Thursday 14 July 2016

Daily Current Affairs For Competitive Exam - 14th July

1) லார்ட்ஸ் டெஸ்ட் முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 76 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல முறையில் தொடங்கியுள்ளது.


2) பிரேசிலில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகள வீராங்கனைகள் டின்டு லுகா, லலிதா பாபர், சுதா சிங் ஆகியோர் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக இந்தியாவின் தங்க மகளாக கருதப்பட்ட பி.டி.உஷா தெரிவித்துள்ளார்

3) தமிழக சட்டப்பேரவையின் அடுத்து கூட்டத்தொடர் ஜூலை 21-ல் கூடுகிறது. இக்கூட்டத்தில், 2016-17ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

4) சுனாமி முன்னெச்சரிக்கை தொழில்நுட்ப ஏற்பாடுகளில் உலகளவில் 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது என்று, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை முன்னாள் செயலாளர் டி.ராமசாமி தெரிவித்தார்.

5) டேவிட் கேமரூனின் ராஜிநாமாவை பிரிட்டன் அரசி ஏற்றுக் கொண்டதை அடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமராக தெரஸா மே புதன்கிழமை பொறுப்பேற்றார்.

No comments: