Saturday 23 July 2016

Daily Current Affairs For Competitive Exam - 23rd July

1) நாட்டின் அதிக எடை கொண்ட ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. மாக் 3 டிசம்பரில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்தார்.


2) காஷ்மீரில் 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளது.

3) தமிழகத்தில் ரூ.5.39 கோடியில் கட்டப்பட்ட 9 சார் கருவூல அலுவலக கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

4) நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் நிறுவனங்களுக்கான `டான்’ எண்களை ஒரே நாளில் பெற முடியும். மின்னணு மூலமான விண்ணப்பங்களை பதிவு செய்த 24 மணி நேரத்தில் அனுமதி அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

5) தனியார் துறை ஆக்ஸிஸ் வங்கியின் ஜூன் காலாண்டு 21 சதவீதம் சரிந்து ரூ.1,556 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.1,978 கோடி அளவுக்கு நிகர லாபம் இருந்தது.

No comments: