Friday 22 July 2016

Daily Current Affairs For Competitive Exam - 22nd July

1) சென்னையில் இருந்து புறப்பட்ட விமானப்படை விமானத்தை காணவில்லை. அதிலிருந்த 29 பேரது கதி என்னவானது என்பதும் தெரிய வரவில்லை.



2) பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு நேற்று முடிவடைந்த நிலையில், பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 44 சதவீத இடங்களே நிரம்பியுள்ளன. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

3) பட்டப்படிப்பு முடித்தவுடன் பெரும்பாலானோரின் முதல் பணி வேலை தேடுவதே. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவது, நாள்தோறும் வேலை வாய்ப்பு குறித்த விளம்பரங்களை தேடுவது பட்டதாரிகளின் அன்றாட பணியாக மாறிவிடும்.

4) உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளமான கிக் ஆஸ் டாரண்ட்ஸ் (Kickass Torrents) முடக்கப்பட்டுள்ளது.
 
5) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளில் 8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச தரப் புள்ளி நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

No comments: