெவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட இந்த ஆண்டுக்கானபட்டியலில் 190 நாடுகள் வரிசையில் இந்தியா 130-வது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 131-வது இடத்தில் இருந்தது.அதிலிருந்து ஒரு படி மட்டுமே ஏற்றம் கண்டுள்ளதுகட்டுமான அனுமதிகள்,கடன் பெறுவது மற்றும் தொழிலுக்கு ஏற்ற இதர வசதிகளின் அடிப்படையில்ஆராய்கிறபோது இந்தியா எந்த மாற்றமுமில்லாமல் இருக்கிறதுஅல்லது மிகச்சிறிய அளவு ஏற்றமே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
உலக வங்கியின் இந்த சமீபத்திய அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக இந்தியாஅதிருப்தி தெரிவித்துள்ளதுஇந்தியாவில் மேற்கொண்டுவரும் முக்கிய 12பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்களை இந்த அறிக்கை கவனத்தில் எடுத்துக்கொள்ள வில்லை என்று கூறியுள்ளது.

No comments: