1) மத்திய அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் இலாகா மாற்றம் செய்யப்பட்ட அமைச்சர்களில் சிலர் நேற்று முறைப்படி தங்கள் அலுவலக பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.
2) டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் உலகின் மிகப்பெரிய கை ராட்டை நிறுவப்பட்டுள்ளது. இதனை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார்.
3) லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் செரீனா 6-3, 6-0 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் அன்னிகா பெக்கை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் ஸ்வெட்லானாவை சந்திக்கிறார் செரீனா.
4) நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வார் நம்பிக்கை தெரிவித்தார்.
5) இந்த வருடம் பொதுப்பங்கு வெளி யிட்ட (ஐபிஓ) 60 சதவீத பங்குகள் ஐபிஓ விலையை விட உயர்ந்து வர்த்தகமாகின்றன.
No comments:
Post a Comment