Monday 4 July 2016

Daily Current Affairs For Competitive Exam - 4th July

1) இந்தியாவின் மிகப்பெரிய எண் ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோ லியம் கார்ப்பரேஷன் மற்றும் இன் ஜினீயர்ஸ் இந்தியா ஆகியவை இணைந்து ரூ.2 லட்சம் கோடி முதலீட்டில் இந்தியாவின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மேற்கு கடற்கரை பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ளன.


2) தமிழக அரசின் மொழி பெயர்ப்பாளர் விருதுக்கு ஜூலை 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

3) முறைகேடுகளைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலும் மத்திய அரசின் இடைநிலைப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வை இணையதளம் மூலம் நடத்த பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) முடிவு செய்துள்ளது.

4) ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக என்.எஸ். விஸ்வநாதன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

5) பிரபல பிரெஞ்சு மொழிக் கவிஞர் இவ்ஜான் போனஃபாய் (93)வெள்ளிக்கிழமை காலமானார்.

No comments: