Wednesday 13 July 2016

Daily Current Affairs For Competitive Exam - 13th July

1) பிரிட்டனின் எண்ணெய் அகழ்வு நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் ரூ. 37,587 கோடி (560 கோடி டாலர்) நஷ்ட ஈடு கேட்டு மத்திய அரசு மீது சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.



2) இந்தியாவில் 2,36,000 கோடீஸ் வரர்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 1.5 லட்சம் கோடி டாலர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் 2025-ம் ஆண்டிற்குள் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 5,54,000 ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

3) பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பெரியாறு அணையில் இருந்து வியாழக்கிழமை முதல் தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

4) திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே அவை இணைய தளங்களில் வெளியாவதை தடுக்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்(சிபிஎப்சி) புதிய யோசனை அளித்துள்ளது.
 
5) 4-வது இந்தியன் கிராண்ட் பீரி தடகள போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் கடைசி வாய்ப்பான இந்தப் போட்டியின் கடைசி நாளான நேற்று முன்தினம் மேலும் 3 இந்தியர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

No comments: