Tuesday 12 July 2016

Daily Current Affairs For Competitive Exam - 12th July

1) அடுத்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தையொட்டி அஞ்சல் தலை வெளியிட ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) திட்டமிட்டுள்ளது.

2) இந்தியா-கென்யா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள், பிரதமர் நரேந்திர மோடி, கென்ய அதிபர் உகுரு கென்யட்டா ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை கையெழுத்திடப்பட்டன.

3) திருச்சி விமானநிலையத்தின் பாதுகாப்பு, கண்காணிப்பை அதிகரிக்கும் வகையில் சரக்கு முனையம், வாகன நிறுத்துமிடங்களில் 62 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

4) ஒலிம்பிக் தடகள போட்டிக்கான தகுதி சுற்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 4X400 தொடர் ஓட்டத்தில் தருண் அய்யாசாமி, குன்ஹூ முகமது, முகமது அனுஷ், ஆரோக்கிய ராஜூவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 13-வது இடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.

5) கனடாவைச் சேர்ந்த டேட்டா விண்ட் நிறுவனம் 4ஜி டேப் லெட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மோர் ஜிமேக்ஸ் பிராண்ட் 4ஜி 7 என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த டேப்லெட்டின் விலை ரூ.5,999 ஆகும்.

No comments: