1) அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும் ஹெச்1 பி மற்றும் எல்1 விசாக்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதைத் தடுக்கும் வகையிலான மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2) விம்பிள்டன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
3) மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்குத் தண்ணீர் திறந்துவிடுவது நொடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
4)சாலை பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வகையில், ‘பாதுகாப் பான பயணம் உயிரைக்காக்கும்’ என்ற பிரச்சாரத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார்.
5) ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பிரதமர் நரேந்திர மோடியை போன்று தொழில் முதலீட்டிற்காக அடிக்கடி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
No comments:
Post a Comment